உயிர்மை - March
 
இனவெறியில் எரியும் மும்பை நகரம்
- சாரு நிவேதிதா
ஒரு ஒறேஞ் ஜுஸின் விலை
- இளைய அப்துல்லாஹ்
உங்கட ரயில்தானே?
- பொ. கருணாகரமூர்த்தி
குற்றம் பார்க்கின் . . .
- மனோஜ்
சுஜாதா:நம் காலத்து நாயகன் ( 1935-2008 )
- மனுஷ்ய புத்திரன்
தற்கொலையின் அழகியல்
- யமுனா ராஜேந்திரன்
வேங்கை தரிசனம்
- சு. தியடோர் பாஸ்கரன்
செம்மீனும் தேசீய விருதுகளும்!
- பாரதி மணி
என்ன மாதிரியான உலகம் இது!
- மாயா
ப. சிங்காரம்: அடங்க மறுக்கும் நினைவு
- எஸ். ராமகிருஷ்ணன்
மார்வின் கயே இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது?
- ஷாஜி
பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்
- பூமா ஈஸ்வரமூர்த்தி
அறை
- ஜே.எஸ்.அனார்கலி
வாசனை
- கு.சந்தோஷ் குமார்
பூனைகளை வளர்க்கும் செய்தி
- எஸ். செந்தில் குமார்
காலப்பிரதி
- சிவன்
குட்டிப்பிசாசு
- வா.மு. கோமு
கோபி: நடிப்பின் பன்முகம் (1937-2008)
- சுகுமாரன்
தலையங்கம்
- மனுஷ்ய புத்திரன்
புது நூல்கள்
- இல்லை
click here
மார்வின் கயே இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது?
ஷாஜி

Marvin Gayeரெஜியின் அப்பா அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த புனலூர் காகித ஆலையில் உயரதிகாரியாக இருந் தார். கிறித்தவப் பழமைவாதியான அவரைப் பொறுத்தவரை இசை என்பது ஒவ்வொரு நாளும் மாலை ஜெபத்திற்குப் பின்னரும், ஞாயிற் றுக்கிழமைகளில் தேவாலயத்திலும் ஆராதனைப் பாட்டுகளைப் பாடு வது மட்டுமே. பிள்ளைகளை ‘முறையாக’ வளர்த்து அதிகாரி களாக ஆக்கவேண்டுமென்பதே அவரது இலட்சியம். ஆனால் தன் பன்னிரண்டாவது வயதில் ரெஜி கர்நாடக இசை பயில ஆசைப் பட்டான். அவன் தந்தைக்குக் குண்டுவெடித்ததுபோல அதிர்ச்சி. மார்த்தோம்மா தேவாலய மரபில் யாராவது கர்நாடக இசையைப் படித்திருக்கிறார்களா? அவர் கேள் விப்பட்டதே இல்லை. ஒரு உண் மைக் கிறித்தவன் ‘வாதாபி கணப திம் பஜே ஹம்’ என்றும் ‘பாஹி மாம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி’ என்றும் பாடினால் என்ன ஆகும்? ரெஜி கடுமையாக எச்சரிக்கப்பட்டான்.
ஒரு வருடம் கழித்து ரெஜி இசை கற்றுக்கொள்வதற்கு இன் னொரு உத்தியைக் கண்டுபிடித் தான். ஒரு ஆர்மோனியம் வாங்கு வது. அதில் பக்திப்பாடல் ‘வரிகள்’ இல்லையே. அந்த ஆசையையும் கடுமையாக ஒடுக்கியது அவரின் அப்பா. அந்தத் தரித்திரம் பிடித்த பொருள் வீட்டுக்குள்ளேயே வரக் கூடாது என்று சொல்லிவிட்டார்.
