முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
ஈழத்து நகர சபைகளின் தேர்தல் என்ன சொல்லுகிறது?
தீபச் செல்வன்
பற்றி எரிகிறது மலை
கிருஷ்ணன் ரஞ்சனா
அணுவளவும் பயமில்லை
எம்.ரிஷான் ஷெரீப்
செயற்கை விந்துத் துளிகள்
இளைய அப்துல்லாஹ் (இலண்டன்)
‘மொழிபெயர்ப்பா விழி பெயர்ப்பா?'
இந்திரா பார்த்தசாரதி
பயணத்தின் நினைவுகள் :அம்பையின் வாகனம்.
அ.ராமசாமி.
எந்திரமும் அதிகாரமும்
நிஜந்தன்
ஓரியண்டலிசம், அரபு அறிவுஜீவிகள், மார்க்சியம் மற்றும் பாலஸ்தீன் வரலாற்று தொன்மம் - (எட்வர்ட் செய்த்துடன் நூரி ஜரா நேர்காணல்)
தமிழில் :- எச்.பீர்முஹம்மது
ரியாலிட்டி ஷோக்கள் எல்லை மீறுகின்றனவா?
மாயா
இலக்கியவாதி - அரசியல்வாதி - அறிவுஜீவி
யமுனா ராஜேந்திரன்
ஓ. . .செகந்திராபாத் - 20
சுப்ரபாரதிமணியன்
இது உயிரோசையின் 50ஆவது இதழ்
மனுஷ்ய புத்திரன்
காலம்காலமாக நீளும் கனவுகள்-சூத்ரதாரியின் "நடன மகளுக்கு"
பாவண்ணன்
அண்டை நாட்டில்... அடிக்கிறார்கள்
தமிழ்மகன்
கவிதை
நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
தீபச்செல்வன்
ஒரு நட்பின் தேடல்......
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
நம்பிக்கை
நளன்
விளக்க முடியாத ஒரு பொழுது
மண்குதிரை
உறுவலிக் குறிப்பு
மதன்
குறிப்புகளும் , அது சார்ந்தும்
பிரவின்ஸ்கா.
பாலை, மழை, காளான்
த.அரவிந்தன்
மின்விசிறியில் சுழலும் கவிதைகள்
நட்சத்திரவாசி
சவால்
எஸ். நளீம், இலங்கை.
சிறுகதை
நுவல்
கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்த வார கருத்துப் படம்
எப்படியிருந்த நாம்...
பாபுஜி
பதட்டம்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்
புது நூல்
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
-
ஹைக்கூ
பூவுலகு (சுற்றுச்சூழல் இதழ்)
-
ஓ. . .செகந்திராபாத் - 20
சுப்ரபாரதிமணியன்

ஹைதராபாத் தமிழர்களுக்கு, வெளியூரிலிருந்து வந்துவிடும் உறவினர்களுக்குக் காட்ட எவ்வளவோ இடங்கள் இருந்தாலும் செகந்திராபாத்தின் ஸ்கந்தகிரி முருகன் கோவிலுக்கும், திருமல்கிரி நாகம்மா கோவிலுக்கும் கூட்டிக் கொண்டு போகத் தவறுவதில்லை என்றார் மரியதாஸ். மரியதாஸ் ஆர்ஆர்எல்லின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர். பாவைச்சந்திரன் நண்பர் என்பதால் சலுகையில் சில கதைகளை குங்குமத்தில் எழுதியிருப்பவர். அவர் பேச ஆரம்பித்தால் தப்பித்து ஓடுபவர்கள்தான் அதிகம். அவர் ஏதாவது வீட்டிற்குள் நுழைந்துவிட்டால் அவரை தவிர்ப்பதற்காக பாத்ரூம், லெட்ரின் ரூமிற்குள் அடைபட்டுவிடும் பல நண்பர்கள் இருந்தார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இல்லையென்று வீட்டில் உள்ள பெண்கள் சத்தியம் செய்தபின் அவர் வீட்டை விட்டு வெளியேறிய பின்தான் ஆண்கள் பாத்ரூம், லெட்ரின் விட்டு வெளியே வர நேர்ந்திருக்கிறது. நேரத்தைப் பொன்னாக நினைப்பவர்களுக்கு இந்தக் கதி. மற்றவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருடன் உட்கார்ந்து உரையாடிக்கொண்டே இருக்கலாம். வெகுளித்தனமாயும், அதே சமயம் பாமரத்தனமாயும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். பேச்சு சுவாரஸ்யத்தில் பொழுது போவது தெரியாது.

