உயிரோசை - 9/2/2009
 
பனிரெண்டு வருடம் உறங்கிய பெண்
- சி.வி. பாலகிருஷ்ணன்
எழுத்தாளன் என்ற மகான்: சில கற்பனைகள், வேண்டுகோள்கள்
- ஆர்.அபிலாஷ்
இந்தியா நடத்தும் ஈழப்போர்
- இளைய அப்துல்லாஹ்
ஜென் அண்ட் தி பிஸினெஸ் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்-Zen and the business of Investment Banking
- விபா
இயற்கை என்னும் புதிர்-ஆர்.ராஜகோபாலனின் "பாகல் பூ"
- பாவண்ணன்
வீடும் வாழ்வும்
- செல்லமுத்து குப்புசாமி
ஒரு மரணமும் ஒரு கடிதமும்: அது தரும் செய்தி
- தமிழவன்
வசனம் எழுதுவது எப்படி?
- சுதேசமித்திரன்
தமிழ் சினிமா தரும் கற்பிதங்கள்
- வாஸந்தி
‘கடலில் ஒரு துளி'
- இந்திரா பார்த்தசாரதி
கடைசிவரை யாரோ?
- ந. முருகேசபாண்டியன்
ஏழாம் உலகமும் பாலா உலகமும்!
- இந்திரஜித்
காற்றும் கனமான அட்டைகளும்
- லாவண்யா
பூச்சாண்டிகள்
- ஆதவா
செத்த பேன்களும், சில தற்கொலைகளும்.
- மதன்
வவ்வால் இல்லாத கவிதை...
- சரவணகுமார்.மு
நாம் நாமாக...
- றஞ்சினி
ஒதியம் பெருத்தா உத்திரத்துக்கு ஆகுமா?
- கென்
கூவாத கோழி!
- தமிழ்மகன்
பல்லுக்கு மெதுவான கல்
- கழனியூரன்
ஈழத் தமிழர் ஆதரவு
- பாபுஜி
செத்த பாம்பு
- பாபுஜி
ஹைக்கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
‘லா.ச.ரா’ - தீப.ந. வுக்கு. . .
- -
தமிழ் இலெமூரியா
- -
சொல்லக் கூசும் கவிதை
- -
சீற்றமும் மௌனமும் சமயவேலின் 'எதிர்கொள்ளுதல்' - பாவண்ணன்
- -
click here
வீடும் வாழ்வும்
செல்லமுத்து குப்புசாமி

இரு வாரங்களுக்கு முன்னர் நீண்ட நாள் நண்பர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். புது வீடு அது. அப்படியும் இப்படியுமாக ஐம்பது இலட்ச ரூபாய் ஆகி விட்டது என்றார் அவர். சுமார் ஆயிரம் சதுர அடி பரப்பளவு நிலத்தில் கீழ் தளத்திலும், முதலாவது மாடியிலுமாக ஆயிரத்து ஐநூறு சதுர அடி வசிப்பிடம் கட்டப்பட்டிருந்தது.

ஒரு வருடத்திற்கு மேல் தேடி அலைந்த பிறகு அடித்தளம் போடப்பட்ட நிலையில் அந்த வீட்டை அவர் முன் பதிவு செய்திருந்தார். அப்போது நிலைமை இவ்வளவு மோசமில்லை. இவ்வளவு மந்தமாக இருக்கவில்லை. வீட்டுக் கடனாக வாங்கிய தொகைக்கான பத்தரை சதவீத வட்டி இன்னும் குறைந்தபாடில்லை. இன்றைய நிலையில் புதிய கடன் பெறுவோருக்கு எட்டு சதவீத வட்டி என அறிவித்திருக்கிறது முதன்மையான அரசுத் துறை வங்கி.

கடந்த ஜனவரி மாதம் உலகெங்கும் இலட்சக் கணக்கில் வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவையும் அது விட்டு வைக்கவில்லை. பாதிப்பே ஏற்படாதென இது நாள் வரை தவறாகக் கருதப்பட்ட மென்பொருள் துறை உலகலாயிய பொருளாதாரத் தேக்க நிலையில் வெப்பத்தை உணரத் துவங்கியிருக்கிறது. 

