முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
கடலின் அடித்தளத்தினூடாக சிறிலங்காவுக்கு மின்சாரம் வழங்கப்போகிறதாம் இந்தியா
அனலை நிதிஸ் ச. குமாரன்
நடு ரோட்டில் கிடக்கிறீர்கள், தலைக்கு மேல் லாரி, முகத்திற்கு நேரே அதன் பேக் வீல்(கள்).
எஸ்கா
நானும் காந்தியும்
இந்திரஜித்
அங்கேயும் அழகுக்கு தான் முதலிடமாம்.....!!!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
பினாயக் சென்னுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் அநீதி
மாயா
விருப்பமான இந்தியக் காய்ச்சல்
அப்துல்காதர் ஷாநவாஸ்
"அக்கரைப் பச்சை"
உஷாதீபன்
எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவல் வெளியீட்டு விழா
-
தமிழச்சி தங்கபாண்டியனின் 4 நூல்கள் வெளியீட்டு விழா
/
கவிதை
விடைபெறுதலின் கடைசி தருணம்!
பிரவின்
ரசாய(வனம்)
தேனம்மைலெக்ஷ்மணன்
வெள்ளைக் கொக்குகள்
மழையோன்
உருகி வழியும் பகல்
ஆறுமுகம் முருகேசன்
பொய்யின் நிறம்
இளங்கோ
பேசாதீர்
தனுஷ்
நிகழ்வுகள்
ஹேமா(சுவிஸ்)
மழை
பிரதீபா
நட்பெனும் வசந்தம்
ப்ரியா
சிறுகதை
அய்யரும் அய்யரவும்
சிபு
ஹைக்கூ வரிசை
இந்தவாரக் கருத்துப்படம்
வியாபாரிகள்
பாபுஜி
புத்தாண்டு
பாபுஜி
கடலின் அடித்தளத்தினூடாக சிறிலங்காவுக்கு மின்சாரம் வழங்கப்போகிறதாம் இந்தியா
அனலை நிதிஸ் ச. குமாரன்

கடலின் அடித்தளத்தினூடாக சிறிலங்காவுக்கு மின்சாரத்தை இந்தியாவிலிருந்து வழங்கப்போவதாக கூறியுள்ளது கிரிட்பவர்; (Power Grid Corporation of India Ltd). சீனாவின் ஆதிக்கம் இந்திய உபகண்டத்தில் அதிகரித்துவரும் வேளையில் இவ்வாறான செயற்பாடுகளினால் இந்தியா தனது பலத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என கருதியோ என்னவோ இப்படியான மிகவும் பண மற்றும் பொருள் செலவிலான திட்டத்தை கிரிட்பவர் மூலமாக செய்யலாம் என்று எண்ணுகிறது போலும். இந்தியாவின் முன்னணி நிறுவனமான கிரிட்பவர் சிறிலங்காவின் மின்சார சபையுடன் இணைந்தே இத்திட்டத்தை 2014-இல் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக கூறியுள்ளது.

தனது இருப்பை இந்திய உபகண்டத்தில் நிலைநாட்ட படாதுபாடு பட்டுக்கொண்டிருக்கிறது இந்தியா. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்திய உபகண்டத்தில் சீனாவின் ஆதிக்கம் கடந்த சில வருடங்களாக மேலோங்கியுள்ளது. சீனா ஏற்கனவே இந்து சமுத்திரத்தை அண்டிய பல நாடுகளுடன் நட்புறவை பேணிவருவதுடன், சில நாடுகளில் தனது இருப்பை நிலைநிறுத்தியும் விட்டது. இந்தியாவின் பரம எதிரி நாடான பாகிஸ்தானுடன் பல இராணுவ ஒத்துளைப்புக்களையும் சீனா அளிப்பதுடன் சிறிலங்கா, மாலத்தீவு, மியான்மார் போன்ற நாடுகளில் துறைமுகங்களை அமைத்துக் கொடுத்துள்ளதுடன் பல இராணுவ உதவிகளையும் செய்கிறது. இவைகள் அனைத்தும் இந்தியாவினால் சகித்துக்கொள்ளத்தக்க விடயங்கள் அல்ல. சீனாவுடன் நேரடியான முறுகல் நிலையை இந்தியா மேற்கொள்ள விரும்பவில்லை.

