முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
அயல் பசி
ஷாநவாஸ்
எண்ணங்கள் – 8
நர்சிம்
கலைந்தும் கலையாத பிம்பங்கள் - 2
இந்திரஜித்
நகரத்தின் கதை பாகம் - 13
சித்ரா ரமேஷ்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?"
ராஜ் சிவா
கவிதை
யாமம்
செ.சுஜாதா
அனுப‌வ‌ம்
ராம்ப்ரசாத்
உதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள்..
இளங்கோ
உன்னளவு அன்பை...
ஆறுமுகம் முருகேசன்
கூண்டுக்குள் இருப்பினும்
சின்னப்பயல்
உருவ பொம்மைகளால் புகையும் பெருநகரம்
தேனம்மை லஷ்மணன்
காமாந்தகி
ஸ்வரூப் மணிகண்டன்
தனித்திருப்பதன் காலம்
வளத்தூர் தி .ராஜேஷ்
சிறுகதை
பாண்டி எனும் ஜெசி கதை
புதியபரிதி
இந்த வார கருத்துப்படங்கள்
அயல் பசி
ஷாநவாஸ்

உலகின் மாற்றங்களுக்குக் காரணமான அறிவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவர்கள் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை துறந்து "தன்னை மறந்தவர்களாகத்தான்" இருந்திருக்கிறார்கள்.அதிலும் எழுத்தாளர்களுக்கு அறிவியலாளர்களைவிட கொஞ்சம் நக்கல் கூடுதலாக இருந்திருக்கிறது.உணவு விஷயங்களில் இவர்களின் பழக்க வழக்கங்களைத் தேடியபோது பல சுவாரஸ்யமான செய்திகள் கிடைத்தன.

பிரான்ஸ் எழுத்தாளர் Geroge Feydeau உணவகத்தில் ஆர்டர் செய்த சிங்கி இறால்(Lobster) ஒரு காலை இழந்து காணப்பட்டதால்,வெயிட்டரை கூப்பிட்டுக் காரணம் கேட்டபோது, பொதுவாக மீன்தொட்டியில் போடப்படும் சிங்கி இறால்கள் சண்டையிட்டுக்கொள்ளும் கொள்ளும் இயல்பு கொண்டவை.அது போன்ற ஒரு சண்டையில் இந்த இறாலுக்குக் கால் ஒடிந்துவிட்டது என்றாராம்."அப்படியென்றால் இதன் காலை ஒடித்து வெற்றிபெற்ற அந்த இறாலை சமைத்துக் கொண்டுவா" என்றாராம் எழுத்தாளர் பதிலுக்கு.

18-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு எழுத்தாளர் CONTE DE BUFFON "Historie Naturelle " என்ற புத்தகத்தை 44 வால்யூம்களில் எழுதிப் புகழ் பெற்றவர்.காலை 6 மணிக்கு தன்னை தூக்கத்திலிருந்து எழுப்ப தனியாக ஒரு வேலையாள் வைத்திருந்தராம்.முதலில் உடம்பைத் தட்டி உருட்டிவிட்டுப் பார்க்கவேண்டும்.அதிலும் எழாவிட்டால் ஐஸ் தண்ணீரை மேலே ஊற்றி எழுப்ப வேண்டும்.சரியாக எழுப்பி விட்டால் போனஸும் கொடுப்பாராம்.இரவில் சாப்பிடாமல் படுக்கச் செல்வதை தன் வாழ்நாள் கொள்கையாக வைத்திருந்தராம்.

தூக்கம் என்றவுடன் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பித்தகோரஸ் தியரத்தை ஒப்புவிக்க வேண்டும் என்று கூறும் என் பள்ளி ஆசிரியர் ஈசுப் ஞாபகத்திற்க்கு வருகிறார்.பித்தகோரஸ் தியரத்தை எப்படி உருப்போடுவது என்பது மட்டுமல்லாமல் பித்தகோரஸ் வாழ்வில் நடந்த பல விஷயங்களை என்றும் நினைவில் நிற்கும் வகையில் சொல்லிக்கொடுப்பார்.

பித்தகோரஸ் ரொட்டி, தேன், கீரைகள் எப்போதாவது மீன் சாப்பிடுவாராம், இறைச்சி, கோழி இவைகளைத் தொடமாட்டாராம். பச்சைப்பருப்பாக இருந்து நாளாக நாளாக பிரவுன் கலரில் மாறும் Fawa Beans அவருக்குப் பிடிக்காதாம்.இறைச்சி மாதிரியே ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு அது.இரவில் பாலுணர்வைத் தூண்டிவிட்டு தன் சிந்தனையைக் குலைத்து விடும் என்று தன் வாழ்நாளில் அறவே அதை ஒதுக்கிவிட்டாராம். 490 BCE-ல் SYRACUSAN சிப்பாய்கள் அவரைக் கொல்ல விரட்டியபோது Fawa Beans தோட்டத்தில் புகுந்து ஓடியிருந்தால் அவர் உயிர் தப்பியிருக்க முடியும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

19 ம் நூற்றாண்டின் William Buckland பிரிட்டனைச் சேர்ந்த அறிவியலாளர் டைனசோர் படிவங்களைக் கண்டுபிடித்ததில் முக்கியப் பங்காற்றியவர். எத்தனை மிருகங்களை ருசிபார்க்க முடியுமோ அத்தனை மிருகங்களை ருசிபார்த்தவர். இவர் ஆராய்ச்சி செய்த லண்டன் மிருகக் காட்சியில் செத்துப் போகும் மிருகங்கள் இவரின் உணவு மேஜைக்கு வந்து விட்டு மிச்சம் மீதிதான் அடக்கம் செய்யப்டுமாம். ஒரு நாள் அடர்ந்த காட்டில் பயணம் செய்து கொண்டிருந்த போது தான் வழி தவறிவிட்டதை உணர்ந்து கீழே இறங்கி மண்ணை ருசிபார்த்து இந்த இடம் லண்டன் OX Bridge க்கு அருகில் உள்ளது என்று சரியாகச் சொன்னாராம்.

