முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
தெற்கு வளர்கிறது: கிரிக்கெட்டில் புகைச்சல்
ஆர்.அபிலாஷ்
அதிகாரம் தின்று முடிக்கும் முனைப்புகள்
தீபச்செல்வன்
புலி புரிந்த குற்றங்கள்
இந்திரஜித்
நாட்டின் செல்வங்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
இலங்கைத் தமிழ் ஊடகங்கள் : தவறுகளும் சவால்களும்
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது...
ஆனந்த் அண்ணாமலை
அந்நியமாகும் ஆசைகள்
அ. ராமசாமி
சேமித்து வைக்க சில இயல்பான‌ நொடிகள்
மு.கார்த்திக்
உங்கள் கணவரோ மனைவியோ குண்டாக விருப்பமா?
ஆர்.அபிலாஷ்
அறிவியலறிஞரின் தாய்மை
நிஜந்தன்
பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி
பொன்.வாசுதேவன்
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
/
கவிதை
பதில்களற்ற மடலாடல்:
'அவனி அரவிந்தன்'
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்..
எனது அமீபாவைக் கண்டடைதல்...
தேவராஜன், மலேசியா
மையத்தில்..அமிழும் கனப்பொருள்..
இளங்கோ
ரகசிய வாசல்கள்
கார்த்திகா
சிறுகதை
ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்
கே.பாலமுருகன்
இருமல்
கிரகம்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
ஆத்திரப் பிரதேசம்
பாபுஜி
'கத்திரி' க்காய்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி

வேதம்

ஓர் இளைஞனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது.

அவனுக்கு மாமானாராக வரப் போகும் கிழவர் கறாரான பக்திமானாகவும் புனித நூலிற்கு வெளி அர்த்தம் மட்டும் பார்ப்பவராகவும் இருந்தார்,

அந்த இளைஞன் தன்னை வழி நடத்தும் சூஃபி ஞானியை அணுகி, ""எப்படி தன் மாமனாரை உண்மையை உணரும் ஞான வழிக்குத் திருப்புவது'' என்று ஆலோசனை கேட்டான்.

"அவர் வழிக்கு திரும்புவார்' என்று ஞானி பதில் சொன்னார்.

" எந்த முறையில் திரும்புவார் ?" என்று மேலும் விடாமல் கேட்டான் இளைஞன்.

"கேள்வி உருவாகி விட்டது . பதிலும் உருவாகும். ஆனால் கேள்வி கேட்கப்படுவதற்கு அனுமதியில்லை". என்றார் அந்த ஞானி.

"அது நியாயமான கேள்வியெனும் போது , அதற்கு தக்க படி நான் என் மாமனாரிடம் எப்படி நடந்து கொள்வது ?" என்று அந்த இளைஞன் கேட்டான்.

"அவருடன் அனுசரித்துப் போங்கள்' என்று சொல்லி முடித்துக் கொண்டார் ஞானி.

திருமண நாளின் போது, புது மணத் தம்பதிகள் புதுமனை புகுந்தார்கள். மாமானாரும் அவர்களுடன் சென்று புது வீட்டில் வைத்து தோலினால் மூடப்பட்ட ஒரு பெட்டியை பரிசாக அளித்தார். பெட்டியின் முகப்பில் "ஓதுவதற்கான புனித வசனங்கள்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததது.

புது மணத் தம்பதிகள் அந்தப் பெட்டியை வாங்கி அப்படியே அலமாரியில் வைத்து விட்டனர்.

சில மாதங்கள் உருண்டோடின. இளைஞனை துரதிர்ஷ்டம் பீடித்தது. இளைஞன் தனது வேலையை இழந்து விட்டான். கையில் சேமித்து வைத்த முதலும் கரைந்து போனது . தொட்ட காரியங்களும் துலங்காமல் போய் விட்டது.

பெருகி வரும் கடனை அடைப்பதற்கும், சிறியதாக புதுத் தொழில் தொடங்குவதற்கும், பொருள் வசதியுள்ள தனது மாமனாரை அணுகிப் பார்க்கலாமா என்று அந்த இளைஞன் யோசித்தான்.

"எப்படியானாலும் உன் மாமனாரை அணுகி உதவி கேள்' என்று ஞானியும் இளைஞனுக்கு ஆலோசனை வழங்கினார்.

இளைஞனும் தன்னிலையை விளக்கி, மாமனாருக்கு ஒரு கடிதம் வரைந்தான்.

கடிதம் கிடைக்கப் பெற்ற சில நாட்களுக்குள். இளைஞனின் மாமனார் தன்னுடன் உள்ளுர் நீதிபதியையும் சில மார்க்க பண்டிதர்களையும் அழைத்துக் கொண்டு இளைஞனின் வீடேகினார்.

எல்லோரும் வீட்டின் முன்னைறையில் கூடினர். கிழ மாமனார், அதிர்ந்த குரலில் மருமகனைப் பார்த்து பேசத் தொடங்கினார்:

"நீ இந்த நிலைமைக்கு வந்ததற்குக் காரணம் புனிதமான # மதச் சட்டமான ஷரியத்தை நீ பேணாததுதான் காரணம் " என்று அலமாரியில் இருந்த குர் ஆனை மூடியிருந்த பெட்டியை கட்டிக் காட்டினார். அதை எடுத்து வருமாறு பணித்தார். பெட்டி வந்தவுடன் அதைத் திறக்க ஆரம்பித்தார் மாமனார்.

