
கனமான அட்டைகளிடையும்
அடங்காத காற்றிற்கு
படபடக்கும் பக்கங்களாய்
உடலோடு
மறைந்திருந்த உணர்ச்சிகளை
புரட்டினாய்
ஒன்றிரண்டானாலும்
ஒரு நூறு ஆனாலும்
வரிசையில் மாற்றமில்லை
தொடர்ந்து தொடங்குகிறாய்
காற்றாகி
மீண்டும் மீண்டும்
அடங்காத பக்கங்கள்
பரிதவித்தாலும்
விடுவதாயில்லை
காற்றும்
அட்டைகளும்