
நீர்த் தாவரத்தின்
இலையின் அடியில் ஊரும்
நீர்ப் புழுவை விழுங்கும் மீனை
சற்றுக்கெல்லாம் கவ்விவிட்டது. அக்கொக்கு.
கொக்கின் தொண்டைக்குள்
மீன் நீந்தி இறங்கிக் கொண்டிருக்கையில்
கொக்கின் கால்களைப் பற்றி இழுக்கிறது
ஏரி முதலையொன்று .
ஒரு குறியில் ,
ஒரு பாய்ச்சலில் ,
ஒரு வாயில் ,
ஊர்வன ,
நீந்துவன ,
பறப்பன - என
அம்முதலை இறையைக் கவ்விக் கொண்டிருக்கிறது .