முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" (1)
ராஜ்சிவா
மீட்பராக வந்த மானிடன் ஏஆர்.ரஹ்மான் : 5
ஆத்மார்த்தி
கலைந்தும் கலையாத பிம்பங்கள்
இந்திரஜித்
நகரத்தின் கதை பாகம்:12
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் 7
நர்சிம்
கவிதை
நடந்து கடந்த தருணங்களின் ஒற்றையடிப் பாதை..
--இளங்கோ
இறைவன் வந்தான் என் இல்லத்திற்கு
தனுஷ்
அகத்தூண்டுதல்
சின்னப்பயல்
இரண்டாம் பட்சம்
ராம்ப்ரசாத்
ஆம்
ஆறுமுகம் முருகேசன்
என் செல்ல டாபர்மேன் ஒன்று!
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
காற்றில் பறக்கும் காதல் சுவடிகள்
அருண் காந்தி
நான் பொழிந்த புனல்
-உமாமோகன்
புதுப்புரட்சி...
ஹேமா(சுவிஸ்)
சிறுகதை
நி றை வு
உஷாதீபன்
பொது
திரை விமர்சனம் : சூழலும் சட்டமும் வஞ்சித்த - வழக்கு எண் 18 /9
க.உதயகுமார்
இந்த வார கருத்துப்படங்கள்
மீட்பராக வந்த மானிடன் ஏஆர்.ரஹ்மான் : 5
ஆத்மார்த்தி

ரோஜா படத்தில் புதுவெள்ளை மழை இங்கு பொழிகின்றது ஒரு மெலடி.. ருக்குமணி ருக்குமணி பாடல் தளபதி படத்தில் மணிரத்னத்தின் அரிய கண்டுபிடிப்பான கிழவியரை ஆடவைக்கிற தன் தொடர்புடைய பாடல்.தமிழா தமிழா தேசபக்திப் பாடல்.காதல் ரோஜாவே ஒரு சோக மெல்லினம்.இவைகளுடன் சின்னச் சின்ன ஆசை.

முதலில் சின்னச் சின்ன ஆசையின் மிச்ச சொச்சங்கள்.பாடியவர் மின்மினி.அதற்கு முந்தைய காலகட்டத்தில் நிறைய்ய பாடாதவர்.இவரைப் பாடவைக்கும் எண்ணம் வந்ததற்கே ரஹ்மானுக்குத் தனி அவார்ட் கொடுக்கலாம்.மித்தாலி சிங் பாடிய தளபதியின் யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே பாடலில் இருந்து அவ்வளவு எளிதாக வெளிவர முடியாத மணிரத்னத்துக்கு மின்மினியின் சின்னச் சின்ன ஆசை தான் வெளிச்சவழி காட்டியிருக்க முடியும்.இரண்டும் கிட்டத்தட்ட ஒரே குரலின் இரண்டு குரல்கள் போல அவ்வளவு ஒற்றுமை இருக்கும்.சின்னச் சின்ன ஆசை பாடலில் ஒவ்வொரு வரியை எடுத்துப் பாடுகிறபோதும்,அதன் இணைவரியை முடிக்கிறபோதும் லேசாகத் தேய்ந்த குரலில் மின்மினி பாடியிருப்பதை உணரலாம்.உதாரணத்துக்கு சேற்றுவயலாடி....இதில் வருகிற "சே".இதற்கு அடுத்த வரியான நாற்று நட ஆசை...இதில் வருகிற "சை".

இவை தற்செயல் அல்ல.இந்த வரியை நினைவில் வைக்கவும்.

ரஹ்மான் திட்டமிட்டு இறங்கினார்.தன் பாடல்கள் பேசவைக்க வேண்டும் என்பதில் அவர் செலுத்திய தீவிரம் ஒன்று இரண்டாகத் தன்னை இரட்டித்துக் கொண்டது.ஏற்கனவே கடந்த முப்பதாண்டுகளாக பழசும் பெரிசுமாகப் பாடல்களைக் கையில் பிடித்தபடி தமக்கென உள்ளம் கவர் இசைக்கள்வர்களை நியமித்துக் கொண்டிருந்த ரசிகன் என்ற பதத்தை நோக்கி அவரது கவனம் இல்லவே இல்லை.புத்தம் புதிதாக தான் நுழையும் போது அன்றலர்ந்த மலர்களாகப் பதின் பருவர்களாக புதிதாய் எந்தப் பாடலும் எந்தப் பழைய இசையும் ஆதிக்கம் செய்திராத வெண்மனது கொண்டவர்களாகத் தனது ரசிக வேட்டையைத் துவங்கினார்.பழைய கூட்டம் மெல்ல வரும்.அது வேறு பிராசஸ்....இது எனக்கே எனக்கு என்பதாக இருந்தது.

