உயிரோசை - Uyirosai
 
வரலாறு அவர்களுக்கான தீர்ப்பை வழங்கும்
- மு. புஷ்பராஜன்
இயற்கையும் செயற்கையும் -ராஜ மார்த்தாண்டனின் ‘நிகழாத அற்புதம்’
- பாவண்ணன்
பூச்சிகள் நம்மை எப்படித் தோற்கடித்தன மற்றும் நம்மிடம் எப்படித் தோற்றன?
- ஆர்.அபிலாஷ்
“வசனம் பேசாமலேயே சிரிப்பை வரவழைக்கிற ஆளுங்க நான்”
- த. ஜெயகுமார்
ஏதாவது ஒரு இனம் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!
- இந்திரஜித்
சாதி இரண்டொழிய வேறில்
- இந்திரா பார்த்தசாரதி
ஹலோ ‘பைக்' டெஸ்ட்டிங்!
- தமிழ் மகன்
மீள முடியுமா?
- வாஸந்தி
பொதுக்கல்வியே போதுமா..?
- அ.ராமசாமி
சிரிக்கும் புத்தர்
- ஜெயந்தி சங்கர்
தமிழ் அரசியல்வழி அண்ணா கட்டிய இந்தியா
- தமிழவன்
சினிமா நாகரிகம்
- சுதேசமித்திரன்
சிதைவின் அடையாளங்கள்
- நிஜந்தன்
கல்லூரிப் பருவத்தில். . .
- நா.முருகேச பாண்டியன்
பார்சலோனா - கவுதி- லா சக்ரதா பமிலியா
- நாகரத்தினம் கிருஷ்ணா
ஓ... செகந்திராபாத் - 11
- சுப்ரபாரதிமணியன்
வெள்ளைக்கார பச்சைத் தமிழர்: பெர்னார்ட்
- அருண்.த
அன்புள்ள அதிகாரிக்கு
- ஜனா கே
என்ன பதில்
- தேஜூ உஜ்ஜைன்
முடிவிலி
- ரெஜோ
நீரடியில் காத்திருத்தல்
- லாவண்யா சுந்தர்ராஜன்
கொல்வதற்கு பலவழிகள்
- றஞ்சினி
13 ஸ்தனங்கள்
- த.அரவிந்தன்
செவிவழிக் கதைகள்
- நரன்
பேரழகியும், அரபுநாட்டுப் பாதணிகளும் !
- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை.
என்றார் முல்லா
- தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
- தமிழில் : சஃபி
நடக்கும் என்பார்
- -
கல்வியின் விலை
- -
எது மூடநம்பிக்கை?
- -
நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்
- -
தமிழ்ப்பணி
- -
click here
“வசனம் பேசாமலேயே சிரிப்பை வரவழைக்கிற ஆளுங்க நான்”
த. ஜெயகுமார்

நகைச்சுவை நடிகர் கஞ்சா கறுப்புடன் ஒரு சந்திப்பு

தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான நகைச்சுவை நடிகர்கள் நல்ல கதையம்சமுள்ள படங்களில்தான் அறிமுகமாகியிருக்கிறார்கள். ஆனால் போகப் போக தனக்காக ஒரு காமெடி ட்ராக்கை உருவாக்கி தமிழ் ரசிகனின் மூளையில் காமெடி என்னும் பெயரில் மசாலா அரைப்பார்கள். நாமும் இதுதான் காமெடி என்று கைத்தட்டி ரசிப்போம். இரட்டை அர்த்த வசனம், நடைமுறைக்கு ஒவ்வாத நகைச்சுவை, நாடகத்தில் செய்ய வேண்டியதை எல்லாம் சினிமாவில் செய்யும் கோமாளித்தனம் எனத் தொடர்ந்து செய்து சலிப்பை ஏற்படுத்துவார்கள். தமிழ் சினிமாவில் ஓரளவு கதையோடு பொருந்திப் போகிற நகைச்சுவையைக் கொடுத்தவர்களில் தங்கவேலு, ஜனகராஜ், சார்லி போன்றோரைக் குறிப்பிட முடியும். சமீப காலத்து வெற்றிப்படங்களில் பல புது நகைச்சுவை முகங்கள் தென்படுகின்றன. பருத்தி வீரனில் டக்ளஸ் என்னும் பெயரில் நகைச்சுவையையும், சுப்ரமணியபுரத்தில் காசி என்ற பெயரில் குணச்சித்திரத்தையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் கஞ்சா கறுப்பு. ஒரு சாதாரண கிராமத்தானிடம் பேசுவது போன்ற இயல்பும், எளிமையும் கறுப்புவின் வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் இன்னொரு சூட்சுமம். அதனால் தான் இயக்குனர்களின் சாய்ஸாக இருக்கிறாரோ? என்னமோ. பெரிய வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறோம் என்ற எந்தப் பந்தாவும் இல்லாமல் அவர் உயிரோசைக்கு அளித்த பேட்டி.

