முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
தெற்கு வளர்கிறது: கிரிக்கெட்டில் புகைச்சல்
ஆர்.அபிலாஷ்
அதிகாரம் தின்று முடிக்கும் முனைப்புகள்
தீபச்செல்வன்
புலி புரிந்த குற்றங்கள்
இந்திரஜித்
நாட்டின் செல்வங்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
இலங்கைத் தமிழ் ஊடகங்கள் : தவறுகளும் சவால்களும்
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது...
ஆனந்த் அண்ணாமலை
அந்நியமாகும் ஆசைகள்
அ. ராமசாமி
சேமித்து வைக்க சில இயல்பான‌ நொடிகள்
மு.கார்த்திக்
உங்கள் கணவரோ மனைவியோ குண்டாக விருப்பமா?
ஆர்.அபிலாஷ்
அறிவியலறிஞரின் தாய்மை
நிஜந்தன்
பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி
பொன்.வாசுதேவன்
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
/
கவிதை
பதில்களற்ற மடலாடல்:
'அவனி அரவிந்தன்'
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்..
எனது அமீபாவைக் கண்டடைதல்...
தேவராஜன், மலேசியா
மையத்தில்..அமிழும் கனப்பொருள்..
இளங்கோ
ரகசிய வாசல்கள்
கார்த்திகா
சிறுகதை
ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்
கே.பாலமுருகன்
இருமல்
கிரகம்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
ஆத்திரப் பிரதேசம்
பாபுஜி
'கத்திரி' க்காய்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி
பொன்.வாசுதேவன்

மொழியின் பயன்பாடு என்பது அம்மொழியின் பண்பாட்டின் அடிப்படையில் அதன் ஒத்திசைவோடு இயைந்து வழக்கத்தில் வருவது. வெவ்வேறு காலங்களில் நிலவி வந்திருக்கின்ற மக்களின் பண்பாட்டுப் புழக்கமே மொழியின் செழுமை மற்றும் சிறுமையை நிர்ணயம் செய்வதாக இருக்கிறது. இவ்விடத்தில் மொழியென பொருள் கொள்ளப்படுவது தமிழ் மொழியை முன்வைத்தே என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மொழி வழியிலான ஆய்வுகள் துல்லியமான மதிப்பீடுகளை வழங்குவதன் சாத்தியம் மிகக்குறைவு. இவ்வகையான மொழி சார்ந்த மதிப்பீடுகளை கால்டுவெல், வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர், H.R.ஹால் போன்றோரின் ஆய்வுகள் வெளிப்படுத்துகையில் அவை கணிப்புகள் என்ற அளவிலேயே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கணிப்புகளின் நிச்சயத்தன்மை உறுதியிட்டுச் சொல்லக் கூடியவையாக ஆகிற வாய்ப்பு ஏற்படுகிற சூழல் மொழியின் உள்ளார்ந்த பன்முகங்களை ஆய்வுக்குட்படுத்தும் போது மட்டுமே நிகழ்கிறது.

மொழி நாகரீகம் என்பது ஒரே சீராக வளர்ச்சியடைந்து விடக்கூடிய ஒன்று இல்லை. மொழியின் சொல்லாய்வு - மொழியாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மொழியை அணுகியவர்களான பி.டி.சீனுவாசனார், ஞா.தேவநேயனார் போன்றோரின் ஆய்வுகளின் கணிப்பும், சமஸ்கிருதத்தை முதன்மைச் சான்றாகக் கொண்டு மொழியை அணுகியவர்களான மேலை ஆய்வறிஞர்களும் வெளிப்படுத்திய மொழியாய்வின் கணிப்பும் வெவ்வேறானவையாக இருந்தததற்கு அவர்களின் மொழி சார்ந்த அணுகுமுறையே காரணம்..

ஒலிக்குறிப்புகளாகவே அறியப்பட்ட தொடர்பு சாதனம் மொழி வடிவெடுத்த பிறகு உணர்ச்சி ஒலி, சுட்டு ஒலி, குறிப்பு ஒலி என ஒலித்தொகுதியாகத்தான் மொழி வகைமைப்படுத்தப்பட்டது. தமிழின் ஆதிவடிவம் ஒலிக்குறிப்புகளின்பாற்பட்டே தோன்றியிருக்கக்கூடும். தமிழ் மொழிக்கு மட்டுமேயன்றி, ஒலிக்குறிப்பே மொழியின் தொன்மம் என்பதை அனைத்து மொழிகளுக்கும் பொதுவான கோட்பாடாக கொள்ளலாம்.

மொழியில் உருவடிவம் கொண்ட பின் அதன் வளர்ச்சியானது சீராக, இன்னின்ன சொற்களுக்கு இன்னின்ன பொருள் என்ற சமுதாய பண்பாட்டின் அடிப்படையிலான கருத்தாக்கங்கள் ஏற்பட்டது. கருத்தமைவுகளின் அடிப்படையில் தன்னியல்பாக ஒரு வேர்ச்சொல்லிருந்து மற்றொன்று என விரிவடைந்து கொண்டே மொழி வளர்ச்சி நிகழ்ந்தது.

மந்தி என்ற பழந்தமிழ்ச் சொல்லிலிருந்து கிளர்ந்த மாந்தன் என்ற சொல் மனிதன் ஆகி திரிபுர எடுத்துக்கொண்ட காலத்தின் நீட்சி மொழி வளர்ச்சியின் ஒரு படியாகக் கருதப்படுகிறது. எண்ணற்ற மொழியாய்வுகள், சொல்லாய்வுகள் புதுப்புது கணிப்புகளை உதிர்த்தபடியே இருக்கின்றன. பார்த்தல், தொடுதல், உணர்தல் ஆகிய வினைகளை ஒட்டியே மொழியும் வளர்ச்சி பெறத் தொடங்கியது.

