முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் : வியட்நாம் மற்றும் பொலிவிய அனுபவங்கள்
யமுனா ராஜேந்திரன்
இன்றிரவு(ம்) எழுதக்கூடும் துயர்மிகுந்த வரிகளை
கென்
கசப்பின் தண்டனை
நிஜந்தன்
அன்பைப் பகிர்ந்தளிக்கும் அன்னை- சல்மாவின் "இருட்தேர்"
பாவண்ணன்
இடம் பெயர்தலின் அரசியல்- இக்பால் அஹ்மத் பற்றிய குறிப்புகள்
எச்.பீர்முஹம்மது
குடும்ப சர்வாதிகார ஆட்சியில் டக்ளஸ் தேவானந்தா சாதிக்கப்போவது என்ன?
தீபச்செல்வன்
மாற்றுப்பயிர் திட்டம் - ஓர் அமெரிக்க மோசடி
கிருஷ்ணன் ரஞ்சனா
ஐரோப்பிய நாடுகளின் பாலியல் வியாபாரம்
இளைய அப்துல்லாஹ்
கற்போம் சிங்கப்பூர்
வாஸந்தி
நல்ல மேய்ப்பர்கள் - பிரபஞ்சனின் ‘மரி என்னும் ஆட்டுக்குட்டி’
அ.ராமசாமி
பீர் காணல்!
இந்திரஜித்
சினிமா எனும் சில்லரை வியாபாரம்!
சுதேசமித்திரன்
ஒரு கிறித்துவ கல்லூரியில் உயர்சாதிக் கொடி
மாதவி
ஓ. . .செகந்திராபாத் - 18
சுப்ரபாரதிமணியன்
விண் நட்சத்திரம் முதல் சினிமா நட்சத்திரம் வரை
தமிழ்மகன்
ரெண்டரை கிரவுண்ட் நிலம் வேண்டும்...பராசக்தி...
மனோஜ்
கவிதை
இரவுகள் படைத்தல்
லதாமகன்
பயமுறுத்துகிற இருள்
தீபச்செல்வன்
காட்ஸில்லா முட்டைகள்
த.அரவிந்தன்
நிமிட நீளம்
இரா.ஜெ.பிரேம்குமார்
பழைய நகரம்
மண்குதிரை
கோடுகளும்…புள்ளிகளும்…
சுபாஷிணி
இருவர்
தர்மசம்வர்த்தினி
பருத்திக்காடு
நரன்
நயாகரா
ஸ்ரீவித்யா
அவசர சிகிச்சை
என்.விநாயக முருகன்
சிறுகதை
கிணற்றில் தூங்கும் இருள்
என்.விநாயக முருகன்
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில் : சஃபி
இந்த வார கருத்துப் படம்
இடைத்தேர்தல்
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்
இந்த வாரக் கருத்து படம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் நடத்தும்
-
புது நூல்
தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009
-
ஹைக்கூ
மழைக்காடு
-
கிணற்றில் தூங்கும் இருள்
என்.விநாயக முருகன்

இசக்கியின் உடல் தண்ணீருக்குள் பொத பொதவென ஊறி ரப்பர் பொம்மை போல வீங்கியிருந்தது. கொழ கொழத்த முகத்தில் எங்கிருந்தோ வந்த ஈ யொன்று அமர்ந்தது.ஐயோ நண்பா. எனக்கு வெறிகொண்டது போல வந்து ஈயை விரட்டினேன். இசக்கி கண்ண தொறடா. எனக்கு தலை சுற்றியது. திராணியெல்லாம் உறிஞ்சப்பட்டதாய் உணர அப்படியே கீழே விழ இருந்த என்னை யாரோ பிடித்தார்கள். இசக்கியின் முகம் பார்த்தேன். தீர்மானமாக இறந்து போயிருந்தான். இசக்கியை கொலை செய்த அந்த பாழாப்போன கிணறு எதுவும் நடக்காதது போல இருந்தது.இசக்கியின் உடலும் கிணறும் அமைதியாக அகன்ற வாயைப் பிளந்தபடி கிடந்தன . நானே என் நண்பனைக் கொன்று விட்டேனேஎனக்கு நினைவு தப்பியது இரண்டாவது முறையாக. தப்புமுன் மாமாவின் முகம், கீதாவின் முகம் ஒரு வினாடி வந்துப்போனது. பிறகு பாதாளத்தில் தள்ளி விட்டது போல இருந்தது. எல்லாம் இருட்டு.