சீனாவுடன் இணைந்தே இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்கிற கருத்து பரவலாக இந்திய அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களினால் அடித்துக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்னவெனில் சீனா இன்று பொருளாதாரத்தில் உயர;ந்த இடத்தை அடைந்திருப்பதுடன், மேற்கத்தைய நாடுகளுடன் போட்டிபோட்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுவருகிறது. ஆகவே, இந்தியாவும் சீனாவுடன் இணைந்து பயணிப்பதனூடாக இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம் என்கிற கருத்து இந்தியத் தரப்பால் முன்வைக்கப்படுகிறது. சீனாவுடன் முறுகல் நிலையை இன்னும் பல காரணங்களுக்காக இந்தியா தவிர்த்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடாகி விடவேண்டும் என்கிற ஆசை பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவுக்கு வந்துவிட்டது. தானேதான் தெற்காசியாவின் வல்லரசு என்கின்ற உணர்வை உலக சமூகத்திடம் முன் வைக்க இந்தியா விளைகிறது. இந்தியாவின் கனவு நனவாக்கப்பட வேண்டுமாயின் அனைத்துத் துறைகளிலும் வளம்பெறுவதுடன், பிற நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணுவது மட்டுமல்லாமல் இந்து சமுத்திரம் தனது நேரடி பாதுகாப்பிலேயே இருக்க வேண்டுமென்று நினைக்கிறது இந்தியா. இக்கனவு நிறைவேற்றப்பட வேண்டுமாயின் சீனாவின் ஆதரவு இந்தியாவுக்கு தேவை. எது எப்படியாக இருந்தாலும் தனது ஆளுமைக்குட்பட்ட இடங்களிலிருந்து சீனாவை துரத்தவே இந்தியா மறைமுகமாக பல திட்டங்களை தீட்டி செயற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்கள் காட்டுகின்றது.

மின்சாரம் வழங்கப்படும் திட்டம் தேவைதானா?

 

 

 

 

 

 

 

 

இந்தியாவிற்குள்ளேயே மின் பற்றாக்குறை இருக்கிறது. இந்நிலையில் இலங்கைக்கு மின்விநியோகம் செய்யப்போவதாக கூறியிருப்பது நகைப்புக்கிடமானதாக உள்ளது. இந்தியாவில் 17 சதவிகித மின் பற்றாக்குறை என்பது நீடித்துவரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்தியாவில் 30 சதவிகித மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கும்போதே இந்தப் பற்றாக்குறை இருக்கிறது. இப்படியிருக்கையில், சிறிலங்காவிற்கு ஏன் மின்சாரம் வழங்க வேண்டும் என்கிற கேள்வி பல இந்திய மக்களிடம் எழுகிறது.

ராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடைப்பட்ட 50 கி.மீ. தூர கடல் பகுதியில் மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணியால் உயிரினங்களின் வாழ்வியல் சூழல் பாதிப்பிற்குள்ளாகும். இங்குள்ள அரிய வகைத் தாவரங்களும், உயிரினங்களும் அழிந்து விடும். சேதுசமுத்திரக் கால்வாய் அமைப்பதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ, அது அத்தனையும் இந்த மின்சாரத் திட்டத்திற்கும் பொருந்தும். பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு வரை 160 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா கடல்பகுதியில் 3600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களும், அரிய பவளப் பாறைகளும், அவற்றின் மூலமாக உருவான 21 குட்டித் தீவுகளும் உள்ளன. 1986-ம் ஆண்டு இப்பகுதியை தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா என அறிவித்த தமிழ் நாடு அரசு, பல்வேறு பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் கடன் வாங்கி இதனைப் பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் இவையெல்லாம் என்னவாகும் என்று கேட்கின்றனர் பலர்.

