முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மூன்றாம் சிலுவை
அ.முத்துலிங்கம்
சிங்கப்பூரில் பா. ராகவனும் சேஷாத்திரியும்
இந்திரஜித்
ஹோமியோபதி - ஒரு மாற்று அரசியல்
நிஜந்தன்
தடம் மாறும் பெருங்கையன்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
வேட்டையாடப்படும் எழுத்தாளர்கள்
சுப்ரபாரதிமணியன்
மொழியும் வலியும்
அப்துல்காதர் ஷாநவாஸ்
கைத்தொலைபேசி - அந்தரங்கத்தை அபகரிக்கும் கருவி
இளைய அப்துல்லாஹ்
கவிதை
வெளியேற்றம்
வேல் கண்ணன்
நிகழாத முத்தங்கள் ... !!
கலாசுரன்
காகத்தின் முதல் பாடம்
டெட் ஹியூக்ஸ்
சுய துரோகம்
ஜகத் ஜே.எதிரிசிங்க
வீடு திரும்பல்
வே. முத்துக்குமார்
மரணித்துவிடாத தற்கொலைகள்!
ஆறுமுகம் முருகேசன்
கை நிறைய சொற்கள்..
இளங்கோ
கிடை ஆடுகள்
செல்வராஜ் ஜெகதீசன்
பெய்யென பெய்யும் மழை...
சசிதரன் தேவேந்திரன்
போன்சாய் மரம்- சில ஆலோசனைகள்
என்.விநாயக முருகன்
சிறுகதை
புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள்
கோ.புண்ணியவான்
இரண்டாவது முகம்
சென்னை ராம்ப்ரசாத்
இந்த வாரக் கருத்துப் படம்
காமெடி கலாட்டா
பாபுஜி
எரியும் எண்ணெய்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
-
போன்சாய் மரம்- சில ஆலோசனைகள்
என்.விநாயக முருகன்

போன்சாய் மரங்களை
வளர்ப்பது சாதாரண விஷயமல்ல
வெயிலில் அதிகநேரம்
வாடவிடக்கூடாது.
வாரத்திற்கு ஒருமுறை
இலைகளைக் கிள்ளி
தண்டுகளைக் கட்டி
பிள்ளைகள் போல
பராமரிக்க வேண்டும்
 
தண்ணீரை ஊற்றக்கூடாது
தெய்வத்தின் மீது
தூவும் மலர்களைப் போல
தெளிக்க வேண்டும்
குறிப்பாக
பூச்சிகளை அண்டவிடக்கூடாது
 
போன்சாய் மரங்களை
உயரமாய் வளரவிடக்கூடாது
பக்கவாட்டில் கிளைபரப்பினாலும்
பிரச்சினைதான்
கறாராக வெட்டிவிடவும்
 
 போன்சாய் மரங்களுக்கு
தாய்மண் இருந்ததில்லை
தாய்மண்ணுக்குக் குரல்கொடுக்கும்
போன்சாய் மரங்கள்
அதிகநாள் இருந்ததில்லை
அவற்றை மட்டும்
வளர்க்கவே வளர்க்காதீர்

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com