முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
புலிகள் ஊடுருவியுள்ள சிங்களக்காடுகள் இராணுவத்துக்குப் பெரும் நெருக்கடி
இளைய அப்துல்லாஹ்
குமிழியில் உடையும் வானவில்கள்
அ.ராமசாமி
அன்பின் சுனை
வாஸந்தி
‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழியா?'
இந்திரா பார்த்தசாரதி
என் சொந்த நகரத்தின் வசந்தம்
சி.வி. பாலகிருஷ்ணன்
குதிப்பதுவே! மிதப்பதுவே! குலுங்குவதே!
சுதேசமித்திரன்
Very Stupid!
இந்திரஜித்
நிலையின்மையின் அமைதியின்மை
செல்லமுத்து குப்புசாமி
தமிழக கிரிக்கெட் வீரர்களின் நெடுங்காலப் புறக்கணிப்பும் சமீப அவசரத் தேர்வுகளும்
ஆர்.அபிலாஷ்
நம்பிக்கையின் ஊற்று-கி.விஜயலட்சுமியின் ‘நான் இளைப்பாற’
பாவண்ணன்
பொருளாதார மந்தமும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையும்
வா.மணிகண்டன்
'நண்டு நடை'- குண்ட்டெர் கிராஸ்
நாகரத்தினம் கிருஷ்ணா
எனக்குப் புதிர்களைப் பிடிக்கும்; நகுலனையும்…..
தமிழ்நதி
மேடைப் பேச்சுகள் கட்டமைக்கும் அரசியல்
ந. முருகேசபாண்டியன்
ஈழப்பிரச்சினையும் தோற்கடிக்கப்பட்ட அண்ணாவும்
தமிழவன்
கவிதை
புணர் சிற்பம்
த.அரவிந்தன்
அலைவு
சேரலாதன்
சதுரங்கம்
யாத்ரா
கே.பாலமுருகன் கவிதைகள்
கே.பாலமுருகன்
சாட்சியாக..
பிரவின்ஸ்கா
சிறுகதை
இறந்தவனைப்பற்றிய வாக்குமூலம்
கோ.புண்ணியவான்
பொது
படிப்பில் இருந்து நடிப்புக்கு...!
தமிழ்மகன்
நாட்டார் நீதிபதிகள்
கழனியூரன்
இந்த வார கருத்துப் படம்
ஒளிமயமான எதிர்காலம்
பாபுஜி
வெற்றிப்பயணம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ: டானேடா சன்டேகா (1882-1940)
தமிழில்: ஆர்.அபிலாஷ்
பழமொழிகளும் சொலவடைகளும்
ஆடாத ஜாதி; கூடாத ஜாதியா. . .?
தொகுப்பு: கழனியூரன்
சிறுகதை
ஆகாசம்பட்டு வெ.சேஷாசலம் ‘கி.ரா’வுக்கு எழுதியது
-
பொது
'மலத்தில் தோய்ந்த மானுடம்'
பாண்டியன்
சிற்றிதழ் பார்வை
அலைவு
சேரலாதன்

ஏதோ ஊர்களின்
பெயரறியாத் தெருக்களில்
யாரோ பலருக்கு
யாரோ ஒருவனாக
சுற்றித் திரிகிற கணங்கள்
சொல்லித் தருகின்றன
நானாக இருப்பதின் சுகத்தை

யாருமற்ற பாதைகளில்
ஒற்றையில் நடைபோட,
துணைவரும் காற்று
கூறிப்போகிறது,
மனிதரில்
முதலோ,
கடைசியோ
நான்தானென்று

பின்னிரவில்
பயணம் செய்யும்
பேருந்தின் ஓசை
தருகிறது
அமைதியற்றதொரு
அமைதியை

கடந்துபோகின்ற
முகம் ஒவ்வொன்றிலும்
சூல் கொண்டிருக்கின்றன
சில கதைகளும்
சில கவலைகளும்

என்றோ ஓரிரவில்
மலைகள் சூழ்ந்த கிராமத்தின்
கிழக்கு திசைக்கு
வழிகாட்டிய பெரியவர்,
என் வீட்டுக்கும்
வழிகாட்டுகிறார்
பயணத்தினூடே நிகழும்
சில நொடிக் கனவுகளில்