 

 

மின் பகிர்மானத்தின்போது சிறிது கவனக்குறைவு நேர்ந்தாலும் அதன் விளைவுகள் அப்பகுதியிலுள்ள மீனவர்களை கடுமையாக பாதிக்கும். அப்பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படலாம். மீனவர்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இவ்வாறாக பல பிரச்சினைகளை மீனவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

கடலுக்கு அடியால் மின்சாரத்தை விநியோகிப்பதை இந்தியா முன்பு எப்போதும் செய்ததில்லை. இப்படியான விநியோகம் என்பது பல வளந்த நாடுகளில் சர்வ சாதாரணமாக இடம்பெறுகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இப்படியான செயல்முறைகள் நடைமுறையில் இருக்கிறது. நிலப்பரப்பினூடாக மின்சாரத்தை வழங்குவதென்பது சுலபம். கடலுக்கடியால் அதைச் செய்வதென்பது கடினம். அதுமட்டுமன்றி சிறிது கவனக்குறைவு நேர்ந்தாலும் பல பக்க விளைவுகளை உருவாக்கிவிடும். ஆகவே, கடலுக்கடியால் மின்சாரத்தை இன்னொரு நாட்டுக்கு குறிப்பாக சிறிலங்காவுக்கு வழங்குவதென்கிற திட்டம் தேவையில்லாததொன்றே.

குறித்த திட்ட ஆலோசனை நகலை இந்திய மத்திய அரசுக்கு ஒரு மாத காலத்திற்குள் அளிக்கப்படும் என்று கூறுகிறது கிரிட்பவர். மத்திய அரசு சிறிலங்கா அரசுடன் இணக்கப்பாட்டை செய்துகொண்ட பின்னர்தான் வேலைகள் ஆரம்பமாகும் என்று கூறுகிறது கிரிட்பவர;. பல அழிவுகளுக்கு வித்திடும் இப்படியான திட்டத்தை இந்திய மத்திய அரசு எப்படி கையாளும் என்பது இந்தியாவின் அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தலைவர்களின் செயற்பாடுகள் மூலமாகத்தான் இருக்கும். கடும் எதிர்ப்புக்கள் இந்திய மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டால் இத்திட்டம் கைவிடப்படலாம். இதன் வெற்றி தோல்வி என்பது அரசியல், சுற்றுச்சூழல்இ சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் செயற்பாடுகளில்தான் தங்கியுள்ளது.

இந்தியா மறைமுகப்போரையே சீனாவுடன் மேற்கொள்கிறது

இந்திய உபகண்டத்தில் சீனாவை அனுமதிக்க முடியாதென்கிற இந்தியாவின் கொள்கை இப்போது செயல்வடிவம் பெறத் தொடங்கியுள்ளது. தனது நாட்டுக்குள்ளேயே மின்சாரத்தை சரிவர வழங்க முடியாமல் தவிக்கும் இந்தியா அயல் நாடுகளுக்கு மின்சாரத்தை வழங்குவதென்பது பல சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். தனியாரின் ஆதிக்கத்தை சிறிலங்கா அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. மருத்துவர் செட்டியாரினால் கொழும்பில் கட்டப்பட்ட அப்பலோ மருத்துவமனைக்கு நடந்த கதி என்ன என்பது பலருக்குத் தெரிந்த விடயமே. மருத்துவமனையை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு, பின்னர் அவ் மருத்துவமனையை தனக்கு வேண்டப்பட்ட நிறுவனமூடாக சிறிலங்கா கையகப்படுத்திக்கொண்ட விடயமானது மருத்துவர் செட்டியாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது போன்ற சம்பவங்களே மற்ற நிறுவனங்களுக்கும் சிறிலங்காவில் நடக்கும்.

இந்தியா தனது திட்டங்களை நிறைவேற்ற சிறிலங்காவை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும். இதனூடாக சீனாவை விரட்டலாம் என்று கருதுகிறது இந்தியா. இவற்றைச் செய்வதற்கு சிறிலங்காவுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உண்டு. இதற்காகத்தானோ என்னவோ கடந்த வாரம் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் பல உடன்பாடுகளில் சிறிலங்கா அரசுடன் கைச்சாத்திட்டுவிட்டு சென்றுள்ளார் போலும். தற்போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை இந்தியாவின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சிறிலங்காவுக்கு கட்டிகொடுத்து தனது இருப்பை சீனா எப்படி நிலைநாட்டியுள்ளதோ, அப்படியான நிலையையே வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியா செய்ய முற்படுவதானது இந்தியா ஒரு போதும் சீனாவை தமிழர; பகுதிகளில் காலூன்ற விடாது என்பதையே காட்டுகிறது.

