முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
கன்னித்தன்மையும் செக்ஸ் சிகிச்சையும்
இளைய அப்துல்லாஹ் (இலண்டன்)
"சச்சின் அவுட் சரிதான்": - ஆஸ்திரேலிய நடுவர் டேரில் ஹார்ப்பர் பேட்டி
ஆர்.அபிலாஷ்
எங்கே செல்லும் இந்தப் பாதைகள்
வாஸந்தி
பிக்மி யானைகள் ---அழிவுறும் அதிசய உயிர்?
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.
அம்பானிகளின் போர்
நிஜந்தன்
Love Actually
ஆனந்த் அண்ணாமலை
நான் பார்த்ததிலே. . . (சிவபெருமான் கிருபையால்)
கிருஷ்ணன் வெங்கடாசலம்
வற்றாத வசீகரம்-பாபுவின் ‘ஆற்றுப் பாலத்தில் போகும் ரயில்’
பாவண்ணன்
கடவுளின் நண்பர்கள்
ராஜேஸ் ஆரோக்கியசாமி.
வாரிசு அரசியலின் தேவை
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
பள்ளிப்பட்டு பட்டாசு!
தமிழ்மகன்
கவிதை
முத்த வரம்
வெய்யில்
மெல்லிசையழிந்த காலம்
எம்.ரிஷான் ஷெரீப்,
பின்னொரு நாளில்
லதா மகன்
உயிரணுச் சுவை
அனுராதா
பலூன் பிரியம்
பொன்.வாசுதேவன்
சிறுகதை
எம்மா ஸ்மித்...
கார்த்திக் பிரபு
பொது
என்றார் முல்லா
பாபுஜி
இந்த வார கருத்துப் படம்
இந்திய வல்லரசு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ கவிதைகள்
தமிழில்:ஆர்.அபிலாஷ்
புது நூல்
சிற்றிதழ்ப் பார்வை
பலூன் பிரியம்
பொன்.வாசுதேவன்

ஆதிச்சுதந்திரத்தின் அலைதல் வெறுத்து
குழந்தை கைத்தழுவலுக்கேங்கி
அடைபட்டுக்கிடக்கும்
காற்றடைத்த
விற்காத பலூன்களோடு

நடை சலிக்காமல்
சாலை வெயிலில் சுற்றித்திரியும் 
வறண்ட கண் கொண்ட
பலூன் விற்பவனின்
கைவிரல் தேய்த்தலில்
‘ப்யூப்‘ ‘க்யூப்‘பென ஒலியெழுப்பிப்
போகுந்திசை நோக்கி

அப்பாவின் பேரன்பும்
பிரியத்தின் இதழ் மலரும்
அந்தித் தருணத்திற்காய்க் காத்திருக்கும்
 காயத்ரியின் ஞாபகத்தில்

பதியனாய் அமர்ந்து கொள்கிறது
மறுமுறை பலூன்காரன் வருவதற்குள்
பலூன் வாங்கி விடுவதற்கான விருப்பம்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com