இன்போசிஸ், விப்ரோ முதலிய பெரிய நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடுவதாக செய்திகள் அடிபடுகின்றன. கார்களின் விற்பனை வெகுவாகச் சரிந்துள்ளது. படோபடத்தைக் குறைத்தும், செலவை மட்டுப்படுத்தியும் மக்கள் எதிர்காலத்திற்காக பணத்தைச் சேமித்து வைக்க முயல்வது தெளிவாகத் தெரிகிறது. முன்பெல்லாம் கடனில் வீடு வாங்கிப் போட்டால் எப்படியும் ஏறும் என்று திண்ணமாக நம்பியவர்கள் இப்போது வேலை பறி போனால் என்ன செய்வது என்று சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். பெரிய மென்பொருள் நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளன. UNITES என்ற பெயரில் ஐடி ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்தில் ஆயிரக் கணக்கில் உறுப்பினர்கள் இணைந்த வண்ணமுள்ளனர்.

இத்தகைய பின்னணியில் ரியல் எஸ்டேட் தேவை என்பது மிக மந்தமாக மாறியுள்ளது. எனினும் விலையைக் குறைக்க பில்டர்கள் முன்வரவில்லை. விலையைச் சரிய விடக் கூடாது அல்லது இலாபம் குறையக் கூடாது என்ற நோக்கில் அவர்கள் கூட்டாகச் சேர்ந்து இயங்குவது போலத் தெரிகிறது. சமீபத்தில் FSI குறித்து வெளியான செய்தி ஒன்று இதைத் தெளிவுபடுத்துகிறது. வீட்டு மனை இடத்தில் எத்தனை மடங்கு கட்டிடம் கட்டலாம் என்பதற்கான உச்ச வரம்புதான் Floor Space Index எனப்படும் FSI குறியீடு.

இது வரைக்கும் சென்னையில் FSI 1.5 ஆக இருந்தது. 1500 சதுர அடி இடத்தில் அதை விட ஒன்றரை மடங்கு, அதாவது 1500 X 1.5 = 2250 சதுர அடி, கட்டிடம் கட்டலாம். இப்போது 3000 சதுர அடி வரை கட்டலாம் என்று உச்ச வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன் வெளியான அந்தச் செய்தி கூறுகிறது. சென்னை கார்ப்பரேஷன் எல்லைக்குள் FSI 2 ஆக உயத்தப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் பெற பில்டர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

அபார்ட்மெண்ட் கட்டும் நிறுவனம் 20 பிளாட்களுக்குப் பதிலாக இப்போது 30 பிளாட் கட்டலாம். கடந்த ஓரிரு ஆண்டுகளில் நிலவிய ஆகாசத்தை முட்டும் விலையைச் சற்றி தணித்துக் விற்கலாம். அப்படிச் செய்தால் ஒழிய வாடிக்கையாளர்கள் நாட மாட்டார்கள் என்று கணித்தார்களோ என்னவோ!

'வீட்டைக் கட்டிப் பார். கல்யாணத்தைப் பண்ணிப் பார்' என்று சொல்வார்கள். இப்போது கல்யாணம் பண்ணுவது கூட சுலபம். பிஃப்ரவரி 14 ஆம் தேதி நிச்சயிக்கப்பட்ட பையனையும், பெண்ணையும் கர்நாடகாவிற்கு ஒன்றாக அனுப்பி வைத்தால் தாங்களாகவே மந்திரம் சொல்லி மணமுடித்து வைப்பதாக சில அமைப்புகள் வாக்களித்துள்ளன. (அப்படியே திருமணச் சான்றிதழ் எடுத்து, பாஸ்போர்ட்டிலும் endorse செய்து கொடுத்தால் வசதியாக இருக்கும். கூடவே தேனிலவுக்கும் ஏற்பாடு செய்யட்டும்) அழைப்பிதழ் அச்சடிக்காமல், மண்டபம் தேடாமல், விருந்து போடாமல் கல்யாணத்தை கம்ப்ளீட் பண்ண முடியும் போலிருக்கிறது.

