உயிரோசை - Uyirosai
 
கொழுந்து விட்டு எரியும் எகிப்து
- இளைய அப்துல்லாஹ் லண்டன்
இது கனவு மட்டும் காணும் நேரம்!
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
நானும் காந்தியும்
- இந்திரஜித்
மாது மயக்கம்
- சுப்ரபாரதிமணியன்
இந்திய வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம்
- சந்தியா கிரிதர்
பிச்சையிடல்கள்
- சார்லஸ் புக்காவஸ்கி
என் நண்பன் புத்தன்
- புக்காவஸ்கி, தமிழில் ஆர்.அபிலாஷ்
மாய வலை
- ஆறுமுகம் முருகேசன்
தொண்டைக்குழிக்குள் இறங்கும் மதுத் துளிகள்
- இளங்கோ
நதி.. மலை..
- தேனம்மை லெக்ஷ்மணன்
நினைவுகளின் வார்த்தைகள்
- துரோணா
வடிகால்
- டி.வி.ராதாகிருஷ்ணன்
உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம் விடைபெறுதல்
- மதன்
கிரஹண அக்குள்
- சித்தன் செல்லப்பா
காட்சிகளின் இரண்டுவகையான சத்தங்கள்
- கே.பாலமுருகன்
பொன்.வாசுதேவனின் ‘ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை‘
- கார்த்திகா வாசுதேவன்
நவீன ஹைக்கூ
- தமிழில் ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்.......கொஞ்சம் ஹெல்த்தியாய்
- பத்மலஷ்மி
புரட்சி
- பாபுஜி
கறுப்பு பணம்
- பாபுஜி
click here
நானும் காந்தியும்
இந்திரஜித்

ஒரு மே மாதத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளிவந்த நேரம், பொதுவாக தமிழர்கள் சோர்வாக இருந்த நேரம்.

இதை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லமுடியாது. பிரபாகரன் இறந்த செய்தி கேட்டு உற்சாகம் அடைந்தவர்களும் உண்டு. அப்படி உற்சாகம் அடைந்தவர்கள், தங்களைப் போல் உற்சாகம் அடைந்தவர்களே அதிகம் என்று கூறிச் சிரித்தனர்.

அப்படி உற்சாகம் அடைந்தவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அதை நினைத்து இப்போது சோர்வடைய வேண்டாம். அரசியல், இலக்கியம், கலை, சினிமா, மனிதாபிமானம் இப்படிப் பல துறைகள் எல்லாமே ஒரே துறையா பல துறைகளா என்ற சந்தேகம் உள்ளவர் நீங்கள். அதில் ஏதோ ஒரு துறையைச் சேர்ந்ததன் மூலம் எல்லாத் துறையிலும் சேர்ந்துவிட்டீர்கள். எனவே பிரபாகரன் இறந்த செய்தி கிடைத்ததும் நீங்கள் சிந்தித்துவிட்டீர்கள்.

உங்களை அல்ல-

நான் சொல்வது பொதுவான தமிழர்களை. அவர்களை அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கு ஏற்ப அப்பாவித் தமிழர்கள் என்றும் சொல்லலாம்.

அவர்கள் அனைவருமே பிரபாகரன் செய்தி கிடைத்தபோது பதறிப் போயினர். பலர் பதற முடியாமல் திகைத்து நின்றனர்.

அந்நேரத்திலும் பிறகும், பிரபாகரன் தவறியது நல்லதே என்று பல கட்டுரைகள் எழுதப்பட்டன. அவர் எப்படிச் செத்தார் என்பது பற்றி இதுவே உண்மை என்று சொல்லி குறைந்தது பத்துவிதமான சம்பவங்கள் சொல்லப்பட்டன. அவற்றில் ஒன்பது சம்பவங்கள் பொய்யாக இருந்தால்தான் ஒரு சம்பவமாவது உண்மையாக இருக்க முடியும்.

ஒவ்வொன்றும் தகுந்த ஆதாரத்தோடும், தார்மீகம் என்று சொல்கிறார்களே அதையும் சேர்த்துக் கொண்டு முன்வைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள். எழுதியவர்கள் நேரில் பார்த்தவர்கள். இல்லாவிட்டால் நேரில் பார்த்தவர்களை நேரில் பார்த்தவர்கள்.

இதில் உணர்ச்சிவசப்படுவதற்கு எதுவும் இல்லை என்று வற்புறுத்திய உணர்ச்சிமயமான கட்டுரைகள்.

அவர்கள் அறிவுஜீவிகள்.

அதற்கு அப்பால் உள்ள அப்பாவி மக்களுக்கு உண்மையில் பிரபாகரனை அவ்வளவாகத் தெரியாது. இதுதான் முக்கியமான அம்சம். ஒரு மனிதரைக் கதாநாயகனாக மேற்கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு அந்த மனிதரை அவ்வளவாகத் தெரியாது. யாராக இருந்தாலும். காந்தியாக இருந்தாலும் பிரபாகரனாக இருந்தாலும்.

இருவரையுமே நன்றாகத் தெரிந்து அவர்களோடு ஒன்றாக உட்கார்ந்து மோர் குடித்தவர்கள் துடிப்பார்கள். எப்படி ஒப்பிடலாம் என்று கொதிப்பார்கள். மற்றவர்கள் அப்பாவிகள்.

 

எப்படிப் பார்த்தாலும் பிரபாகரன் வில்லனே என்று வாதிடும் கட்டுரையாளர்கள் மறக்காமல் தங்களை நடுநிலையாளர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.

