முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
அயல் பசி
ஷாநவாஸ்
எண்ணங்கள் – 8
நர்சிம்
கலைந்தும் கலையாத பிம்பங்கள் - 2
இந்திரஜித்
நகரத்தின் கதை பாகம் - 13
சித்ரா ரமேஷ்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?"
ராஜ் சிவா
கவிதை
யாமம்
செ.சுஜாதா
அனுப‌வ‌ம்
ராம்ப்ரசாத்
உதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள்..
இளங்கோ
உன்னளவு அன்பை...
ஆறுமுகம் முருகேசன்
கூண்டுக்குள் இருப்பினும்
சின்னப்பயல்
உருவ பொம்மைகளால் புகையும் பெருநகரம்
தேனம்மை லஷ்மணன்
காமாந்தகி
ஸ்வரூப் மணிகண்டன்
தனித்திருப்பதன் காலம்
வளத்தூர் தி .ராஜேஷ்
சிறுகதை
பாண்டி எனும் ஜெசி கதை
புதியபரிதி
இந்த வார கருத்துப்படங்கள்
எண்ணங்கள் – 8
நர்சிம்

இனி, கிறிஸ்கெய்ல் பேட்டிங் பிடிக்கும்பொழுது பவுலர்கள் பின்வருபவனற்றைக் கடைபிடிக்கலாம்.

1.  விக்கெட் கீப்பருக்குப் பின் திசையில்(ஃபைன் லெக்கில்) இருந்து ரன் அப் ஆரம்பித்து கிரவுண்ட் முழுக்க சுற்றிக்கொண்டே இருக்கலாம், பந்தைப் போடாமலே.

2.  உருட்டி விடலாம். நான்கு ரன்களோடு போகும்.

3.  நின்று அண்டர் ஆம்ஸ் போடலாம். எனர்ஜியாவது மிஞ்சும்.

4.  ஓவர் ஆரம்பிக்கும் முன்னர் மார்பில் அடித்துக்கொண்டு அழுதுகாட்டினால், கெய்ல் மனம் இரங்கலாம்.

**

வழக்கு எண். 18/9. இளமையில் வளமை கொடிது

ஈரானியப் படங்கள் போல் வருமா? உலகப் படங்களின் கால் தூசுக்கு ஈடாகுமாவென்ற சத்தங்களுக்கிடையே உதிரிப்பூக்கள்’, அழியாத கோலங்கள்’, முள்ளும் மலரும்’, சேது’, சுப்ரமணியபுரம்என அவ்வந்த காலகட்டங்களில் சிறந்த படங்கள் பதிந்து கொண்டேதான் இருக்கின்றன. அந்த வரிசையில் ஓரளவிற்கு இடம் பிடிக்கக் கூடிய படம் வழக்கு எண் 18/9.

கருக்கொண்ட பின்பும் புணர்ச்சி

மிகை குறித்து கவிஞர்.ராஜசுந்தர்ராஜனின் இந்த வரிகள் திரைப்படங்களைப் பொறுத்தவரை முற்றிலும் உண்மை. ‘பாட்ஷா படத்தை மதுரை பத்மா தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது பீசு பீசா கிழியும் போதும் ஏசு போல ரஜினி அடிவாங்கிய காட்சியில் எனக்கு முன்னர் அமர்ந்திருந்த பேரிளம் பெண் ஒருவர் "அடுத்த கட்டத்துல உனக்கு இருக்கு பாருடா அடி" எனக் கத்தியது இப்பொழுதும் நினைவில் இருக்கிறது. அவரின் எதிர்பார்ப்பை பன்மடங்கு பூர்த்தி செய்யும் ரஜினியின் அந்த உள்ளே போஅடி மிகுதி என்றாலும் அந்தக் காட்சி இல்லாமல் அப்படம் வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. அப்படி சற்றே மிகுதியான உணர்வுகளால் சொல்லப்பட்ட படம் வழக்கு எண் 18/9. குறிப்பாய் குற்றம் சுமத்தப்பட்டு நாயகன் காவல் வேனில் போய்க்கொண்டிருக்க, உதிரிப்பூவாய் முக்காடிட்டு உடன் நடக்கும் நாயகியோடு முடிந்துபோன படத்தில் அடுத்து வரும் அதிர்ச்சி க்ளைமேக்ஸ் முதல்வரியில் சொன்ன மிகுதி. ஆனாலும், பாத்திரங்களின் குணவமைப்பும், தேர்வும், உடல்மொழியும், வழக்கு எண் 18/9’ தமிழின் மிக முக்கிய படங்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளச் செய்கிறது.

