உயிரோசை - Uyirosai
 
கொழுந்து விட்டு எரியும் எகிப்து
- இளைய அப்துல்லாஹ் லண்டன்
இது கனவு மட்டும் காணும் நேரம்!
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
நானும் காந்தியும்
- இந்திரஜித்
மாது மயக்கம்
- சுப்ரபாரதிமணியன்
இந்திய வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம்
- சந்தியா கிரிதர்
பிச்சையிடல்கள்
- சார்லஸ் புக்காவஸ்கி
என் நண்பன் புத்தன்
- புக்காவஸ்கி, தமிழில் ஆர்.அபிலாஷ்
மாய வலை
- ஆறுமுகம் முருகேசன்
தொண்டைக்குழிக்குள் இறங்கும் மதுத் துளிகள்
- இளங்கோ
நதி.. மலை..
- தேனம்மை லெக்ஷ்மணன்
நினைவுகளின் வார்த்தைகள்
- துரோணா
வடிகால்
- டி.வி.ராதாகிருஷ்ணன்
உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம் விடைபெறுதல்
- மதன்
கிரஹண அக்குள்
- சித்தன் செல்லப்பா
காட்சிகளின் இரண்டுவகையான சத்தங்கள்
- கே.பாலமுருகன்
பொன்.வாசுதேவனின் ‘ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை‘
- கார்த்திகா வாசுதேவன்
நவீன ஹைக்கூ
- தமிழில் ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்.......கொஞ்சம் ஹெல்த்தியாய்
- பத்மலஷ்மி
புரட்சி
- பாபுஜி
கறுப்பு பணம்
- பாபுஜி
click here
இந்திய வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம்
சந்தியா கிரிதர்

மாநிலங்களுடைய ஒருங்கிணைந்த ஆளுமை (plural governance) இந்திய வரலாற்றில் ஒரு புதிய பரிமாணத்தைப் படைத்திருக்கிறது. ஒருங்கிணைந்த ஆளுமை ஒவ்வொரு குடிமகனையும் முன்னேற்றத்துக்காகப் பாடுபட வைத்திருக்கிறது, வியர்வை சிந்த வைத்திருக்கிறது. இந்தியாவினுடைய வளர்ச்சியில் ஒவ்வொரு குடிமகனுடைய உழைப்பும், வியர்வையும் பங்கு பெற்றிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரப் புரட்சி, சுதந்திர அரசியலமைப்பைப் பற்றி உலக மக்கள் பேசுகிறார்கள், அலசுகிறர்கள், விவாதிக்கிறார்கள்.

ஒருங்கிணைந்த ஆளுமை உருவாக்கிய தீரமான திட்டங்கள், அதனை நிறைவேற்றவேண்டுமென்று இந்திய மக்களிடம் குடிகொண்டுள்ள உத்வேகம் இந்தியாவை ஒரு வல்லரசாகவும், வளர்ச்சியடைந்த நாடாகவும் மாற்றியிருக்கிறது. தனியொரு ராஜா ங்கம், தனியொரு அரசியல்கட்சி, தனியொரு அதிகாரி, தனியொரு மனிதன் இத்தகைய சாதனையைப் படைத்திருக்க முடியாது. ஒவ்வொரு துறையின் ஈடுபாடும், ஒவ்வொருத்தருடைய பங்களிப்பும் ஒன்றா க திரண்டு ஒரு படைபோல பிறப்பெடுத்து ஒருமைய நோக்கத்தோடு, ஒருமித்த நுண்ணறிவு, திறமையைக் கொண்டு செயல்பட்டதினால் இந்தியா மாபெரும் சாதனையைப் படைத்து உலகத்தைப் பிரமிக்க வைத்திருக்கிறது. சுதந்திரமாக எண்ணுதல், சுதந்திரமாக செயல்படுதல், எல்லாவற்றுக்கும் மேலாக எதையும் சுதந்திர மனப்பான்மையோடு எடுத்துக்கொள்ள வேண்டுமென்கிற பாணியில் செல்லுகிற நாடு சாதனையைப் படைக்க முடியும்.

