
ஒரு கை இழந்தவன் மறுகையில்
அதன் நீளத்திற்கு புத்தகங்களை
அடுக்கிச் செல்கிறான் விற்பனைக்கு
“வயிறு எரிஞ்சி சொல்றேன்டி
இட்லியும் மிளகாய்ச் சட்னியும் சூப்பர்”
“ஏண்டா நாலு பரோட்டா வாங்கிட்டு வான்னா
ஒரேயொரு ஆலு பரோட்டா வாங்கிட்டு வந்திருக்கியே ...”
மூன்றடுக்கு மாளிகைகளில்
ஒரு பெர்த்தில் இரு தூக்கம்
பைபாஸ் செய்யப்பட்ட காவேரி உயிரோடு இருக்கிறது தான்
சூப்பர்-குரங்குகள் கால் நனைக்காத க்ரிப்டனைட்-குளங்களும்
சிறப்பு தரிசனம் Rs.20/- Special Entrance Rs.50/-
கொதிமணல் சிமெண்ட் தரை விதீமிதித்து ரெங்கனைத் திட்டினாள்
உயிருடன் உடல்தகனம் ஏ.சி. இன்றி அமையாது தீருச்சி என்றான்
ஒளிப்படம் எடுக்காதே
கேமிரா சார்ஜஸ் தனி
குளித்தலை கழிப்பிடம்
கடந்தது வழித்தடம்
டட்கலில் வேண்டுதல் நிறைவேற
சுகபூகம்பத்தூக்கம்