உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
ஜெயகுமார்

 

கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் காலை 8.50 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒன்றே சொல்! நன்றே சொல்!நிகழ்ச்சியில் திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் பேசிய பேச்சுகள் 3 தொகுப்பாக நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. நூலின் வெளியீட்டு விழா ராணி சீதை அரங்கில் 13.4.09 அன்று மாலை நடைபெற்றது.

 

சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக உரிமையாளர் சுப. புகழேந்தி வரவேற்புரை நிகழ்த்த, மாநிலத் திட்டக்குழுத் துணைத்தலைவர் மு. நாகநாதன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நூலை வெளியிட, நடிகர் சத்யராஜ் பெற்றுக்கொண்டார். அரங்கில் கறுப்புச் சட்டைக்காரர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது என்றால் அதில் பொய்யில்லை. நூலை வெளியிடுவதற்கு முன்னரே மு. நாகநாதன் பேச ஆரம்பித்துவிட்டார். தான் 31 ஆண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த வரலாற்றைச் சொல்லிப் பேச்சைத் துவக்கினார். சுப. வீரபாண்டியனின் தந்தையார் திரு. இராம. சுப்பையா திராவிடக் கழகத்தில் இருந்தபோது பல சுய மரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்தவர் என்ற தகவலைக் கூறினார். ஆனால் அவருடைய பிள்ளைகளுக்கு சுய மரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்தாரா என்று நாம் கேட்க முடியாது. ஏனெனில் மேடையில் பேசும் பேச்சுகளைக் கேள்வி கேட்கக் கூடாது.

 

அவர் கூறிய நம்பகமான தகவல் இதுபோன்று குட்டிக் கதைகளைச் சொல்லித் தகவல்களைக் கூறும் வழக்கத்தை முதலில் தொடங்கியவர் எழுத்தாளர் வின்ஸ்டன் சர்ச்சில்(இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அல்ல). தமிழில் தென்கச்சி சுவாமிநாதன். குறைந்த நேரத்தில் குட்டிக் கதைகளைச் சொல்லி ஏதாவதொரு தகவலைச் சொல்வார். முதலில் வானொலியில் பேசிக் கொண்டிருந்தார். தற்போது டி.வி.யிலும் பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது சுப. வீரபாண்டியன் கலைஞர் டி.வியில் இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறார் என அழைத்ததற்கு ஏற்பப் பேசி முடித்தார். பின் மொழியின் சிறப்பு, பொருளின் சிறப்பு எனக் கதை கதையாகப் பேசித் தள்ளினார். கூட்டம் காதில் போட்டுக்காமல் வேடிக்கை பார்த்தது.

 

தோழர் அன்புத் தென்னரசன் சுப. வீரபாண்டியனைப் புகழ்ந்து தள்ளுவதில்தான் ஆர்வம் போலிருக்கிறது. சத்தம் காதைக் கிழித்தது. கருத்துகள் பேன் காற்றில் கரைந்தது. ஏதோ இறுதியில் இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேச வந்தபோது கிராம வாழ்க்கை, நகர வாழ்க்கையை அறிந்திருக்கிறோம். ஆனால் அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி இன்னும் நாம் அறிந்து கொள்ளவில்லை என்று கூறி முடித்தார்.

 

கேலக்ஸி நிறுவனத்தின் நிறுவனர் ரமேஷ் பிரபா, ஏற்கனவே சன் டிவியில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடத்திப் புகழ்பெற்றிருப்பவர். கலைஞர் டிவியில் ஒன்றே சொல் நன்றே சொல்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். வழக்கமான நிகழ்ச்சி குறித்த பல்லவி. சுப.வீ பற்றிய சரணம். கூடுதலாகச் சொல்லிய தகவல், இந்தியாவில் இருக்கும் ஆங்கில சேனல்களுக்கு வட மாநிலங்கள் பற்றிய செய்திகளுக்கே அதிக முக்கியத்துவத்தைத் தருகின்றன. தென் மாநிலங்களைப் பற்றி அதிக அக்கறை கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. சில நேரங்களில் தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளை விவாதிக்கும்(Debate) நிகழ்ச்சிகளில் பார்ப்பனர்களை அழைத்து விவாதிக்கும். அதுவே தமிழ் மக்களின் குரலாக அந்தச் சேனல்கள் ஒளிபரப்பும். இது ஒருசாரர் கருத்து. இதுபோன்ற விவாதங்களில் நம் ஆட்களும்(பார்ப்பனரல்லாதோர்) கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

