
காலஒலிப்பேழை இசைக்க மறந்த
ஒரு மஹாஇரவின்
நசுங்கிய நிலவொளியில்
நடுங்கும் கரங்களுடன்
நட்சத்திரங்கள் வரைபவன்
ஓய்வெடுக்கும்
எஃகு முட்டைகள் இடும் பறவை
தன் நீண்ட குறி விறைத்துக் கிடக்கும்
சுல்தான் மாளிகை வாசல் முன்
உபகிரகத்தின் அலைவரிசைப் பாதை தடைபட
ஒளிப்படக் கலப்படம் புலப்பட
இக்கணம் இக்கவிதையில்
மாய்சனைட் புதையல் காக்கும்
‘மன்னவன் வந்தானடி ... தோழி’