எப்படி சினிமாக்கு வந்தீங்க?

எம்பாட்டுக்கு சிவகங்கையில சுத்திக்கிட்டிருந்தேன். ஒருநா பாலண்ணே கையில் வீடியோ கேமாரவுடன் வர்றவங்க போறவங்களை சூட் பண்ணிட்டு இருந்தார்ங்க. அப்ப நான் குடத்தில தண்ணி கொண்டு போன ஸ்டைலைப் பார்த்தும், என்னோட பேசுற ஸ்டைலையும் பார்த்து சினிமாவுக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க. முதல்ல பிதாமகன் படத்தில கஞ்சா கறுப்பு என்ற கேரக்டரைக் கொடுத்து நடிக்க வெச்சாங்க. அதுக்கப்புறம் பாலண்ணே ஆபீஸிலே இருந்தேன்.

பிறகு அமீர் படங்கள்ல எப்படி நடிச்சீங்க?

ராம் படத்தில நான் நடிச்ச கேரக்டருக்கு முதல்ல கருணாஸைத்தான் நடிக்க வச்சாங்க. பொறகு ஏனோ தெரியல, அது சரியா வரலைன்னு எடுத்துட்டாங்க. அப்பறம் 10 பேரைப் பார்த்ததில என்னைத் தேர்ந்தெடுத்துக் கூப்பிட்டாங்க. முதல்ல பேசும்போது அமீரண்ணே கோபமாத்தான் பேசுனார். என்ன படத்தில நடிச்சிருக்கன்னு கேட்டார். பிதாமகன்னு சொன்னதும், அந்த டயலாக்க பேசிக் காட்டுன்னார். பேசிப் காட்டினதுக்கப்புறம், ஏதாவது சாப்பிடறியான்னு கேட்டார். ஆமாம்ன்னு சொல்லிட்டு, சொல்றது சொல்றீங்க நல்ல சிக்கன் பிரியாணியா சொல்லுங்கண்ணேன்ன. அதப் பார்த்து கேமராமேன் ராம்ஜி அண்ணணும் சிரிச்சுட்டார். அப்படியே 5 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து நடிக்க வெச்சுட்டார். அப்புறம் என் கேரக்டரைப் பார்த்து பருத்தி வீரன்லயும் வாய்ப்பு கொடுத்தார்.

எதுவும் தெரியாம சினிமாவுக்கு வந்தாலும் அவங்களுக்கு எப்படியாவது சினிமாவோடு ஒரு தொடர்பு இருக்கும். உங்களுக்கு எப்படி?

சொன்னா நம்ப மாட்டீங்க. நான் பொறந்ததே சினிமா கொட்டகையிலதான். எம்ஜிஆர் படம் சினிமாக் கொட்டகையில ஓடிக்கொண்டிருக்கும்போதே எங்கம்மாவுக்கு இடுப்பு வலி வந்து அங்கே நான் பொறந்துட்டேன். அந்த வகையில நான் முதல்ல பார்த்த படம் கூட எம்ஜிஆர் படம்தான். ரெண்டாவது வரைகூட ஒழுங்கா படிக்கல. பள்ளிக்கூடத்துல பையைப் போட்டுட்டு சினிமாக் கொட்டகைக்கு ஓடிப்போய்டுவேன். வலக்கால படம் ஓடிட்டு இருந்தா மடக்கால(இடதுபுறம்) நாங்க நடிச்சிட்டு இருப்போம். அப்படியே ஊர்ல நாடகம் போட்டாங்கன்னா அவங்களோட சேர்ந்து ஊர் ஊராக வேஷம் கட்டப் போயிடுவேன். முருகர், கிருஷ்ணர், நாரதர் எனப் பல வேஷங்களைப் போடுவேன். அப்படித்தாங்க நடிப்போட நம்ம தொடர்பு.