 

அடுத்து பேச வந்த வழக்கறிஞர் அருள்மொழி வழக்கமான பெண்ணியம் சார்ந்த கருத்துகளை உதிர்க்கத் தவறவில்லை. இதுபோன்ற கூட்டங்களுக்குப் பெண்களை அழைத்து வர வேண்டும் என்கிறார். இன்றைக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடர்களின் கதைகளை யார் அவர்களிடம் சொல்வது? அறிவுபூர்வமான தகவல்களைக் கேட்டுக்கொள்வதிலோ? சமூக அக்கறையின்பால் தமிழ்ப் பெண்களுக்கு இருக்கும் அக்கறை பற்றியோ அருள்மொழி அறியாததா? ஏன் மேடைக்கு மேடை பெண்ணியம் சார்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. அது அரங்கிற்கு வெளியே போய் விழுவதில்லை. பெண்ணியம் சார்ந்த குரல்களுக்குத் தமிழ் ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் யாவரும் அறிந்ததே? பெண்களைப் பற்றி பெரியார் சொன்னார்! பெரியார் சொன்னார்! இங்கே யார் அதைக் கேட்டார்? பெரியார் சொன்ன பெண் விடுதலை எல்லாம் மலையேறிவிட்டது. காலமும் சூழ்நிலையும் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ஆண்கள் சார்ந்த உலகமும் அதற்கு இடம் கொடுத்ததாகத் தெரியவில்லை.

 

பெரியார்தாசனுக்கு மட்டும் பேசுவதற்கென்றே கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. வழக்கமாக பார்ப்பனர் மீது அடிக்கும் லூட்டிக்கு அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது. சென்னைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆரம்பக் காலங்களில் பிராமணர்கள் மட்டுமே பங்கேற்றுவந்தனர். தஞ்சை வாணன் தலைமையேற்ற பிறகே அதில் மற்றவர்களுக்கும் பேசுவதற்கு, நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பெரியார்தாசனுக்கும் சோ. ராமசாமிக்கும் விவாத அரங்கம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, அந்நிகழ்ச்சிக்கு சோவராமல் "நேக்கு உடம்பு சரியில்லை. நாளை பாத்துக்குவோம்" என்று சொல்லி நாள் கடத்தியதையும் சொல்லிச் சிரிக்க வைத்தார். முடிவாக, தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசியபோது, தமிழ் இலக்கியத்தில் அறிவுக்கும் உணர்வுக்குமான தேடுதல்கள் நிறைய உண்டு என்று பேசி முடித்தார்.

 

சத்யராஜிடம், எப்படி பெரியார் படத்தில் நாகம்மைக்குக் கணவனாக நடிக்க முடியுது? நமீதாவுடன் சேர்ந்து குத்தாட்டமும் போட முடியுது? என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டபோது நீங்க எப்படி மானாட மயிலாட நிகழ்ச்சியையும் பார்க்க முடியுது? தோழர் சுப.வீ நிகழ்ச்சியையும் பார்க்க முடியுதோ அது மாதிரிதான் என்று ஆரம்பமே அமர்க்களப்படுத்தினார்.

 

பாமரனுக்கும் ஆசிரியர் தேவைப்படுகிறது. பணக்காரனுக்கும் ஆசிரியர் தேவைப்படுகிறது. அதுவும் என்னைப் போன்ற சினிமா நடிகர்கள் தங்கக் கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட கிளி மாதிரி. வெளியில் எதுவும் நடக்காதது போன்ற தோற்றமே காணப்படும். விடுதலை, உண்மை, தமிழ்மண் போன்ற பத்திரிகைகள் வாயிலாகத்தான் அறிய முடிகிறது சமூகத்தை. நடிகன் எப்போதும் நல்ல கொள்கைகளுக்குத் துணை நிற்க வேண்டும். நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. இதற்காவது ஏதாவதொரு கட்சியிலிருந்து சத்யராஜுக்கு அழைப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

சூட்டிங் இல்லையென்றால் காலை எட்டு மணிக்கு மேல் உடற்பயிற்சி செய்துகொண்டே பேஷன் டிவி பார்ப்பது வழக்கம். அதில் வரும் ஒவ்வொரு தேசத்து அழகிகளின் நடை, உடைகளை கவனிப்பதே ஒரு அழகுதான். எதேச்சையாக ஒரு நாள் சுப.வீ நிகழ்ச்சியைப் பார்த்தேன். அன்றிலிருந்து 8.50க்கு சுப.வீ நிகழ்ச்சியைப் பார்த்துவிடுவேன் என்று ஒரு பெரிய ஐஸ்ஸைப் போட்டு உடைத்தார். எவ்வளவு ஜில்லென்று இருந்தது என்று தோழர் சுப. வீதான் சொல்ல வேண்டும்.

