முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
தொடரும் துன்பக்கேணி
அ.ராமசாமி
கலைக்கல்லூரிக்குள் ஒரு உத்தப்புரம் சுவர்
ஆர்.அபிலாஷ்
கெளரவம் பார்க்காது கழக அரசு....!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.
சிக்கனம் எனும் நாடகம்
நிஜந்தன்
வாழ்க்கையும் வடுக்களும்- தய்.கந்தசாமியின் கானல் கூடுகள்
பாவண்ணன்
பறக்கும் குதிரை!
தமிழ்மகன்
ஜப்பானில் சில நாட்கள்
வா.மணிகண்டன்
சிரித்து வாழவேண்டும்
வாஸந்தி
நடிகர் பிரபுவின் திருமணமும், சுனாமியும்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
முதல் விமானப் பயணம்
ராஜேஸ் ஆரோக்கியசாமி.
கவிதை
தாய் மரம்
இன்பா சுப்ரமணியன்.
அலறலாய் ஒரு பாட்டு
இர.ஜெ.பிரேம்குமார்
அதிரும் உயிர்க்கூடு
பொன்.வாசுதேவன்
உயிர்த்தெழுதல்...
செல்வராஜ் ஜெகதீசன்
பூங்குழலி
என். விநாயக முருகன்
எஃகு முட்டைகள்
நந்தாகுமாரன்
முக நக
நர்சிம்
மாதங்கி கவிதைகள்
மாதங்கி
முதற் சிற்பம்
ஹெச்.ஜி.ரசூல்
சிறுகதை
சூடாமணியின் கணவர்(கள்) !?
கார்த்திகாவாசுதேவன்
பொது
என்றார் முல்லா
தமிழில் சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் சஃபி
இந்த வார கருத்துப் படம்
பழைய ஆயுதம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
வட-அமெரிக்க ஹைக்கூ
தமிழில்: ஆர்.அபிலாஷ்
புது நூல்
இருள் விலகும் கதைகள்
-
சிற்றிதழ்ப் பார்வை
நீங்களும் எழுதலாம்
-
பூங்குழலி
என். விநாயக முருகன்

பூங்குழலி

மின்சார ரயிலில்
பார்வையற்ற சிறுமியொருத்தி
பாட்டுப் பாடியபடியே
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.
பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
தொடங்கினா‌‌‌ள்.
தேனருவியின் வேகம் குறைந்தது.
அம்மம்மா தம்பி என்று நம்பி…
அடுத்த பாடல் பைசா பெறவில்லை.
பூங்குழலி அசரவில்லை.
மூன்றாவது பாடல் பாடினாள்.
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா…
ஜன்னல் பக்கம் சிலர்
திருப்பிக்கொண்டார்கள் முகத்தை.
பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம்போக…
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே…
வரிசையாகப் பாடினா‌‌‌ள்.
திடீரென நிறுத்தினா‌‌‌ள்.
இரண்டு நிமிடம் கனத்த மெளனம்.
பாட்டு தீர்ந்துவிட்டதா?
பதறிப்போனது எனக்கு .
சற்று நேரம் தயக்கம் அவளிடம்.
என்ன நினைத்தாளோ?
பூங்குழலி உற்சாகமாய்ப் பாடினாள்.
பூமுடித்தாள் இந்தப் பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
மீண்டும் ஆரம்பித்தாள்.
நல்லவேளை…யாரும் கவனிக்கவில்லை.
 

பூ நடிகை

பூ நடிகைக்கும்,
நான்கெழுத்து தெலுங்கு நடிகருக்கும்
ரகசிய திருமணம் திருப்பதியிலென்று
செய்தி போட்டிருந்தார்கள்.
நானும் எனக்குத் தெரிந்த
பூவையெல்லாம் நினைவில் பொருத்திப் பார்த்தேன்.
மல்லிகை, சாமந்தி , குண்டுமல்லி
கனகாம்பரம், பிச்சி, செம்பருத்தி.
எதுவும் பொருந்தவில்லை.
அடுத்த நாள்
பூ நடிகை விவாகரத்து
எ‌ன்று செய்தி வந்தது.
பூவைக் கண்டுப்பிடித்துவிட்டேன்.
எந்த நடிகையென்றுதான்

தெரியவில்லை.

கடைசியில்
ஏதொவொரு நடிகையின் தலையில்
எனக்குப் பிடித்த பூவொன்றை சூட்டிவிட்டேன்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com