லா.ச.ராமாமிருதம்
லா.ச.ரா. என்று அழைக்கப்பட்ட லா.ச.ராமாமிருதம் 1916, அக்டோபர் 30, பெங்களூரில் பிறந்தார் அவருடைய தந்தை சப்தரிஷி, தாயார் ஸ்ரீமதி. தந்தை மற்றும் சொந்த ஊர்ப் பெயரை இணைத்துக்கொண்டு லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார்.
லா.ச.ரா.வின் முதல் கதை ஆங்கிலத்தில் 18வது வயதில் வெளியானது. லா.ச.ராமாமிருதம் ஆரம்பத்தில் சிறுகதை கள் எழுதிவந்தார் அவரை 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் புத்ர என்ற நாவலை எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் ‘சாகித்ய அகாதெமி விருது’ பெற்றுத் தந்த சுயசரிதை ‘சிந்தாநதி’ தினமணி கதிரில் தொடராக வந்தது.
ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், கட்டுரைத் தொகுதிகள் உள்பட பல நூல்களை லா.ச.ரா. எழுதியுள்ளார்.
லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய மற்றும் அயல் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல இலக்கி யத் தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. ‘செக்’ மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் சுவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.
லா.ச.ரா அக்டோபர் 30, 2007 செவ்வாய்க்கிழமை அதி காலை தமது 92-வது பிறந்த தினத்தில், சென்னையில் காலமானார்.
அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.