முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
பனிரெண்டு வருடம் உறங்கிய பெண்
சி.வி. பாலகிருஷ்ணன்
எழுத்தாளன் என்ற மகான்: சில கற்பனைகள், வேண்டுகோள்கள்
ஆர்.அபிலாஷ்
இந்தியா நடத்தும் ஈழப்போர்
இளைய அப்துல்லாஹ்
ஜென் அண்ட் தி பிஸினெஸ் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்-Zen and the business of Investment Banking
விபா
இயற்கை என்னும் புதிர்-ஆர்.ராஜகோபாலனின் "பாகல் பூ"
பாவண்ணன்
வீடும் வாழ்வும்
செல்லமுத்து குப்புசாமி
ஒரு மரணமும் ஒரு கடிதமும்: அது தரும் செய்தி
தமிழவன்
வசனம் எழுதுவது எப்படி?
சுதேசமித்திரன்
தமிழ் சினிமா தரும் கற்பிதங்கள்
வாஸந்தி
‘கடலில் ஒரு துளி'
இந்திரா பார்த்தசாரதி
கடைசிவரை யாரோ?
ந. முருகேசபாண்டியன்
ஏழாம் உலகமும் பாலா உலகமும்!
இந்திரஜித்
கவிதை
காற்றும் கனமான அட்டைகளும்
லாவண்யா
பூச்சாண்டிகள்
ஆதவா
செத்த பேன்களும், சில தற்கொலைகளும்.
மதன்
வவ்வால் இல்லாத கவிதை...
சரவணகுமார்.மு
நாம் நாமாக...
றஞ்சினி
சிறுகதை
ஒதியம் பெருத்தா உத்திரத்துக்கு ஆகுமா?
கென்
பொது
கூவாத கோழி!
தமிழ்மகன்
பல்லுக்கு மெதுவான கல்
கழனியூரன்
வாழ்த்துக்கள்
ஈழத் தமிழர் ஆதரவு
பாபுஜி
செத்த பாம்பு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்
சிறுகதை
‘லா.ச.ரா’ - தீப.ந. வுக்கு. . .
-
சிற்றிதழ் பார்வை
தமிழ் இலெமூரியா
-
பொது
சொல்லக் கூசும் கவிதை
-
சிறுகதை
சீற்றமும் மௌனமும் சமயவேலின் 'எதிர்கொள்ளுதல்' - பாவண்ணன்
-
பனிரெண்டு வருடம் உறங்கிய பெண்
சி.வி. பாலகிருஷ்ணன்

கொலம்பியாவின் ஒரு சிறிய நகரத்தில் வேலை பார்க்கும் மார்கரிட்டோ துவார்தேயின் மகள் இறக்கும்போது அவளுக்கு ஏழு வயது. பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு அவளுடைய எலும்புக்கூட்டை இன்னொரு மயானத்துக்கு மாற்றுவதற்காக அவளுடைய கல்லறையைத் திறந்து பார்க்கும் மார்கரிட்டோ, உடல் சிறிது கூட அழுகிவிடாமல் அவள் உறங்குவதைப் போல கிடப்பதைப் பார்க்கிறான். அவனைப் போலவே அவன் சார்ந்த சமூகத்தினரும் அந்தக் காட்சியைப் பார்த்து வியந்து போகிறார்கள். அது ஒரு புனித அதிசயம் என்று கருதி சமூகத்தினர் புகழ்கிறார்கள். ஆனால் பிஷப் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அந்தப் பெண்ணின் உடலை உடனே புதைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார்.

'ரோமில் ஒரு புனித அற்புதம்' (Miracle in Rome : Lisandro Duque Naranjo) என்ற இந்தத் திரைப்படம் காப்ரியல் கார்சியா மார்க்வெசின் அசாதாரணமான ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டது. மார்க்வெசின் பல கதைகளும் திரைப்படமாகியிருக்கிறது என்றாலும் அவற்றில் மாந்திரீக யதார்த்தம் மிகவும் தூக்கலாக இருப்பது 'ரோமில் ஒரு புனித அதிசயம்'தான். மாந்திரீகத்தின் பின்னணியில் ஒரு கொலம்பிய யதார்த்தம் மிகக் கூர்மையாக இந்தப் படைப்பில் பேசப்படுகிறது. மூன்றாம் உலகம் என்று அழைக்கப்படும் எல்லா நாடுகளுடனும் வாடிகனுடனும் தொடர்புடைய யதார்த்தம் அது. ஆன்மீகத்தை முழுக்க வற்ற வைத்து அரசியல் ரீதியான விருப்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மத அமைப்பின் கபடங்களை திறம்பட பதிவு செய்கிறது இந்தத் திரைப்படம்.