பருத்தி வீரன் படத்தில் ஒரு அப்பாவித்தனமான கேரக்டர்? உண்மையிலே கஞ்சா கறுப்பு அப்படித்தானா?

எனக்குள்ளே இருக்கிறது அதுதான்னு அமீரண்ணனே கண்டுபிடிச்சார். அவர் என்ன சொன்னாரோ அதையேதான் நா செஞ்சிருக்கேன். தேவையான இடத்தில மட்டும் கொஞ்ச நஞ்சம் பில்-டப் கொடுத்து நடிச்சிருப்பேன் அவ்வளவுதான்.

சுப்ரமணியபுரம் படத்தின் இறுதியில் அமைதியா நடந்து வருகிற காட்சியில் எப்படி அப்படியொரு நடிப்பைக் கொடுக்க முடிந்தது? ஏனென்றால் தொடர்ந்து காமெடி ரோல் பண்ணிட்டு திடீர்னு இப்படி ஒரு கனமான கேரக்டரை எப்படி செய்ய முடிந்தது?

அந்தப் பய(சசிகுமார்) கதையைச் சொல்லும்போதே இப்படித் தான் நீங்க நடிக்கணும்னான். ஓபனிங் ஸீன்லேயும் நீதான் வர; கடைசி ஸீன்லேயும் நீதான் முடிக்கிறன்னான். அந்த ஸீனு பண்ணும்போது, பணத்துக்காக ஒரு ஆளைக் காட்டிக்கொடுத்துட்டு எப்படி எஸ்கேப் ஆகிறோமோ, அப்படியே என்னை நினைச்சுகிட்டு நடிச்சேன். ரெண்டு வாட்டி நடக்கச் சொன்னாங்க. மூணாவது வாட்டி ஓகே ஆயிடுச்சி. படத்தை எடுத்துட்டு பாக்கும்போது இந்தப் பய என்னடா இப்படி எடுத்திருக்கானே! இது ஓடப்போகுதான்னு நினைச்சேன். நினைச்சதுக்கு மாறா பெரிய ஹிட்.

பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் படங்களுக்குப் பிறகு கஞ்சா கறுப்புக்கு எந்த கேரக்டரைக் கொடுத்தாலும் செய்வான் என்று கொடுத்தால் செய்வீங்களா?

டைரக்டருங்க என்கிட்ட என்ன வரும்னு நினைக்கிறாங்களோ அத அவங்க எடுத்துக்கிறாங்க. அதிகம் வசனம் பேசாமலே சிரிப்பை வர வைக்கிற ஆளுங்க நான். அதனால அதற்கு தகுந்த மாதிரி டைரக்டருங்களே என்னை அவங்க படத்துக்கு எடுத்துக்கிறாங்க.

பாலா, அமீர் இவங்க இல்லையென்றால் கஞ்சா கறுப்பு இல்லை? உண்மையா?

ஆமாண்ணே. இவங்க இல்லையென்னா இன்னேரம் கஞ்சா கறுப்பு எங்கேயாவது டீக்கடையில டீ கிளாஸை கழுவிக்கிட்டோ, ஹோட்டல்ல இலை எடுத்துக்கிட்டோ இருந்திருப்பான். எனக்கு அவங்க தெய்வம் மாதிரிண்ணே. கடவுள கும்பிடறனோ இல்லையோ, இவங்களை தினமும் கும்பிடறேன்.

சரி! பாலா, அமீர், சசிகுமார் இவங்க மூணு பேர்ல உங்ககிட்ட உள்ள நகைச்சுவையையோ, நடிப்பையோ வாங்கறதுல யாரு கெட்டிக்காரங்க?

குட்டைய குழப்பறிங்களே. வேணாம்ணே, மாட்டிவிட்ராதிங்க.

சரி ஒரு இயக்குனர் எப்படி நடந்துகிட்டா (வேலை வாங்கினா) உங்க மாதிரி ஆட்கள்கிட்ட இருந்து நகைச்சுவையைப் பெற முடியும்?

