உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
உங்கள் கருத்துக்கள்
எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com

அச்சில் வந்து கொண்டிருக்கும் இடைநிலை இதழ்களில் உயிர்மையின் வடிவமைப்பைத் தாண்ட எந்த இதழும் முயற்சி செய்யவில்லை. இதழியலின் அடிப்படைகளைக் கற்ற ஒரு மாணவரின் ஆசிரியத்துவம் அதில் எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்,
 
இதன் தொடர்ச்சியை இப்போது தொடங்கியிருக்கும் உயிரோசை இணைய இதழில் பார்க்கிறேன். உயிர்மையின் வடிவமைப்பை விடவும் உயிரோசையின் வடிவமைப்பு பாராட்டும் படியாக இருக்கிறது. உயிரோசையின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் பார்த்த போது உயிரோசை அச்சில் வந்து பலரும் படிக்க வேண்டிய பத்திரிகை என்று சொல்லத்தோன்றுகிறது. சிறு பத்திரிகைகளுக்கு எழுதும் போது கவனமாகக் கொண்டுவரும் திருகல் மொழிநடையைத் தவிர்த்து விட்டு விவாதிக்கும் விசயத்தை மையப்படுத்திய மொழிநடையோடு எல்லா கட்டுரைகளும் உள்ளன. கவிதை, கதை, அறிமுகங்கள் என எல்லாம் கச்சிதமாக இருக்கிறது.

வாழ்த்துகள்

அ.ராமசாமி
திருநெல்வேலி

உயிர்மை பதிப்பகத்தின் புதிய வரவான உயிரோசை என் போன்ற வலை உலக தேசாந்திரிகளுக்கு ஒரு முக்கிய இடமாக இருக்குமென்பதில் ஏதும் சம்சயம் இல்லை. சமகாலத்தில் கலை, இலக்கியம், சமுகம் சார்ந்து மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மாத இதழான உயிர்மையை இணையத்தில் தருவித்ததே எனக்கு ஆகப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த வார இதழில் இடம்பெற்றுள்ள மார்க்வெஸின் குப்பைக் கூடை என்றக் கட்டுரையைப் பல முறை வாசித்தேன். இது போன்றக் கட்டுரைகள் வெகு அரிதாகவே என் கண்களுக்கு படிக்கக் கிடைக்கின்றன. என்னளவில் இது கவிஞர் சுகுமாரனின் பால் எனக்குள்ள ஈடுபாடா இல்லை மார்க்வெஸின் மேலுள்ள ஈடுபாடா என்று சொல்லத் தெரியவில்லை. ந‌.முருகேச பாண்டியனின் "பேய்களும் முனிகளும் உறைந்திடும் கிராமங்கள்" என் பாலயத்தின் நினைவடுக்குகளை  தூண்டிவிட்டுச் சென்றன. முனி உட்கார்ந்ததால் முறிந்தக் கிளைகளின் கதைகள் எங்கள் கிராமத்தில் ஏராளம். பட்டு நெசவு செய்வோரிடம் மூக்குப்போடி கேட்கும் முனிகளும் எங்கள் ஊரில் அநேகத் தெருக்களில் வசித்து வந்துள்ளன. இந்திய அரசியலைப் பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் சொல்ல என்னிடம் வார்த்தைகள் ஏதுமில்லை. இந்திய மக்களின் சகிப்புத்தன்மை என்பது எல்லைகளும் வரைமுறைகளும் இல்லாத ஒன்றாக இருப்பதே பெரும் ஆச்சரியத்தைத் தரவல்லது.
 
உயிரோசை வாரந்தோறும் நல்லக் கவிதைகளோடும் கதைகளோடும் கட்டுரைகளோடும் வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.
 
வலையில் உள்ள சில வண்ணங்கள் கண்களுக்கு உறுத்தலாக இருப்பதைச் சரி செய்தால் படிப்பவர்களை அசதியுறாமல் இருக்கச் செய்யும். புகைப்படங்களும் மிகவும் சிதறிப்போன ஒரு தோற்றத்தை அளிக்கின்றன. இவை விரைவில் சரிசெய்யப்படும் என்று நினைக்கிறேன்.
 
ஏனோ புத்தக மதிப்புரைகள் அவைகளுக்கான தளத்தை இழந்து வருகின்றன என்றே தோன்றுகிறது. உயிரோசையில் வாரம் ஒரு புத்தகத்தைப் பற்றியேனும் விரிவான மதிப்புரையை எதிர்பார்க்கிறேன். 

வெங்கடாசலம்
சிங்கப்பூர்

உயிரோசை முதல் இதழ் அழகு. இன்னும் முழுதும் படிக்கவில்லை. இப்போதுதான் 'மண்குதிரை' கவிதை படித்தேன். சற்று ஆச்சரியப்பட்டேன். எனது பதிவில் இத்தகைய எண்ணங்களுடன் ஒரு கவிதை சின்னாட்களுக்குமுன் பதிப்பித்தேன். உங்கள் பார்வைக்கு: 