"ROBERT GODDARD"- ராக்கெட் தொழில்நுட்ப வல்லுநர்தான் சாப்பிட்டதை 15 நிமிடங்களில் மறந்துவிடுவாராம். இரண்டாம் உலகப் போரின்போது நியூ ஜெர்ஸியில் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது அந்தக் கம்பெனி கணக்குகளை ஆடிட் செய்த கணக்காளர் இவ்வளவு குறைந்த அளவில் உணவைச் சாப்பிட்டு "ROBERT GODDARD" எப்படி உயிர் வாழ்கிறார் என்று வியந்தாராம்.

ஸ்வீடன் ரசாயன வின்ஞானி "KARL SCHEELE" ஆக்ஸிஜன் மற்றும் பல வேதியல் மூலக் கூறுகளைக் கண்டுபிடித்தவர்.1706ல் தன்னுடைய 43 வயதிலேயே இறந்ததற்குக் காரணம், பல ரசாயனப் பொருட்களை வாயில் வைத்து ருசி பார்த்ததுதான் காரணம் என்கிறார்கள்.

தன்னை மறந்த விஷயத்தில் ஐசக் நியூட்டனுக்கு முதலிடம் கொடுக்கலாம். அவருடைய பணிப்பெண் நியூட்டன் சமையலறையில் நின்றுகொண்டு கொதிக்கும் பாத்திரத்தில் முட்டையைப் போடுவதற்குப் பதிலாக தன் கைக்கடிகாரத்தை போட்டு விட்டு கையில் முட்டையை வைத்து கொண்டு பாத்திரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை பலமுறை பார்த்திருக்கிறாராம். ஒரு நாள் தன் நண்பரை விருந்துக்கு வரச் சொன்னவர் ஏதோ சிந்தனையில் இருக்க வந்த நண்பர் தான் வந்த வேலையை முடித்து ஏப்பம் விட்டுக் கொண்டிருந்திருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்த நியூட்டன், நண்பரே நான் இந்த மிச்சமிருக்கும் உணவுகளைப் பார்த்திருக்காவிட்டால் நான் இன்னும் சாப்பிடவில்லையோ என்றுதான் இன்னும் நினைத்துக் கொண்டிருப்பேன் என்றாராம்.

அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் இரவு முழுதும் விழித்த்திருந்துவிட்டு பகல் பொழுதில் தாமதமாக எழும் வழக்கம் உள்ளவர். அவருக்காகத் தயார் செய்யப்பட்ட காலை உணவை மாலையில் குளிரச் சாப்பிட்டு பழக்கமாகி நீரிழிவு நோய்க்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தபோது மருத்துவர் இரவு நேரங்களில் சமையலறையில் புகுந்து சீஸ், மர்கோனி, உருளைக்கிழங்கு என்று சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவைகள் வாழ்வை சீக்கீரம் முடிவுக்குகொண்டு வந்து விடும் என்று சொல்ல அதற்கு கிரஹாம்பெல் வாழ்நாளெல்லாம் இப்படியே சாப்பிட்டு பழக்கமாகிவிட்டது அது முடிவுக்கு வருவதில் எனக்கு வருத்தமில்லை என்றாராம்.

"Henry Cavendish " லண்டனைச் சேர்ந்த இரசாயனவியல் விஞ்ஞானி.தண்ணீரின் மூலக்கூறுகளைச் சரியாகக் கணக்கிட்டவர்.சமையல் மேல் எந்தப் பிடிப்பும் இல்லாமல் சமைத்து போட்டதை சாப்பிட்டுவிடும் குணமுடையவர்.இறைச்சியில் ஒரு சின்ன கால்பகுதி துண்டை மட்டும் சாப்பிடுவாராம்.விருந்தினர்களுக்கு கொடுக்க ஒரு கால்துண்டு போதுமா என்று சமையல்காரர் கேட்டபோது வேண்டுமானால் இன்னொரு கால் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே என்றாராம்.

Rita Levi Montalcini - இத்தாலியை சேர்ந்த நரம்பியல் நிபுணர்.1986 -ல் மருத்துவத்தில் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டவர்.இரண்டாம் உலகப் போர் காலத்தில் அவர் யூதராக இருந்ததால் பல்கலைக்கழகத்தில் தடை விதிக்கப்பட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் தன்னுடைய வீட்டின் சமையலறையைப் பரிசோதனைக்கூடமாக்கி முட்டைக் கருவின் நரம்பியல் செயல்பாடுகளைக் கண்டறிந்தவர்.ஆராய்ச்சி முடிந்த ஒவ்வொரு நாளும் அந்த முட்டைகள்தான் அவருக்கு உணவானதாம்.

இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற "Linnus Pauling" உணவு சம்பந்தப்பட்ட துறையில் இளமைக் காலத்தில் பல தொழில்கள் செய்திருக்கிறார்.அவர் பள்ளிப்படிப்பில் தனியாக ஒரு பால் பண்ணை நிறுவி விடுதிகளுக்கு சப்ளை செய்திருக்கிறார். அவருடைய வயதைக் கணக்கிலெடுத்துக்கொண்ட தொழிற் துறையில் அவரை நம்பகரமானவராகக் கருதாததால் தொழில் துறையில் நஷ்டம் ஏற்பட்டு ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டாராம். 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com