பலவருடங்கள் கழித்து நான் ரெஜியை ஹைதராபாதில், லால குடாவில் இருந்த அவனது அறை யில் முதன்முதலாகச் சந்தித்த போது அவனைச் சுற்றி இசைக் கருவிகள் குவிந்துகிடந்தன. பலவித மான கீபோர்டுகள், தபலா, ஆர் மோனியம், மின்னணுக் கித்தார் கள். சுவர்களில் சர்வதேச இசை நட்சத்திரங்களின் படங்கள் நிறைந் திருந்தன. ஹைதராபாத் நகரின் மேலையிசை வட்டாரத்தில் புகழ் பெற்ற கித்தார்கலைஞனாகவும் இசைநிபுணராகவும் இருந்தான். எல்லாமே சுயமாகக் கற்றுக் கொண்டது. ஏன் அவனுக்குச் சொந்தமாக ஒரு மேலை இசைக் குழுவே இருந்தது!
நான் ரெஜியின் இசை நண்ப னாக ஆனேன். அப்போது அவன் அம்மாவும் அண்ணன்களும் அமெரிக்காவில் குடியேறிவிட்டி ருந்தனர். அவர்கள் அவனை அங்கே அழைத்தார்கள். அவன் போக விரும்பவில்லை. “அமெ ரிக்கா என் கனவுபூமி அல்ல!” என்பான். இந்தியாவில் வாழும் மேலைஇசைக்கலைஞன் - அவன் விரும்பிய அடையாளம் அதுவே. தன் சகோதரர்களிடமிருந்து அவ் வப்போது வரும் மேலைஇசை ஒலி நாடாக்களை உள்ளடக்கிய பொதி களை மட்டும் பெற்றுக்கொள் வான். அவனிடமிருந்த பிரம்மாண் டமான மேலை இசைச்சேகரிப்பு பெருகியபடியே இருந்தது. இரவும் பகலும் நானும் அவனும் இசையி லேயே வாழ்ந்தோம். அன்று இந்தி யாவில் கிடைக்க அரிதாக இருந்த Gayeபல மேலையிசைக் கலைஞர்களின் இசையை அப்போதுதான் நான் கேட்டறிந்தேன்.
எல்லா வகையான இசையை யும் நாங்கள் விரும்பிக் கேட்டா லும் அமெரிக்கக் கறுப்பிசையில் இருந்த ஆத்மார்த்தமான, தீவிர மான உணர்ச்சிவேகங்கள் எங் களுக்கு மிகவும் பிடித்திருந்தன. அரீதா ஃப்ராங்க்லின் முதல் நீனா சிமோன் வரை, ரே சார்லஸ் முதல் சக் பெர்ரி மற்றும் ஸ்டீவி வண்டர் வரை எங்கள் ரசனை பரந்து கிடந் தது. அவர்களில் எனக்கும் ரெஜிக் கும் மர்வின் கயெ தனிப்பட்ட ஆதர்ச பாடகராக இருந்தார். சின் னஞ்சிறிய அறையை நிறைத்தபடி பின்னிரவின் வெப்பம் நிறைந்த இருளில் ஒலித்துக்கொண்டிருக்கும் அவரது கறுப்பின ‘ஆத்மா’ இசை (சோல் ம்யூசிக்) எங்களை, இசை மூலமே செல்லக்கூடிய அறியா நிலங்களுக்குக் கொண்டுசெல்லும். 
கறுப்பிசை அமெரிக்க அன் றாடவாழ்க்கையின் பிரிக்க முடி யாத அம்சமாகவும் அதன் பண் பாட்டின் முக்கியமான சாதனை யாகவும் விளங்குகிறது. காஸ்பல் இசை, ப்ளூஸ், ஜாஸ், ராக் அண்ட் ரோல், ரிதம் அண்ட் ப்ளூஸ் (ஸி&ஙி), சோல் முதல் இன்றைய ஹிப்-ஹாப் வரை அதன் வகை மைகள் ஏராளமானவை. ஆரம்ப கால கறுப்பிசையானது அடிமை களாக இருந்த உழைப்பாளிகளின் பாடல்களில் இருந்து உருவானது, ஆப்ரிக்கப் பழங்குடிப் பாடல் மரபில் வேர் கொண்டது. அதன் வழியாகக் கறுப்பு அடிமைகள் தங்கள் கதைகளைப் பரிமாறிக் கொண்டார்கள், வரலாற்றைப் பேணிக்கொண்டார்கள், ஒரு சமூகமாகத் தங்களைத் திரட்டிக் கொண்டார்கள்.
