முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
பனிரெண்டு வருடம் உறங்கிய பெண்
சி.வி. பாலகிருஷ்ணன்
எழுத்தாளன் என்ற மகான்: சில கற்பனைகள், வேண்டுகோள்கள்
ஆர்.அபிலாஷ்
இந்தியா நடத்தும் ஈழப்போர்
இளைய அப்துல்லாஹ்
ஜென் அண்ட் தி பிஸினெஸ் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்-Zen and the business of Investment Banking
விபா
இயற்கை என்னும் புதிர்-ஆர்.ராஜகோபாலனின் "பாகல் பூ"
பாவண்ணன்
வீடும் வாழ்வும்
செல்லமுத்து குப்புசாமி
ஒரு மரணமும் ஒரு கடிதமும்: அது தரும் செய்தி
தமிழவன்
வசனம் எழுதுவது எப்படி?
சுதேசமித்திரன்
தமிழ் சினிமா தரும் கற்பிதங்கள்
வாஸந்தி
‘கடலில் ஒரு துளி'
இந்திரா பார்த்தசாரதி
கடைசிவரை யாரோ?
ந. முருகேசபாண்டியன்
ஏழாம் உலகமும் பாலா உலகமும்!
இந்திரஜித்
கவிதை
காற்றும் கனமான அட்டைகளும்
லாவண்யா
பூச்சாண்டிகள்
ஆதவா
செத்த பேன்களும், சில தற்கொலைகளும்.
மதன்
வவ்வால் இல்லாத கவிதை...
சரவணகுமார்.மு
நாம் நாமாக...
றஞ்சினி
சிறுகதை
ஒதியம் பெருத்தா உத்திரத்துக்கு ஆகுமா?
கென்
பொது
கூவாத கோழி!
தமிழ்மகன்
பல்லுக்கு மெதுவான கல்
கழனியூரன்
வாழ்த்துக்கள்
ஈழத் தமிழர் ஆதரவு
பாபுஜி
செத்த பாம்பு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்
சிறுகதை
‘லா.ச.ரா’ - தீப.ந. வுக்கு. . .
-
சிற்றிதழ் பார்வை
தமிழ் இலெமூரியா
-
பொது
சொல்லக் கூசும் கவிதை
-
சிறுகதை
சீற்றமும் மௌனமும் சமயவேலின் 'எதிர்கொள்ளுதல்' - பாவண்ணன்
-
இந்தியா நடத்தும் ஈழப்போர்
இளைய அப்துல்லாஹ்

ஜனவரி 31 ஆம் திகதி மாலை இப்பொழுதுதான் 4 செல்ஸியஸ் விறை குளிரில் லண்டன் சிற்றியில் இருந்து வந்திருக்கிறேன். உடனடியாகவே இதனை எழுதுகிறேன்.

சிறிலங்கா இராணுவத்தினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் எழுச்சிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்தார்கள். லண்டன் மில் பாங்க் எனும் இடத்தில் பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமாகிய இந்த பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை நோக்கி சென்று முடிவடைந்தது. தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினார்கள். தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் புகைப்படங்களையும் தமிழர்கள் தாங்கியிருந்தனர். அத்தோடு மகாத்மா காந்தி தமிழீழத்திற்காக இரத்தக்கண்ணீர் விடுவது போன்ற புகைப்படங்களையும் தாங்கியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் லண்டனில் ஒரு அதிர்வு ஏற்பட்டிருக்கிறதுதான். இந்தியாவே இலங்கை தமிழர்களை அழிக்க உதவாதே என்ற சுலோகங்களும் மக்கள் தாங்கியிருந்தனர்.

