முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
தெற்கு வளர்கிறது: கிரிக்கெட்டில் புகைச்சல்
ஆர்.அபிலாஷ்
அதிகாரம் தின்று முடிக்கும் முனைப்புகள்
தீபச்செல்வன்
புலி புரிந்த குற்றங்கள்
இந்திரஜித்
நாட்டின் செல்வங்கள்
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
இலங்கைத் தமிழ் ஊடகங்கள் : தவறுகளும் சவால்களும்
கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது...
ஆனந்த் அண்ணாமலை
அந்நியமாகும் ஆசைகள்
அ. ராமசாமி
சேமித்து வைக்க சில இயல்பான‌ நொடிகள்
மு.கார்த்திக்
உங்கள் கணவரோ மனைவியோ குண்டாக விருப்பமா?
ஆர்.அபிலாஷ்
அறிவியலறிஞரின் தாய்மை
நிஜந்தன்
பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி
பொன்.வாசுதேவன்
சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
/
கவிதை
பதில்களற்ற மடலாடல்:
'அவனி அரவிந்தன்'
அரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்..
எனது அமீபாவைக் கண்டடைதல்...
தேவராஜன், மலேசியா
மையத்தில்..அமிழும் கனப்பொருள்..
இளங்கோ
ரகசிய வாசல்கள்
கார்த்திகா
சிறுகதை
ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்
கே.பாலமுருகன்
இருமல்
கிரகம்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வாரக் கருத்துப் படம்
ஆத்திரப் பிரதேசம்
பாபுஜி
'கத்திரி' க்காய்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
நவீன ஹைக்கூ
தமிழில்:ஆர்.அபிலாஷ்
அதிகாரம் தின்று முடிக்கும் முனைப்புகள்
தீபச்செல்வன்

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கை அரசினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது விடுதலை தொடர்பாக பொன்சேகா ஆதரவாளர்களும், குற்றவாளியாக நிரூபிப்பதற்கு அரசும் அதுசார்ந்த கட்சிகளும் தொடர்ந்தும முயற்சித்துக் கொண்டு வருகின்றனர். பொன்சேகா வெளியில் வருவதற்கான எந்த சமிக்கைகளும் தெரியவில்லை. அவரை சிறையிலடைத்து அவரது முனைப்புக்களை சிதறடித்து அல்லது முறியடித்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் உழைப்பிற்கும் சேதம் வராதபடி பார்த்துக்கொள்ள எத்தணங்கள் நடக்கின்றன.

சிங்கள அரசியலிலும் அரசியல் வாதிகளிற்கிடையிலும் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பகரமான சூழ்நிலை தென்பகுதி அரசியலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தினாலும் தொடர்ந்தும் பிரச்சினைகளை முகம் கொடுப்பவர்கள் தமிழ் மக்களாக இருக்கின்றனர். தமிழ் அரசியல் கட்சிகளும் இதன் பக்கத் தாக்கங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அவர்கள் தங்கள் நடவடிக்கைகளாலும் புத்தி சாதுரியங்களாலும் தமிழ் மக்களின் அரசியல் வழிமுறைகளை, முனைப்புக்களை ஒரு புறம் சிதறடித்துக்கொண்டிருக்கிறார்கள். வெளியை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வன்னிப்போர் முடிவின் பின்னர் தமிழ் மக்கள் மனங்களில் மகிந்த மற்றும் சரத்பொன்சேகா இரண்டு பேரையும் போர்குற்றவாழிகளாகவே அடையாளப்படுத்தப்ப்டனர். போரை முன்னின்று வழி நடத்தியவர் சரத்பொன்சேகா. அதற்கான கட்டளைகளை பிறப்பித்தவர் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ. இலங்கையில் இப்பொழுதுள்ள அரசியல் பிரச்சினைகளில் மிகுந்த தலை வலி தருது மகிந்த சரத் முறுகல் நிலைதான்.  அடுத்து தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலில் எதிர்கொள்ளப்போகும் பாரிய சவால்களும் தமிழ் மக்களின் அரசயலை சிதைக்க முற்படும் சதிகளும் ஏற்படுத்தும் அதிர்வுகளும் என்று பதற்றமான நிலை நிலவுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை சிறையிலடைத்த மகிந்த ராஜபக்ஷ அதை வெளிப்படையாக நியாயப்படுத்துகிறார். பொன்சேகா தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் சிறையிலடைத்திருப்பார் என்று கூறுகிறார். அதற்காகவே அவரை சிறையிலடைத்த மாதிரியாக மகிந்தவின் பதில்கள் அமைகின்றன. யுத்தத்தின் பங்காளிகள் அடிபட்டுக்கொண்டிருப்பது ஒரு வகையில் சிரிப்பதை;தான் தருகிறது.