பாராமுகம்

அவ்வப்போது
பார்த்திருந்த அவளை
இருமுறை பார்த்தேன்
சென்ற திங்களில்
வெண்மையும் பச்சையும்
இழைந்த ஆடையில்;
இலேசாக சலனம் கொண்டேன்
என்னைப்பார்க்கவில்லை என்றாலும்;
செய்தித் தாள்களின்
வன்முறைப் பக்கங்களில்
சிக்கிக் கொள்ளாதவரை
அவள் நலன்தான் என்று
ஆறுதல் கொண்டேன்
பிறகு எப்போதும்
அவளைக் காணாவிடினும்


பிரியங்களுடன்


அனுஜன்யா

(anujanya.blogspot.com)

ஆசிரியர் அவர்களுக்கு,
 
உயிரோசை நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது.கழனியூரான் சொலவடைக் கதைகளை ஆவலாக எதிர்பார்க்கிறேன். கவிதைகள் ஓவியத்துடன் வெளிவந்திருப்பது சிறப்பாக உள்ளது.வாஸந்தி, மனோஜ், அ ராமசாமி, சுகுமாரன், மாயா, ந முருகேச பாண்டியன் ஆகியோரின் கட்டுரைகளும் சிறப்பு செய்கின்றன. மிகவும் எதிர்பார்த்த சாருவின் சிறுகதை ஏமாற்றம் அளிக்கிறது.புதிய படைப்பாளிகளுக்கான ஒரு சாளரம் உயிரோசை என்பது முகத்துதியல்ல.
 
மண்குதிரை
மொரீஷியஸ்


Dear sir,
 I have been reading UYIRMAI magazine for the past four or five years.However I am not a subscriber.I always buy the magazine in railway bookstalls or the roadside stalls. It has its own thrill.Last time when I returned from USA I got the back issues from your office at Subramaniapuram.That reminded my days of buying Kanayazhi from Bells road and DEEPAM from a small bylane in Ellisroad. Now I am in USA.I have visited your website today and came to know that another magazine by name UYIROSAI is being launched today by your group.Congratulations and my best wishes

.M.Karthikeyan.
 
இந்த வாரம் தங்களின் வலைதளத்தை பார்வையிட்டேன். மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறீர்கள். தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள் இணையத் தமிழில் தொடாத பல விஷயங்களை எழுதியிருக்கிறார்கள். இது இணையத் தமிழில் ஆரோக்கியமான விஷயம்.
இதே த‌ர‌த்தை தொட‌ர்ச்சியாக‌ நிறுவுவீர்க‌ள் என்ற‌ முழு ந‌ம்பிக்கை இருக்கிற‌து.
வாழ்த்துக்க‌ள்.
அன்புட‌ன்,


த‌மிழ‌ர‌ச‌ன்,
புதுக்கோட
 
Dear Editor,
 
I rarely visits tamil sites. Just had a chance to visit ur uyirmmai.com.
 
Its refreshing and exceptional. Really I like it very much.
 
Keep going.
 
Regards,
Pradeep Mohandass.
Chennai.

உயிரோசை கண்டேன். இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் பலரது வருகையத் தொடர்ந்து இப்போது தமிழின் காத்திரமான இதழான உயிர்மை உயிரோசை வார இதழை இணையத்தில் தொடங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

சாருநிவேதிதாவின் சிறுகதை பின் நவீனத்துவ மொழியில் சொல்லப்பட்ட ஒரு குதூகலமான கதை என்பதில் சந்தேகமில்லை. காஷ்மீர் பிரச்சினையை முன்னிட்டு வாஸந்தி எழுதிய கட்டுரை மிகத் தெளிவான பார்வையை முன் வைக்கிறது.

வாழ்த்துக்கள்

பாலகுமார்
நாகர்கோயில்


நான் உயிர்மையின் நீண்ட நாள் வாசகி. உயிரோசை நம்பிக்கையூட்டும் தொடக்கம். கழனியூரனும் ந.முருகேச பாண்டியனும் எழுதும் கிராமத்து அத்தியாயங்கள் நம் மண்ணின் வேர்களை நோக்கி நம்மை ஈர்க்கின்றன. மாயா ஜெயலலிதாவின் அரசியல் பலவீனத்தை மிகச் சரியாக சுட்டிகாட்டுகிறார். இது போன்ற சமகல அரசியல் அலசல்களை உயிரோசை தொடர்ந்து வெளியிடுமா?

அஞ்சனா தேவி
பெங்களூர்

உயிரோசை இணையத் தமிழுக்கு ஒரு புது வரவு. தொடர்ந்து நடை போட வாழ்த்துக்கள். அ.ராமசாமின்யின் சிந்தனைகள் புது  வெளிச்சம் பாய்சுவதாக இருக்கின்றன. சுகுமாரன் எழுதத் தொடங்கியிருக்கும் பத்தி மிகுந்த எதிர்பார்ப்பை உண்டு பண்ணுகிறது. அவருக்கே உரித்தான கூர்மையும் மொழியின் கச்சிதமும் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன.

பரிமளம்
சென்னை

பெய்ஜிங் ஒலிம்பிற்கு பின்னே இருக்கும் சில இருண்ட பக்கங்களை மனோஜ் நேர்த்தியாக சுட்டிக் காட்டியிருந்தார். அதே சமயம் மேற்கத்திய ஊடகங்கள் சீனாவிர்கு எதிராக பரப்பும் செய்திகள் அனைத்தையும் நாம் உடனடியாக நம்பிவிடாமல் சற்றே சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.

சந்திரசேகர்
சென்னை

click here

click here
click here