உயிரோசை - 03/11/2008
 
ஈழத் தமிழர் பிரச்சினையில் கோலிவுட்டின் நாடகம்-இரண்டாம் பாகம்
- மாயா
செக்ஸ் யாருக்கு சொந்தம்? - ஊனம் -- வன்முறை -- அடையாளப் பட்டிகள்
- ஆர்.அபிலாஷ்
அவளுக்கென்று ஓர் இடம்
- சுகுமாரன்
தாய்மையின் அழகு : தேவதேவனின் நித்ய கல்யாணி
- பாவண்ணன்
வடக்கும் தெற்கும்
- இந்திரா பார்த்தசாரதி
என்னவாகப் போகிறது மென்பொருள் வல்லுனர் சமூகம்?
- செல்லமுத்து குப்புசாமி
நினைவிழந்த எழுத்து
- வே. முத்துக்குமார்
வன்முறைக்குப் பின்னே தகிக்கும் கனல்
- வாஸந்தி
கக்கர கர கர கர!
- இந்திரஜித்
ஹாலிவுட்டுக்குப் போவது எப்படி?
- சுதேசமித்திரன்
ஒரு கிராமத்தின் முதல் காதலி
- சிவி பாலகிருஷ்ணன்
'டுங்களே' சதாசிவம்
- ஸ்ரீபதி பத்மநாபா
விலகிச் செல்லும் அந்தரங்கம்
- அ.ராமசாமி
தமிழ் மக்களின் மூலப்படிம உணர்வு
- தமிழவன்
கஞ்சாவின் கதை
- வா.மணிகண்டன்
ஈரானும் புரட்சியாளர்களும் - மார்க்சியவாதி மன்சூர் ஹிக்மத் பற்றிய குறிப்புகள்
- எச்.பீர்முஹம்மது
அன்றாட வாழ்வில் கைகண்ட மருந்துகள்
- ந.முருகேசபாண்டியன்
ஆயுதப் போராட்டத்திற்கு கமல் ஆதரவு
- மனோஜ்
பாவ்லோ பஸோலினியின் 'ஸலோ'
- யமுனா ராஜேந்திரன்
வெட்கம் விட்டு
- ப்ரியம்வதா
கூடும்...வீடும்
- சூர்யா
மீதமிருக்கும் பத்துச் சொற்கள்
- த.அரவிந்தன்
யாமிம்
- பாண்டித்துரை
உன் அரும்பு முகம்
- ஸ்டாலின் ஃபெலிக்ஸ்
இத்தருணத்தின் கடைசி நொடி
- ஹெச்.ஜி.ரசூல்
நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!
- தாஜ்
விக்ரம் சுமந்த வேதாளம்!
- தமிழ்மகன்
எழுத்து என்னிலிருந்து வெளியேறி வாழும் மகத்தான வாழ்வு
- யுவான்-மரீ குஸ்தாவே லெ கிளேசியோ
வாட வெத்திலை; வசங்குன வெத்திலை
- கழனியூரன்
நற்செய்தி
- பாபுஜி
அமெரிக்க தேர்தல்
- பாபுஜி
ஜேக் கெரெவேக் கவிதைகள்
- தமிழாக்கம்: ஆர்.அபிலாஷ்
அவரை விதைத்ததில் துவரை முளைக்குமா..?
- பழமொழிகளும் சொலவடைகளும்-தொகுப்பு:கழனியூரன்
அ.மார்க்ஸ், தி.க.சி.க்கு எழுதியது
- -
'இப்படிக்கு...'
- சிவன்
கச்சத்தீவு
- -
பெருங்கடலிலிருந்து சில துளிகள்
- ஞான தேஷிஹன்
Narayanam
- -
s
- s
உங்கள் கருத்துகள்
- -
click here
உன் அரும்பு முகம்
ஸ்டாலின் ஃபெலிக்ஸ்

 
நினைவு இருக்கிறதா?
அந்தப் பெண் பார்க்கும் படலம்
உனக்கோ பதினேழு
எனக்கோ இருபத்தி ஒன்று இருக்கும்
புதிதாய் சேலை உடுத்தி இருந்தாய்
கால் விரல் நுனி முதல்
கேசம் வரை நான் உன்னிலே அலச
என் ஆண்மையின் வெம்மை தாளாமல்
வெட்க பின்னல்கள் உன்னில் தெறித்து
படர விட்டிருந்தாய் பார்வையை தரையில்
சற்றே ஏமாற்றத்துடன்.............
 
சம்மதம் தெரிவித்து நான் செல்கையில்
ஜன்னல் ஓரமாய் நின்று
என் முதுகு மட்டுமே பார்த்ததாய்
பின் ஒரு பனிக் காலத்தில் சொன்னாய்....
 
திருமணமான பல மாதங்களுக்கு
ஒற்றை வார்த்தையிலே பதில் சொன்னாய்
பெரும் பயம் கொண்டவளாய்.........
 
முதல் பிரசவத்திற்கு
என்னைப் பிரிய முடியாது என
கதறிக் கதறி பிடிவாதம் பிடித்து
பெற்றுக் கொண்டாய் பிள்ளையை
புகுந்த வீட்டிலேயே - சம்பிரதாயம் உடைத்து !
 
வேலைப் பளுவிலே நான் தொலைந்து போக
வார்த்து எடுத்தாய் குழந்தைகளை
ஊரார் மெச்ச நீ மட்டுமாய்....
 
ஆளாக்கி விட்ட பிள்ளைகள்
அங்காங்கே அயல் நாட்டிலே தஞ்சமாக
வெறுமையோடு உன்னை நோக்கி உணர்ந்தேன்
தொலைத்தது உன்னையும், நம் வாழ்க்கையையும்.....
 
நோய் உற்ற போது மருத்துவச்சியாய்
காமமும் காதலும் தேடிய போது மனைவியாய்
அயர்ச்சி அடைந்த போது அழகிய குழந்தையாய்
அறிவு தடுமாறிய போது ஆசிரியையாய்
அன்பை அள்ளித் தந்த அன்னையாய்
உன் ஓர் உடலுக்குள் தான்
எத்தனை எத்தனை வடிவங்கள்
 
அத்தி பூத்தது போல்
ஆண்டுக்கு ஓர் முறை வரும்
பேரப் பிள்ளைகளை ஓடிப் பிடித்து
உணவு புகட்டி, கதை சொல்லி
தூங்கிப் போன உன் தளர்ந்த முகம்
நான் விம்மி நோக்கிய போது
ஏனோ நியாபகம் வந்தது
ஆசையாய் எனை திருடிய
உன் அரும்பு முகம்

click here

click here
click here