நம்முடைய நாட்டில் சுதந்திரத்தோடு செயல்பட முடியுமென்று பொதுமக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையில் இந்தியா இவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறது, இத்தகைய சுதந்திரத்தை வேறு எந்த நாட்டிலாவது நம்மால் அனுபவிக்க முடியுமா? இந்திய குடியுரிமையைப் (Indian democracy) பற்றி உலகளவில் இன்று பெருமையோடு பேசப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு அரசியலமைப்பு இடம்பெற்றிருந்தாலும், மாநிலங்களை ஒன்றாகத் திரட்டி, அந்தந்த மாநிலத்தினுடைய சிறப்பம்ங்களின் மீது தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி, அதனுடைய வளர்ச்சிக்காக அக்கறையோடுகூடிய பொறுப்பையும் நிறைவேற்றி வருகிற மத்திய அரசினுடைய திறமை பாராட்டுக்குரியது.

ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்த நொடிப்பொழுதில் நாம் அரசாங்கம், அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் மீது பழி சுமத்துகிறோம், அந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் வார்த்தைகளைக் கொட்டித்தீர்த்து விடுகிறோம். ஒரு சம்பவத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு ஆராய்ந்து வார்த்தைகளை அளந்து பேசுவது ஒரு நல்ல குடிமகனுடைய அடையாளம். நடந்துமுடிந்த அசம்பாவிதத்தை சீர்ப்படுத்தவேண்டுமென்கிற எண்ணத்தோடு செயல்படுவது ஒவ்வொரு குடிமகனுடைய முக்கிய கடமையாகும்.

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 42கோடி வாக்காளர்கள், 8 லட்சம் வாக்குச்சாவடிகள், ஒரு கோடி வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேசியக்கட்சிஉறுப்பினர்கள், மாநில கட்சிஉறுப்பினர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு கொடுத்த காவல்துறையினர், அனைத்தையும் மேற்பார்வையிட்ட 5 லட்ச அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து திறமையாகச் செயல்பட்டதால் இந்திய ஜனநாயகம் உயிர்பெற்றது. இதில் ஒவ்வொருத்தருடைய உழைப்பும் பாராட்டுக்குரியது.

ஒரு காலத்தில், நீதிமன்றங்களில் தீர்ப்புகள் கொடுக்கப்படாமல் வழக்குகள் நிரம்பி வழிந்தன. ஆமைவேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த சட்டசம்பந்தமான செயல்முறைகள் மாற்றங்கள் பெற்றதோடு, இன்று உயர்நீதிமன்றங்களில, உச்சநீதிமன்றத்தில் நிரம்பியுள்ள வழக்குகளுக்கு இன்று மடமடவென்று தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. (Fast-track courts).

உலகத்தில் நடைபெறுகிற நிகழ்வுகளை உடனுக்குடன் தொலைக்காட்சியில் பார்க்கிறோம். தகவல் தொடர்பு செயல்முறைகள் அப்படியொரு முன்னேற்றத்தை பெற்றிருக்கிறது. இன்று எதையும் மூடி மறைக்க முடியாது. செய்தித்தாள்கள், பத்திரிகைகள், இணையதளங்கள், 24மணிநேர சேனல்களென்று இதுபோன்ற தகவல்களைத் தெரிந்துகொள்கிற சாதனங்கள், ஒலிபரப்புத்துறை, ஒவ்வொரு நிகழ்வையும் எந்தவொரு மாற்றமில்லாமல், தொலைக்காட்சியில் காட்டுகிறது, பொதுமக்கள் பார்க்கிறார்கள், விவாதிக்கிறார்கள், தங்களுடைய பங்களிப்பையும் அளிக்கிறார்கள். தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற உரிமைச் சட்டம் (Right to information Act) நடைமுறைக்குக் கொண்டுவந்த நாள்முதல் ஒவ்வொரு துறையிலும் நடைபெறுகிற முறையில்லாத செயல்முறைகள், நடைமுறைகள்; சீர்திருத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையும் பொதுமக்களுடைய கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.

விவாசயத்துறை வளர்ச்சி, தொழிற்துறை முன்னேற்றம், சேவைத்துறையினுடைய புதிய யுத்திகள் ஒரு புரட்சிகரமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. இந்தப் புரட்சியால் இந்திய அரசியலமைப்பு, அதனுடைய பொருளாதாரம் ஒரு முன்னேற்ற பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தப் புரட்சி ஒவ்வொரு குடிமகனுடைய உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது, ஒவ்வொருவரும் கடமையை முழுமனதோடு நிறைவேற்றுகிறார்கள். பொதுமக்களின் உழைப்பிலே ஒரு வலிமையான, தொலைதூரப் பார்வையைக் கொண்ட இந்தியா என்ற நாடு உருவாகியிருக்கிறது.

click here

click here
click here