வேறு சிலர் தங்களுக்கு பிரபாகரனிடம் தனிப்பட்ட ஜென்மப் பகை இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இப்போது எல்லாவற்றிலும் இருந்து விலகி நின்று, ஒரு பொதுக் கண்ணோட்டத்தோடு பிரபாகரனைத் தாக்குவதாக வருத்தப்பட்டனர்.

பிரபாகரனின் பெயரைச் சொல்வதற்கே பயந்தவர்கள், அவரைப் பற்றிப் பல நகைச்சுவைகளைச் சொல்லிச் சிரித்தனர்.

காந்தி தோல்வி அடைந்திருந்தால் அவர் எவ்வளவு நகைப்புக்கு ஆளாகியிருப்பார் என்று ஒப்பிட்டுப் பார்க்கும்போது பிரபாகரன் நிலைமை எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது.

காந்தி மக்களை மனதில் வைத்துச் செயல்பட்டார், பிரபாகரன் தன்னை மனதில் வைத்துச் செயல்பட்டார் என்று சொல்கின்றனர்.

இதுபோன்ற பொறுக்கி எடுக்கப்பட்ட கூற்றுகள் பொதுமக்களிடையே ஏன் எடுபடவில்லை என்பது தெரியவில்லை.

பிரபாகரனை ஏன் மக்களுக்குப் பிடித்தது என்பதுதான் உண்மையில் புரியாத புதிர்.

ஒருவேளை அவர் ஒழுக்கமானவர் என்பது காரணமாக இருக்கலாம். தமிழர் தலைவர்களில் ஒழுக்கமானவர் என்ற பேச்சுக்கே இடம் இல்லாதபடி வெகுநாளாகவே நிலைமை நீடித்து அதுவே போதும் என்று பழகிவிட்டது.

பொறுக்கியாக இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்றுதான் தமிழர் தலைவர்களை நாம் மதிப்பிடுவது வழக்கம்.

பிரபாகரன் போன்ற ஒருவரே தலைவராக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம்.

பிரபாகரன் போரில் இறந்திருந்தால் அவர் மக்களோடு நின்று மடிந்தார் என்று அவருக்கு நல்ல பெயரே வருகிறது.

அவர் தப்பித்திருந்தால், புத்திசாலித்தனமாகத் தப்பித்துவிட்டார் என்று அப்படியும் அவரை மக்கள் புகழ்கின்றனர்.

இது ஏன் என்பதுதான் நடுநிலையாளர்களின் சந்தேகம். எவ்வளவு பெனடோல் போட்டாலும் அந்தச் சந்தேகம் தீரவில்லை.

நாம் அனைவருமே போருக்கு எதிரானவர்கள். அது தனிக்கதை. அதை இதோடு சேர்க்க முடியாது.

நம்மில் ஒருவர்கூட இன்னொருவருக்கு ஒரு தீங்கும் செய்ததில்லை. அதை நினைத்து நாம் ஒவ்வொரு நாளும் காலையில் பல்விளக்கும்போது சிரித்துக் கொள்கிறோம்.

உண்மையில் பிரிட்டிஷ்காரர்களும் மனிதர்களே. அவர்களுக்கு இடையூறாகப் பல காரியங்கள் செய்ததுகூட காந்தி போன்றவர்களால்தான் முடியும். நாம் என்றால் யாராவது பத்திரிகை நடத்தினால் அது பற்றிக் கட்டுரை எழுதலாம். மற்றபடி ஏதாவது செய்வதாக இருந்தாலும் வேலை எத்தனை மணிக்கு முடிகிறது என்பதைப் பொறுத்தது.

 

தமிழர்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள். சாதாரண குண்டர் கும்பலைக் கூட அவர்கள் அருவருப்போடுதான் பார்க்கின்றனர்.

எனவே பிரபாகரனிடத்தில் இருந்த வன்முறையை அவர்கள் விரும்பியிருக்க முடியாது.

அவர் நல்லவர் என்பதுதான் மக்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.

பிரபாகரன் மரணச் செய்தியில் நடுநிலையாளர்களுக்கு மட்டும்தான் சந்தோஷம்.

சாதாரண மக்களுக்கு அதில் மகிழ்ச்சி இல்லை.

அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

யார் இறந்தாலும் அந்த இழப்பை உடனே உணரக் கூடியதுதான் அரசியல் கலக்காத மனித மனம்.

சாதாரண பிரபாகரனிடம் சாதாரண மக்கள் எதைப் பார்த்தனர்?

அரசியல் தலைவர் என்றாலே அவர் ஒரு பொறுக்கி, தெருவில் போகும் பெண்களை எல்லாம் பொறுக்குவார், இங்கொரு மனைவி அங்கொரு மனைவி என்று அலைவார், எந்த நேரத்தில் யார் பக்கம் இருப்பார் என்று சொல்ல முடியாது. இப்படியே கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டதால் மக்களுக்கு காந்தி போன்ற ஒருவரை, பிரபாகரன் போன்ற ஒருவரைப் பிடிக்கிறது.

அவர்களுடைய அரசியல் அணுகுமுறை, போராட்டம் ஆகியவற்றோடு எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவி மக்களைச் சொல்கிறேன்.

எனக்கு காந்தியைப் பிடிப்பதற்கு முக்கியமான காரணம், உங்களுக்கு அவரைப் பிடிப்பதற்கான அதே காரணம்தான்.

//

click here

click here
click here