"நாங்கள் மார்க்க நெறிகளைப் பேணுவதில்லை என்று ஏன் சொல்லுகிறீர்கள்? " என்று இளைஞன் கேட்டான்.

"ஏனென்றால் நீங்கள் புனித நூலை ஓதுவதில்லை' என்று வெளிப்படையான அர்த்தங்களை மட்டும் பார்க்கும் அந்தக் கிழ மாமனார் சொன்னார்.

கிழவன் பேசியதைக் கேட்டு விட்டு, " வெறும் வாசிப்பை விட அறிவு மேம்பட்டது என்று சொல்லப் படவில்லையா? " என்று இளைஞன் பதில் சொன்னான். மேலும், தனக்கு குர்ஆன் மனப்பாடமாகத் தெரியும் என்று சுட்டிக் காட்டினான் இளைஞன்.

இளைஞன் பேசியதைக் கேட்டுவிட்டு, "இந்தத் தம்பதிகள் பயபக்தியுள்ளவர்களா, இல்லையா என்று கண்டு சொல்வதற்குதான் என்னைக் கூப்பிட்டீர்கள். உங்கள் மருமகனிடம் குற்றம் காண முடியும் என்று என்னால் சொல்ல இயலாது ' என்று நீதிபதி சொன்னார்.

"நிச்சயமாக குற்றம் காண முடியாது . நான் தவறுதலாக யோசித்ததற்கு இப்போது வருத்தப் படுகிறேன். இந்த இளைஞன், தன்னடக்கத்துடன் தன்னால் நேர்த்தியாக ஓத முடியும் என்று இது வரை வெளியே சொன்னதில்லை. என்னைவிட, குர் ஆனில் புலமை மிகுந்தவன். பண்பிலும், அறிவிலும் சிறந்தவன், என்று அவ்விளைஞன் எனக்கு காட்டி விட்டான். நான்அவனிடம் தோற்றுவிட்டேன். என்பதை ஒப்புக் கொள்கிறேன். இனிமேலிருலுந்து குர் அனை மனனம் செய்வதுதான் என் முதல் வேலை, " என்று மாமனார் சொன்னார்.

நீதிபதியுடனிருந்த மார்க்க பண்டிதர்கள் , கிழவரின் முடிவைப் பார்த்து "என்ன பணிவு, பவ்யம் தன் மருமகனைப் பார்த்து, தனது புலமையை பூர்ணமாக்கிக் கொள்ள உடனே முடிவு எடுத்து விட்டார்" எனச் சொல்லிச் சொல்லி வியந்தனர்.

"ஆனால், அடக்கமும் ஒரு கட்டத்தில் வெறும் வெளிப் பாசாங்காக ஆகி விடவும் கூடும்' என்று சொன்னார் நீதிபதி.

""இப்பவும் குர்ஆனை வெறுமனே வாசிப்பதைவிட , அதை மனனம் செய்ய சிரமம் மேற்கொண்டவனை முன் மாதிரியாகக் கொள்வது சிறப்பில்லையா? என்று கிழ மாமனார் கேட்டார்.

"வெளிப் பாசாங்கானது உண்மை நிலையை அடையத் தடையாகிவிடும். நான் அந்த விஷயங்களை பற்றி தனியாகக் சொல்லுகிறேன் " . என்று சொன்னார் நீதிபதி.

" நீதிபதியின் போதனையானது வெறும் புத்தகங்களைக் கற்கும் பண்டிதனாக ஆவதிலிருந்து என்னைத் தடுத்து விட்டது. செயலும் வாழ்வும் பிணைந்திருக்கும் சூஃபிக்களின் வழி முறையை தேர்ந்தெடுத்து விட்டேன் ". என்று கிழவனாரும் தனக்கு நேர்ந்த அனுபவங்களை வரும் பண்டிதர்களிடம் விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார்.

சொன்னபடியே கிழவர் சூஃபியனார். அவர் வாழ்வு பிரகாசமானது . ஞான வழி போனவர்களின் சிந்தனைகளும் செயல்களும் கிழவரின் வாழ்வில் இன்று வரை ஊடுருவி இருக்கின்றன.

" நீங்களும் உங்களைப் போன்ற அறிஞர்களும் குர் ஆனை வாசிக்க செய்தீர்கள், இளைஞனுக்கு இறை வசனங்கள் மனப்பாடமாகத் தெரியும். ஆனால் உங்கள் மகள் # அந்த இளைஞனின் மனைவி குர் ஆன் படியே சிந்திக்கவும் வாழவும் செய்கிறாள்.

இத்தனைக்கும் அவளுக்கு, வாசிக்கவோ, எழுதவோ, விவாதிக்கவோ அல்லது ஒப்புவிக்கவோ, எதுவும் தெரியாது "என்பதுதான் .நீதிபதி, அந்தக் கிழவனாரிடம் தனியாகச் சொன்ன விஷயம்.

ஓவியங்கள் : பாபுஜி

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com