உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
-

 

நிவேதினி

(பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)

 

ஆண்டுச் சந்தா : ரூ.250

முகவரி : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

58, தர்மராம ரோடு,

வெள்ளவத்தை,

கொழும்பு-06.

ஸ்ரீலங்கா.

 

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினரால் 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளே மொத்தமாகப் பிரசுரிக்கப்பட்டு நிவேதினிஇதழாக வெளிவந்திருக்கிறது.

 தேசியம், மதம், அரசியல், வாழ்வியல் போன்றவற்றில் ஊடுருவி நிற்கும் ஆண் தலைமைத்துவத்தை எதிர்கொள்ளும் பெண் நிலைவாதம் என்ற தலைப்புக்கு தெற்காசியா முழுவதும் கட்டுரைகள் கோரப்பட்டாலும், வந்தவை இந்தியா, இலங்கை மட்டுமே.

 கடந்த இருபது வருடங்களாக நம் நாட்டில் நடந்துவரும் போரும் அதன் உள்கிடக்கையான தேசீயமும் இலங்கை கட்டுரையாளர்களுக்கு தவிர்க்க முடியாத கருப்பொருள் ஆகியுள்ளன.

எனக்கொரு அழைப்பு தருவாயா?

தங்க எங்கும் இடமற்று நீ வாழும் தேசம் வரை

நீண்டு நீண்டு வருகின்றன என் கனவுகள்

-பஹீமா ஜெகான்

 எழுத்தாளர் இமயத்தின் செடல்நாவலை சாதீய ஆணாதிக்கம், அடையாள அரசியல் போன்றவை தலித் பெண்ணிய பார்வையில் எப்படி வெளிப்படுகிறது என்பதை ஆனந்தி எடுத்தியம்பியுள்ளார்.

பொன்னி, பெண்ணிலைவாத நாடகத்தின் ஆக்கம் எப்படி காலக்கனவாகப் பரிணமித்தது என்பதை விளக்குகிறார்.

 அனுசுயா சேனாதிராஜா, பெண்களுக்கு போர்க்காலத்தின் ஊடாக ஏற்படும் அனர்த்தங்களை விளக்கி, எவ்வாறு அனர்த்தங்களை எதிர்கொள்வது என்று ஒரு ஆய்வு செய்துள்ளார்.

தமிழ் உடலரசியலின் மூன்றாம் பரிமாணம்’ என்ற தலைப்பில் குட்டி ரேவதி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (தமிழின் ஒரே சொல் ஆணால் பயன்படுத்தும்போது அவனது அதிகாரப்பிரயோகமாகவும், பெண் அந்தச் சொல்லைப் பயன்படுத்த இயலாதபடி சமூக இறுக்கமாகவும் வெளிப்படுகிறது.)

பண்பாட்டிற்கு மறுபக்கங்களும் உண்டு’ என்கிற செல்வி திருச்சந்திரன் கட்டுரை- ஹோமோசெக்ஸுவல், லெஸ்பியன் என்ற பூர்வீகமும் வரலாறும் இருக்கும் ஒரு விஷயத்தை நாம் கொச்சைப்படுத்தக்கூடாது. அறிவு பூர்வமாக அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் நம் பண்பாட்டின் ஒரு கூறுதான்-என வாதிடுகிறது.

பாண்டியன்

click here

click here
click here