இந்த முறை நான் கும்பகோணம் வந்தபோது ஊர் பெரிதாக மாறியிருந்தது. ஊரா? மனிதர்களா? தெரியவில்லை. டீக்கடைகள் ஏ.ஆர்.ரகுமான் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லாச் சுவர்களிலும் சினிமா பட போஸ்டர்கள் ஒட்டியிருந்தன. மாமா வீட்டின் முன்புறச் சுவர்களும் கேட்டும் நிறம் மாறியிருந்தன. ஐந்து வருடங்கள் முன் மாமா முகத்திலேயே முழிக்க கூடாது என்று வைராக்கியத்துடன் கிளம்பியது நினைவு வந்தது.வாசலில் அதே பழைய டி.வி.எஸ் 50. கதவை தட்ட மாமா வந்து திறந்தார். மா..மாமாமாவா இது? ஆள் ஒடுங்கியிருந்தார். ஐந்து வருடத்தில் ஒரு மனிதர் இப்படியா உருக்குலைந்து போவார்? உயிர் மட்டும் ஒட்டிக்கிடந்தது. அழுகை வெடிக்க என்னை அப்படியே கட்டிப்பிடித்து குலுங்க ஆரம்பித்தார். உள்ளே சென்றோம்.

ஹாலில் இருந்த புகைப்படங்கள் மெடல்கள் கோப்பைகள் தவிர எல்லாமே காலியாக இருந்தன. சுப்புடுவுடன் மாமா எடுத்துக்கொண்ட புகைப்படம் நடுவில் இருந்தது. கலைமாமணி விருது புகைப்படம் அடுத்து இருந்தது. கொஞ்சம் தட்டுமுட்டு சாமான்கள் கிடந்தன.மத்தபடி வீட்டில் வெறுமையும், நோயும் நிறையவே இருந்தது.

"கீதா எங்க மாமா?"

மாமா அழ ஆரம்பித்தார்.

"..என்னாச்சு ?"

"அவ சந்தோசமா இல்ல மாப்பிள." அவர் சொன்னதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் வெடித்தன. நான் எதுவும் கேட்கவில்லை. மாமாவுக்கு மாத்திரைகளை சரிபார்த்து எடுத்தேன். இனி நான் உங்கள விட்டு போக மாட்டேன் மாமா. அவர் டாக்டர் நண்பருக்கு போன் செய்தேன். சாயங்காலம் வருவதாகச் சொன்னார். நான் கிளம்பினேன். மாமா புரிந்துக்கொண்டார். இசக்கி இப்ப மாதளம்பேட்டையில் குடியிருக்கான். பார்த்துட்டு சீக்கிரம் வந்துடு என்றார். இசக்கிக்கு போன் செய்தேன். அவனே வருவதாக சொன்னான். இல்ல நானே வர்றேன். அப்பாவையும் பாக்கனும் கிளம்பினேன்.

இசக்கியைக் கொல்வதற்குதான் செல்கிறேன் என்று அப்போதும் எனக்குத் தெரியாது.

இசக்கி வீட்டுக்கு வழி கண்டுபிடிப்பது சிரமமாக இல்லை. அவன் அப்பா அன்று பார்த்தது போலவே இருந்தார். இந்த முறை டீ வாங்க கடைக்கு ஓடவில்லை. வீட்டிலேயே கிடைத்தது. சந்தோஷமாக இருந்தது. என்னைப் பற்றி விசாரித்தார். இப்ப தப்பு அடிக்க போறதில்ல தம்பி என்றார். என் மகன் ராஜா மாதிரி கவனிச்சுக்கறான். என்னோட போகட்டும் அந்த தொழில். நீங்கல்லாம் படிச்சு வந்தது சந்தோஷமா இருக்குனு இசக்கி அப்பா சொன்னார்.