பெரும்பாலான அமெரிக்கக் கறுப்பு அடிமைகள் கிறித்தவர் களாக இருந்தமையால் அவர்கள் தங்கள் இசையை தேவாலயங் களுக்குக் கொண்டுவந்தார்கள். அவ்வாறாக பக்திநோக்குள்ள ஒரு தனிக் கறுப்பிசை உருவாகி இன்று வரை உயிர்ப்புடன் இருந்து வரு கிறது, அதுவே காஸ்பல் இசை என்று அழைக்கப்படுகிறது. இன்று காஸ்பல் இசை அதன் மத அடை யாளத்தை இழந்து கலையின்பத் தின் பொருட்டு இசையமைத்துப் பாடப்படுகிறது. சந்தையைக் கருத்தில் கொண்டு காஸ்பல் இசைப் பாடல்கள் வெளியாகின் றன. மஹாலியா ஜாக்ஸன், டோன்னி மெக்-கிளர்க்கன், ஷர்லீ சீசர், வனெஸ்ஸா ஆம்ஸ்டிராங், இன்று புகழுடனிருக்கும் யோலந்தா ஆடம்ஸ் போன்றவர் களை இதுவரையிலான முக்கிய காஸ்பல் இசைப் பாடகர்களாகச் சொல்லலாம்.
அடக்குமுறைக்கு எதிரான கறுப்பர்களின் போராட்டத்தில் விளைந்த மனச்சோர்வு, துயரம், ஆங்காரம், வறுமையின் ஏக்கம் போன்ற உணர்வுகளை வெளிப் படுத்தும் இசையாக உருவானதே ‘ப்ளூஸ்’. ‘ஆழமான இசை உள்ளூ ரத் துயரமானது’ என்ற கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணமாக அமை பவை ப்ளூஸ் பாடல்கள். டபிள்யூ. சி. ஹாண்டி, ராபர்ட் ஜான்ஸன், காரி டேவிஸ், மேமி ஸ்மித் ஆகி யோரை ப்ளூஸ் இசையை வளர்த்த முன்னோடிகளாகச் சொல்லலாம். பெஸ்ஸி ஸ்மித், பி.பி.கிங், ஜான் லீ ஹ¨க்கர், டயானா வாஷிங்டன், சாரா வாகன் ஆகியோரை ப்ளூஸ் இசை யின் முதன்மைப் பாடகர்களாக வும் சொல்லலாம். கறுப்பிசையின் வளர்ச்சிக் காலகட்டத்தில் பல் வேறுவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை கொண் டதும் படைப்பூக்கம் உள்ளதுமான புதிய ஒரு இசைமரபு உருவாயிற்று. கற்பனைமூலம் விரிவாக்கி இசைக்க ஏற்றது அது. அதுவே ‘ஜாஸ்.’ அடிப்படையில் ‘ப்ளூஸ்’ இசையின் இன்னிசைத்தன்மையில் வேரூன்றியதானாலும் ‘ஜாஸ்’ பல வகையான மெட்டுகளையும் தாளக்கட்டுகளையும் தன்னுள் இணைத்துக்கொண்டும் நரம்புக் கருவிகள், உலோகக் கருவிகள் மற் றும் முழவுகளை விரிவாகப் பயன் படுத்தித் தன்னை விரிவாக்கிக் கொண்டது. ஜாஸ் அமெரிக்க ரசனையைப் Gaye Pictureபெரிதும் கவர்ந்தது. லூயி ஆம்ஸ்டிராங், சார்லி பார்க் கர், எல்லா ஃபிட்ஸ்ஜெரால்ட், பில்லி ஹாலிடே, மைல்ஸ் டேவிஸ் போன்ற ஜாஸ் பாடகர்கள் ஒவ் வொரு இடத்திலும் ஒலிக்கும் பெயர்களாக ஆனார்கள். அமெ ரிக்க இசையில் இந்தப் பெரும் கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
இந்தக் கறுப்பிசைமரபுகள் நாற் பதுகளில் அமெரிக்க இசை ரசனையில் உருவாக்கிய அலை யின் விளைவாகப் பிறந்ததே ராக் அண்ட் ரோல். வேகமான தாளக் கட்டு கொண்டதும் நடனமாட ஏற்றதுமான இசை இது. ராக் அண்ட் ரோல் இரு மின் கித்தார் களினால் கட்டுப்படுத்தப்படுவது. ஒன்று நடத்தும்(லிமீணீபீ)கித்தார், இன் னொன்று இசைக்கும்(ஸிலீஹ்tலீனீ) கித்தார். அத்துடன் முழவுத் தொகுப்பும் இணைந்துகொள்ளும். ஆரம்ப காலத்தில் டபிள் பாஸ் அடித்தள ஒலியாகப் பயன்படுத் தப்பட்டது. பியானோவும் சாக்ஸ ஃபோனும் முன்நிலை வாத்தியங் களாக இருந்தன. 1950 முதல் மின் கித்தார் அந்த இடத்தை எடுத்துக் கொண்டது. ஸ்னேர் முழவில் முக்கியமாக ஒலிக்கும் ராக் அண்ட் ரோல் இசையின் தாளம் எப்போதுமே வேகமானது.