 

இறுதியாக, இலங்கையில் போர் நிறுத்தம்! போர் நிறுத்தம்! இலங்கைத் தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டும் - உணர்ச்சியுடன் முடித்துக்கொண்டார்.

 

தொல். திருமாவளவன் கடைசியாகப் பேச ஆரம்பித்தார். திருமாவளவனின் பேச்சாற்றல் முன்பைவிட வளர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. ஆனால் திமுக கூட்டணி பிரச்சாரத்தை இங்கிருந்தே தொடங்கிவிட்டார் போலிருக்கிறது. ஜெயலலிதாவையும் விடவில்லை. தா. பாண்டியனையும் விட்டுவைக்கவில்லை. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைக் கிழி கிழித்துவிட்டார். நெடுமாறனுக்கும் நல்ல டோஸ்! அப்புறம் எப்படி சகித்துக்கொண்டு இருந்தாரோ திருமா தெரியவில்லை. அந்த இயக்கத்தை கலைஞரை எதிர்க்கத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தினர் என்கிறார். ஏன் இதை அப்போதே கூறியிருக்கலாமில்லையா? அப்போது கூட்டணி முடிவாகவில்லையா? என்றுதான் தோன்றுகிறது நமக்கு. பாமக நிறுவனர் ராமதாஸை எதிர்ப்பதில் மட்டும் ஏன் இவ்வளவு கஞ்சத்தனம் என்று புரியவில்லை திருமா.

 

தலித்துகளுக்கான உரிமைப் பிரச்சனைகள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருக்க அதையெல்லாம் விட்டுவிட்டு இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்தபோதே திருமாவளவனின் அரசியல் கணக்கு தொடங்குகிறது. திருமாவளவனுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை இலங்கைத் தமிழர் பிரச்சனை. இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடப் பல கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. எந்தப் போராட்டமும் மத்திய அரசின் காதுகளில் விழாத போது திருமாவின் தினசரி ஆர்ப்பாட்டம், உண்ணா நிலை, பஸ் எரிப்பு, கட்சித் தொண்டர்களின் தீக்குளிப்பு எதற்கு? இலங்கைப் பிரச்சினைக்காக இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் 26 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் சிலபேர் தீக்குளிப்பில் இறந்துள்ளனர் என ஆதங்கப்படுகிறார் திருமா. இலங்கைப் பிரச்சினையில் பெரிய கட்சிகளே மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும்போது திருமாவுக்கு மட்டும் ஏன் இந்த உணர்ச்சி வேகம். அன்றாட வயித்துக்காகப் போராடும் தமிழகத்தின் தலித்துகளை ஏன் பெரிய பிரச்சினையில் ஈடுபடுத்தி அவர்களைச் சிறைகளுக்கும் தீக்குளிப்புக்கும் பஸ் எரிப்புக்கும் அனுப்ப வேண்டும். இதுபோன்ற அடையாளத்தைப் பெறுகின்ற போராட்டங்கள் வேண்டாம். உங்கள் மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடுங்கள் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

 

உண்ணா நிலை இருந்த போது செத்த பிறகாவது தமிழினம் ஒன்று சேரட்டும் என்று போராடினீர்? நீ இறந்தால் தமிழகம் இலங்கைப் பிரச்சினைக்கு ஒன்று சேர்ந்துவிடுமா? சொல்லுங்கள். ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லித் தீராது. நாம் எப்படிச் சொன்னாலும் திருமாவின் அரசியல் கணக்கு வேறு. அதை காலம்தான் அவர்க்கு உணர்த்தும். சுப.வீ குறித்து திருமாவின் பேச்சொன்றுமில்லை. அரசியல் பேசினார். அதனால் நாம் கொஞ்சம் அரசியல் பேசிவிட்டோம்.

 

இறுதியாக, தோழர் சுப. வீரபாண்டியன் நன்றி கூறினார்.

click here

click here
click here