உயிரோசை - Uyirosai
 
கொழுந்து விட்டு எரியும் எகிப்து
- இளைய அப்துல்லாஹ் லண்டன்
இது கனவு மட்டும் காணும் நேரம்!
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
நானும் காந்தியும்
- இந்திரஜித்
மாது மயக்கம்
- சுப்ரபாரதிமணியன்
இந்திய வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம்
- சந்தியா கிரிதர்
பிச்சையிடல்கள்
- சார்லஸ் புக்காவஸ்கி
என் நண்பன் புத்தன்
- புக்காவஸ்கி, தமிழில் ஆர்.அபிலாஷ்
மாய வலை
- ஆறுமுகம் முருகேசன்
தொண்டைக்குழிக்குள் இறங்கும் மதுத் துளிகள்
- இளங்கோ
நதி.. மலை..
- தேனம்மை லெக்ஷ்மணன்
நினைவுகளின் வார்த்தைகள்
- துரோணா
வடிகால்
- டி.வி.ராதாகிருஷ்ணன்
உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம் விடைபெறுதல்
- மதன்
கிரஹண அக்குள்
- சித்தன் செல்லப்பா
காட்சிகளின் இரண்டுவகையான சத்தங்கள்
- கே.பாலமுருகன்
பொன்.வாசுதேவனின் ‘ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை‘
- கார்த்திகா வாசுதேவன்
நவீன ஹைக்கூ
- தமிழில் ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்.......கொஞ்சம் ஹெல்த்தியாய்
- பத்மலஷ்மி
புரட்சி
- பாபுஜி
கறுப்பு பணம்
- பாபுஜி
click here
மாது மயக்கம்
சுப்ரபாரதிமணியன்

அண்டை வீடு: பயண  அனுபவம் 

 மதுவைத்  தடை  செய்திருக்கும்   வங்க தேச நாட்டில் விபச்சாரம் சட்டமயமாக்கப் பட்டிருக்கிறது. அங்கீகாரம் பெற்ற 20 சிவப்பு விளக்குப் பகுதி ஏரியாக்கள் டாக்காவில் உள்ளன. 12வயதில் பின்னலாடைத் தொழிலுக்காக பர்குணா மாவட்டத்திலிருந்து டாக்கா வந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு, ஓட்டல் ஒன்றில் சேர்க்கப்பட்டு, பின் விபச்சார விடுதியில் தள்ளப்பட்டதை ஒரு விவரணப் படத்தில் பார்த்தேன். அவள் சரீபா. சரீபாவைப் போல 30,000 குழந்தைகள் தொழிலில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வங்கதேச அரசியல் சட்டம் சூதாட்டமும், மது அருந்துவதும் பெரும் குற்றங்கள் என்கிறது. டாக்காவில் ரமணா பூங்கா டாக்கா பல்கைக்கழகத்தை ஒட்டியிருக்கும் திறந்த வெளி பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு சாலையோரங்களில் விலைமகளிர் நின்று கொண்டிருப்பது தினமும் தென்படுகிறது. ஏழைப் பெண்களும், நகர சேரிப் பெண்களும் இதில் அதிகம். கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம் பற்றி ஒருவன் சொன்னதாக ஒரு பெண் பத்திரிகையாளர் சொன்னது: " முட்டைகளோடு இருக்கற மீன் ருசி அதிகம். அது மாதிரி கர்ப்பமான பெணகளுடன் உறவு கொள்வது சுவாரஸ்யமானது." இலீஸ் மற்றும் கீத்தல் மீன் வகைகள் டாக்காவில் கிடைக்கும் ஆற்று மீன் வகைகள். ஈலிகா, ஹில்ஸா என்றும் பெயருண்டு. இப்பெயர்களில் பெண்களும் இருக்கிறார்கள்.