படம் நெடுக வரும் தந்தை பாத்திரங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அதில், இரண்டு (ஜோதி மற்றும் தினேஷ்) தந்தை பாத்திரங்களின் அமைப்பு மிக முக்கியமான ஒன்று. ஒருவர் வெறும் புகைப்படமாக மட்டுமே காட்டப்பட்ட தந்தை. ஜோதி கதாபாத்திரத்தின் நேர்மைக்கும், அக்கிரமம் கண்டு வெடிக்கும் குணத்திற்கும் அந்தத் தந்தை விட்டுச்சென்ற புத்தகங்கள் சாட்சி. இன்னொரு தந்தை பாத்திரம் படத்தில் எங்குமே காட்டப்படவில்லை. ஆனால் "அப்பனைப் போலவே பொறுக்கி, பணம் பணம்னு அலையுறான்-" எனும் வசனங்கள் மூலம் சுட்டப்படுகிறார் தினேசின் தந்தை. விந்தோடு குணங்களும் விதைக்கப்படுகின்றன என்கிறது படம்.

அடுத்த தந்தை, பதின்ம வயதுப்பெண்ணைச் சரியாக வழிநடத்தும், இரவில் பார்ட்டிக்குச் செல்வது குற்றம் என்று கண்டிக்கும், மொபைல் போனுக்கு தடை விதிக்கும் நடுத்தர வர்க்கத் தந்தை. விடலைக் கவர்ச்சிக் காமம் இருந்தாலும் ரெண்டுங்கெட்டானாய்த் தவித்து பின் கெடுதியில் இருந்து ஆர்த்தி மீள அந்தத் தந்தையும் காரணம்.

இறுதியாக, முதலில் காட்டப்படும் நாயகனின் கிராமத்துத் தந்தை. கந்துவட்டித் தொல்லையால் கிட்னியை விற்கத் தயாராவதும், அது தன் மகனுக்குத் தெரிந்தால் படிப்பு கெடும் என்று நினைக்கும் பாவப்பட்ட பாத்திரம். மகன் சம்பாதித்து கடன் அடைப்பதை விரும்பாவிட்டாலும் சூழல் காரணமாய் ஏற்கிறார். மகன் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறினாலும், வேலைக்குச் சென்று மடிந்து போகிறார்.

பாத்திரத் தேர்வு, இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணி. முதல் சில காட்சிகளில் நடித்தவர்கள் சரியில்லை என்றாலும் பிரதான பாத்திரங்கள் அசரவைக்கின்றன. ஒன்று, எகிறி அடிக்கும் விஜயகாந்த், இல்லையென்றால் ஒரு விரல் கிருஷ்ணாராவ் போன்ற வாட்ச்மேன் சட்டை போட்டிருக்கும் காவலர்கள் என்று பழக்கப்பட்ட நமக்கு இந்தப் படத்தில் வரும் அன்றாடத்திற்கு வெகு அருகில் நிற்கும் இன்ஸ்பெக்டர் குமரவேல் கதாபாத்திரம் ஓர் அரிதான அற்புதம். குரல் மாடுலேசனில் துவங்கி(டப்பிங் குரல்-‘சுப்ரமணியபுரம் படத்தில், சசி,ஜெய்க்கு ஜெயிலில் உதவும் கதாபாத்திரத்தின் குரலாயும் இருக்கலாம்!) மெதுவாய் நம்பிக்கை ஏற்படுத்தி, சூழலைத் தனக்குச் சாதகமாக்க கருவறுப்பது வரை உடலும் மொழியும் கச்சிதம்.

தினேசின் தாய் பாத்திரம். ஜெயலட்சுமி என்று பெயரிட்டதில் பாத்திரத்தன்மையை உணர்த்தினாலும், தன் காரை அடுத்தவருடைய பார்க்கிங்கில் திமிராய் நிறுத்துதல், உயர்தர வாழ்க்கை வாழ செய்ய நேரிடும்(மினிஸ்டர்) துர்செயல்கள், மகனுக்கும் சமூகத்திற்கும் இடையே செய்துகொள்ளும் காம்ப்ரமைஸ்கள் போன்ற காட்சிகள், சுயநலத்திற்காக எதையும் செய்யும் பாத்திரம் என்பதை நிறுவுகின்றன.

