முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஈழத்து நகர சபைகளின் தேர்தல் என்ன சொல்லுகிறது?
தீபச் செல்வன்
பற்றி எரிகிறது மலை
கிருஷ்ணன் ரஞ்சனா
அணுவளவும் பயமில்லை
எம்.ரிஷான் ஷெரீப்
செயற்கை விந்துத் துளிகள்
இளைய அப்துல்லாஹ் (இலண்டன்)
‘மொழிபெயர்ப்பா விழி பெயர்ப்பா?'
இந்திரா பார்த்தசாரதி
பயணத்தின் நினைவுகள் :அம்பையின் வாகனம்.
அ.ராமசாமி.
எந்திரமும் அதிகாரமும்
நிஜந்தன்
ஓரியண்டலிசம், அரபு அறிவுஜீவிகள், மார்க்சியம் மற்றும் பாலஸ்தீன் வரலாற்று தொன்மம் - (எட்வர்ட் செய்த்துடன் நூரி ஜரா நேர்காணல்)
தமிழில் :- எச்.பீர்முஹம்மது
ரியாலிட்டி ஷோக்கள் எல்லை மீறுகின்றனவா?
மாயா
இலக்கியவாதி - அரசியல்வாதி - அறிவுஜீவி
யமுனா ராஜேந்திரன்
ஓ. . .செகந்திராபாத் - 20
சுப்ரபாரதிமணியன்
இது உயிரோசையின் 50ஆவது இதழ்
மனுஷ்ய புத்திரன்
காலம்காலமாக நீளும் கனவுகள்-சூத்ரதாரியின் "நடன மகளுக்கு"
பாவண்ணன்
அண்டை நாட்டில்... அடிக்கிறார்கள்
தமிழ்மகன்
கவிதை
நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
தீபச்செல்வன்
ஒரு நட்பின் தேடல்......
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
நம்பிக்கை
நளன்
விளக்க முடியாத ஒரு பொழுது
மண்குதிரை
உறுவலிக் குறிப்பு
மதன்
குறிப்புகளும் , அது சார்ந்தும்
பிரவின்ஸ்கா.
பாலை, மழை, காளான்
த.அரவிந்தன்
மின்விசிறியில் சுழலும் கவிதைகள்
நட்சத்திரவாசி
சவால்
எஸ். நளீம், இலங்கை.
சிறுகதை
நுவல்
கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்த வார கருத்துப் படம்
எப்படியிருந்த நாம்...
பாபுஜி
பதட்டம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்
புது நூல்
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
-
சிற்றிதழ்ப் பார்வை
பூவுலகு (சுற்றுச்சூழல் இதழ்)
-
இது உயிரோசையின் 50ஆவது இதழ்
மனுஷ்ய புத்திரன்

இது உயிரோசையின் 50 ஆவது இதழ். உலகெங்கிலும் இருந்து முன்னணி படைப்பாளிகளும் இளம் எழுத்தாளர்களும் தங்களது தொடர்ச்சியான பங்களிப்பினை உயிரோசைக்குத் செலுத்தியதன் மூலம் தமிழ் இணைய இதழின் வரலாற்றில் அதற்கு ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இன்று இணைய வாசகர்களிடையே உயிரோசை தவிர்க்க முடியாத ஒரு பெயராகிவிட்டது.

முக்கியமான எழுத்தாளர்கள் தங்களது பிரத்யேக வலைத் தளங்கள் மூலம் தீவிரமாகச் செயல்படத் துவங்கிய ஒரு காலகட்டத்தில் உயிரோசை உருவாக்கப்பட்டது. நேரடியாக இணைய பரிச்சயம் கொண்டவர்களால் மட்டும் கொண்டுசெலுத்தப்பட இணைய எழுத்துகளுக்கு நவீன எழுத்தாளர்களின் வருகை ஒரு புதிய உற்சாகத்தையும் முகத்தையும் வழங்கியது. பல்வேறு தளங்களில் செயல்படும் சிறந்த எழுத்தாளர்களுக்கான ஒரு களத்தினை இணையத்தில் உருவாக்க இதுவே சிறந்த காலகட்டம் என்று நம்பினோம். விளைவே உயிரோசை என்ற இந்தப் புதிய களம்.