சக் பெர்ரி, ஃபாட்ஸ் டாமினோ, லிட்டில் ரிச்சர்ட் முதலியவர்களை ராக் அண்ட் ரோல் இசையின் முன்னோடிகளாகச் சொல்லலாம். கறுப்பராக இல்லாவிட்டாலும் ராக் அண்ட் ரோல் இசையின் அரசராகக் கருதப்படுகிற எல்விஸ் பிரெஸ்லி ஐ ‘கறுப்புக்குரல் கொண்ட வெள்ளையர்’ என்று சொல்வதுண்டு.
இக்காலகட்டத்தில்தான் காஸ்பல் இசை, ப்ளூஸ், ஜாஸ் ஆகியவற்றின் இன்னிசைத்தன்மை களை ஒருங்கிணைத்து ரிதம் & ப்ளூஸ் (ஸி&ஙி) என்ற கறுப்பின இசை வடிவம் உருவானது. இன் றும் ஸி&ஙி புகழ்பெற்ற இசை வகை மையாக நீடிக்கிறது. ரே சார்லஸ், ஜேம்ஸ் பிரவுன், ஸ்டீவி வண்டர் ஆகியோரை ஸி&ஙி முறையின் முன் னோடிகளாகச் சொல்லலாம். டோனி பிராக்ஸ்டன், மேரி ஜெ. ப்ளைட்ஜ், மரியா கேரி, ரியான்னா ஆகியோரை இன்றைய முக்கிய மான ஸி&ஙி இசைக்கலைஞர் களாகக் குறிப்பிடலாம்.
ஸி&ஙி இசைமுறையிலிருந்து உதித்ததே சோல் (ஷிஷீuறீ). சிலர் சோல் இசைமுறை பழைய ஸி&ஙி முறையின் இன்னொரு பெயர் மட் டுமே என்று கருதுகிறார்கள். உண் மையில் அது காஸ்பல் இசை மற் றும் ஸி&ஙியின் இன்னிசைத்தன்மை களை போ டிட்லி, சாம் குக், ரே சார்லஸ் முதலிய இசைக் கலை ஞர்கள் தொடர்ச்சியாக மறு ஆக்கம் செய்து உருவாக்கிய ஒரு புதிய இசைமுறைமையே ஆகும். ஸ்மோக்கி ராபின்சன், லூதர் வாண்ட்ரோஸ், ஓடிஸ் ரெட்டிங், லயனல் ரிச்சி ஆகியோர் ஸி&ஙி மற்றும் சோல் ஆகிய இரு இசை முறைமைகளையுமே வளர்த்தெடுத் தார்கள். அரீத்தா ஃப்ராங்க்லின் சோல் இசையின் ஆகச்சிறந்த பெண்குரல். மார்வின் கயே நவீன சோல் இசையின் மிகச்சிறந்த இசையமைப்பாளரும் கவிஞரும் பாடகருமானவர்.
