உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
திரையில் மறைந்த பிம்பங்கள்
சுப்ரபாரதி மணியன்

செகந்திரபாத் நினைவுகள் - 4

 

ஞாயிறு மாலைகளில் பப்ளிக் கார்டன், பிர்லா மந்திர், டாங்க் பெண்ட், ரவீந்திரபாரதி என்று திரிந்த ஒரு நாளில் பிலிம்கிளப் அறிமுகமானது. ரவீந்திரபாரதியில் ஏதாவது நிகழ்ச்சிகள் மாலைகளில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். எல்லா மாநிலங்களிலும் ரவீந்திரபாரதி என்ற பெயரில் ஆடிட்டோரியங்கள் உண்டு. தமிழகத்தில் கிடையாது. அதற்காக வந்த நிதியை எதற்கோ செலவழித்து விட்டு அரசாங்க பொது ஆடிட்டோடிரியம் ஒன்றை இழந்துவிட்டிருக்கிறோம்.

ஒரு ஞாயிறு மாலையில் ரவீந்திரபாரதியின் மாடியின் மினி ஆடிட்டோரியத்தில் சிறு கூட்டம் தென்பட்டது. நுழைய முற்பட்டேன். தடுக்கப்பட்டேன். பிலிம் கிளப் நிகழ்ச்சி. உறுப்பினர்களுக்கு மட்டும்தான் என்றார் வாசலில் இருந்தவர்.

 அங்கு தென்பட்ட ஓவியர் வைகுந்தன் நீ ஏன் பிலிம் கிளப்பில் சேரக்கூடாது என்றார். செகந்திராபாத்தில் இயக்குனர் பி.நரசிங்கராவின் பட அலுவலகத்தில் வைகுந்தனைச் சந்தித்திருக்கிறேன். பிறகு வெவ்வேறு ஓவியக் கண்காட்சிகளிலும் அவரின் ஓவியங்களில் ஆந்திர கிராம மக்களில் பெண்களின் சித்தரிப்புகள் விசேசமானதாக இருக்கும். பெருத்த பொருட்கள், திமிறும் உடம்பு, பெருத்த தொப்புள், குள்ள உருவங்களாய் அழுத்தமான வர்ணங்களில் தென்படுவார்கள். வைகுந்தன் பிலிம் கிளப் செகரெட்டரி பிரகாஷ்ரெட்டியிடம் அறிமுகப்படுத்தினார். (பின்னர் பிரகாஷ் ரெட்டி அங்கு நடந்த தென்னிந்திய திரைப்படம் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகியாக திருப்பூர் வி.டி. சுப்ரமணியத்தை அறிமுகப்படுத்தினார். திருப்பூர் வி.டி. சுப்ரமணியத்தின் கலை இலக்கிய மற்றும் திரைப்படச் சங்கப் பணிகள் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்).

 அன்றைக்கு பிலிம் கிளப்பில் சிந்துபாத் என்ற படம் இருந்தது. நான் அப்படத்தில் தேடினேன். தினத்தந்தி லைலாவை மனதில் கொண்டு பல லைலாக்கள் அதில் இருந்தனர். சிந்துபாத் பெண்களிடம் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். பல பெண்களுடன் உறவு கொள்பவனாக இருந்தான். மிகவும் கிளர்ச்சி தரத்தக்க படமாக அது இருந்தது.

 ஹைதராபாத் பிலிம் கிளப்பைப் போல இரண்டு இருந்தன. அவற்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. பின்னர் ஹைதராபாத் பிலிம் கிளப் மட்டும் நிலைத்தது. கிளப் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நகரின் ஒதுக்குப்புறமான சாரதி ஸ்டுடியோவில் நடந்தன. சாரதி ஸ்டுடியோ அமீர்பேட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து போகும் தொலைவில் இருந்தது. அலுவலகம், செகந்திராபாத் வீடு இவற்றுக்கு வெகு தொலைவானதாக இருந்தது. சாரதா ஸ்டுடியோவில் பட நிகழ்ச்சி என்றால் தூரத்தை மீறி உற்சாகம் வந்துவிடும். காரணம் அங்கு தொடர்ச்சியாக ஏதாவது படப்பிடிப்பு இருந்து கொண்டே இருக்கும். கூட்டம் வேடிக்கை பார்க்கவென்று முட்டித் தள்ளிக் கொண்டிருக்க திரைப்படச் சங்க உறுப்பினர் என்ற வகையிலும், அன்றைய திரைப்பட நிகழ்ச்சியைச் சொல்லியும் சுலபமாக உள்ளே போய்விடலாம். திரைப்பட நிகழ்ச்சி கூட்டம் சேர்வதற்காக தாமதமாகவே துவங்கும். அதுவரை இந்திப் படப்பிடிப்புகள் இருக்கும். அபூர்வமாய் தமிழ் மற்றும் கன்னடமும் வேடிக்கை பார்க்கவும். திரைப்படக் கலைஞர்களுடன் பேசவும் வாய்ப்பாக இருக்கும். சிலருடனான பேச்சை சிறு பேட்டிகளாவும் செய்ய வாய்ப்பிருந்தது.

 ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இருக்கும் இரட்டை நகரங்களில் நாலைந்து தமிழர்களே திரைப்படச்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். அதில் ஒருவர் அசோகன். ராசி சிமெண்ட் கம்பெனியின் முக்கிய பொறுப்பில் இருந்தார். அவருக்கு உலகத்திரைப்படங்களில் தென்படும் பாலியல் காட்சிகளில் ஈடுபாடு உண்டு. அதில்லாத படங்கள் அவருக்கு அலுப்பூட்டும். படத்தின் கதையைப் புரிந்துகொள்ள முயல்வார். பாலியல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சப்படம் என்றால் உட்காருவார். அது போல் கிளம்புவதற்கென்று ஒரு கோஷ்டியே இருந்தது. அவர் கிளம்பிய பின் பாலியல் படுக்கைக் காட்சிகள் ஏதாவது இருந்துவிட்டால் பின்னர் தொலைபேசியில் தகவல் கேட்டுவிட்டு சுலபமாக மனமுடைந்துபோவார். திரைப்படச் சங்கத்தின் திரையிடல்கள் மீது எப்போதும் அதிருப்தி கொள்வார். "அவங்கவங்க ஊர்ல ஓடாத படங்களைத்தா இங்க கொண்டுட்டு வந்து காட்டறாங்க போல" என்பதுதான் அவரின் தீர்மானமான விமர்சனம். நல்ல படங்கள், நல்ல இயக்குனர்களின் படங்கள் என்று குறிப்பிடுபவைகளைப் பற்றி சோர்வாகவே கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால் தவறாமல் திரைப்படச் சங்க திரையிடல்களுக்கு வருவார்.

 அபூர்வமாக மணி வருவார். அவர் ராமாநாயுடு ஸ்டுடியோவில் சவுண்ட் என்ஜினியராக இருந்தார். வேலை இல்லாத சமயங்களில் திரைப்படச் சங்க நிகழ்ச்சிகளுக்கு வருவார். நவீன இலக்கியம் பற்றிப் பேசத் தகுதியான நபர் என்ற அளவில் நண்பராக இருந்தார். நல்ல திரைப்படங்கள் பற்றின அக்கறை அவருக்கிருக்கிறது. இரட்டையர்களாகத் திரிந்து கொண்டிருந்தோம். உள்ளூரின் முக்கிய கலை இலக்கிய கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வெளியூர்ப் பயணங்களில், தில்லி மற்றும் ரிஷிகேஷ் வரையிலான பயணம், சாகித்ய அகாடமியின் பயண நிதி பெற்று கோவாவில் ஒரு வாரப் பயணத்தில் கூட இருந்தார்.

 முன்பு நா. கதிர்வேலுடன் இரட்டையர்கள் போல் திரிந்து கொண்டிருந்தவன். கதிர்வேலன் சென்னைக்குச் சென்றபின் மணி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

ஒரு முறை கோல்கொண்டா வீதியில் ராமகிருஷ்ணா ஸ்டுடியோ திரைப்பட அரங்கில் ஒரு திரைப்பட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராமகிருஷ்ணா ஸ்டுடியோ பெரிய கட்டடமாக இருந்தது. வேறு இடம் கிடைக்காத அவசரத்தில்தான் அங்கு நிகழ்ச்சி ஏற்படாகியிருந்தது.

ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில்தான் ஆரோக்கியராஜைப் பார்த்தேன். தமிழ் பேசிக்கொண்டிருந்தவர்களிடம் வந்து கலந்து கொண்டு தெலுங்கானாவின் தெலுங்கின் பாதிப்பில் தமிழைப் பேசினார். பின்னர் இன்னொரு முறை ஆஸ்திரேலியா நாட்டு திரைப்பட விழா என்று ஐந்து திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும் ஆரோக்கியராஜ் இருந்தார். அங்கு பணிபுரிகிறவர் என்ற சலுகையில் அவர் மீது கவனம் விழுந்தது.

 ஆஸ்திரேலியப் படங்களில் படுக்கையறைக் காட்சிகளும் நிர்வாணக் கோலங்களும் நிறைய இருந்தன. அந்தத் திரைப்பட விழாவிற்கு அசோகன் தென்படவில்லை. ஏதோ வேலையாக தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்தார். ஆஸ்திரேலியப் படங்களின் மகாத்மியம் பற்றி பின்னர் கேள்விப்பட்டு மனம் உடைந்து போயிருந்தார். அப்படியொரு வாய்ப்பை இழந்தது பற்றின உறுத்தலை எல்லோரிடமும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார். பிரகாஷ் ரெட்டி அது போன்ற படங்கள் வந்தால் நினைவுபடுத்துவதாக வாக்குறுதி தந்தது அசோகனுக்கு ஆறுதல் தந்தது. ஆனால் பிரகாஷ் ரெட்டியால் பின்னால் அசோகன் திரைப்படச் சங்கத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கை இழந்திருந்தார்.

