முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
Cell 211 - குற்றம் என்கிற அறையின் மௌனம்
கே.பாலமுருகன்
ராணி மகா ராணி
செல்லமுத்து குப்புசாமி
எடிட்டர் இல்லாமல் எழுதுவது தவறு!
இந்திரஜித்
கரைந்து போகும் காலடிச் சுவடுகள்....!
எஸ்,கிருஷ்ணன் ரஞ்சனா
போபால் விஷ வாயுக் கசிவு தீர்ப்பும் அணு நஷ்டஈடு மசோதாவும்: இந்தியர்களின் உயிருக்கு விலையாகக் கிடைக்கும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்
மாயா
போபால் விபத்தின் தீர்ப்பு
நிஜந்தன்
சிட்டுக்குருவி
வா.மணிகண்டன்
ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம்
வாஸந்தி
முகம் காட்டும் கண்ணாடிகள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
கவிதை
உங்களுக்கு தெரியும்...
சசிதரன் தேவேந்திரன்
மாற்றங்கள்
நளன்
பின் தொடரும் நிழல்
செல்வராஜ் ஜெகதீசன்
பயணம்
ப.மதியழகன்
சுய தேடல்
வேல் கண்ணன்
மெல்லமாயொழுகும் பால்யம்...
ஆறுமுகம் முருகேசன்
அலைதலின் முற்றுகை ....!
கலாசுரன்
புலிகள் பேசும் இரவு
பா.சரவணன்
உஷ்ண வெளிக்காரன்
எம்.ரிஷான் ஷெரீப்
சிறுகதை
வெந்து தணியாத காடு
ஜி;. ஆர். சுரேந்தர்நாத்
இந்த வாரக் கருத்துப் படம்
இது உங்களுக்கு இல்லை
பாபுஜி
இதுதான் நீதியா?
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
அலைதலின் முற்றுகை ....!
கலாசுரன்

கண்களின் தூக்கத்தைப்
பறித்தது கூரிருள்....
சிந்தனைகள் அங்கும் இங்குமாக
பறந்தோடுகின்றது

இருளின் அடர்த்திக் கூர்மை
கருவிழிகளின் வழியாக
உள்புகுந்து கண்களை நிரப்புகிறது

கூரையில் ஆங்காங்கே
மழைத் துளிகளுக்கான
வாசல்கள் திறந்திருக்கக்கூடும்

அது கரையான்களுக்கும்
உணவளிக்கும்
தாய்மை மறவாத கூரை

சுவர்களின் கீழிருந்து மேல்நோக்கி..
மறையா மின்னலென
விழுந்த விரிசல்கள்

அச்சுவர்கள் அடுத்த மின்னலுக்கு
அல்லது இடியோசைக்கு
விழுந்து விடக்கூடும்

ஒரு கால் ஒடிந்த
நாற்காலியின்
மற்று மூன்று கால்களுக்கும்

அதை தாங்கி நிற்கும்
தரைக்கும் இடையிலான
மெல்லிய இடைவெளியில்

எதோ ஒரு மிருகத்தின்
அலறல் சப்தம்
ஒளிந்திருக்கக்கூடும்

ஒரு பல்லி
ஒலி எழுப்பியவாறு
எங்கேயோ பசியோடு நடமாடுகிறது

இருளை அழைப்பதர்க்கெனவே
ஞாபகத்தின் ஒளிரும்
விளக்கில் எண்ணை  இல்லாமல் போயிற்று....

வத்திப் பெட்டிகள்
யாரோ ஒருவரின்
கண்ணீரில் நனைந்திருக்கின்றன

வரவிருக்கும்
விடிதலின் ஊசிக்கதிர்களில் ஒன்று
நினைவுகளில் மோதி உடைந்தது

இன்னும் காலங்கள்
காத்திருப்புகளை
சோதிக்கக்கூடும்...

வெளியே யாரோ ஒருவரின்
கால்கள்......... விழுந்து மக்கிய
இலைகளுடன்

ரெகசியமாய் எதோ
பேசுவது போலவும்
கவிதைகள் சொல்வது  போலவும்

"யார் அது ?"

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com