உயிரோசை - 4/20/2009
 
பத்மஸ்ரீ விருதைப் புறக்கணித்த தோனி, ஹர்பஜன்: கிரிக்கெட் அரசியலின் இருள் பக்கங்கள்
- மாயா
தொட்டால் சுடாத பெருநெருப்பு
- அ.ராமசாமி
நினைவில் இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களும் அதன் பிறகு வந்த அரசுகளும் - ஒரு முன்னோட்டம் -2
- பாஸ்கர்
கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...
- ஆர்.அபிலாஷ்
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
- இந்திரஜித்
திரையில் மறைந்த பிம்பங்கள்
- சுப்ரபாரதி மணியன்
சினிமா கலை வடிவம் அல்ல!
- சுதேசமித்திரன்
தற்கொலைகளும் கொலைகளும்
- ந. முருகேசபாண்டியன்
கட்டுப்பாடும் சுதந்திரமும்-சி.மணியின் பிரிவு
- பாவண்ணன்
வெள்ளைப்புலி என்ற புக்கர் பரிசு நாவல் -எனது பதில்
- தமிழவன்
புலம் பெயர்ந்தவர் எழுத்து...
- நாகரத்தினம் கிருஷ்ணா
மொரீசியசின் புயல் அபாய எச்சரிக்கை
- மண் குதிரை
கடல்சாரா நெய்தல்
- கௌரிப்ரியா
நீட்சி
- என்.விநாயக முருகன்
இவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்
- த.செல்வசங்கரன்
இரு அழகிகள்
- அனுஜன்யா
கனவுகளை வெளியெறிதல்
- ஆ.முத்துராமலிங்கம்
எச்சில் விதையின் துளிர்
- நேசமித்ரன்
தொலைவுகள்
- நரன்
பிம்பங்களை உதிர்த்துக் கொண்டலையும் கனவு
- ரெஜோ
இருளில் நடப்பவனின் நிழல்
- சேரலாதன்
டி.வி. சானல் நதியா!
- தமிழ்மகன்
சூஃபி கதைகள்
- தமிழில்: சஃபி
என்றார் முல்லா
- தமிழில் சஃபி
அன்ன பூரணத்தம்மாளின் அவலக் கதை
- கழனியூரன்
சொன்னது நீ தானா?
- பாபுஜி
மரண முத்திரை
- பாபுஜி
ஹைக் கூ வரிசை
- தமிழில்: ஆர்.அபிலாஷ்
ஆடு வீட்டிலும், ஆட்டுக்குட்டி காட்டிலுமா?
- தொகுப்பு: கழனியூரன்
தி.க.சி - தீப. ந வுக்கு........
- -
கரிசல் காட்டில் ஒரு அத்தையும் மாமாவும்
- -
நிவேதினி (பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை)
- -
சுப. வீரபாண்டியனின் ‘ஒன்றே சொல்! நன்றே சொல்!’ நூல் வெளியீட்டு விழா
- ஜெயகுமார்
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்
- -
click here
நீதானடா எங்கம்மாவ கொன்ன?
இந்திரஜித்

சி செ சீ சை என்றுதான் நம்மில் பலரும் நினைக்கிறோம். சிதரம்பரத்தின் மீது செருப்பை வீசிய சீக்கியரை நமக்குப் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி செய்த தப்புக்கு எத்தனையோ பேர்கள் மீது காலணி வீசியிருக்கலாம். சிதம்பரத்தை அவர்கள் தேர்வு செய்ய என்ன காரணம் என்று எனக்குப் புரியவில்லை. அவர் தமிழர் என்பதாலா?

ஆனால் தமிழர்கள் அப்படி எல்லாம் நினைப்பவர்கள் அல்ல. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது இந்த வட்டாரத்தில் உள்ள தமிழர்கள் கொதித்தனர். அப்போது பத்திரிகைகளில் வரும் செய்திகளைவிட மக்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் கதைகள்தான் ஏராளம்.