ஆனால் வீட்டைக் கட்டுவது நடுத்தர வர்க்க மக்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. மென்பொருள் துறை இளைஞர்களின் அசாத்திய ஊதியமும், அதனால் அதிகரித்து வந்த தேவையும் சாமானியனின் கனவுகளை செங்கற்பட்டிற்குத் தெற்கும், ஸ்ரீபெரும்புதூருக்கும் மேற்குமாகத் துரத்தியுள்ளன. மறுபடியும் இப்போது மென்பொருள் துறையில் ஆட்குறைப்பும், ஊதியக் குறைப்பும் அந்த நிலையைச் சற்றேனும் தணிக்க உதவுமா என்ற கேள்வி நம்மைக் குடைந்தெடுக்கிறது.

ரியல் எஸ்டேட் விலை இன்னும் குறையவே இல்லை, ஆதாலால் இனிமேல் வெகுவாகக் குறையும் என்று ஒரு சாரார் நம்பிக்கையாகப் பேசுகிறார்கள். இன்னொரு சாரார்- இவர்களில் பெரும்பாலானோர் தரகர்கள் அல்லது தரகரின் பரப்புரையை நம்புகிறவர்கள் - இதற்கு மேல் உயராமல் வேண்டுமானால் போகலாம், ஆனால் ஒருக்காலும் குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.

வீடுகளின் மதிப்பு சென்னையில் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகச் சொல்கிறார்களே, இந்த நேரத்தில் ஐம்பது இலட்சம் செலவழித்து வீடு வாங்கியதற்காக வருந்துகிறீர்களா என்று நண்பரிடம் வினவினேன்.

"கடந்த வருடம் போல ஆண்டுக்கு 40 விழுக்காடு 80 விழுக்காடு என மதிப்பு உயராது. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. கார் பார்க்கிங் வசதியோடு குடியிருந்த வீட்டுக்குக் கொடுத்த எட்டாயிர ரூபாய் வாடகை மிச்சமாகிறது. இலட்சக் கணக்கில் கடன் வாங்கியிருக்கிறேன். அதற்காக மாதந்தோறும் ஆயிரக் கணக்கில் வட்டி மட்டுமே திருப்பிச் செலுத்துகிறேன். அந்த வட்டிக்கும் வருமான வரி விலக்கு உண்டு. ஒன்பது சதவித வட்டியில் மூன்றில் ஒரு பகுதி வருமான வரியில் சரி செய்யப்பட்டு எனது நிகர வட்டி வெறும் 6 விழுக்காடு மட்டுமே.

வீட்டின் மதிப்பு ஆண்டுக்கும் 5 சதவீதம் உயர்ந்தாலும் கூட எனக்கு இலாபமோ நட்டமோ கிடையாது. சொல்லப் போனால் எனக்கு மாத வாடகை மிச்சமாவதால் இலாபமே. இன்னொரு பக்கம் ஊதியத்தின் பெரும்பகுதியை கடன் தவணைக்கு ஒதுக்கி விடுவதால் நானும், என் மனைவியும் வீண் செலவுகளைக் குறைத்துக் வருகிறோம். தேவையில்லாத பயணங்களையும், ஆடம்பரங்களையும் தவிர்க்கிறோம்"

மேற்கண்டது அவரது மறுமொழி. சென்னையில் வீடுகளின் தேவை குறையவே குறையாவது என்பதற்கும் அவர் காரணம் சொன்னார்.

"மற்ற ஊர்களில் இருந்து சென்னையை நோக்கிப் படையெத்து வரும் இளைஞர்களில் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மேலும் சென்னையில் ஐந்தாறு பேராகக் கூடி வாழும் பேச்சுலர் பசங்களும், மணமாகாத பெண்களும் திருமணம் செய்துகொள்ளும் போது புது வீடு தேடி அலைவார்கள். எனவே தேவை பெருகுமே தவிர குறைவதற்கும் வாய்ப்பில்லை."

பொருளாதாரத் தேக்கநிலை எல்லாவற்றையும் பாதிக்காது. சமிபத்திய உதாரணம் ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் வீரர்களுக்கு நிர்ணயித்த தொகை. நீண்ட நாள் உதாரணம் டாக்டர்களில் ஃபீஸ்.

என்னமோ போங்கள். நிலையான வேலையும், தடையில்லாத வருமானமும் நிச்சயம் என்றால் கடனின் வீடு வாங்க இதுவே சரியாண தருணமாக இருக்குமோ என்ற குழப்பத்தை நண்பர் ஏற்படுத்தி விட்டார். உங்களாலாவது தெளிவான தீர்மானத்திற்கும் வர முடிகிறதா?

click here

click here
click here