
புதுப்புரட்சி...
உனக்கும் எனக்குமான
காதல் பேச்சுக்களை
இடைமுறித்து
சடுகுடு ஆட
இரண்டு விருந்தாளிகள்.
விளையாட்டு தோற்றுவிட
வெளியேறுகிறது
சாபங்கள் சில.
மைதானம் மிதித்து
புற்கள் கருகச்
சாபமிட்ட அவர்கள்
தேநீர்க் கோப்பைகளை விட்டுத்
தொலைந்திருந்தனர்.
நான்கு இருக்கைகள்
இப்போ வெறுமையாய்!!!