பொன்சேகா கைது செய்யப்படுவதற்கு சில நாட்களின் முன்பு கொழும்புக்குச் சென்ற பொழுது அதிர்ச்சி தரும் பல்வேறு சம்பவங்களையும் செய்திகளையும் அறிய முடிந்தது. பேருந்தால் இறங்கி ஆட்டோவில் செல்லும்பொழுதே ஆட்டோக்காரர் தேர்தல் குறித்து தன் அதிருப்திகளையும் மோசடிகளையும் சொல்லிக்கொண்டு வந்தார். பொன்சேகாவின் வாக்குகளை திருடிக்கொண்டுதான் மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார் என்று அவர் சொல்லுகிறார். மோசடி மிக்க கொள்ளை மிக்க வன்முறை மிக்க தேர்தலாக நடந்தேறியிருந்தது.

அதற்கு மறுநாள் என்று நினைக்கிறேன். தேர்தல் மோசடிகளுக்கு எதிராக எதிரணிகளால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் ஆட்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது. ஜனாதிபதித்தேர்தலில் மோசடிகளால் வெற்றி வெற்ற மகிந்தவுக்கு எதிரான கோஷங்களும் எதிர்ப்புகளும் முன் வைக்கப்பட்டன. இலங்கைத் தலைநகரில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருப்பது எனக்கு வியப்பாக இருந்தது. வடக்கில் அல்லது கிழக்கில் இப்படியான ஜனநாயகப் போராட்டங்களை நடத்த படைகள் அனுமதிப்பதில்லை. மீறி நடத்தினால் படுகொலைகளும் அச்சுறுத்தல்களும் ஏற்படுத்தப்படுகின்றன. அங்கு ஆயிரக்கண்க்hன மக்கள், மாணவர்கள், வயது முதிர்ந்தவர்கள், அலுவலகர்கள் என்று எல்லோரும் திரண்டு நின்றனர்.

ஆர்ப்பாட்டம் தொடங்கி நீண்ட நேரத்தின் பின்னரே அங்கு சரத்பொன்சேகா வருகை தந்தார். அவர் வரும் பொழுது எங்கள் ஜனாதிபதி! எங்கள் ஜனாதிபதி என்று கடுமையான வரவேற்பும் கரகோசமுடும் வழங்கப்பட்டதது. இலங்கை தலை நகரில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. பொன்சேகாவுக்கு இருந்த ஆதரவை அன்றுதான் கண்டுகொண்டேன். மனோகணேசன், சோமவன்ச அமரசிங்க முதலியவர்கள் மட்டுமே தமிழ் மக்கள் பற்றியும் தமிழிலும் உரையாற்றினார்கள்.

பொன்சோகாவுக்கு இருந்த ஆதரவை கண்டு அஞ்சிய இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ ( அவரை எப்படி ஜனாதிபதி என்று அழைப்பது என்றும் கேள்வி எழுகிறது., ஏனென்றால் முழுக்க முழுக்க மோசடிகளால் வாக்கு கொள்ளைகளால் அவர் ஜனாதிபதியாகியிருக்கிறார் ) சரத்பொன்சேகாவை ஒரு வழி பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார். பிபிசிக்கு பேட்டியளித்த பொன்சேகா யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதரங்கள் இருப்பதாக அறிவித்த பொழுது ராஜபக்ஷ குடும்பமே ஆட்டம் கொள்ளத் தொடங்கியது. அவசர அவசரமாக பொன்சேகாவை கைது செய்வதற்கான காரணங்களை ஏற்பாடு செய்து கொண்டு அவரை மிக அநாகரிகமாக இழுத்துச் செல்லப்ப்டது.

தமிழ் மக்கள்மீதான யுத்தத்திலும் ஈழப்பேராட்டத்தை ஒடுக்குவதிலும் மகிந்தவின் எண்ணங்களை நிறைவேற்றியவர் சரத். மகிந்தவுக்கு இணையாக சிங்கள இனவாதத்தை வெளிப்படுத்தியவர். சருவதேசத்தின் இலங்கைமீதான அழுத்தங்களுக்கு முகம் முறிக்கும் பதில் அளித்தவர். இப்படி மகிந்தவுக்கு பல வகையில் உதவியவர். நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தவர். அவரையே இராணுவப் பொலீசாரால் நாயை இழுத்துச் செல்லுவது மாதிரி இழுத்துச் செல்லும் துர்பார்க்கிய நிலையும் - கொடுமையும் - அபத்தமும் இருக்குமென்றால் இந்த நாட்டில் இரண்டாம் தரப்பாக - சிறுபான்மையாக - உரிமை மறுக்கப்பட்டவர்களாக - பேராட்டம் சிதறடிக்கப்பட்டவர்களாக இருக்கின்ற ஈழத் தமிழர்களின் நிலை எவ்வளவு கேவலமானதாக இருக்கும்?

deebachelvan@gmail.com

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com