ஈரோடு பகுதியில் இருந்து டாங்கிகள் இலங்கைக்கு போகின்றன என்ற செய்தி நம்பாமலும் இருக்க முடியவில்லை நம்பவும் முடியாத ஒரு சூழ்நிலையில் புலம் பெயர் தமிழர்கள் இருக்கின்றனர். அத்தோடு 3000 இந்திய படையினர் இலங்கைக்கு வந்து விட்டார்கள் அவர்கள் பிரபாகரனை பிடித்துக்கொண்டு போவதற்காக வந்திருக்கின்றனர். என்று ஒரு செய்தியும் பரவி வருகிறது. பூகோளவியலாளர்கள் சொல்கின்றனர் கொச்சியில் இருந்து இலங்கைதான் அண்மையில் இருக்கிறது எனவே இராணுவ தளபாடங்கள் இலங்கைக்குதான் போகின்றன. வேறு இடங்களுக்கு இந்த துறைமுகத்தில் இருந்து இராணுவ தளபாடங்கள் அனுப்ப வேண்டிய தேவை இந்தியாவுக்கு இல்லை என்கின்றனர்.

இந்த விடயம் தமிழகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்திய போதும் மத்திய அரசு எந்த விதமான பதிற்குறிகளையும் தெரிவிக்காதது அப்படியுமிருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் என்றமாதிரி இருக்கிறது. ஆனால் இந்தியா முழுமையாக இந்த போரை நடத்துகிறது என்றுதான் சொல்கிறார்கள். ஏனெனில் இந்தியாவுக்கு பிரபாகரனோ புலிகளோ இருக்க கூடாது.

கடந்தமாதம் பிற்பகுதியில் நான்கு வதந்திகள் இங்கே லண்டனில் பரவின. (1)புலிகள் யாழ்ப்பணத்துக்கு போய் விட்டார்கள் அங்கு இராணுவத்தினரை புலிகள் மூர்க்கமாக தாக்கி அழித்து வருகின்றனர்.(2)கல்மடு குளத்தை புலிகள் தமது யுத்த தந்திரோபாய முறையில் தகர்த்ததனால் 1500 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே பலியாகி விட்டனர்.

(3)கோட்டபாய ராஜபக்ஸவும் டக்ளஸ் தேவானந்தாவும் தற்கொலை குண்டு தாக்குதலில் பலியாகி விட்டனர். (4)இரண்டு போர் விமானங்களை புலிகள் சுட்டு வீழ்த்தி விட்டனர்.

இந்த நான்கு வதந்திகளும் தொடர்ந்து ஒரு கிழமை முழுவதும் இருந்தன. பின்னர் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று மக்கள் சோர்வடைந்தனர். இப்படி எல்லாம் நடந்து விட மாட்டாதா என்று ஏங்குகின்ற புலம் பெயர் தமிழர்களின் ஏக்கம் தான் இது.

தமது இராணுவத்தினர் முல்லைத் தீவை கைப்பற்றிவிட்டனர் என்று

ஜனவரி 26 ஆம் ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தலைமையகம் அறிவித்திருந்தது. 27 ஆம் திகதி முதல் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக புலிகள் சொல்லியிருக்கின்றனர்.

இலங்கை அரசு யுத்தம் தொடர்பான உறுதியான நிலைப்பாட்டில் இருந்து மாறவே மாட்டாது என்பது அதன் நடவடிக்கைகளில் இருந்து தெரிய வருகிறது.

இலங்கைக்கான சமாதான தூதுவராக நியமிக்க பட்டுள்ள யசூசி அகாசி கொழும்பு வந்து ஜனாதிபதியோடும் ஏனைய அரசியல் கட்சிகள் தமிழ் கூட்டமைப்பினரோடும் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார். ஆனால் அரசு எதற்கும் விட்டுக்கொடுப்பதாயில்லை.