நாகம்மா கோவிலுக்கு மரியதாஸ் சென்றதில்லை. ஆனால் திருமல்கிரி பக்கம் போகிற போதெல்லாம் அக்கோவிலை பார்த்திருக்கிறார். திமிறிக்கொண்டு அலைபாயும் கூட்டத்தை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மாலைகளிலும் பிற விசேச தினங்களிலும் பார்த்திருக்கிறார். போப் ஆண்டவரை பாக்க நிக்கற ஜனம் மாதிரி இருக்குநீங்க போப் ஆண்டவரை பார்த்திருக்கீங்களா’ ‘இல்லே. . .பத்திரிகைப் படத்தில் பாக்கறதுதா. . .பாம்புக் கடவுள்தான் நாகம்மா. பாலும் முட்டையும் அபரிமிதமாய் அம்மனுக்கு வழங்கப்படும் அந்த பாலையும், முட்டையும் ஏழைக்கு குடுக்கலாம்என்று நாத்திகத்தன்மையோடு பேசுவார். ஆனால் நாத்திகத்தொனி வந்துவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருப்பார். உங்க ஆளுக எல்லாம் ஸ்கந்தகிரி முருகன் கோவிலுக்கு போறாங்களே. அங்க பெருமாளும், அனுமானும் எப்படி வந்தாங்க! இந்த இடைச்செருகல் எல்லா எடத்திலேயும் இருக்கு. சங்கராச்சாரியார் இங்க வந்தா ஸ்கந்தகிரிக்கு வரத்தவறினதில்லை

திருமல்கிரி நாகம்மா கோவில், ஸ்கந்தகிரி முருகன் கோவிலோடு கண்டிப்பேட்டை சிலுக்கூரு பாலாஜி கோயிலும் சேர்ந்திருப்பதை ஒரு தரம் தெரிந்து கொண்டேன். சாலார்ஜங் மியூசியம், ஹிகேன் சாகர், கோல்கொண்டா கோட்டை, பிர்லா மந்திரி போன்றவை முதல் பட்டியலில் எப்போதும் இருந்தன.

கண்டிப்பேட்டை ஏரி, செகந்திராபாத் ஹைதராபாத் இரட்டை நகரங்களுக்கு தண்ணீர் வழங்கும் ஏரியாகும். இரட்டை நகரத்தை கடந்து வெகு தூரம் செல்லவேண்டியிருக்கும். கண்டிப்பேட்டை ஏரியின் தண்ணீர் மட்டத்தை உள்ளூர் பத்தரிகைகளும் மக்களும் எப்போதும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள். சிறு சுற்றுலா என்ற ரீதியில் கூட்டமும் அங்கு சென்று கொண்டிருக்கும்.

நண்பர் ஒருவர் என்னிடம் சிலுக்கூரு பாலாஜி கோவிலுக்கு அவசியம் போக வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். நான் கோவிலுக்கு வழிபாட்டிற்காய் போகிறவனல்ல. ஆனால் நண்பரின் வற்புறுத்தலைத் தொடர்ந்து நிராகரித்தே வந்தேன். இல்லை. . . அந்தக் கோவிலுக்கு பாஸ்போர்ட் விசா கடவுள்ன்னே தனி பேரு. நீங்க வெளிநாட்டு பயண முயற்சியில இருக்கீங்க. . தடுமாற்றமா வேற சொல்றீங்க. அவசியம்போயிட்டு வாங்க

குழந்தைத் தொழிலாளர் உழைப்பை எதிர்த்து ஓர் உலகப் பயணத்திற்கான ஆயத்தத்தில் இருந்தேன். உலகம் முழுக்கவும் இருந்து குழந்தைத் தொழில் உழைப்பை எதிர்த்து ஐந்து இடங்களிலிருந்து உலக யாத்திரை புறப்பட்டு ஜெனிவாவில் சென்று முடிவது பயணத்திட்டம். இந்தியாவில் இருந்து செல்லும் குழுவில் என்னை சேர்த்திருக்கிறார்கள். டெல்லி கைலாஷ் சத்யார்த்தி இந்த உலக பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையைச் சார்ந்த பால் பாஸ்கர், ‘சேவ்அலோசியஸ் இந்திய பயணத்தை ஏற்பாடு செய்வதாக இருந்தனர். என்னிடமிருந்து பாஸ்போர்டை பெற்றிருந்தனர். விசா விண்ணப்பத்திலும் கையெழுத்து பெற்றிருந்தனர். குமுதம் ஏர் இண்டியா நடத்திய போட்டியில் வெற்றிபெற்று இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ததைப்போல இப்பயணமும் குறிப்பிடத்தக்கதாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன்.

நான் உங்களை அங்க போகச் சொல்றதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியும். ஒரு தரம் போயிட்டு வாங்க. விசாவை பாலாஜி பார்த்துக்குவார்’.

