முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஜலான் கயூ - சாயாவனம்
- அப்துல்காதர் ஷாநவாஸ்
அபரன்: தீமையின் இரட்டை முகங்கள்
- ஆர்.அபிலாஷ்
மனதைத் திருடிய களவாணி
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
சிங்கப்பூர் கனிமொழி
இந்திரஜித்
யானை விருந்து....?
எஸ் .கிருஷ்ணன் ரஞ்சனா
அப்படி ஒரு காலம்
என்.விநாயக முருகன்
ஆந்திரா மெஸ்ஸும், ஆர்மண்ட்லா சுதீர் குமாரும்
-எஸ்கா
கௌரவக் கொலைகள்
நிஜந்தன்
கவிதை
ப்பிரிய பிம்பங்கள்..
சசிதரன் தேவேந்திரன்
பிழைப்ப‌டிம‌ங்க‌ள்...
ராம்ப்ரசாத்
எழுத வாய்க்காத இரவொன்றில்..
ஆறுமுகம் முருகேசன்..
விடியலின் தவளை பிம்பங்கள்
லதாமகன்
யார் வந்தது கனவில்?
அபிமன்யு ராஜராஜன்
ஒரு தூரிகை சலனமற்று நின்றது....!
கலாசுரன்
கூட்டமாகவே நகர்கிறோம்
மழையோன்
மறதியின் புதைச்சேறு..
இளங்கோ
வலி
ப.மதியழகன்
ஆறுதல்
வேல் கண்ணன்
மலைகளுக்கு நடுவில் எனது ஏழாவது கவிதை
பைசால்
சிறுகதை
ஒரு சுய மரணம்
பொன்.வாசுதேவன்
சிறுகதை "அசையாச் சொத்து"
உஷாதீபன்
இந்த வாரக் கருத்துப் படம்
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் – ஆர்.அபிலாஷ்
எழுத வாய்க்காத இரவொன்றில்..
ஆறுமுகம் முருகேசன்..


சலனமற்றுக் கிடந்த தலையணையில்
சட்டென வந்திறங்கியது
எனக்கு மிகப்பிடித்த
ஒரு ரயில் பெட்டியும்
ஒரு மழை வண்டியும்..

கனவுகள் காண வலுவற்றிருந்த
எனது இரவுகள்
இக்கடைசி வானத்தைக்
கொண்டாடத்துவங்கியது,
தனிமைநாற்றம்

கடலில் விழுந்த நட்சத்திரங்களின் வாசமென

மாறிப்போனது..


ஒரு மிகுஆசுவாசம்
நான் ஒற்றையான அறையெங்கும்
மெல்லப் படர்ந்து
என்னைக் கட்டிக்கொண்டது..

இனி ,
ஒரு குழந்தையின் மென்சிரிப்பாக
ஒரு பதின்வயதுப் பெண்ணின் முதலுதிர சந்தோசமாக
முதல் குழந்தைக்குத் தாயான ஒரு பெண்ணின் முகமாக
தனதான பெண்ணின் மிகுஅன்பில் ஒரு ஆணின் வெட்கமாக
தைரியமாய்
சப்தமாய்
யாவரிடமும் தெரியப்படுத்தப்படும்..

எனது டைரி நிரம்புகிறது..

யாரும் என்னைத் தடுக்கப்போவதில்லை 
அறை எண் 7ல் நான் மட்டுமே

தற்கொலைக் குறிப்பெழுதுகிறேன்.!

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com