உயிரோசை - Uyirosai
 
கொழுந்து விட்டு எரியும் எகிப்து
- இளைய அப்துல்லாஹ் லண்டன்
இது கனவு மட்டும் காணும் நேரம்!
- எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
நானும் காந்தியும்
- இந்திரஜித்
மாது மயக்கம்
- சுப்ரபாரதிமணியன்
இந்திய வரலாற்றில் ஒரு புதிய பரிமாணம்
- சந்தியா கிரிதர்
பிச்சையிடல்கள்
- சார்லஸ் புக்காவஸ்கி
என் நண்பன் புத்தன்
- புக்காவஸ்கி, தமிழில் ஆர்.அபிலாஷ்
மாய வலை
- ஆறுமுகம் முருகேசன்
தொண்டைக்குழிக்குள் இறங்கும் மதுத் துளிகள்
- இளங்கோ
நதி.. மலை..
- தேனம்மை லெக்ஷ்மணன்
நினைவுகளின் வார்த்தைகள்
- துரோணா
வடிகால்
- டி.வி.ராதாகிருஷ்ணன்
உறங்கிக் கொண்டிருப்பவர்களிடம் விடைபெறுதல்
- மதன்
கிரஹண அக்குள்
- சித்தன் செல்லப்பா
காட்சிகளின் இரண்டுவகையான சத்தங்கள்
- கே.பாலமுருகன்
பொன்.வாசுதேவனின் ‘ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை‘
- கார்த்திகா வாசுதேவன்
நவீன ஹைக்கூ
- தமிழில் ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்.......கொஞ்சம் ஹெல்த்தியாய்
- பத்மலஷ்மி
புரட்சி
- பாபுஜி
கறுப்பு பணம்
- பாபுஜி
click here
இது கனவு மட்டும் காணும் நேரம்!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

நாம் அறியாமையில் வாழ்ந்து விட்டால் ,அது தரும் இன்பம் தனிதான்! அனுபவமும் அப்படித்தான்! ஆனால் நம் தமிழகம் விடாப்பிடியாக அதே தொனியோடுதான் இருப்பேன் என்பது போல, சமீபத்தில் அதன் நடவடிக்கைகள் உள்ளன! மக்களையும் அப்படியே வைத்திருக்க வேண்டும் என நயவஞ்சக எண்ணத்தோடு தலைமை செயல்படுகிறதோ என்ற ஐயமே ஏற்படுகிறது. அண்மையில் நியூயார்க் நகரில் அமைந்த ஐ,நா. சபை மாநாட்டில் 140 நாடுகள் கலந்து கொண்டு வாய் கிழியப் பேசித் தீர்த்தார்கள். இதுபோல 2000 ஆண்டிலேயும் நடந்தது. அப்போது உலக கனவு திட்டம் (Millennium Development) ஒன்று வகுக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் கனவை நனவாக்குவது. என்ன நனவு அது? உலகம் முழுவதும் 100 % தொடக்க கல்வி ,குழந்தை இறப்பு முற்றிலும் தடுப்பு, பிரசவத்தின்போது ஏற்படும் தாயின் மரணத்தை அறவே நிறுத்துவது அனைவருக்கும் சுத்தமான குடிநீர்,சாக்கடை வசதி, கழிப்பிட வசதி என 8 அம்ச திட்ட நோக்குகள். குறைந்தது அதில் பாதியாவது 2015க்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் பேசப்பட்டது.

,நா. சபையோ, இந்தியாவில் இது பூர்த்தியாகாது என்று கூறுகிறது. 588 மாவட்டங்களில் 200 மாவோயிஸ்டு குழுவினர் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டவாறே உள்ளனர். இது ஜனநாயக கட்டுமானத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. ஆனால் இலவச அரசியல் தான் இன்று இந்திய அரசியலில் பெரும் சவால் என்கிறது "தி எக்கனாமிஸ்ட்" பத்திரிகை. மன்மோகன் சிங்கின் தோழர்கள் எந்த அளவு ஊழல் பேர்வழிகள் என்பதை நாம் அறிவோம் .கிராமங்களை முன்னேற்ற அரசு முனைகிறது என்று பிரதமரும், ஜனாதிபதியும் மாறி மாறிக் குரல் கொடுத்தாலும், அங்கு படிக்கும் குழந்தைகளில் 20 சதவீதம் தனியார் பள்ளிகளுக்கே அனுப்பப்படுகின்றனர். அரசு சார் பள்ளிகளின் அவல நிலையே இதற்குக் காரணம் என்பதையும் நாம் அறிவோம்.தமிழகத்தில் "தமிழ்தான் மூச்சு" என்று ஆளுவோர் பம்மாத்துக் குரல் எழுப்ப, அதிக பணம் கொடுத்தாவது ஆங்கில வழி பள்ளிகளுக்கே வாரிசுகளை அனுப்புவோம் என்கின்றனர் நம்மவர்கள். 15--24 வயது இளைஞர்கள் சமீப காலங்களாக ,கட்சிகளால் ஆகர்ஷணம் செய்யப்பட்டு அதன் புரோகர்களாக மாறி வருகிறார்கள். காரணம், சினிமா கவர்ச்சி. நடிக--நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் தெரிந்த அளவிற்கு ,நிலைத்து நிற்கும் பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன என்பதை அறியத் தவறி விட்டோம் .சற்று உற்று நோக்கும்போது நம் தலைமை ,நம் அறியாமையைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. எப்போதும் போல், இருளில் புரளவிட்டு , அவர்களின் இல்லங்களில் நிலைத்த பொருளாதார வளர்ச்சியை வெளிச்சமிட்டிருக்கிறார்கள்.