இசக்கி வீட்டில் கலர் டி.வி இருந்தது. ரகுமான் பாடல் ஏதோ ஓடிக்கொண்டிருந்தது.

"உனக்கு தெரியுமா? இதுதான் ஸ்ரீ ராகம். இது கூட ஜன்ய ராகம், அம்மா கரகரப்ரியா. "

என்றான் இசக்கி.

"இப்பல்லாம் ரகுமான் அலட்டிக்காம சாதனை பண்ணிட்டு போறாருல்ல" என்னைப் பார்த்து கேட்டான். நான் பதிலேதும் பேசவில்லை.

தீண்டாய் மெய் தீண்டாய்என் சுவாசகாற்றே படம் ஓடிக்கொண்டிருந்தது. உங்க வீட்டுக்கு வர்றப்ப ஒருமுறைகூட சண்டை வந்துச்சே எனக்கும் கீதாவுக்கும். இதுதான் அந்த ராகம்.ஸ்ரீ ராகம்.காலேஜ் படித்த நாட்கள் நினைவுக்கு வர மறுத்தது.எனக்கு ஒன்னும் விளங்கவில்லை. இஷா கோபிகர்தான் ஆடிக் கொண்டிருந்தாள். சுவாரசியமில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு இதிலெல்லாம் பெரிதாக இன்ட்ரஸ்ட் இல்லை. நானுண்டு என் கம்ப்யூட்டர் வேலை உண்டு. கீதாவுக்கு சங்கீத ஞானம் ரத்தத்திலேயே ஊறியிருந்தது.

கொஞ்ச நேரம் அவன் அப்பாவோடு பேசிவிட்டு நானும் இசக்கியும் காலாற நடந்தோம். பின்னால் அரசலாற்றை ஒட்டிய கிணற்றுக் கட்டையில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம். சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பற்ற வைத்தேன்.இசக்கி கண்கள் கலங்கியிருந்தன.

"கீதா விஷயம் தெரியுமா?" கேட்டேன்

"கேள்விப்பட்டேன். உன் மாமா சொன்னாரு.ஒருநாள் வழியில என்ன பார்த்தாரு. உன்ட்ட போன் பண்ணி உன்ன வரச்சொன்னதே அவருதான்" இசக்கி சொன்னான்.

"தலயா அடிச்சுக்கிட்டனடா. ரெண்டு பேரும் எங்காவது போய் கல்யாணம் செஞ்சுக்குங்கனு" நான் எரிச்சலாய் சொன்னேன்

"தெரியாம ஓடிப்போறது எனக்கு சரியாப்படல.அவருட்ட நான் படிக்கலனாலும் என் மானசீக குரு அவரு. குருதுரோகம் போல வேறெந்த பாவமும் இல்ல. கீதாவும் அதுக்கு ஒத்துக்க மாட்டா"

"என் மனசுல இப்ப கீதா இல்லனு சொல்ல முடியுமா?" கேட்டேன்.

பதில் சொல்லாமல் பம்புசெட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

"மாமா பொண்ணா இல்லாம தங்கச்சியா இருந்திருந்தா நானே உனக்கு தாரை வார்த்துக் கொடுத்திருப்பேண்டா. யாருமே நிம்மதியில்லாம இருக்கற மாதிரி பண்ணிட்டீங்களே.."

அவன் பதில் சொல்லவில்லை.எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. வாட்ச்சை பார்த்தேன். மணி பத்து. மாமா வீட்டுக்கு டாக்டரை வர சொன்னது நினைவு வந்தது.