கார்டியன் இதழ் பிரபல இசை யின் முகத்தையே மாற்றியமைத்த பத்துப் பேரைப் பட்டியலிட்ட போது அதில் மார்வின் கயேயை நான்காவதாகச் சேர்த்தது. ஸி&ஙி இசைமுறைமையே மார்வின் கயே யின் தொடக்கமாகும். அங்கிருந்து இன்னும் நுண்மையானதும் பண் பட்டதுமான சோல் இசை முறை மைக்கு வந்து இறுதியில் தனக்கே உரிய அரசியல் தனித்தன்மையும் அந்தரங்கத்தன்மையும் கொண்ட இசைமுறைமையை உருவாக்கி னார் மார்வின் கயே. அவர் தன் இசைத்தொகைகளைத் தானே எழுதி இசையமைத்துப் பாடித் தயாரித்தார். பியானோ, கீபோர்டு கள், முழவுகள் போன்றவற்றை அவர் திறம்பட வாசிப்பார். அவ ரது குரல் வேகமும் கூர்மையும் அதேசமயம் இனிமையும் கொண் டது.
அவரது  சோல் இசை சமூக மாற்றத்துக்கான கருவியாக ஒலித் தது. அவருடைய பல இசைத் தொகைகள்Gaye imag3 நிறவெறிக்கு எதிராக வும் (கீலீணீt's நிஷீவீஸீரீ ளிஸீ?) பாலியல் உரிமைக்காகவும் (லிமீt's நிமீt மிt ளிஸீ) குடும்ப அமைப்பின் வலிமைக்காக வும் (பிமீக்ஷீமீ, விஹ் ஞிமீணீக்ஷீ) குரலெழுப்பு பவை. மார்வின் கயே கற்பனைய ழகு மிக்க கதைப்பாடல்கள் முதல் வேகமான துள்ளல் பாடல்கள் வரை வகைவகையாக இசை யமைத்திருக்கிறார். தன் வளர்ச்சிப் படியின் ஒவ்வொரு கட்டத்திலும் மார்வின் கயே அந்தரங்க சுத்தியை யும் தீவிரமான உணர்ச்சிகரத் தன்மையையும் வெளிப்படுத்தி யிருக்கிறார். இசையில் தன் ஆறு தலைக் கண்டடைந்த துயருற்ற இதயம் கொண்டவர் மார்வின் கயே. அவரது வரலாற்றை எழுதிய வர், “அவரது இசை இதமளிப்பது. அவர் பாடல்கள் தியானங்கள். தாக்குப்பிடித்து வாழ்வதற்கான  ஒரே உத்தியாக அவருக்கு இருந் தது அவரது இசைதான்” என்று எழுதினார்.
மார்வின் கயே 1939ல் வாஷிங் டன் டி சி யில் பாதிரியார் ‘மார்வின் பெண்ட்ஸ் கே’-யின் மூன்று பிள்ளைகளில் இரண்டாம வராகப் பிறந்தார். செவந்த் டே அட்வெண்டிஸ்டுகள் தேவாலயத் திலிருந்து உடைந்து உருவான ‘கடவுளின் இல்லம்’ என்ற அடிப் படைவாத கிறித்தவ அமைப்பின் தீவிரமான மத போதகராக இருந் தார் அவரின் தந்தை. அந்தத் தேவாலயம் புராதன யூத மதக் கோட்பாடுகளையும் பெந்த கொஸ்தே மதக்கோட்பாடுகளை யும் கலந்து உருவானது. அது தன் உறுப்பினர்களுக்கு ஓய்வு, விடு முறை, கொண்டாட்டங்கள், கலை கள், விருந்துகள் அனைத்தையுமே தடை செய்தது.
மார்வின் கயே மூன்றுவயதி லேயே தேவாலயத்தில் கூட்டு ஆராதனைகளில் பாட ஆரம்பித்து விட்டிருந்தார். ஐந்தாம் வயதில் தனித்துப் பாடத் தொடங்கினார். தேவாலய இசைக்குழுவிலிருந்து தான் அவர் பியானோ, முழவுகள் போன்றவற்றில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார். ஒரு கொடுங்கனவுபோலிருந்த தன் இளமைப்பருவ குடும்பச் சூழலிலி ருந்து தப்ப அவருக்கு இசை ஒரு சரணாலயமாக இருந்தது. அவரின் தந்தை மதவெறியரும் கண்டிப் பானவருமாக இருந்தமையால் குழந்தைகள் செய்யும் எதையுமே கண்டிப்பது அவரது வழக்கம். அவர் மார்வினை அனேகமாக தினமும் கொடூரமாக அடிப்ப துண்டு. இந்த இளம்பருவ அனுப வங்கள் அவரை வாழ்நாள் முழுக் கக் கொந்தளிப்பானவராகவும் குழப்பமானவராகவும் இருக்கும் படி செய்தன. 
