முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
புவி வெப்பம் தணியுமா?
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
எம்ஜிஆரைப் பின்தொடர்தல்: நடிகர்களின் கவனத்திற்கு...
ஜி. ஆர். சுரேந்தர்நாத்
நண்டு தின்னும் ஊரில் : பூமணியின் குடை
அ.ராமசாமி
ஏன் வந்தார் ராகுல் காந்தி?
நிஜந்தன்
இந்திய கிரிக்கெட் அணியின் உறுத்தும் முதலிடம்
ஆர்.அபிலாஷ்
மெல்ல சூடேறும் பூமிக் கோளம்
எஸ் .கிருஷ்ணன் ரஞ்சனா
ஆற்றாமையின் கண்ணீர்- அழகிய பெரியவனின் கவிதை
பாவண்ணன்
ஓ. . .செகந்திராபாத் - 24
சுப்ரபாரதிமணியன்
நவதந்தைவழி சமூகமும் அரபுலகமும் - ஹிசாம் சரபியின் கோட்பாடுகள் மீது
எச்.பீர்முஹம்மது
கம்பன் தமிழும் கொங்குத் தமிழும்
பாண்டியன்
மில்லும் மில் சார்ந்த இடமும்
தமிழ்மகன்
கவிதை
அறிவின் செயல்ப்பாடு சற்றித்தள்ளியே..
றஞ்சனி
இணங்குதல்
செல்வராஜ் ஜெகதீசன்
தாயாரே
கார்த்திக் பிரபு
நீர் சுழி
வேல் கண்ணன்
விடுமுறை நாள்
என். விநாயக முருகன்
புனரபி மரணம்
லதாமகன் கவிதை
1500m AMSL
நந்தாகுமாரன்
கையறுநிலை
வே. முத்துக்குமார்
மூன்று கவிதைகள்
நேச மித்ரன்
அந்தகாரத்தின் கூரிருள்
நட்சத்திரவாசி
நிலவின் இரக்கம்
ஹெச்.ஜி.ரசூல்
சிறுகதை
வெள்ளத்தில் கரைந்த அடையாளம்
கே.பாலமுருகன்
பொது
என்றார் முல்லா
பாபுஜி
சூஃபி கதைகள்
பாபுஜி
இந்த வார கருத்துப் படம்
இளைஞர் அணி
பாபுஜி
சிக்கன நடவடிக்கை
பாபுஜி
விடுமுறை நாள்
என். விநாயக முருகன்

விடுமுறை நாள்

ஞாயிறு காலை ஆறு மணிக்கு
பாட்டிக்கு நெஞ்சுவலி.
படுக்கையிலேயே
உயிர் போனதாக
தொலைபேசித் தகவல் வந்தது.
 
அசோக்நகர் எனக்கு
பக்கம்தான்.
அண்ணனுக்கு கே.கே.நகர்.
அக்கா வீடு வளசரவாக்கம்.
அக்கா வரும்போதே
பெசண்ட் நகர் மின்சார
சுடுகாட்டுக்குத் தகவல்
சொல்லிவிட்டதாகத் தெரிவித்தாள்.
கறுப்புநிற அமரர் ஊர்திக்கு
பேரம் பேசி கூடவே
அழைத்து வந்திருந்தான்
அண்ணன்.

பத்து மணிக்குள்
மாமா கொண்டு வந்த
மலர்கள், பன்னீர் பாட்டில்கள்
கண்ணாடிப்பெட்டி எ‌ன்று
மாறி இருந்தது வரவேற்பறை.
ஓரளவு தெரிந்தவர்கள் வந்திருந்தார்கள்.
 
மூன்று மணிக்கு
மெயின்ரோட்டைச் சுற்றி
அவரவர் வாகனத்துடன்
கிளம்பினோம்.
மின்சார சுடுகாட்டில்
மிச்சமான சாம்பலை
கேரிஃபேக்கொன்றில்
கவனமாகச் சுற்றிக்
கொடுத்தார்கள்.
கூடவே அவசியம் தேவையென்று
மரணச்சான்றிதழ் தந்தார்கள்.
 
இதெல்லாம்
பத்துமணி நேரத்தில் முடிந்தது.
அடுத்தநாள் திங்கட்கிழமை.
அலுவலக தினம்.
அதிகம் சிரமம் தரவில்லை பாட்டி.
 
 

இரண்டு மின்விசிறிகள்

ஒரு இறக்கையை
இன்னொரு இறக்கை
துரத்த அதை இன்னொன்று
துரத்தவென்று
முடிவிலியாய் நீள்கிறது
மின்விசிறி கீழே
தனிமையின் நினைவுகள்.

2.
அறைக்குள் நுழைந்தவுடனேயே
ஆண்டுகள் கடந்த
மனைவியின் சலிப்பு போல
முத‌லில் கொஞ்சம் 
சலித்து முனகி பிறகு
வழக்கம்போல கடமையாக
சுழல ஆரம்பித்தது.


மகளிர் மட்டும்

தெருமுனை
மருந்துக்கடையில்
பு‌திதாக வேலைக்கு
வந்திருந்தாள்
இளம்பெண்ணொருத்தி.
அப்போதுதான் கவனித்தேன்.
அதுவரை இல்லாத
குழப்பமும் தயக்கமும்
குடிவந்தது.
ஆணுறை பாக்கெட்
வாங்கச் சென்றவன்
தேவைப்படாத
தலைவலி மாத்திரையொன்றை
வாங்கிக்கொண்டு
அடுத்த தெரு மருந்துக்கடைக்கு
நகர்ந்தேன்.
இடையில் ஒருத்தி
அடுத்த தெருவிலிருந்து
இந்தக்கடை நோக்கி வந்தாள்.
இதுவரை இல்லாத
அன்னியோன்னியமாய்
அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
என்னவென்றுதான் தெரியவில்லை.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com