டைம் ஆச்சுடாநான் எழ ஏதோ தடுக்க இருட்டில் அப்படியே பொத்தென இருபதடி ஆழம். ஒன்றுமே புரியவில்லை.ஐயோ என்று இன்னொரு சத்தம்.நான் விழுந்த கிணற்றுக்குள் இசக்கியும் குதித்தான். பம்பு செட் வெளிச்சம் கிணற்றுக்குள் போதுமானதாக இல்லை. சுவர் எல்லாம் பாசி பிடித்து கை வழுக்கியது. ஆண்டாண்டு கால இறைக்காமல் கிடந்த தண்ணீர் கெட்டி தட்டி நாறியது. தரைக்கு இன்னும் பத்தடி இருந்தது. படிக்கட்டுகளைத் தேடினோம். உடைந்து கிடந்தது. தண்ணி பாச்ச யாராவது வருவாங்க. மாறி மாறி குரல் கொடுத்தோம். குரல் கிணற்றுக்குள்ளே சுத்தி சுத்தி திரும்பி வருவதுபோல பட்டது. இசக்கி என்னை அவன் தோளில் ஏற சொன்னான். மேலே தொங்கிய கடைசி படிக்கட்டை தொட அது உடைந்து கொள்ள இருவரும் மீண்டும் தண்ணீரில் விழுந்தோம்.எவ்வளவு நேரம் தரைக்கு பத்தடி மேலே நீந்த முடியும். இசக்கி கிணற்றை உன்னிப்பாக பார்த்தான்.கிணற்றின் சுவற்றில் ஒரு பக்கத்தில் நான்கடி விட்டு இரண்டு பெரிய பொந்துகள். ஒரு பொந்தை கையால் பிடித்து இன்னொரு பொந்தில் கால்களை நுழைத்தான். என்னை அவன் மேலே ஏறி கத்த சொன்னான். மாறி மாறி கத்தினோம்.நேரம் செல்ல செல்ல விபரீதமாக இருந்தது. இசக்கி தெலுங்கில் ஏதோ முணுமுணுத்தான். கீழே பார்த்தேன். ஏதோ ராகம் போலவோ வார்த்தை போலவோ இரண்டும் கலந்தது போலவோ நடுங்கிய குரலில் மெதுவாக கேட்டது. பசி, வாந்தி எல்லாம் சேர ஆரம்பித்தது. எனக்கு நினைவு தப்பியது.யாரோ கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்குவது போல இருந்தது. எவ்வளவு நேரம் இசக்கி மேலே கிடந்தேன் தெரியவில்லை.இசக்கி இறந்திருந்தான்.

காலம் எல்லாத்தையுமே மாற்றும். கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் இயல்புக்கு திரும்பிக்கொண்டிருந்தன. பால் தெளியலுக்கு நான் கிளம்பும் முன்னரே மாமா கிளம்பியிருந்தார். வாசலில் டூவீலர் பக்கம் நின்றுக் கொண்டிருந்தார். எப்போது கண்விழித்தார். இரவு தூங்கினாரா தெரியவில்லை. பக்கந்தானே நடந்தே போகலாமென்றார். அவர் கண்கள் சிவந்திருந்தன. நடக்க ஆரம்பித்தோம். தெரு இன்னமும் விடியாமல் இருந்தது. தெருமுனை டீக்கடை மட்டும் சலசலத்தது. டீக்குடித்துக்கொண்டிருந்த மாமாவின் நண்பரும் தானும் வருவதாக எங்களுடன் சேர்ந்துக்கொண்டார். நடந்தோம். எங்கிருந்தோ மெலிதாக ஒரு பாடல் கிளம்பி வந்தது. வேணு சாஸ்திரி வீட்டில் அதிகாலையில் பாடுவது அவரது மகனாகத்தான் இருக்க வேண்டும்.

"எந்தரோ மஹானு பாவலு அந்தரிக்கி நா வந்தனமுலு. இதுக்கு அர்த்தம் என்ன பாலு" மாமாவின் நண்பர் கேட்டார்.

மாமா எதுவும் பேசவில்லை. வெறித்த பார்வையுடன் வந்துக்கொண்டிருந்தார். நான் சில விநாடிகள் கழித்து மெதுவாக ஆரம்பித்தேன்.

"உலகத்தில தெறமசாலிங்க நெறய பேரு இருக்காங்க. அவங்களுக்கு என் வந்தனம். தியாகராஜரு பாடுனது. ஸ்ரீ ராகம்" என்றேன்

மாமாவை பார்த்தேன். அவர் முகம் இயல்பை தொலைத்திருந்தது. அமைதியாக நடந்தோம். சுடுக்காட்டை வரை மூவரும் எதுவும் பேசவில்லை.

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com