வானத்தில் இருந்து நோக்கும் டாப் ஆங்கிள் ஷாட்டில் ஆரம்பிக்கும் படத்தில், ஒவ்வொரு காட்சிக்குள்ளும் ஏதேனும் ஒரு குறியீட்டை வைக்க வேண்டும் என மெனக்கெட்டிருப்பது புரிகிறது.. பெற்றோர் பட்ட கடனுக்காக மகன் பள்ளியைத் தொலைத்து, வேலைக்குச் செல்ல தயாராகும்பொழுது பள்ளி மணி அடிப்பதில் நம்மையும் அறியாமல் உச்வெளிப்படுகிறது. மயங்கி விழுந்திருக்கும் நாயகனுக்கு ரோஸி எனும் பாலியல் தொழிலாளி உதவும் பொழுது மெலிதாய் ஒலிக்கும் மேரி மாதாப்பாடலில் தொடங்கி, படம் நெடுக,காட்சிகளுக்கு ஏற்ப ஒலிக்கும் எஃப் எம் பாடல்கள் உட்பட அத்தனை நுணுக்கம். ரோஸியைத் திருந்தி வாழச் சொல்லும் காட்சியில் பூ விற்கும் மெலிதான குரல் ஒலிக்கிறது. ரோஸியைத் தேடிச்செல்லுமிடத்தில், அவர் தொழிலை விட்டு, பூ விற்றதாகவும் ஆனாலும் தொடர் தொந்தரவால் காலி செய்துகொண்டு போய்விட்டார் எனும் தகவலில் இருக்கும் வலியும் உணர்த்தப்படுகிறது. புத்தி சுவாதீனமற்ற சிறுவனுக்கு உதவும் நாயகி. அவளின் கோர முகத்தையும் முன்பு பார்த்த அழகிய முகத்தையும் ஒரு போலவே சிரித்து ஏற்கும் பாத்திரம் அந்தச் சிறுவனுடையது. Innocence is the Bless. 

கூத்துக் கலைஞன் சின்னச்சாமியின் குரலும் நளினமான அங்க அசைவுகளும் புதிது. கூத்துக் கலை சிதைந்து வருவதை அந்தப் பாத்திரம் இந்தப் படத்திற்காகப் பேசிய வசனமாகத் தோன்றவில்லை. ஆழ்மனதில் இருந்து வந்த வார்த்தைகளாகத்தான் தெரிந்தது.

கெமிஸ்ட்ரியில் சந்தேகம் என வலைவிரித்து, ஆசிட் பற்றிய கேள்விகளைக் கேட்பதில் துவங்குகிறது தினேஷ்-ஆர்த்தியின் நட்பு. குறும்பும் குறுகுறுப்பும் கொப்பளிக்க தினேசுடன் நட்பைத் தொடர்வதும் சதைக்காட்சிகளுக்காகப் பின் தொடர்கிறான் எனத் தெரிந்ததும் மிகத் தெளிவாக அவனிடம் இருந்து விலகுவதும் என ஆர்த்தி பாத்திரம் அறிந்து அசத்தி இருக்கிறார்.

இளமையில் வறுமை கொடிது என்பது நாயகப் பாத்திரம் என்றால், இளமையில் வளமை அதனினும் கொடிது (நன்றி: கு.ஞானசம்பந்தம்) என்பதற்கொப்ப தினேஸ் என்ற பாத்திரப் படைப்பு. தந்தையின் பிரிவு, தாயின் நடவடிக்கைகள், நேர்வழியில் வராத நிறைபொருள் என அனைத்தும் சேர்த்து வக்கிரம் வார்க்கிறது. அதை வடிக்கும் இடமாய் அவன் தேர்ந்தெடுப்பது மொபைல் போன். தொழில்நுட்பம் நல்லதையும் கெட்டதையும் சேர்த்தே அள்ளி வருகிறது, சரியாய் கவனியுங்கள் என இப்பாத்திரத்தின் மூலம் பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர். ஆர்த்தியின் பெயரை ஐயிட்டம்என்றே செல்லில் பதிந்து இருப்பதில் இப்பாத்திரத்தின் நோக்கம் கச்சிதமாய் வடிவமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

