சீற்றமும் மௌனமும் சமயவேலின் 'எதிர்கொள்ளுதல்' - பாவண்ணன்
'எதிர்கொள்ளல்' கவிதையைச் ஒரு சங்க சித்திரம்போல எதிர்கொள்வதற்குப் பாவண்ணன் கையெடுத்த சொற்தூரிகை தம் பங்குக்கு சற்றுக் கூடுதலாவவே நமக்கு உதவியிருக்கிறது. பல கவிதைகளைப் போகிறபோக்கிலே சராசரி வாசகனாகப் புரட்டியிருக்கிறேன், அது கவிதைகளின் குற்றமல்ல, அதன் இருக்கைக்கு ஈடாக என் இருக்கையை வைத்து உரையாடத் தவறிய எனதுக் குற்றமாக அவற்றினை மறுவாசிப்பு செய்கிறபோது உணர்ந்து வெட்கப்பட்டிருக்கிறேன். ஓர் எழுத்து அல்லது எழுத்தாளன் யாரால் வாசிக்கபடுகிறது, கொண்டாடப்படுகிறான் என்பது முக்கியம். சமயவேல் செய்த புண்ணியம் பாவண்ணன் கிடைத்தார். எதிர்கொள்ளல் கவிதைக்குப் பாவண்ணன் தீட்டிய கருத்தோவியத்த்திற்கு ' அழகு' என்ற ஒற்றைச் சொல் பதித்த கிரீடத்¨தை அவர் தலையில் சூட்டக் கூடாதுதான். அதிலும் பல நேரங்களில் இங்கே சூட்டப்படும் மகுடங்கள் தலைகளுக்குப் பொருந்தாமல் இருப்பதால் பாவண்ணன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
சீற்றங்களை எதிர்கொள்ள மௌனம் உதவும் என்பதை வலியுறுத்துகிற பாவண்ணன், சமயவேல் போன்றவர்களின் கவிதைகளைக் கொண்டாடுகிறபோது மௌனம் காப்பவரல்ல என்பதையும் புரிந்துகொள்கிறோம். உண்மைதான் இதுபோன்ற கவிதைகளை உள்வாங்கிக்கொள்ளவும், அகமன உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும், வேறு எதிர்கொள்ளல் முறைகள் இருக்கின்றன என்பது பாவண்ணன் சொல்லித் தருகிற பாடம். என்ன செய்வது மனிதரினத்தில் அல்லவைகளை ஆராதித்து, மௌனம் சாதிக்க இயலாதவர்களாகவே நம்மில் பலரும் இருக்கிறோம், எங்கோ ஒன்றிரண்டு பாவண்ணன்கள் இருக்கிறார்கள், அவர்களின் பக்குவமான அணுக்கத்தால் 'எதிர்கொள்ளல்' போன்ற நல்ல கவிதைச் சித்திரத்திரத்தில் அறிமுகமும் கிடைக்கிறது, கைதேர்ந்த இலக்கியவாதியின் சொற்சித்திரமும் நமக்கு வாய்க்கிறது.
நாகரத்தினம் கிருஷ்ணா