கிராமங்களோ வேதனை தரும் மாற்றங்களை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஏறத்தாழ எல்லோருமே அலைபேசி வைத்திருக்கிறார்கள். ஏழு பிறவியிலும் பேச வேண்டியதை இப்போதே பேசி முடித்து விட வேண்டும் என்று முழு முயற்சியில் இறங்கியதைப் போல , ஓயாது பேசி தவித்துப் போனார்கள்! வயல் வெளிகள் ரியல் எஸ்டேட்டானது, புதுப்புது இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்களின் வரத்து கூடிவிட்டது. எஞ்சிய வயல் வெளியில் வேலைபார்க்க ஆட்கள் கிடைப்பது அரிதாகிறது. நூறு நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் உருப்படியான வேலை எதுவும் நடப்பது கிடையாது. 30 நாட்களில் முடியும் வேலைக்கு, நூறு நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. திறனற்ற நபர்களே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். மகளிர் சுய உதவிக்குழுவோ வங்கிகளில் கடன் பெற்று அதைக் கந்து வட்டிக்கு விடுகிறார் . எல்லோரும் நகரங்களில், கம்ப்யூட்டர் சென்டர்களில் வேலை பார்த்து விட்டு , தங்களால் இயன்ற அளவு, "கேட் வாக், ஹை ஹீல்ஸ் செருப்பு" என நாகரீக தொனியோடு மாலை வீடு திரும்ப விரும்புவதாக ஈவ்ஸ் பெண்கள் இதழ் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

