உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
கோகுலன்

சலனங்களற்ற மாலைச் சந்திப்பில்
வழக்கத்தொனியுடனே வார்த்தைகள்பேசி
எவ்வித குற்ற உணர்வுமற்று நீ திரும்பி நடக்கையில்
ஒருகணம் ஆச்சரியப்பட்டுப் போனேன்

உன் மீதான என் உரிமைகளும்
பரஸ்பர பகிர்வுகளும் காலாவதியானதை
உன் ஈரப்பசையற்ற பார்வை சொல்லியபின்
வார்த்தைகளற்று உலர்ந்து போனது நா.

கண்ணிலிருந்து மறையும்வரை
உன்னையே வெறித்துவிட்டு
பின்னால் திரும்பிய பொழுதில்
ஒரு மயான அமைதியை
கொட்டிப்போயிருந்தன அலைகள்

சுயநலங்கள் சிதறிக்கிடக்கும்
யதார்த்தபாதைவழிப் பயணத்தில்
உன் காலிடறி என் நகம்பெயர்ந்ததில்
யார்மீதிலும் கோபம் கொள்ளவில்லை

அதன்பின் தொலைந்துபோயிருந்த என்னை
தேடிப்பிடித்து வீடுதிரும்பவும்
நள்ளிரவாகியிருந்தது


தூக்கமின்றி கழிந்த பின்னிசிப்பொழுதில்
நாம் முதலாய்ச் சந்தித்த அந்தக் காலையில்
மீண்டும் சந்திக்கிறேன் உன்னை.
இப்பொழுது நீ என் கைகளில்
அகப்படாதவிடத்தும் முன்னைவிட
அன்பாயும் அழகாயும் இருக்கிறாய் நீ!

gokulankannan@gmail.com

click here

click here
click here