                  வங்கதேசத்தில்  வெள்ள நாசமும், வேலை தேடி வருபவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பும் விபச்சாரத்தை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்கிறது. டாக்காவின் ஒரு  பகுதியான ஜான் பஜாரில் விலைமாதர்கள் இருந்த குடியிருப்பொன்றைக் காலி செய்யும் நடவடிக்கைகளில் அரசுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது. குறுகிய தெருக்களும், ஒற்றை வீடுகளும், சாக்கடைகளும் கொண்ட மிகப் பழமையான விபச்சாரக் குடியிருப்பு  ஜான் பஜார். பெரும்பாலும் அரசியல்வாதிகள், காவல்துறையினருக்கு தங்களின் வருமானத்தில் ஒரு  பகுதியை லஞ்சமாகத் தந்து வாழ்ந்து வந்த அப்பெண்கள் நடுத்தெருவில் விடப்பட்டதை உணர்ந்தார்கள். ஒரு மாதத்திற்கு ஆயிரம் டாக்கா மட்டுமே சம்பாதிக்க முடிந்த அளவு தொழில் போட்டி. உடல் நலம் குறித்த அக்கறை குறைவாகவே இருக்கிறது. விலைமாதர்கள் அவர்களுக்கென்ற தனிப்பகுதிகளில் இருப்பதால் எய்ட்ஸ் நோயும் கட்டுப்படும் எல்லைக்குள் இருக்கிறது. இந்தியா, தாய்லாந்தை விட எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருக்கிறார்கள். போதைப் பொருட்கள் மற்றும் ஸ்ட்ராய்ட் பயன்படுத்துவது இவர்கள் மத்தியில் சாதாரணமாக இருக்கிறது. அதன்மூலம் முகப் பொலிவும், அழகும் கூடுவதாக நம்புவதால் அதற்கும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. மதுபானத்திற்காகவும் அப்பெண்கள் நிறைய செலவிடுகிறார்கள். புகைவண்டிப் பாதையையொட்டியிருக்கிற தங்கள் குடியிருப்புகளின் அவலம் அவர்களை உறுத்துவதாகவே இருக்கிறது. சர்க்கரை, சணல், அரிசி பொருட்களின் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஆண்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பது. அவர்களுக்கு ஆறுதல் தருவதாகும்.100 டாக்கா சம்பாதித்தால் 40 டாக்கா அழகைப் பராமரிக்கும் பொருட்கள், உடைகளுக்காகச் செலவிடுகிறார்கள். 100 டாக்காவிற்கு 2 கோக் பாட்டில்கள் கிடைக்கும். 20 கோக் பாட்டில் பணம் அவர்கள் பெரும் அதிகபட்ச சன்மானம். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் மட்டும் இதை நம்பி வாழ்கிறார்கள். 

                        தன்லாத்தியா வங்கதேசத்தின்  கிராமப்புறப் பெண். 20 வயதாகும் அவள் கங்கை, யமுனா கூடும் நதிப்பிரதேசத்தில் கூலியாக  வேலை செய்து கொண்டிருந்தவள். நகரப்புற வேலைக்கு ஆசைப்பட்டு டாக்காவுக்கு வந்தவளை டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் இங்கு கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறான். தன்லாத்தியா அங்கிருந்து தப்ப முயற்சித்ததெல்லாம் வீணாகிப் போயிற்று. அவளின் ஊர்க்காரப் பெண்கள்.

 

பலர் விடுதிகளிலும், பின்னலாடைத் தொழிற்சாலைகளிலும்  வேலை செய்பவர்களின் அனுபவமும்  இதே போலத்தான் என்கிறார்களாம். வருமானம் என்று பார்க்கிறபோது  வெகு குறைவாகத்தான் இருக்கிறது.  ஒரு பெண் இப்படி சொல்கிறாள்:

      "குழந்தைகள் அழுதுகொண்டும், கத்திக்கொண்டும் இருக்கும் சத்தத்தைக் கேட்டபடியே ஆண்களுடன் இருக்க வேண்டியது துயரமானதாக இருக்கிறது."                                     

 subrabharathi@gmail.com

 

click here

click here
click here