இறந்துபோன அந்தப் பெண்ணை புனிதவதியாக அறிவிக்கவேண்டும் என்கிற சமூகத்தின் வேண்டுகோளை, தற்போதுள்ள சூழ்நிலையில் கொலம்பியாவுக்கு ஒரு புனிதவதி தேவையில்லை என்று சொல்லி நிராகரிக்கிறது மதத்தலைமை. இறந்துபோனவர்களை புனிதராக மேன்மைப்படுத்துவதன் பின்னால் கணிசமான சில லாபக் கணக்குகள் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இந்த நிலைப்பாட்டின் தாத்பர்யம். எளிமையான மனம் கொண்ட மார்கரிட்டோ துவார்தெ என்கிற கோர்ட் ஊழியனுக்கு இதெல்லாம் தெரியாது. அவனுடைய மகள் ஒரு புனிதவதிதான் என்று உறுதியாக நம்புகிற சமுதாயத்தினரும் பிஷப்புக்கு எதிராகத் திரும்புகிறார்கள். மார்கரிட்டோ ரோமுக்கு சென்று போப்பை நேரில் கண்டு இதைப் புரியவைக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானிக்கிறார்கள். பயணத்துக்கான பணத்தையும் அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.

ஒரு பெரிய சூட்கேசில் மகளை எடுத்துக்கொண்டு கொலம்பியாவிலிருந்து ரோமை அடைகிற மார்கரிட்டோ, பெரும்பாலான லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் விருப்பக் கற்பனையான புதிர்ச்சுழலில் (Labyrinth) சிக்கிக்கொள்கிறான். நடைபாதைகளிலும் மர்மங்கள் சூழ்ந்திருக்கும் இருண்ட வழிகளிலும் அவன் சூட்கேசுடன் அலைந்து திரிகிறான். பல படிகளிலும் அரசு அலுவல் அறைகளிலும் அவன் ஏறி இறங்குகிறான். பலரிடமும் தன் இதயத்தை திறக்கிறான். எதுவுமே பலனளிக்கவில்லை. போப்பை அவனால் பார்க்க முடியவில்லை என்பது மட்டுமல்லாமல் நிறைய சிக்கல்களையும் அவன் சந்திக்கிறான். சிலர் கருணையேயில்லாமல் அவனை ஏமாற்றுகிறார்கள். வாடிகன் நகரத்தில் ஏற்படும் அந்த கொடிய அனுபவங்களுக்கிடையிலும் மார்கரிட்டோவின் மனதில் அணையாமல் இருப்பது மகளின் மேலுள்ள எதிர்பார்ப்புதான். அற்புதங்கள் நிகழ்த்தும் அவளின் 'சித்தி'யில் அவனுக்கு சிறிதளவும் சந்தேகமில்லை. இந்தத் திரைப்படத்தின் மிக உணர்ச்சிகரமான நிமிடம் அவன் மகளிடம் பெரும் துக்கத்துடன் ஒரு புனித அற்புதம் நிகழ்த்த வேண்டிக்கொள்வதுதான். அறைக்கு வெளியே போலீஸ் வண்டி வந்துவிட்டது. மார்கரிட்டோ பாதுகாத்து வரும் பூத உடலை அவர்கள் கொண்டுபோய்விடுவார்கள். புனிதமான வாடிகன் நகரத்தில் ஒரு பிணத்துடன் நுழைந்த குற்றத்திற்காக அவனை அவர்கள் கைது செய்வார்கள். அப்படி நிகழ சில நிமிடங்களே மீதமிருக்கையில் மகள் 'பப்பா' என்று அழைத்தபடி எழுந்து அவனை அணைத்துக்கொள்கிறாள். இதுதான் ரோமின் புனித அற்புதம். மார்கரிட்டோ துவார்தாவை அனுதாபத்துடன் பின்தொடரும் பார்வையாளனை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற இந்த அற்புதம் மென்மையன மனதுடையவர்களை அழக்கூடச் செய்துவிடும்.

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com