பாடலை எப்போதும் பேரிசையோடு துவக்குவதில்லை.மெல்ல மெல்ல ஒரு பாடலுக்கான இசை கிளம்பித் ததும்பி நின்று நிலைபெற்று அடர்ந்து படர்ந்து அப்புறமாய் மெதுவாகப் பாடலோடு இணையும் புத்தம் புதுப் பாணி ரஹ்மான் கொணர்ந்தது.அவருக்கு முன்பு எழுபதாண்டு கால தமிழ் திரை இசைஞர்கள் எவரும் இப்படி ஒரு முயற்சியைக் கூட செய்ததில்லை என்பதை உணருகையில் ரஹ்மானின் புதுமுயல்வைப் புரிந்துகொள்ளலாம்.

சின்னச் சின்ன ஆசையா..?மெலடி...சரி....புது வெள்ளை மழை....இது மெலடி தான்....சரி காதல் ரோஜாவே....இதுவும் கூட மெலடி தாங்க...சரி...ஒரே படத்தில் இத்தனை மெலடி அடித்தால் இசை கேட்டு உறங்கி விட மாட்டார்களா..?அது தான் இல்லை.சின்னச் சின்ன ஆசையின் ஆதி நாதம் இருக்குமிடம் தெரியாமல் ஒலிக்கும்.அதுவே காதல் ரோஜாவே பாடலில் எஸ்.பி.பியின் குரல் மெலிந்தும் அதன் ஆதிநாதமானது வன்மையான ஒரே பீட் ஆகவும் ஒலித்துக் கொண்டே போகும்.புது வெள்ளை மழை பாடலில் குரலும் இசையும் சமசாந்தி அடைந்து இணையென ஒலிக்கும்.கேட்பவர்களுக்கு எந்த அயர்வும் வராத பாடல்கள் அவை.

படத்தில் அவ்வளவு கவனம் பெறாத பாடலாக இருந்தாலும் இசைத்தட்டில் இடம்பெற்ற தமிழா தமிழா பாடல் ஹரிஹரன் பாடியது.அதன் உடனிசையும் கோரஸ் குரல்களும் மிக வன்மையாக ஒலித்தன,.கேட்பவர் உள்ளங்களில் தேசபக்தி ரசம் ஊற்றெடுத்தது நிசம்.அதுவரை அந்தப் பாடலில் கோர்வை எங்கேயும் முயற்சிக்கப் படாதது என்பது தான் கவனிக்க வேண்டியது.

ஆச்சு...‘ரோஜா பற்றி இன்னமும் சொல்ல வேண்டியது என்ன..?

பழைய டாக்டர்களில் எஸ்.பி.பி.,சித்ரா மட்டும்...புதிய டாக்டர்கள் பலரை உள்ளே இறக்கி விட்டிருந்தார் ரஹ்மான்..தானே புதுசு...இதில் எதற்கு ரிஸ்க் என பெரும் முதலைகளின் துணைகொண்டு வரவில்லை.தனை ஒத்த மழலைகளின் கரம் பற்றியே இறங்கினார் ரஹ்மான்.மின்மினி,உன்னிமேனன்,சுஜாதா,எனக் கேட்பவர் காதுகளில் பச்சக் என்று பிசின் போல் ஒட்டிக்கொண்டு வழிந்து வழிந்து நிறைந்தன பாடல்கள்.

அப்புறம்...மெட்டுக்குப் பாட்டா பாட்டுக்கு மெட்டா..?இசையால் வசமாகா இதயமெது என்றெல்லாம் பலவிதங்களில் கேப்டன் படத்து வில்லன் போல் சித்ரவதைக்கு உள்ளாகி இருந்த வைரமுத்து இந்தப் படத்தில் தன் இரண்டாம் தனியாவர்த்தனத்தைத் துவக்கி இருந்தார்.எல்லாப் பாடல்களின் எல்லா வரிகளும் மனனம் செய்யப் பட்டன.ஒப்பிக்கப்பட்டன.பத்தாவது தமிழ் இரண்டாம் தாளில் வருகிற மனப்பாடப் பாட்டு என்று ஒன்று இருக்குமல்லவா..?அதனை விட இதனை விரும்பினர் மக்கள்.

ரோஜா வெளியானதும் சவுத் இந்தியன் நார்த் இந்தியன் தந்தூரி நிலங்களில் எல்லாம் புரட்டி அடித்ததும்,விருதுகளைக் குவித்ததும் மணிரத்னத்துக்கு அதுவரைக்கும் இருந்த தென் முகம் மறைந்து ஒரு ஆசிய முகம் உண்டானதும்,வைரமுத்து மீண்டும் தன் பேனாவைக் காட்டி பிஸ்தா ஆனதும் ரோஜா செய்த மாயம்..

ரஹ்மான் ஒரே நாளில் இந்தியத் திரைவானின் அதிகம் தேடப்படும் நட்சத்திரமானார். அவருக்கு முன்னால் வாய்ப்புக்கள் குவிந்தன.

அவர் அதனினும் அதீதமாக கவனமானார்.தனக்கு முன்பாக விரித்து வைக்கப்பட்ட சீட்டுக்களில் இருந்து அவர் தேர்வு செய்த சீட்டுக்கள் புதியமுகம்’,ஜென்டில்மேன்’, மற்றும் உழவன்.

தொடர்ந்து இசைப்போம்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com