முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஆர்.எஸ்.எஸ்ஸின் விஷ வளையத்திற்குள் நுழைந்த சோக அபிமன்யூ
மாயா
கறுப்புப் பணம்: ரஜினியும் அத்வானியும்
செல்லமுத்து குப்புசாமி
காகிதப் புலி
இந்திரா பார்த்தசாரதி
நல்ல நேரமும் நமது கெட்ட காலமும்
வாஸந்தி
இந்திய அணியை தோற்கடிப்பது எப்படி?
ஆர்.அபிலாஷ்
அன்பார்ந்த உதவி இயக்குனர்களே!
சுதேசமித்திரன்
ஒரு தற்கொலை
சுப்ரபாரதிமணியன்
நாற்காலிக்காரர்
இந்திரஜித்
கவிஞர் சுகுமாரனின் ‘வெளிச்சம் தனிமையானது’
தமிழ் நதி
துர்கா மற்றும் அபுவின் அம்மா
சி.வி.பாலகிருஷ்ணன்
ட காமா : ஒரு எதிர்நாயகனின் வெற்றிப் பயணம் – 3
ஸ்ரீபதி பத்மநாபா
சப்தமும் நிசப்தமும் -தேவதச்சனின் கவிதை
பாவண்ணன்
மனிதனின் கடமைத் தேர்வென்பது உண்மை சார்ந்தது அல்ல
நாகரத்தினம் கிருஷ்ணா
ஆண்டுவிழா
பாண்டியன்
நச்சினார்க்கினியர், அண்ணா, ஷெல்டன் போலக்
தமிழவன்
சி.மணி (1936 - 2009)
சுகுமாரன்
கவிதை
இன்றை...
ச.முத்துவேல்
என் உலகின் மீச்சிறு கூட்டில்
வெ.சந்திரமோகன்
விழித்திருப்பவனின் இரவு
சேரலாதன்
இன்னும் ஓர் இரவு...
சசிதரன் தேவேந்திரன்
இயல்பு
பொன்.வாசுதேவன்
புகையும் கவிதை
நந்தாகுமாரன்
வெளியில் நல்ல மழை
யாத்ரா
சிறுகதை
கன்ட்ரோல் பேனல் சுண்டக்கஞ்சி (அ) தீராத பேச்சுகள்.
மண்குதிரை
பொது
இரண்டு முதல்வர்களும் ரம்பாவும்!
தமிழ்மகன்
சூஃபி கதைகள்
முஹமது சஃபி
என்றார் முல்லா
தமிழில் : முகமது சஃபி
விடுகதைகள்
கழனியூரன்
இந்த வார கருத்துப் படம்
ஆதரவு
பாபுஜி
ஆடை அலங்காரப் போட்டி
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில் ஆர்.அபிலாஷ்
பொது
'இலஞ்சத்தை ஒழிப்பது எப்படி?'
பாண்டியன்
சிறுகதை
வல்லிக்கண்ணன் - தீப. நடராஜனுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஓவியா (கலை இலக்கிய இருமாத இதழ்)
-
சிறுகதை
ஆடிக் கரு அழிந்தால், ஓடிப் போய்விடும் மழை.
-
விழித்திருப்பவனின் இரவு
சேரலாதன்

விழித்திருப்பவனின் இரவு
நீண்டு கொண்டே போகிறது
சூரியனின் முதல் கீற்றில்
விரியும் சமுத்திரம் போல.

தூக்கத்தில்
தொலைந்து போன
இரவுகள் போல
இருப்பதில்லை அது.

பிறந்த குழந்தையின்
பச்சை வாசத்தோடு,
குழந்தைக் கிறுக்கலின்
வர்ணங்கள் போல் அழகாக,
அபஸ்வரங்கள் களவாடப்பட்ட
இசையாக
இரம்மியமாக இருக்கிறது.

இரவினை
ஒரு குடிகாரனின் வேகத்தில்
ஒரே மடக்கில்
வாரிக் குடித்து விடுகிறது
தூக்கம்!

மழைத்துளி பருகும்
சாதகப் பறவையாய்த்
துளித் துளியாகப்
பருகச் செய்கிறது
விழிப்பு!

ஓசைகளற்ற மௌனம்
மனிதர்களற்ற நடைபாதைகள்
தூரத்து வானொலி சப்தம்
கிறீச்சிட்டபடி ஓடும் நெடுஞ்சாலை வாகனங்கள்
காதுக்குள் சப்தமிடும் பின்னிரவுக் குளிர்
எப்போதும் பூட்டப்படும்
ஏதோ ஒரு கடை
எப்போதும் திறக்கப்படும்
ஏதோ ஒரு கடை
மறுநாள் பிழைப்புக்கு
ஆயத்தமாகும் ஜனத்திரள்,
இரவு விழித்திருப்புக்கான
சாட்சிகள்.

விடிந்த பின்புதான்
புலனாகிறது
கண்களினின்றும் அவை
தொலைந்து போயிருக்கின்றன.

தெருக்களில்
தேடியலைந்த போது கண்டேன்
சுவரொட்டி ஒட்டும்
ஒருவனின் கண்களில்
ஒளிந்து கொண்டிருந்தன
இரண்டும்

பரிச்சயப்பட்டவர்கள் போல்
புன்னகைத்து நகர்ந்தோம்
இருவரும்

தொலைந்தே போயிருந்தன
இரவும்
இரவு குடிக்கும் தூக்கமும்.
 

ஓடலும் ஓடல் நிமித்தமும்


வெளியூர்ப் பேருந்து நிலையத்தில்
தனியாய் வேடிக்கை
பார்த்துத் திரிந்ததற்காய்
அப்பா பலர்முன்
அறைந்தபோது
முடிவு செய்து கொண்டாள்
இப்போது
ஒன்பதாவது படிக்கும்
பக்கத்து வீட்டு ஊர்மிளா,
பெரியவள் ஆனதும்
எவனையாவது
இழுத்துக்கொண்டு
வீட்டை விட்டு ஓடி விடுவதென்று.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com