உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
-

நூலின் பெயர் : கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்

(சில நெடுங்கதைகள் சில சிறுகதைகள்)

ஆசிரியர் : சூரங்குடி அ.முத்தானந்தம்

வெளியீடு : அருவி வெளியீடு,

5-D, பொன்னம்பலம் சாலை,

கே.கே.நகர்,

சென்னை-78.

கைப்பேசி: 9444302967

விலை : ரூ.110

 

இத்தொகுப்பிலுள்ள கதைகள், நான் அனுபவித்ததும், பார்த்ததும், கேட்டதுமான விசயங்களைக் கொண்டு ஆக்கப்பட்டதாகும். கி.ராஜநாராயணன் தொகுக்க இருந்த குறுநாவல்த் தொகுப்புக்காக எழுதப்பட்ட குறுநாவல்தான் கரிசல்க் காட்டில் ஒரு மாமாவும் அத்தையும்என்கிற கதை. (நூலின் அட்டையில் கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்என மாறி வந்துள்ளது) எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு அப்புராணிப் பையனைப் பார்த்து ரசித்து எழுதப்பட்ட கதை சோறு’. இக்கதை கணையாழிஇதழ் நடத்திய குறுநாவல்ப் போட்டியில் முதல் பரிசு பெற்றதாகும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய குறுநாவல்ப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை, ‘வீழ்ச்சி’- என்று நூலாசிரியர் அ.முத்தானந்தம் தன்னுரையில் சொல்லியிருக்கிறார்.

இவர் மீது ரொம்பப் பிரியம் கொண்டு, இவரது எழுத்துக்கள் அச்சு வாகனம் ஏற உறுதுணை புரிந்தவரான எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்கள் கீழ்க்கண்டவாறு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

 முத்தானந்தத்தின் எழுத்து, யதார்த்த எழுத்து; நேரடிக் காட்சி ரூபப்படுத்துதல் இவரது எழுத்து முறை. ஏதொன்றையும் காட்சி ரூபமாய்த் தருகிறார். காட்சி ரூபத்திலிருந்து கருத்து நிலைக்கு நகர்த்துகிறார். காட்சிகளைப் பரப்பி விரித்துவைத்து தேவைப்பட்ட சிந்தனையை உருவாக்கிக்கொள்ள வசதி செய்து தருகிறார்.

 செழிப்பான சொல்லாடல்களும், மக்கள் தேக்கி அணை கட்டி வைத்திருக்கும் வெளிப்பாட்டு முறைகளும் இவரது எழுத்தில் நுட்பமாக வெளிப்படுகின்றன.

 

பாண்டியன்

click here

click here
click here