பலரும் நேரில் பார்த்ததுபோல் பேசுவார்கள். இந்திரா காந்தி கும்பிட்டுக்கொண்டே வந்ததாகவும் அப்போது அவரைச் சுட்டதாகவும் ஒரு கதை நெடுநாள் ஓடியது. அது காந்தி கும்பிடும்போது கோட்சே சுட்டதை நினைவில் கொண்டுவரக் கூடியது.

அன்னை இந்திரா மீது தமிழர்களுக்கு எப்போதுமே அன்பு உண்டு. அவர் கொல்லப்பட்ட தினங்களில் மலேசியா, சிங்கப்பூரிலும் சிறு சலசலப்பு இருந்தது.

வட இந்தியர்களை தமிழர்கள் வங்காளிகள் என்றுதான் நினைத்தோம். பெரும்பாலும் நாம் பார்த்த வங்காளி எல்லாமே பஞ்சாபிகள்தான். திடீர் என்று இப்போது அவர்களை பஞ்சாபி என்றால் நமக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது. அதனால் வங்காளி என்றே இருக்கட்டும்.

இரண்டு விதமான வங்காளிகள் தமிழர்கள் வாழும் பகுதிக்கு வந்து போயினர். ஒருவர் ரொட்டிக்கார பாய். மாலையில் நான்கு மணிக்கு அவர் மோட்டார்சைக்கிளில் வந்து `ஹரே தம்பி நல்லா படிக்கியா?` என்பார். அவரைப் பார்த்தால் தலைப்பா கட்டிய தமிழரைப் போலவே இருப்பார். இவர்தான் பாரதியாரோ என்றுகூட நான் யோசித்திருக்கிறேன். ஆனால் கவிதை சொல்வதற்கெல்லாம் நேரம் இல்லாதபடி ஒரே பரபரப்பாக இருப்பார். அவரைச் சுற்றிச் சிறுவர்கள் புடைசூழ வியாபாரம் செய்துவிட்டுப் பறந்துவிடுவார்.

இன்னொரு வங்காளி விவரமானவர். அவர் ஆலோங். சிங்கப்பூரில்தான் ஆலோங். மலேசியாவில் வங்காளிதான். கடன் தந்துவிட்டு வட்டிமேல் வட்டி வாங்க வந்துவிடுவார். பௌர்ணமி மாதிரி மாதம் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய வங்காளி இவர். தமிழர்களிடம் மறுநாள் போனால் பணம் இருக்காது என்று சம்பளத்தன்று வந்து குதித்துவிடுவார்.

என் தந்தை ஒரு செலவாளி. பாயிடம் கடன் வாங்கியிருந்தார். பணத்தை எல்லாம் ஊருக்கே அனுப்பி வைத்தார். இப்போது மதுரைக்குப் போய்தான் அந்தப் பணத்தை எல்லாம் வசூலிக்க வேண்டும். மாதா மாதம் வட்டி கட்டிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் விரைவிலேயே ஓய்வு வந்துவிடும். `பாய் எனக்கு வேலை இல்லை இனி நீதான் எனக்குப் பணம் தர வேண்டும்` என்று கையை விரித்துவிட்டார்.

பாய் ரகசியமாக என் அண்ணனை அணுகினார். எனக்கு வியப்பாக இருந்தது. அண்ணன் பாயை சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடியவர் அல்ல.

`என்ன?` என்றார் அண்ணன்.

`உங்கப்பா வாங்கிய கடனை நீதான் கொடுக்கணும் பய்யா` என்றார் பாய்.

கொடுக்க முடியாது. வேண்டுமானாலும் கடனுக்குப் பதிலாக ஆளைக் கொண்டுபோய்விடு என்று அண்ணன் சொல்லிவிட்டார்.

பாய் ஒன்றும் பேசவில்லை. அதோடு தலைமறைவாகிவிட்டார்.