இணையத்தோடு நேரடியாகத் தொடர்புகொண்ட எழுத்தாளர்கள் மட்டுமே இணையத்தில் பங்கேற்பது என்ற சூழலை உயிரோசை பெருமளவுக்கு மாற்றியமைத்தது. தமிழவன், .முருகேசபாண்டியன், கழனியூரன், சுப்ரபாரதிமணியன் முதலானோர் கையெழுத்துப் பிரதிகளாக அனுப்பியவற்றை வாரா வாரம் கணினியில் உள்ளிட்டு பதிவேற்றம் செய்தோம். அவர்கள் மட்டுமல்ல இந்திரா பார்த்தசாரதி, தனது முதல் இணைய பத்தியை உயிரோசையில்தான் எழுதினார். வாஸந்தி, சுகுமாரன், பாவண்ணன், .ராமசாமி போன்ற மூத்த எழுத்தாளர்களின் செறிவான பத்திகளுடன் சுதேசமித்திரன், மாயா, ஆர்.அபிலாஷ், இந்திரஜித், தமிழ்மகன், மனோஜ் ஆகியோர் தங்களது முற்றிலும் மாறுபட்ட, அதிரடியான, ஆழமான கட்டுரைகளால் உயிரோசையை வண்ணமயமாக்கினார்கள். இவர்கள் உயிரோசையில் மட்டுமல்ல தமிழ் எழுத்துலகிலும் புதிய நட்சத்திரங்களாக அடையாளம் காணப்பட இவர்கள் எழுதிய பத்திகள் காரணமாயின. அதேபோல சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் சினிமா தொடர்பாக எழுதிய ஒரு அருமையான தொடரை ஸ்ரீபதி பத்மநாபா வெகுநேர்த்தியாக மொழிபெயர்த்தார். அபிலாஷ் மொழிபெயர்த்த ஹைக்கூ தொடர், சஃபியால் மொழிபெயர்க்கப்பட்ட முல்லா கதைகள், சூஃபி கதைகள் முதலான தொடர்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. பாபுஜி சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து அளித்து வரும் கேலிச் சித்திரங்கள் உயிரோசைக்கு இன்னொரு புதிய பரிமாணத்தை அளித்தன. பீர்முகமது இஸ்லாமிய நவீனச் சிந்தனையாளர்கள் குறித்து தொடர்ந்து எழுதினார். யமுனா ராஜேந்திரன் பல முக்கியமான கட்டுரைகளை இந்த ஓராண்டில் எழுதியிருக்கிறார். வா.மணிகண்டன், நாகரத்தினம் கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் சிறப்பான பல கட்டுரைகளை எழுதினார்கள்.

ஓர் இதழ் ஓராண்டிற்குள் இத்தனை எழுத்தாளர்களை தொடர்ச்சியாகப் பங்கெடுக்க வைத்ததை தமிழ் இதழியல் உலகில் ஒரு சாதனையாகக் கருதவேண்டும். எந்த ஒரு வெகுசன அல்லது தீவிர இதழையும்விட பரந்துபட்ட தளத்தையும் பங்களிப்பினையும் உயிரோசை இந்த ஓராண்டில் செலுத்தியிருக்கிறது 1500க்கும் மேற்பட்ட படைப்புகள் பல்லாயிரம் பக்கங்களுடன் மிக அரிதான பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டபோது உண்மையில் மலைப்பே ஏற்படுகிறது. இது இணையம் என்ற சாதனத்தை அர்த்தபூர்வமாகப் பயன்படுத்த முடிந்ததாலேயே சாத்தியப்பட்டது. நமது பண்பாட்டு வேர்கள், கலை, இலக்கியம், தத்துவம், சமூகம், அரசியல், சர்வதேச விவகாரங்கள், சினிமா என ஏராளமான துறை சார்ந்த எண்ணற்ற கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. உலகெங்கிலும் இருந்து பல புதிய எழுத்தாளர்கள் தங்கள் கவிதைகளையும் கதைகளையும் உயிரோசையில் வெளியிட்டார்கள். எந்த ஒரு வெகுசன அல்லது தீவிர இதழுக்கும் சாத்தியப்படாத பரந்துபட்ட களத்தையும் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தியதன் மூலம் உயிரோசை ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தனிநபர் அவதூறுகள் இல்லாமல் ஒரு இணைய இதழைத் தமிழில் நடத்த முடியும் என்பதை உயிரோசை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. கருத்தியல்ரீதியான விமர்சனங்களைத் தாண்டி மேற்கொள்ளப்படும் எந்தத் தனிப்பட்ட தாக்குதலையும் வசைகளையும் உயிரோசை பெரும்பாலும் நீக்கியே வெளியிட்டிருக்கிறது. எதையும் எழுதலாம் என்ற எழுத்து சுதந்திரத்தையோ இணைய சுதந்திரத்தையோ சிறிதும் ஏற்கவில்லை. முரண்பாடுகளுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையும் நாகரிகமும் இருந்தாலொழிய படைப்போ கருத்துகளோ செழிக்க வழியில்லை. அர்த்மற்ற பரபரப்பிற்காக இந்த வசைகளை எழுதுகிறவர்கள் தனிப்பட்ட முறையிலும் கலாச்சாரரீதியாகவும் தாங்கள் அடையும் இழப்புகள் பற்றி அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள்.. சிறுபத்திரிகையோ இணையமோ உருவாக்கும் கலாச்சாரத் தனிமை உணர்ச்சிதான் ஒருவரை இந்த வசைகளை நோக்கி உந்தித் தள்ளுகிறது. அரட்டை அல்லது வன்முறையின் வழியே உருவாகும் கவன ஈர்ப்புகளுக்கு எதிரான ஒரு இதழியல் கோட்பாட்டையே உயிர்மை- உயிரோசை இதழ்கள் தொடர்ந்து முன்னெடுக்கும்.