பணக்காரத்தாய் ஜெயலட்சுமி சொல்லும் தேவிடியாப் பயலேவசனத்திற்கும், கடுகடு முகத்தோடு எந்நேரமும் சிடுசிடுவென வரும் ஏழைப்பெண் ஜோதியின் தாயாரின் திட்டல்களுக்கும் இருக்கும் வேறுபாடுகளை காட்டிய விதமும் கவரும்படி இருந்தன.

"நீ கொதிக்கிற எண்ணெய அவென் மேல ஊத்தி இருக்கணும்டா"-இன்ஸ்பெக்டர் நயம்பட பேசும் வாக்கியம். அதன்படியே அவரை முடித்திருப்பதும் நுணுக்கம்.

ஒரு நேர்க்கோட்டை வரைந்து, அதைக் கிழித்து மீண்டும் மிகச்சரியாய் ஒட்டியது போன்ற திரைக்கதையில் "அம்மா சர்ஃப் தீர்ந்து போச்சு" என்று ஜோதி, ஆர்த்தியின் வீட்டில் கேட்பது எப்படி வேலுவின் கோணத்தில் போகும் திரைக்கதையில் தெரியும் என்ற அற்பமான குறையைத் தவிர, நேர்த்தியான திரைக்கதையே.

இதை சாதாரண கேமராவில் எடுத்திருந்தால் இப்படம் இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்குமா என்பதும் என்னளவில் ஐயமே. அந்த புதிய கேமராக் கோணங்களும் வெகு அருகாமைக் காட்சிகளும் ஏதோ ஒரு வித நெருக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்தன. (பர்சை எடுத்துக்கொடுக்கும்)சில காட்சிகள் தவிர்த்து. இசைக் கோற்பும் ஒளி-ஒலிப்பதிவும் பக்க பலம்.

சரி, அந்த முடிவை எப்படி ஜோதி எனும் வெகு அமைதியான, அன்பான பாத்திரம் எடுக்கிறது என்பவர்களுக்கு, மீண்டும் கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் கவிதை.

மேகத்தில் இருந்து
மழை மட்டும் அல்ல
மின்னலும் பிறக்கும்.

தலைப்பு: புரட்சி.

(விளிம்பு நிலை, அதிகாரம் இந்த இரண்டு வார்த்தைகள் இல்லாமல் இந்தப் படப் பத்தியை எழுதியதும் ஒரு மாற்றுதானோ?!)

**

‘வண்ணப்பூச்சி’ என்பதே சரியாகத்தானே இருக்கிறது. அது என்ன ‘வண்ணத்துப்பூச்சி’? எதனால் ‘த்துப்’ இணைத்துச் சொல்கிறோம்? ஹாய் மதனிடம் கேட்கலாம் என்றிருந்தேன். ஹும்ம், அறிவியல்-அரசியல்-அரசி-யல் குழப்பத்தில் ஹாய் மதன் விகட’னில் நின்றுபோனது வருத்தமே. 

சரி, வண்ணப்பூச்சி என்று சொல்லலாமா? சொல்லுங்கள்.

**

"என்னய்யா ஏதோ தொழில்ல நட்டம் கிட்டம்னியே, சொல்றமாதிரி செஞ்சா லம்ப்பா கிடைக்கும், செய்றியா?"- சீனிவாசன், மல்லய்யாவிடம் பேசி இருப்பார் போலத் தெரிகிறது. டெக்கான் சார்ஜஸிடம் பெங்களூரு தோல்வியடைந்தது, ஒரு படத்தில், சோத்துல கல்லு என கவுண்டர் செங்கல்லை வைப்பாரே, அப்படித்தான் இருந்தது. சென்னை அணியின் ப்ரசன்ஸ் வர்த்தக ரீதியாக எவ்வளவு வலுவானது என்பதும் புரிகிறது. முன்பு சொன்னது போல், டெல்லியையும் சென்னையையும் இறுதிப் போட்டியில் மோதவிடுவதே ஐபிஎல் வர்த்தக நோக்கம். தோனியா? சேவாக்கா? பார்ப்போம்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com