முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மலேசியா வாசுதேவன்
இந்திரஜித்
தண்ணீர் வியாபாரம்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
லகானின் சதி - டெட் ஹீபெர்ட்
நிஜந்தன்
தாயுமாய்..
ராமலக்ஷ்மி
லண்டன் கறியில் நார்வே எலி
அப்துல்காதர் ஷாநவாஸ்
தமிழ் சினிமாவில் கலை: எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும்
ஆனந்த் அண்ணாமலை
சேலம் ஸ்பெஷல்
எஸ்கா
ஷாஜியின் இசையின் தனிமை நூல் கலந்துரையாடல் அரங்கம்
கவிதை
புக்காவஸ்கி கவிதைகள்
தமிழில் ஆர்.அபிலாஷ்
மிகநெருங்கிய மரணத்தின் கசடு..
ஆறுமுகம் முருகேசன்
முடிவுறுதல்
கே.பாலமுருகன், மலேசியா
நவீன டிராக்டர்கள் உழும் பொருளாதார நிலம்..
இளங்கோ
இறுதி செய்தி
வேல் கண்ணன்
நிலாரசிகன் கவிதைகள்
நிலாரசிகன்
வனச்சிறுவனின் அந்தகன்
-எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.
கார்த்திகா கவிதைகள்
கார்த்திகா
ஆசைப் பூனை
தேஜூ உஜ்ஜைன்
வேரை நோக்கிய‌ ப‌ய‌ண‌ம்
ராம்ப்ரசாத்
நீர்க்கோல வாழ்வில்
செல்வராஜ் ஜெகதீசன்
பன் யுகக் கனவுகள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
மரங்களின் மாதவம்
ப.மதியழகன்
ஸ்ருதி ரமணி கவிதைகள்
ஸ்ருதி ரமணி
எரிமலைகள்
ஷம்மி முத்துவேல்
சிறுகதை
அந்த இரவு...
ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்
பலூன்கள்
என்.விநாயக முருகன்
இந்தவாரக் கருத்துப்படம்
சூதாட்டம்
பாபுஜி
பங்கீடு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில் ஆர்.அபிலாஷ்
நிகழ்வுகள்
மிகநெருங்கிய மரணத்தின் கசடு..
ஆறுமுகம் முருகேசன்

யாருமற்ற குழந்தைக்கு ஒத்தடமாய்
இந்த நகரம்
என்னைத் தெருக்களில் நடத்திக் கொண்டிருக்கிறது..

இந்தப் போதைக்கு
எனக்கே என்னைப் பிடிக்காதிருக்கையில்
யாருக்கு என்னைப் பிடித்துவிடப் போகிறதென
வினவுவதாகவுமில்லை.

தொலைபேசியில் வந்த செய்தியை
நெடுநேரமாய் உமிழ்ந்தவாறே.. 
அது மட்டும் உறுதி, 
பதில் அனுப்பப் போவதில்லை
இம்முறை என்னை நான்
தோற்றுவிடப் போகிறேன்.

இருப்பதைவிட
இல்லாது இருப்பது
என்னை மிகசௌகர்யமாக இருப்பதாக
உணரும் தருணம் இது.

இப்பொழுதெல்லாம்,
கண்கூசும் பகலில்
பத்துக்குப் பத்து அறையைவிட்டு
வெளியெங்கும் நான் நடமாடுவதில்லை..

இரவுமட்டுமே பிடித்துப் போய்விட்டதோ யென்னவோ,
நெடுநாட்களாய் வானம்
பசியூட்டியவாறே குழந்தையைத்
தொடர்கிறது.!

எனது தொலைபேசியில்
நான் வாசிக்காத செய்திகள்
குவிந்து கிடக்கிறது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com