 ஆரோக்கியராஜ் தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவரை ஒரு திரையிடலில் அறிமுகப்படுத்தினார். அவரை டேபிளின் ஒரு அங்கம் என்றார். எடிட்டிங் டேபிள் என்ற வாசகம் என்னைத் தொந்தரவுபடுத்தியது. அவர் நோய்வாய்ப்பட்டவர் போலக் களையிழந்தும் சோர்ந்தும் இருந்தார். அவரின் ஒல்லியான தோற்றம் சங்கடமளித்தது.

 சென்னைக்கு வந்த நா. கதிர்வேலன் பி.லெனினிடம் உதவியாளராக எடிட்டிங் டேபிளுடன் ஐக்கியமாகிப் போயிருந்த போது ஒரு நாள் அவரைச் சந்தித்தேன். ஹைதராபாத்தில் இருந்து கிளம்பும்போது காரைக்குடி, குன்றக்குடியில் ஏதாவது வேலை என்ற திட்டத்தில்தான் அவர் இருந்தார். ஆனால் சினிமா ஆசையில் லெனினுடன் சேர்ந்துவிட்டார். ஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் நேரடி புகைவண்டி இருப்பினும் நண்பர்களைச் சந்திப்பதற்காக சென்னையில் இறங்கி சில நண்பர்களைச் சந்திப்பது பயண முறையாக இருந்தது. நவீன விருட்சத்தின் சிறு கூட்டம் ஒன்று மயிலாப்பூரில் ஒரு அழுக்குக் கூட்டத்தில் நடந்தது. அரை மணி நேரம் அதிலிருந்து விட்டு கதிர்வேலனைப் பார்க்கிற ஆசையில் கிளம்பினேன். அவருடன் சுவையான உணவை சுவைத்துக்கொண்டு நிறைய பேசுவது நல்ல அனுபவம். இரவு ஒன்பது மணியைக் கடந்துவிட்ட நேரத்தில் அவர் வேலை முடிந்தது. டேபிள் அவரை சோர்வாக்கியிருந்தது. அன்று சுவாரஸ்யமாகப் பேச எதுவுமில்லை. சுவையான உணவும் இல்லை. அவரது அறையில் புத்தகங்களும் ஆதிமூலம் போன்றோரின் ஓவியங்களும் கதிர்வேலனை ஆறுதல் படச்செய்திருந்தன. மணியின் சகோதரர் சௌந்தர் மாடியில் இருந்தார் மற்றும் பழனிபாரதி போன்ற நண்பர்கள் குழாம் அருகில் இருந்தது. அதுவே அவருக்கு ஆறுதலாக இருந்தது. எடிட்டிங் டேபிளை விட்டு கதிர்வேலனை யாராவது கடத்திக் கொண்டு போய்விட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவர் அந்த முடிவை எடுத்து பாவைச்சந்திரனுடன் புதிய பார்வையில் இணைந்தார். எடிட்டிங் டேபிள்தான் அங்கும்.

ஆரோக்கியராஜை பின்னர் ஒருமுறை மாக்ஸ்முல்லர் பவனில் பாஸ்பைண்டர் படத்தில் பார்த்தேன். அசோகனுக்கு பாஸ்பைண்டர் ஓரளவு பிடித்திருந்தார். அவரின் விபச்சார கதாநாயகிகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நடவடிக்கைகளைக் காட்டும் பாலியல் நடவடிக்கைகளில் அக்கறை இருந்தது. ஆனால் முழுமையாக பாஸ்பைண்டர் திருப்திதரவில்லை. ஆரோக்கியராஜ் பசோலினி படங்களைப் பற்றிச் சொன்னார். பெலினி பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். பசோலினியின் படங்கள் காட்டும் பாலியியல் குறித்த அவநம்பிக்கையும் கட்டமைப்புகளும் அதிர்ச்சி தரக்கூடியவை என்றார்.

 சாரதி ஸ்டுடியோவில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஆரோக்கியராஜை சந்தித்த போது அவரின் உடல் நிலை மிகவும் சீர்கெட்டிருந்தது. முன்பு அவர் அறிமுகப்படுத்திய எடிட்டிங் டேபிள் நண்பர் போல இருந்தார். ஆரோக்யராஜைப் பிடித்திருந்த நோய் மிகவும் மோசமானது. திரைப்படப் படப்பிடிப்பு ஸ்டுடியோ லேபரேட்டரியில் பிலிம் நெகட்டிவ்களை கிளீன் செய்யும் போது அங்கு உபயோகப்படுத்தும் ஒரு வகை ரசாயனப் பொருள் உடம்பை உருக்கிவிடுமாம். அது அவரைத் தாக்கியிருக்கிறது. உடம்பு நிலை குலைந்து போயிருந்தது. எடிட்டிங் டேபிள் என்பதன் அர்த்தம் பயமுறுத்தலாக மாறிப்போயிருந்தது. திரைப்படத் துறையின் எடிட்டிங் டெஸ்க்கும் திரும்ப திரும்ப துன்புறுத்தும் படிமங்களாக மனதில் நிற்கின்றன.

click here

click here
click here