ஏழு பேர் கொண்ட குழுவுடன் சிறிலங்கா வந்தடைந்த பிரதீப் குமார் சிறிலங்காவில் பணியாற்றிய வேளையில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலியும் செலுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் எதிர்காலத்தில் எத்தகைய ஆயுத, பயிற்சி உதவிகள் இலங்கைக்கு வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற விடயங்கள் பாதுகாப்புச் செயலாளர; கோத்தபாய ராஜபக்சாவுக்கும் பிரதீப் குமாருக்கும் இடையிலான சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன. நல்லெண்ண அடிப்படையில் ஏவுகணைகள் மற்றும் ராடர;களையும் இந்தியா சிறிலங்காவுக்கு அன்பளிப்புச் செய்யும் என்று அறிவிக்கபட்டது. இவைகள் அனைத்தையும் பாh;க்கும்போது தனது திட்டங்களை நடைமுறைப்படுத்த லஞ்சமாக இந்தியாவினால் சிறிலங்காவுக்கு வழங்கப்படுகிறது என்றே கருதவேண்டியுள்ளது. படுதோல்வியான நாடாக கருதப்படும் சிறிலங்காவை ஆட்சி செய்யும் அரசு அனைத்துப் பகுதியினருடனும் சேர்ந்து முடிந்தளவு பண மற்றும் பொருளுதவிகளை பெற்று குறைந்தது அடுத்த ஐந்து வருடங்களாவது ஆட்சி செய்வதனூடாக சிங்கள மக்களிடம் ஆதரவைப்பெற்று மீண்டுமொரு தேர்தலை நடாத்தி வெற்றி பெற்றுவிடவேண்டும் என்று இப்போதிலிருந்தே ஆயத்தங்களை செய்கிறது போலும்.

சிறிலங்காவில் பலமாக காலூன்றியுள்ள சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து சிறிலங்காவில் சிறிய மின்சார உற்பத்திக்காக அணு மையம் ஒன்றை நிறுவவுள்ளன. அண்மையில் இந்தியா சென்ற ரஷ்ய அதிபர் மற்றும் இந்திய பிரதமருக்கும் இடையிலான உடன்படிக்கையில் இந்த விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஷ்பிரஸ் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமையை ரஷ்யாவும் தமக்கு பாதகமாகவே கருதுகிறது. இந்த நிலையிலேயே இலங்கையிலும், பங்களாதேஷிலும் அணு மையங்களை நிறுவ இந்தியாவும் ரஷ்யாவும் இணங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது.

கடந்த சில வாரங்களாக வரும் செய்திகளை அறியும்போது இந்தியா தொடர;ந்தும் சீனா விடயத்தில் மௌனம் காக்கப்போவதில்லை என்கிற நிலையை கொண்டுள்ளதாகவே உணர முடிகிறது. இரத்தம் சிந்தாமல் மாபெரும் போரையே நடாத்தி இந்திய உபகண்டம் உட்பட இந்து சமுத்திரப் பிராந்தியத்திலிருந்தே சீனாவை விரட்டியடிப்பதே இந்தியாவின் திட்டம். இதற்காகத்தான் சிறிலங்காவுக்கு அளிக்கப்படும் மின்சார விநியோகம் மற்றும் அணு மையம் நிறுவப்படும் நிகழ்வுகள்.

தனது திட்டங்களை நிறைவேற்ற பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவானாலும் செலவுசெய்ய தயாராக இருக்கிறது இந்தியா. இதனால் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் இருக்கும் மக்களும், கடல் உயிரினங்களின் வாழ்வியல் சூழல்களும்தான் பாதிப்பிற்குள்ளாகும். இங்குள்ள அரிய வகைத் தாவரங்களும், உயிரினங்களும் அழிந்து விடும். தமது அதிகாரங்களை நிலைநாட்ட ஆட்சியாளர்கள் எதையும் செய்ய முன்வருவார;கள். இவர்களின் செயற்பாட்டை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டு எதிர்ப்புக்களை எழுப்புவதனூடாக ஆட்சியாளர்களின் திட்டங்களை முழையிலையே பிடுங்கி எறிந்துவிட முடியும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com