இதுக்கெல்லாம் அவகவங்களுக்குத் தோணனும்ணே. பாலாண்ணனும், அமீரண்ணனும் பார்த்த உடனேயே அவங்க எப்படிப்பட்ட ஆளு, அவங்களுக்கு என்ன வரும்னு உள்ளுணர்வாலே கண்டுபிடிச்சிருவாங்க. அப்படித்தான் எங்கிட்ட இருந்தத அவுங்க கண்டுபிடிச்சாங்க.

பெரும்பாலான காமெடியன்கள் பிரபலம் அடைந்துவிட்டால் அடுத்து தனக்காக ஒரு காமெடி ட்ராக்கை உருவாக்கி நடிக்க ஆரம்பிச்சிருவாங்க நீங்க எப்படி?

நாம எப்பவுமே சைலண்டா காமெடிய வெளிப்படுத்தற ஆளுங்க. அதனால டைரக்டருங்க நான் செய்ய வேண்டிய காமெடிய அவங்களே கொடுத்தர்றாங்க. அதனால பிரச்சினை இல்ல. ஆனா கூடிய சீக்கிரம் தனியா காமெடி ட்ராக் செய்யலாம்னு இருக்கேன். அதற்கான முயற்சிகள் நடந்துகிட்டு இருக்கு.

உங்களுக்குப் பிடிச்ச நகைச்சுவை நடிகர் யாருனு சொல்லுங்க?

எனக்கு சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என எல்லா காமெடி நடிகரையும் பிடிக்கும்.

எப்படி மதுரை மாவட்ட பேச்சு வழக்கு வருது? பயிற்சி ஏதாவது எடுத்துக்கறீங்களா?

இப்ப இருக்கிற சிவகங்கை, அப்போ மதுரை மாவட்டத்தில இருந்துச்சு. அதனால பேச்சு வழக்கு மதுரக்காருங்க மாதிரியே அமைஞ்சு போச்சு. இப்போ எந்த வசனத்தைக் கொடுத்தாலும் அத என்னோட பேச்சு வழக்கில் தான் பேசுகிறேன். டயலாக்குக்குத்தான் ஒத்திகை பார்ப்பேன். பேச்சு வழக்கை அப்படியே ஏற்றி இறக்கி பேசிருவேன். கிருஷ்ண லீலை படத்துல ஒரு காமெடி சீன்,

கிருஷ்ணர் பூலோகத்தில் இருப்பார். நாரதர் தேவலோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருவார். அப்போது கிருஷ்ணர் கேட்பார், "ஏன் தேவலோகத்திலிருந்து வந்து விட்டாய்?"

அதற்கு நாரதர், "தேவலோகத்தில் மின்சாரம் இல்ல. அதனால புழுக்கம் தாங்காம பூலோகத்துக்கு வந்துவிட்டேன்" என்பார்.

இதில் நாரதராக நான் நடித்திருக்கிறேன். வசனம் இதுதான் என்றாலும் அதை என் பேச்சு வழக்கில் பேசியிருப்பேன்.

என்னன்ன படங்கள் நடிச்சிட்டு இருக்கீங்க?

மலை மலை, நாடோடிகள், கிருஷ்ண லீலை, தாண்டவக்கோன், உச்சாயி, ஆறுமனமே போன்ற படங்களில் நடித்து வருகிறேன்.

உங்க உண்மையான பேரு என்ன?

என் உண்மையான பேரு கறுப்பு ராஜா. சினிமாவுக்காக கஞ்சா கறுப்பு ஆயிட்டேன்.

உயிர்மை இதழ் படிச்சிருக்கிங்களா?

இல்ல. பாத்திருக்கேன்.

நீங்க ஜெயிச்சதுக்கு எந்த விஷயத்தை பிளஸ் பாயிண்ட்டா எடுத்துக்கிறீங்க?

நான் ஜெயிச்சதுக்கு காரணமே பாலண்ணனும், அமீரண்ணனும்தான். அவங்க இல்லையானா கஞ்சா கறுப்பு இல்ல. சினிமாவில நிலைக்கணுங்கற ஒரே காரணத்துக்காக நம்பிக்கையோடு உழைச்சிட்டு இருக்கேன். சினிமாவில எனக்கு வாழ்க்கை கொடுத்த பாலா, அமீர் பேர்ல ஒரு தொடக்கப்பள்ளியைக் கட்டணும்னு இருக்கேன்.

click here

click here
click here