வட்டி பாய், ரொட்டி பாய் தவிர வேறு பாய்களை வாழ்க்கையில் சந்திக்கும் வாய்ப்புக் குறைவு. தமிழர்கள் சீனர்களோடு பழகலாம். மலாய்க்காரர்களோடு பழகலாம். ஆனால் பாயிடம் நெருங்க வாய்ப்பே இல்லை. வட இந்தியர்களின் உலகமும் தமிழர்களின் உலகமும் சந்திப்பதே இல்லை.

ஆனாலும்கூட வட இந்தியர்களிடம் தமிழர்கள் ஒரு வாஞ்சையோடு இருந்தனர். தமிழர்களை அவர்கள் மதிப்பதே இல்லை என்பதைப் பற்றி தமிழர்கள் கவலைப்பட்டதில்லை.

சிவப்பு ஒரு காரணமாக இருக்கலாம். தமிழர்களின் லட்சியம் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறப்பாகச் செய்து நாலுபேர் மதிக்கும்படி வாழ வேண்டும் என்பது அல்ல. அவர்களுடைய லட்சியம் எல்லாம் சிவப்பாகிவிட வேண்டும் என்பதுதான். பராக் ஒபாமா அமெரிக்காவுக்கு அதிபராகியிருக்கலாம். ஆனால் அவரால் சிவப்பாக முடியவில்லை என்பதைக் கவனிக்கவும்.

அது தவிர பாசத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. சாதாத் தமிழர்களுக்கு தமிழ் நாடு என்று ஒரு நாடு இருப்பது தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது இந்தியா. அவர்களுக்கு ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமம் இருப்பது இந்தியாவில். அங்குள்ள மாங்கா மடையர்களும் தமிழ் மாநிலம் என்று பெயர் வைக்காமல் தமிழ் நாடு என்று பெயர் வைத்திருப்பதால் நமக்கும் விளக்குவதற்குச் சிரமமாக உள்ளது. வெரி ஸ்டுப்பிட்.

இந்தியர்கள் அனைவருமே இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் நம்மவர்கள் என்றுதான் தமிழர்கள் நினைத்தார்கள். அதனால்தான் இந்திரா காந்தியைச் சுட்டபோது கொதித்துவிட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒரு வங்காளி இன்னொரு வங்காளியைச் சுட்டுவிட்டான். மீசையும் தாடியும் வைத்த பெரிய பெரிய வங்காளிகளுக்கு ஒரு பெண்ணைச் சுட எப்படி மனம் வந்தது? அதிலும் அவர் அன்னை இந்திரா.

அதன் பிறகு சீக்கிய சமூகத்தின் மீது புதுடில்லியில் நடந்த தாக்குதல்கள் இந்த வட்டாரத்தில் அவ்வளவு பிரபலமாகவில்லை. இந்திராவின் மரணத்துக்குப் பிந்திய நாட்கள் அவரது ஈமச்சடங்கு நாட்களே. வீட்டில் ஒருவர் இறந்துவிட்டதாகவே தமிழர்கள் நினைத்தார்கள்.

எங்கள் ஊரையும் இந்திராவின் மரணம் தாக்கியது.

அப்போது நான் இருந்த ஊரில் ஒரு விமான நிலையம் இருந்தது. அதை ஒட்டி காற்பந்து திடல். அதையும் தாண்டினால் இரண்டு முக்கிய கட்டுமானங்கள். ஒன்று கிராண்ட் திரையரங்கு. அதற்குப் பக்கத்தில் கள்ளுக்கடை. அப்போது கள் அடித்துவிட்டு ஒரு தமிழர் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு வங்காளியை மடக்கினார்.

`நீதானடா எங்கம்மாவ கொன்ன?` என்று மலாயில் மிரட்டினார்.

அந்த வங்காளி சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு `சயா தராலா! சயா தராலா!` (நான் இல்ல! நான் இல்ல!) என்று அலறிக் கொண்டே ஓடினார்.

எங்கள் ஊரில் இந்திரா காந்தியின் மரணம் ஏற்படுத்திய துக்கத்தை மறக்க அந்தச் சம்பவமே உதவியது.

click here

click here
click here