மொழி ஆய்வுப் பணிகளில் வேற்று மொழிகளின் தாக்கம் என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது. பிறமொழிக் கூறுகள் ஒரு மொழியில் கலப்பில்லாமல் இருப்பின் அது அம்மொழி சார்ந்த பண்பாட்டு வளர்ச்சியின்மையையே வெளிப்படுத்துகிறது. உறவுப் பெயர்கள், சுட்டுப்பெயர்கள் ஆகியவை பயன்பாட்டில் புழங்குவதற்கான காரணியாக பழங்காலத்திற்குரிய வினைச்சொற்களே விளங்குகிறது.

மொழியாய்வுகளைப் பொறுத்தவரையில் ஏற்கனவே வழங்கப்பட்ட கருத்துகளை தற்போதைய வலுவான கருத்துகளின் வழியே பன்முக நோக்கில் நிறுவிக் காண்பித்தால் மட்டுமே ஏற்கப்படும். பெரும்பாலான மொழியாய்வுகள் சார்பு மனோபாவத்துடனும், மிகை கணிப்புகளாலும் நிறைந்து விடுவதாலேயே அவற்றின் நிரூபணம் ஏற்க இயலாததாகி விடுகிறது.

தொன்ம மொழியியல் ஆவணங்களிலும் இடைச்செருகல்கள் இருக்கக்கூடும் என்பதால் ஆவணப்படுத்தப்பட்ட முறையும், விதம் குறித்துமான கூர்நோக்குப் பார்வை முக்கியமானதாகிறது.

இலக்கிய அகழ்வாய்வுகள் நேரடி பொருளில் எடுத்துக் கொள்ளப்படாமல், அது படைக்கப்பட்ட காலம், அக்காலத்தைய சமுதாய பண்பாட்டுச் சூழல், ஒழுக்க நெறிமுறைகள், விழுமியங்கள் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். உதாரணத்திற்கு, தொல்காப்பியத்தை ஆய்வுக்குட்படுத்தும்போது, தொல்காப்பியக் காலமான கி.மு.1250-இல் இருந்த பண்பாட்டுச் சூழல் குறித்தான ஆய்வுப் பார்வையும் அவசியமானதாகிறது. இப்படியாக மொழியாய்வின் போது அதற்கான சான்றாவணமாக கொள்ளும் மொழியியல் படைப்பை அது எழுதப்பட்ட அல்லது அவ்வாறாக கருதப்பட்ட காலத்தையும் கணித்து அறுதியிடப்பட வேண்டும்.

தமிழின் சொற்கூறுகள் உருவான விதம் பற்பல மொழியாய்வுகள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன. இவற்றுள் பல கணிமைகள் கவனம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதன் காரணமாக அவை உரிய அங்கீகாரம் பெறுவதில்லை. பிராமணம் என்ற சொல்லின் வேர்ச் சொல் பற்றிய வரலாறு சுவாரசியமானது. பரமணம்என்றால் வேற்றுக்கூட்டம்என்பது பொருள். பரமணம் என்பது மருவியே தமிழில் பிராமணர் என்றாகியிருக்கக்கூடும் என மொழி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலமாக பரமணர்என்ற சொல்லாட்சியை நீட்சியான ஆய்வுக்குரிய நாம் ஒரு கூற்றாகவும் கொள்ளலாம்.

மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுகிற போது சில காலம் கழித்து அதுவே பண்பாடாகிப் உருவெடுக்கிறது. ஒரு காலத்தில் சமூக ஒழுங்காக ஏற்கப்பட்ட ஒன்று பிறிதொரு காலத்தில் ஏற்புடையதாக இருப்பதில்லை. இது பண்பாட்டு வளர்ச்சி நிகழ்வு எனலாம்.

தற்போது மொழி சார்ந்த ஆய்வுகளின் அவசியம் என்ன எனும் கேள்வி எழலாம். மொழியின் மீதான ஆய்வியல் அணுகுமுறை பண்டிதத்தனங்களுக்கப்பாற்பட்டு மொழி சார்ந்த பண்பாடு மற்றும் சமூக கட்டமைப்புகள் சார்ந்து மேற்கொள்ளப்படுமாயின் மொழியின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது. இதுவரையிலான மொழியாய்வுகள் முழுமையான கருத்தை வெளிப்படுத்தாமல் கணிப்புகளாகவே பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இதுவே காரணம். எந்தவொரு மொழியையும் பண்பாடு, கலாச்சாரம், சமூக கட்டமைவு சார்ந்து ஆய்ந்தறிவதன் வழியே மொழியானது வேறோர் தளத்திற்கு நீட்சியடையக்கூடிய வாய்ப்புண்டு.

ஒரு சமூகத்தின் பண்பாடு சார்ந்தே அதன் மொழி வளர்ச்சியும், பிறமொழிப் புணர்ச்சியும், திரிபுகளும் நிகழ்கின்றன என்பது உண்மை. இக்கட்டுரை முழுமையான மொழியாய்வுக் கட்டுரை அல்ல. மொழியாய்வுகள் பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் நிகழுமாயின் பண்பாட்டின் வேரிலிருந்து கிளைத்ததுதான் மொழி வளர்ச்சி என்பதனை நாம் உணரலாம் என்பதற்கான ஒரு சிந்தனை மட்டுமே.

Further Readings :

1. P.T.Srinivasa Iyangar, The Stone Age in India

2. P.T.Srinivasa Iyangar, Pre-Aryan Tamil Culture

3. Rt.Rev.Robert Caldwell, A Comparatve Grammer of the Dravidian or South-Indian Family of Languages (1976)

4. ஞா.தேவநேயனார், தமிழ் வரலாறு (1967)

aganazhigai@gmail.com

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com