உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
என்றார் முல்லா
தமிழில் சஃபி

யாருக்கும் உண்மையாகத் தெரியவில்லை

தான் யாரென்று தெரியவில்லை என்பதை திடீரென உணர்ந்த முல்லா, தன்னை யாராவது தெரிந்து கொள்கிறார்களா என்பதை அறிவதற்காக தெருவுக்கு ஓடினார்.அப்படி ஓடியதில்,

முன்பின் பழக்கமில்லாத ஊரில் போய் நின்றார் முல்லா. நெருக்கமாக மக்கள் கூட்டம் போய் வந்து கொண்டிருந்தது.

தெரிந்த முகம் எதுவும் அகப்படவில்லை முல்லாவுக்கு.

திடீரென தான் ஒரு ஆசாரி பட்டறையில் போய் நின்றிருப்பதை உணர்ந்தார் முல்லா.

"நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டுக் கொண்டே முன் வந்தார் ஆசாரி.

நஸ்ருத்தீன் எதுவும் பேசவில்லை.

"எதாவது மரச் சாமான்கள் வாங்கப் பிரியப்படுகிறீர்களா? " என்று கேட்டார் ஆசாரி.

"முதலில் அது பிரச்சினையில்லை. நான் கடைக்குள் வருவதை நீங்கள் பார்த்தீர்களா?" என்று கேட்டார் முல்லா.

"ஆமாம். பார்த்தேன்."

"நல்லது. என்னை வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்திருக்கிறீர்களா? " என்று கேட்டார் முல்லா.

"பார்த்ததேயில்லை. " என்றார் ஆசாரி

"அப்படியானால், அது ’நான்தான்’ என்று எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று கேட்டார் முல்லா.

  

விளக்கின் பயன்

 

"என்னால் இரவிலும் பார்க்க முடியும்" என்று தேனீர்க் கடையில் உட்கார்ந்திருந்த முல்லா நஸ்ருத்தீன் பெருமைப்பட்டு சொல்லிக் கொண்டார்.

"அப்படியானால், நாங்கள் சில சமயங்களில் விளக்கைத் தூக்கிக் கொண்டு நீங்கள் நடப்பதை ஏன் பார்க்க வேண்டியிருக்கிறது? " என்றனர் சுற்றியிருந்தோர்.

"மற்றவர்கள் என் மீது மோதிவிடாமல் தடுப்பதற்காகத்தான்" என்றார் முல்லா.

 

click here

click here
click here