முகர்ஜி யுத்தத்தை நடத்துங்கள் என்று மகிந்த ராஜபக்சவுக்கு சொல்வதற்கே திடீரென்று இலங்கைக்கு வந்து விட்டு போயிருக்கிறார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது எறிகணைத் தாக்குதல்கள் நடத்தமாட்டோம் என்று இராணுவம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால் புலிகளின் இறுதி புகலிடமான புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிவிட்டால் தமக்கு விசயம் முடிந்து விடும் என்று இராணுவம் நினைத்து கொண்டு தொடர்ச்சியாக வைத்தியசாலைகள் பொதுமக்கள் என்று எதுவும் பார்க்காமல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ச்சியான இராணுவத்தின் எறிகணை வீச்சை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவும், ஐக்கிய நாடுகள் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனாலும் இது பொறுப்பற்ற அறிவிப்பு என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் இடம்பெயராது அதே இடத்தில் இயங்கிவரும் ஒரேயொரு வைத்தியசாலையான புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தொடர் எறிகணைத் தாக்குதல்களை ஸ்ரீலங்கா படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். தாதி ஒருவர் கடமையில் இருந்த போது வைத்தியசாலையில் வைத்து எறிகணை வீச்சில் கொல்லப்பட்டிருக்கிறார்.

இதில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பலர் காயமடைந்துள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரும், ஐக்கிய நாடுகள் சபை தொண்டு நிறுவனங்களும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அறிவித்து வரும் நிலையிலேயே மீண்டும், மீண்டும் எறிகணைத் தாக்குதல்களை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை நோக்கி ஸ்ரீலங்கா அரச படையினர் மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து அரசாங்கம் தாம் பொறுப்பேற்க முடியாது என்று அறிவித்துள்ளதுடன், மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் தங்கியுள்ள பொது மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கத்தால் பொறுப்பு கூற முடியாது என்றும், உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் உத்தியோகபூர்வமாகவே அறிவித்துவிட்டது. 48 மணி நேர அவகாசத்தில் பொதுமக்களை வெளியில் விடுமாறு புலிகளிடம் அரச இராணுவம் கேட்டிருந்தது. வெளியில் மக்கள் வரவில்லை.ஆனால் புலிகள் மக்களை தமது கேடயமாக வைத்திருக்கின்றனர் என்று அரச இராணுவம் அறிவித்து விட்டு, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் தங்கியுள்ள மக்களின் பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் வழங்க முடியாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் பகிரங்கமாகவே அறிவித்து விட்டது.

பொது மக்களுக்காக அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட பகுதிகளில்; கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மட்டும் ஐயாயிரம் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக வன்னியிலிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன. சுதந்திரபுரம் அகதிகள் முகாம் மற்றும் சூழ உள்ள பகுதிகளிலயே இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. என்று வன்னியில் தங்கியிருக்கும் ஐக்கிய நாடுகள் தொண்டு நிறுவன அதிகாரிகள் செய்மதி தொலைபேசி வழியாக பி.பி.ஸி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருக்கின்றனர்.பி.பி.ஸி யின் கிறிஸ்மொறிஸ் இந்த செய்திகளை உலகம் முழுவதும் அனுப்பிக் கொண்டிருப்பதனால் இலங்கை அரசின் அனியாயம் வெளியில் தெரிவதை விரும்பாமல் அவரை நாடு கடத்தப் போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

வன்னிப் பிரதேசத்தில் துன்பப் படுகின்ற அப்பாவித் தமிழ் பொதுமக்கள் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் உரிய கவனம் காட்டவில்லை என அமெரிக்காவின் பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் என்ன விலை கொடுத்தாலும் எத்தனை உயிர்களைக் காவு கொடுத்தாலும் புலிகளை புதுக்குடியிருப்பில் இருந்தும் முற்றாகத் துரத்த வேண்டும் என்று அரசாங்கம் நினைக்கும் போது இணைத்தலைமை நாடுகளும் (ஜப்பான்,அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம்) அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்போது அரசு சந்தோசமாக யுத்தத்தை செய்துகொண்டிருக்கிறது. யுத்தம் முடியாது புலிகளை அழிக்கும் வரை ஆனால் மக்களை பற்றி யாருமே யோசிக்கிறார்களில்லை.

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com