எந்தவித பொருளாதார உதவியும் இன்றி இந்த ஓராண்டாக உயிரோசை கடும் பொருட் செலவுடன் (ஓராண்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய்) நடத்தப்பட்டு வருகிறது. பரீட்சார்த்தமுறையில் போடப்படும் விளம்பரங்களில் இருந்து இதுவரை உயிர்மைக்கு எந்த ஆதாயமும் இல்லை. எனினும் வாசகர்கள் எழுத்தாளர்களின் பேரளவிலான  உற்சாகத்தினால் இந்தச் சுமையைத் தாங்கிவருகிறோம். உயிரோசைக்கு ஒரு சிறிய அளவிலான சந்தா தொகையை நிர்ணயிப்பது பற்றி யோசித்து வருகிறோம். அநேகமாக இது தோல்வியில்தான் முடியும் என்பது எனக்குத் தெரியும். அல்லது மாதம் குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாய் வரையிலான விளம்பர ஆதரவோ புரவலர்களின் உதவியோ இருந்தால் உயிரோசையை தொடர்ந்து இலவசமாகத் தொடரலாம். உயிரோசை வாசகர்களின் கூட்டு முயற்சியும் ஆதரவும் இருந்தால் இன்னும் சிறப்பான முறையில் உயிரோசையை மாற்றியமைக்கலாம். உங்கள் ஆலோசனைகளை எழுதுங்கள்.

 உயிரோசை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு ஆகஸ்ட் 30 ஆம்தேதி மதுரையில் ஒரு விழா நடைபெற இருக்கிறது. உயிரோசையில் வெளிவந்த பத்துக்கும் மேற்பட்ட தொடர்கள் நூலாக்கப்பட்டு வெளியிடப்படவிருக்கின்றன. தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் உரையாற்றுகிறார்கள். முழுவிபரங்கள் இன்னும் ஓரிரு நாளில் உயிர்மை இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

உயிர்மையின் எல்லா முயற்சிகளையும் முதன்மையாக்கிவைத்த நண்பர்களே, உடன் இருந்தீர்கள், வலிமை தந்தீர்கள், இருள் சூழம்போது ஒரு தீக்குச்சியை உரசினீர்கள் அல்லது ஒரு உதயத்தைப் பற்றிய நம்பிக்கையூட்டும் சொற்களைத் தந்தீர்கள்...

என்றும் நீங்காத பிரியங்களுடன்


மனுஷ்ய புத்திரன்

ஆசிரியர்
உயிரோசை
manushyaputhiran@gmail.com

 
உயிரோசை குழு

நிர்வாக ஆசிரியர்
செல்வி

தயாரிப்புக் குழுவினர்
சிவன்
பாண்டியன்
லாவண்யா
ஜெயகுமார்

வடிவமைப்புக்குழு
வேல்முருகன்
கதிர்

தொழில்நுட்ப மேலாண்மை
கோகுல்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com