பட்டப்படிப்புக்குப் பின் மார் வின் கயே தன் வீட்டைவிட்டு வெளியேறி விமானப்படையில் சேர்ந்து சிலகாலம் பணியாற்றி மீண்டுவந்து தெருவோர இசைக் குழுக்களில் பாட ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் அவர் கேக் கெய்ன் போன்ற போதைப் பொருட்களுக்கு அறிமுகமானார். மெல்ல அவர் மேலும் பெரிய இசைக் குழுக்களான ‘ரெயின் போஸ்’ ‘மூன்-க்ளவ்ஸ்’ போன்ற வற்றுக்குச் சென்றார். மூன்-குளோவ்ஸ் குழு சிகாகோவுக்குச் சென்றபோது மார்வின் கயே அவர்களுடன் சிகாகோ சென்று குடியேறினார்.
New Image1961ல் டெட்ராய்டில் பாடும் போது மார்வின் கயேயின் இனிய ஆழமான குரலும் பாட்டும் முறை யும் அக்காலத்தில் அமெரிக்காவி லிருந்த மிகப்பெரிய இசை வெளி யீட்டகமான மோ-டவுன் ரிகார் டிங் கம்பெனியின் இயக்குநரான பெர்ரி கார்டியைக் கவர்ந்தது. ஆரம்பகாலத்தில் அந்நிறுவனத்தில் பாடிவந்த பிரபலங்களான ஸ்மோக்கி ராபின்சன் போன்றவர் களின் பாடல்களில் முழவுக் கலை ஞராகவும் பியானோ வாசிப்பவ ராகவும் பணியாற்றும் வாய்ப்பு தான் மார்வின் கயேவுக்குக் கிடைத்தது. பெர்ரி கார்டியின் தங்கை அன்னாவைக் காதலித்து மார்வின் கயே மணம் புரிந்து கொண்டார். அன்னா மார்வின் கயேயைவிடப் பதினேழு வருடம் மூத்தவள்.
முதலில் தனிக்குரலாகப் பாட வாய்ப்புகிடைத்தபோது மார்வின் கயே தன் தொண்டையுடன் போராடினார். முதல் முயற்சிகள் பரிதாபகரமான தோல்விகளாகவே இருந்தன. 1962ல் வெளிவந்த ஷிtuதீதீஷீக்ஷீஸீ ரிவீஸீபீ ஷீயீ திமீறீறீஷீஷ் சுமாரான வெற்றியைப் பெற்றது. அவரது அடுத்த இரண்டு ஒருபாடல் தட்டுக்களான பிவீtநீலீ பிவீளீமீ மற்றும் சிணீஸீ மி நிமீt ணீ கீவீtஸீமீss அமெரிக்க விற் பனைஅட்டவனையில் முப்பதுக் குள் வந்தன. 1963ல் வெளிவந்த றிக்ஷீவீபீமீ ணீஸீபீ யிஷீஹ் மூலமாக மார்வின் கயே முதல் பத்துக்குள் இடம் பெற்றார்.
