உயிரோசை - Uyirosai
 
கொழுந்து விட்டு எரியும் எகிப்து
- இளைய அப்துல்லாஹ் லண்டன்
இது கனவு மட்டும் காணும் நேரம்!
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
நானும் காந்தியும்
- இந்திரஜித்
மாது மயக்கம்
- சுப்ரபாரதிமணியன்
இந்திய வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம்
- சந்தியா கிரிதர்
பிச்சையிடல்கள்
- சார்லஸ் புக்காவஸ்கி
என் நண்பன் புத்தன்
- புக்காவஸ்கி, தமிழில் ஆர்.அபிலாஷ்
மாய வலை
- ஆறுமுகம் முருகேசன்
தொண்டைக்குழிக்குள் இறங்கும் மதுத் துளிகள்
- இளங்கோ
நதி.. மலை..
- தேனம்மை லெக்ஷ்மணன்
நினைவுகளின் வார்த்தைகள்
- துரோணா
வடிகால்
- டி.வி.ராதாகிருஷ்ணன்
உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம் விடைபெறுதல்
- மதன்
கிரஹண அக்குள்
- சித்தன் செல்லப்பா
காட்சிகளின் இரண்டுவகையான சத்தங்கள்
- கே.பாலமுருகன்
பொன்.வாசுதேவனின் ‘ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை‘
- கார்த்திகா வாசுதேவன்
நவீன ஹைக்கூ
- தமிழில் ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்.......கொஞ்சம் ஹெல்த்தியாய்
- பத்மலஷ்மி
புரட்சி
- பாபுஜி
கறுப்பு பணம்
- பாபுஜி
click here
என் நண்பன் புத்தன்
புக்காவஸ்கி, தமிழில் ஆர்.அபிலாஷ்

என் மேஜையில் இருக்கும் இந்தப் புத்தனை  நான் கழுவியாக வேண்டும் ---
அவன் மீது முழுக்க தூசும் எண்ணெய்  பசையும்
அதிகமும்  அவனது நெஞ்சு மற்றும் வயிற்றில்; ஆஹ்
எத்தனையோ  நெடிய இரவுகளை ஒன்றாய்  பொறுத்திருக்கிறோம்;
சப்பையானவையையும் பயங்கரமானவையையும் நாங்கள் தாங்கியிருக்கிறோம்
பண்பற்ற காலங்களில்
சிரித்திருக்கிறோம் – இப்போது
குறைந்தது நான் அவனுக்கு செய்ய வேண்டியது
ஈரத் துணியால் துடைப்பதாவது தான்;
சில நீண்ட  இரவுகள்
நிஜமாகவே  கொடூரமாகவே இருந்துள்ளன  ஆனால்
புத்தன் ஒரு  நல்ல அமைதியான துணையாகவே
இருந்து வந்திருக்கிறான்; சொல்லப் போனால் அவன் என்னைப்  பார்ப்பதில்லை ஆனால்
எப்போதுமே சிரித்துக் கொண்டிருப்பதாய்  தெரியும் – இந்த
பீத்தனமான இருப்பை நோக்கி
சிரித்துக்  கொண்டிருக்கிறான்: வேறொன்றும் இல்லை செய்வதற்கு.
“ஏன் என்னை  சுத்தம் செய்கிறாய்?” அவன் கேட்கிறான், “நான் திரும்பவும்
அசுத்தமாகத் தான் போகிறேன்”
“ஏதோ சுத்தம்  பேணுவதாய் கிறுக்கத்தனமாய்  பாவிக்கிறேன்”, நான் பதிலிறுக்கிறேன்.
“வைனை குடி”, அவன் சொல்கிறான், “அது தான் உனக்கு நன்றாக வருவது”
“அப்போ” நான் கேட்கிறேன் “உனக்கு என்ன நன்றாக
வருமாம்?”
திரும்பச் சொல்கிறான் “உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது  நன்றாக வரும்”
பிறகு அவன் மௌனமாகிறான்.
குஞ்சம் வைத்த  ஒரு உருள்மணிகளின் வட்டமொன்றை
ஏந்தியிருக்கிறான்.
எப்படி இவன் வந்தான்
இங்கு?

click here

click here
click here