விசா பாலாஜியை சந்திப்பதற்காக என்றில்லாமல், ஒரு நாளை கழிப்பதற்காக கண்டிப்பேட்டைக்குச் சென்று வரலாம் என்று முடிவெடுத்திருந்தேன். அங்கு தேங்காய் பழம், சூடம் எதுவும் கொண்டு போகக்கூடாது. பணமும் உண்டியலில் செலுத்தக்கூடாது. நேர்த்திக் கடனுக்காக பதினொரு தடவை மட்டும் அக்கோவிலை சுற்றி வரவேண்டும். வேண்டுதல் நிறைவேறியபின் மூன்று முறை சுற்றிவர வேண்டும். வேறு செலவு எதுவுமில்லை. உண்டியலே இல்லாத கோவில் என்பதால் தங்களின் வேண்டுகோளை எவ்வித செலவும் இல்லாமல் கடவுளிடம் வைக்கலாம் என்பது பக்தர்களுக்குச் சுலபமாக இருந்தது. பெரும்பான்மையோர் திருப்பதிக்கு செல்கிற திருப்தியில்தான் அங்கு சென்று கொண்டிருந்தனர். வயோதிகர்களுக்கு இன்னும் சௌகரியமாக இருந்தது.

சட்டென விசாபாலாஜி கோவிலுக்கு செல்வதைப் பற்றி மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்தேன். பாலதிரிபுரசுந்தரியை சந்தித்ததுதான் காரணம். அவர் வாழ்க்கையை பெரிய போராட்டமாக எதிர்கொண்டவர். கணவர் நாற்பது வயதில் இறந்துபோக பையனையும், மகளையும் படிக்க வைத்து கரையேற்றுவது அவருக்கு பெரிய சுமையாக இருந்தது. படித்த மகனும் காதல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டான். சொற்பமாய் பணம் அனுப்புவான். குவைத் பணத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்று வர ஆகும் செலவுதான் அந்த சொற்ப பணம். தொலைபேசி பில்லிற்கே கூட ஆகாது. மகள் வேலைக்குப் போகிறவள். தொடர்ச்சியாக உடல் உபாதைகளாலும் பாலதிரிபுரசுந்தரி வாழ்க்கை முடங்கிப் போய்விட்டது. மகள் திருமண வயதைக் கடந்து கொண்டிருந்தாள். தெலுங்கு மற்றும் தமிழ் அய்யங்கார் குடும்பம் என்ற கலப்பு காரணமாக மரபு ரீதியான அய்யங்கார்கள் பெண் எடுக்க தயங்கினர். தமிழரா தெலுங்கா என்ற குழப்பத்தில் அவர்களின் அடையாளத்தை மற்றவர்கள் பார்ப்பது கல்யாணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே சென்றது. அப்போது விசாபாலாஜி கோவிலுக்குச் சென்றிருந்தார். அவரின் வேண்டுகோள் அமெரிக்காவிலிருந்து வந்த வரன் குறித்தது. சிக்கலின்றி முடிந்துவிடும் போலிருந்தது. மகளுக்கு விசா கிடைப்பது மற்றும் திருமணம் நிறைவேறுவது குறித்த வேண்டுதலுக்காக சுற்றி விட்டு வந்திருக்கிறார்.

ஆறு மாதத்திற்கு மேலாக திருமண ஏற்பாட்டில்இருந்த பாலதிரிபுரசுந்தரி விசா கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த அடுத்த நாள் அதிர்ச்சிதினமாக இருந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த செய்தி திருமண ஏற்பாடு நிறுத்தப்பட்டுவிட்டதாக இருந்தது.

அப்போதும் அவர் கோவிலைப் பற்றியோ, பாலாஜியின் மகிமையை பற்றியோ எவ்விதக் குறையையும் வெளிப்படுத்தவில்லை. தமக்குத் தெரிந்த தமிழ்ப் பேராசிரியர் மகளின் ஆஸ்திரேலியா படிப்பிற்கு ஐந்து வருட முயற்சிக்குப்பின் எதுவும் கூடாதபோது தமிழ் பேராசிரியர் விசா பாலாஜி கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்தபின்பு விசா கூடியதைப்போல இரட்டை இலக்கத்தில் விசா விண்ணப்பங்களை பாலாஜி ஏற்றுக் கொண்டிருப்பதைத் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். விசா பாலாஜி அவரை ஏமாற்றியதாக அவரால் ஒப்புக்கொள்ளவில்லை. மூன்று முறை பாலாஜி கோவிலுக்கு சுற்றி வர அவருக்கு அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை என்பதையும், அடுத்த முயற்சியாக காளஹஸ்தி கோவிலுக்கு மகளை கூட்டிக்கொண்டு போவது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரின் மிகப் பெரிய ஆச்சரியம் ஒன்று என்னையும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தது. நல்லவேலையில் இருக்கிற படிச்ச அழகான பொண்ணு. இந்த நவீனயுகத்தில காதல்னு அவ ஏன் வயப்படலே. காதல்னு வந்து யாரையாச்சும் கல்யாணம் பண்ணியிருக்கலாம். எனக்கு பாரம் குறையும். அது ஏன் வாய்க்கவேயில்லை. விசா பாலாஜிக்கே வெளிச்சம். . .

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com