நுகர்வோர் கலாச்சாரம், கிராமங்களை மெல்ல மெல்ல தன் ஆக்டோபஸ் கரங்களால் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. பஞ்சாயத்துகளுக்கு சரிவர வரி வருவதில்லை. பஞ்சாயத்து ராஜ், தனிநபர் கட்டப் பஞ்சாயத்து ராஜ்ஜியமாக மாறி வருகிறது. கிராமங்களில் இலவசங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தேவை கருதி தரப்படும் பென்ஷன்கள் ,இதனால் சரிவர தர இயலாமல் போகிறது. பாரம்பரியப் பண்புகள், கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து வருகிறது. சாதி வெறி தணிந்து காணப்பட்டாலும், சாதி அரசியலை அரசே சிபாரிசு செய்யும் அவலம் உள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியில் நசுங்குகிறது என்றதும் ஒபாமா இந்தியா வந்து விட்டார், கொத்தாக ஆர்டரும் வாங்கிச் சென்று விட்டார். இந்திய இளைஞர்களின் மூளைத்திறனை அறிந்து அதை அமெரிக்கா பயன்படுத்தத் தவறவில்லை. ஏனெனில், அமெரிக்க கல்வியின் தரம் தாழ்ந்து விட்டதே அதற்குக் காரணம். உலகத்தர வரிசையில், இந்தியக் கல்விக்கு நான்காவது இடமும் , அமெரிக்க கல்விக்கு முறைக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளது. இந்திய அரசோ அதன் தலைமையோ ,இளைஞர்களின் மூளைத்திறனைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அரசியல் வாதிகள், எம்.எல்..வாக இருந்தாலும் சரி, வார்டு கவுன்சிலர்களாக இருந்தாலும் சரி பொருளாதாரம் பற்றிய அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது ,ஒரு பாதி அரசின் கையிலும், மறு பாதி மார்க்கெட் கையிலும் உள்ளது. எனவேதான் இதை மார்க்கெட் பொருளாதாரம் என அழைக்கிறோம். தனியார் முதலாளித்துவம், இதனாலே வளர்ச்சி பெறுகிறது என்பது நிதர்சனம். பொதுவாக, சாதாரண பொதுஜனம் பொருளாதாரத்தை அறிந்துகொள்ள விரும்புவதில்லை. அவர்களுக்கு அரசு வேலை ,நாளும் சம்பளம், பென்ஷன் , சம்பள உயர்வு, இதுதான் வளர்ச்சி என்ற அறிவு திணிக்கப்படுவதால் தங்களுக்கு உண்டான தன்னிறைவைப் பூர்த்தி செய்து, நாடே வளர்ச்சியடைந்து விட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் 90 சதவீத அரசு வருமானம் ,12 லட்சம் அரசு ஊழியர்கள், 5 லட்சம் பென்ஷன் ஊழியர்களுக்கே சென்று விடுகிறது. மீதமுள்ள பத்து சதவீதம் இலவசங்களுக்குத் திருப்பி விடப்படுகிறது. இப்படி ஒரு ரூபாய் அரசி, பொங்கல் இலவசப் பலசரக்கு, தரம் தாழ்ந்த வேட்டி சேலை, இலவச சைக்கிள் ,வீட்டு மனை என பட்டியல் நீளுகிறது. இதில் இலவச டி.வி.க்கு மட்டும் 3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இல்லத்திற்கு வந்து ,2 மணி நேரம் மட்டுமே அது செயல்படுகிறது! உலகப் பொருளாதாரமோ பெரும் நெருக்கடியில் உள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் நிச்சயம் தெரியும். உதாரணம், விலைவாசி உயர்வு. ஜெர்மனியில் சமீபத்தில் ஹிட்லர் அருங்காட்சியகம் துவங்கப்பட்டுள்ளது. இது அவர் தம் பொய் பிரசாரத்தாலும் , இலவசத் திட்டங்கள் மூலமும் ஒரு மாயையை உருவாக்கி, மக்களை மதி மயக்கி , எப்படி நம்பவைத்தான் என்பதை உலகம் அறிந்துகொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய தமிழக அரசியல் சூழலும், அருங்காட்சியக காட்சிகளோடு ஒப்பிட வைப்பதாக உள்ளது.

இந்தியர்களில் 40 சதவீதம் கல்வி அறிவில்லாதவர்கள், 40 சதவீதம் கல்வியை முழுமையாக முடிக்க முடியாதவர்கள். இன்னும் 2 லட்சம் பொறியாளர்கள், 4லட்சம் பட்டதாரிகள் , பற்றாக்குறை. 6.2கோடிப் பேர் விவசாயத்தால் நஷடத்திற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். 50 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவானவர்கள். ரேஷன் அரிசி, மண்ணெண்ணை கடத்தலை ,முழு நேரப் பணியாக 5 சதவீத இளைஞர்கள் மேற்கொள்கிறார்கள். கல்வி ,வேலைவாய்ப்பு, மருத்துவம் என எங்கும் விரவிக் கிடக்கும் லஞ்ச கலாச்சாரம். நமது அரசு , தனது வளர்ச்சி குறித்து தரும் தகவலை,.நா. சபை நம்ப மறுக்கிறது. 27.5 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்பதை ஐநா உறுதி செய்தபோதிலும் ,5 சதவீதம்தான் என அடம் பிடிக்கிறது இந்தியா. பொய், மாயை, வறுமை, சுகாதாரமின்மை என நீண்ட பட்டியலிட்டு, இதன் அடிப்படையில் 84 நாடுகளின் பெயரைப் பட்டியலிட்டு அதில் 64 வது இடத்தை இந்தியாவிற்குத் தந்துள்ளது ,ஐக்கிய நாடுகளின் சுகாதார நிறுவனம்.

65 லட்சம் இளைஞர்கள் வேலை கேட்டு பரிதாபமாக நின்று கொண்டிருக்க ,கோடிகளைச் சுருட்டும் அரசியல்வாதிகள், வாரிசு அரசியல் போராட்டம், வண்ணமயமான விழாக்கள், மேடை பிரசாரங்கள் என மதி மயக்கும் செயல்களோடு நமது துணை முதல்வர், நாம் சிறப்புற வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என பெருமைப் படுகிறார். இப்படியான சூழலில்தான், நம்பிக்கைத் துரோகம், வஞ்சம், நியாயமற்ற தீர்ப்பு , போன்றவையே வெல்லும் என்ற மாக்கிய வெல்லியின் வரிகள், உயிர் பெறும் காலம் இதுதானோ?

kannan233@gmail.com

click here

click here
click here