வெவ்வேறு நிலங்களில்
வெவ்வேறு வண்ணம்
கொள்கின்றன,
நாளின்
விடிவும்
முடிவும்;
வெவ்வேறு சுவை
கொள்கின்றன
நீரும் காற்றும்

சூழ்நிலையின் கோப்பைக்குள்
அடைக்கப்பட்ட 'நான்'
பிரவாகமெடுத்து
ஓடுகிறது
சுதந்திரமாக

இலக்கற்ற பயணம்
உணர்த்துகிறது
ஏதேதோ விஷயங்களை

என்றாலும்
தொடக்கமாகவோ
முடிவாகவோ
நிர்ணயிக்கப்பட்ட
புள்ளியை நோக்கியே
மறுபடியும் குவிகிறது
மனது.


மிருகம் நீயென்றுணர்

ஊருக்குள் மிருகங்கள்
உலவுவதாய்ச் சொன்னார்கள்

இருள் கவிந்ததும்
வெளிவருவதாயும்
ஒளி வந்ததும்
மறைந்து போவதாயும் பேச்சு

பகலும் இரவுமற்ற 
பொழுதுகளில் பார்த்தோமென்றனர்
நரிகளை ஆடுகளெனச்
சத்தியம் செய்தவர்கள்

ரத்தமும் சதையுமாய்
உண்டு செரித்து, மிருகங்கள்
எச்சமாய் விட்டுச்செல்கின்றன
மிச்ச மீதி உயிரையோ,
அழிக்கப்படாத கொஞ்சம் கற்பையோ,
கிழிக்கப்பட்ட இதயத்தின் கடைசி ஒலியையோ,
ஒன்பதரை மாதங்கள்
ஒன்று சேர்ந்து
ஒரு நொடிக்குள்
உருக்குலைக்கப்பட்ட சிதைவையோ!

மிருகங்களின் வாயொழுகும்
குருதியில் தோய்ந்தபடி,
குற்ற உணர்வோடு 
வீடு சேர்கின்றன
செய்தித்தாள்கள்

வளர்ந்த வண்ணமேயிருக்கின்றன
மிருகங்கள் குறித்தான
பேச்சும், பயமும்

தீராதிருப்பது,
மிருகத்தின் உருவம் பற்றிய 
சர்ச்சையும்,
மிருகத்தின் மீதான ரகசிய 
மோகமும்தான்

புகையுருவமாய்ப்
புலப்படாமல்
எழுந்தலைகின்றன உருவங்கள்!

பிறப்புறுப்பைத் தீண்டிச்சென்ற
பக்கத்துவீட்டுக்காரனைப்
போலிருந்ததாய்ச் சொன்னாள்
புன்னகைக்க மட்டுமே
அறிந்திருந்த ஒரு சிறுமி

சிகரெட் புகையடைந்த
விடுதியறையொன்றில்
வன்புணர்ந்தவனின்
கண்களைக் கொண்டிருந்ததென்றாள்
வீதியோரத்தில் கிடக்குமொருத்தி

உயிர் பிழிந்து ரசித்த
உருவங்களினூடே
ஒளிந்துகொண்ட 
காதலனைப்போல் 
கோரமாக இருந்ததென்றாள்
இமைப்பதை மறந்துபோன
இமைகளைக் கொண்டவள்

ஆண்மையைத் தன்னிடம் மட்டும்
நிரூபிக்கும்
கணவனின் உயரமிருக்குமென்றாள்
தேனிலவில் உடல் தொலைத்த
மனைவிகளில் ஒருத்தி

தெருமுனையைக் கடக்கையில்
துகிலுரியும் பார்வையை வீசிச்செல்லும்
எவனோ ஒருவனை
ஒத்திருந்ததென்றாள்
எப்போதும் உடை சரி செய்யும்
எவளோ ஒருத்தி

மிருகத்தின் உருவம்
இன்னதென்று தெளியவில்லை.
தன்னைப்போலில்லை 
என்பதே
சந்தோஷம் எல்லோருக்கும்

ஆனால்,
யாருமற்ற இரவுகளில்,
எல்லோரும் சரி பார்க்கிறார்கள்
கண்ணாடி காட்டும் பிம்பத்தில்
கொஞ்சமேனும்
மிருகத்தின் சாயலை.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com