உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
தி.க.சி - தீப. ந வுக்கு........
-

தி.. சிவசங்கரன் (தி..சி) 21E, சுடலைமாடன் தெரு,

(பேசி : 2333456) நெல்லை - 627006

27.7.2005, புதன்

 

எங்கள் அருமை நண்பர் தீப. நடராஜன் அவர்களுக்கு, வணக்கம். நலம்; நலமறிய மிக்க அவா. நேற்று மதியம், கூரியரில் தங்கள் 23.7.2005 மடல் பெற்றேன்; அத்துடன் இருந்த இணைப்புக்களையும் படித்தேன்; மிக்க மகிழ்ச்சி; நன்றி.

 

22.7.05 ‘தினமணியில், ‘அபூர்வத்தமிழ் மகன்எனும் தலைப்பில் வந்துள்ள, ரசிகமணி டி.கே.சி. பற்றிய என் கடிதம் குறித்த தங்கள் அன்பு மொழிகளுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி. தங்கள் இதயஒலியை, எவ்விதப் பாசாங்கும் பம்மாத்தும் இல்லாமல், அப்படியே குற்றால அருவி போலக் கொட்டியிருக்கிறீர்கள்; உளம் நெகிழ்ந்தேன்; ரசிகமணி விட்டுச் சென்ற சொத்துக்களில், நீங்கள் ஒரு முக்கியமான செல்வம் என்றால், அது மிகையல்ல; ரசிகமணியின் பண்பு நலன்களை, மிக நேர்மையாகவும், உண்மையாகவும், பேணி வளர்த்து வருகிறீர்கள்; இது இக்காலத்தில், பல பேரன் பேத்திகளிடம் காணமுடியாத அரிய பண்பு என்றே கூறலாம்!...

 

இனிய நண்பரே!

எனது மாணவப்பருவத்திலிருந்தே - சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பாகவே- பாரதி, பாரதிதாசன், ரசிகமணி டி.கே.சி, புதுமைப்பித்தன் ஆகியோர், என்னைச் செதுக்கிய சிற்பிகளில், முதன்மையானவர் ஆவர்; இவர்களுடைய தமிழும், தமிழ் உணர்வின் வெளிப்பாடுகளும், இன்றளவும் எனது நாடி நரம்புகளில் ஊடுருவி நிற்கின்றன; எனவே, என்னால் இயன்ற வரையில், இந்தத் தமிழ்ப் பெரியார்களின் அருமை பெருமைகளை, என் எழுத்துக்களில், இளைய தலைமுறைக்கு இனம் காட்டிக் கொண்டேயிருப்பேன். ரசிகமணி அவர்களின் அழகியல், அறிவியல், அற இயல் (Ethies) தத்துவமும், செயல்பாடுகளும், இன்றும் விரிந்த அளவில், முழுப்பார்வையுடன், நூல்வடிவில் வரவேண்டும் என்பது, என் அவா; சந்தைக் கலாசாரம், தலை விரித்தாடும் இன்றையச் சூழலில், இத்தகைய மகத்தான பணியை யார் செய்யப்போகிறார்கள்?.....

என்றும் அன்புடன்

தி..சி

 

கடிதச்சேகரம் : கழனியூரன்

click here

click here
click here