ஆனால் மார்வின் கயே ஒரு துள்ளலிசைப் பாடகராகப் பெற்ற இவ்வெற்றிகளில் மகிழ்ச்சி அடையவில்லை. ஆத்மா ததும்பும், துயரம் நிறைந்த இன்னிசைப் பாடல்களையே அவர் விரும்பி னார். வேகமான தாளம் கொண்ட நடனப்பாடல்களைப் பாடும்படி மோ-டவுன் நிறுவனம் அளித்த கட்டாயங்கள் அவரைத் துன்புறுத் தியது. அந்நிறுவனத்துடனான ஒப் பந்தம் நீடித்த காலம்வரை அவரது இன்னிசை ஈடுபாட்டுக்கும் நிறு வனத்தின் வணிக நோக்கத்துக்கு மான போர் நீடித்தது. “நான் என் பின்பக்கத்தை ஆட்டிக் கொண்டி ருக்க விரும்பவில்லை. ஒரு முக் காலியில் நன்றாக அமர்ந்து தர மான இன்னிசைப் பாடல்களைப் பாடவே ஆசைப்பட்டேன்” என்று பிற்பாடு இதைப்பற்றி மார்வின் கயே சொன்னார்.
1964ல் வெளிவந்த ஜிஷீரீமீtலீமீக்ஷீ மேரி வெல்ஸ§டன் இணைந்துபாடிய இணைக்குரல் பாடல்களின் தொகை. அதன் மூலம் மார்வின் கயே விற்பனைப் பட்டியலில் முதலிடம் பெற்றார். அவர்கள் இணைந்து ளிஸீநீமீ ஹிஜீஷீஸீ ணீ ஜிவீனீமீ மற்றும் கீலீணீt's tலீமீ விணீttமீக்ஷீ ஷ்வீtலீ சீஷீu, ஙிணீதீஹ்? போன்ற புகழ்பெற்ற பல இணைக் குரல் பாடல்களைப் பாடியிருக் கிறார்கள். தனிக்குரல் பாடகராக வும் மார்வின் கயே பெரும் வெற்றி களைப் பெற்றார். மேலும் மேலும் முதலிடத்திலேயே இருந்தார். 1965ல் வெளிவந்த கிவீஸீ't ஜிலீணீt றிமீநீuறீவீணீக்ஷீ?, பிஷீஷ் ஷிஷ்மீமீt மிt மிs tஷீ ஙிமீ லிஷீஸ்மீபீ தீஹ் சீஷீu போன்ற பாடல்கள் வழியாக அவர் பெரும்புகழ் பெற்றார். மோ-டவுன் நிறுவனம் வெளி யிட்ட நாற்பது தனிக்குரலிசைத் தொகைகளில் முப்பத்தொன்பதி லும் அவர் விற்பனையில் முதலி டம் பெற்றார். பெரும்பாலான பாடல்கள் அவரே எழுதி இசை அமைத்தவை.
மார்வின் கயேயின் சிறந்த பல இணைக்குரல் பாடல்கள் பாடகி யான டாம்மி டெர்ரெல் - உடன் இணைந்து பாடியவை. 1967ல் வெளிவந்த கிவீஸீ't ழிஷீ விஷீuஸீtணீவீஸீ பிவீரீலீ ணிஸீஷீuரீலீ, சீஷீuக்ஷீ றிக்ஷீமீநீவீஷீus லிஷீஸ்மீ முதலிய மாபெரும் வெற்றிப்பாடல்கள் உட்பட மார்வின் கயே ஏராள மான old pictureபாடல்களை டாம்மியுடன் இணைந்து அளித்திருக்கிறார். 1968ல் வெளிவந்த கிவீஸீ't ழிஷீtலீவீஸீரீ லிவீளீமீ tலீமீ ஸிமீணீறீ ஜிலீவீஸீரீ, சீஷீu'க்ஷீமீ கிறீறீ மி ழிமீமீபீ tஷீ நிமீt ஙிஹ் முதலிய பாடல்களும் வர லாற்று வெற்றியைப் பெற்றவை.
மார்வின் கயே டாம்மியுடன் ஆழமான காதலில் இருந்தார். ஆனால் இருவருமே வேறு திரு மண உறவுகளில் இருந்தமையால் அவர்களால் சேர்ந்து வாழமுடிய வில்லை. மார்வின் கயே கசப்பான திருமண வாழ்க்கையை வாழ, டாம்மி கொடுமைக்காரனான தோழருடன் வாழ்ந்தார். 1967ல் விர்ஜீனியாவில் நடந்துகொண்டி ருந்த ஒரு இசைமேடையில் டாம்மி துவண்டு மார்வின் கயே யின் கைகளில் விழுந்தார். மூளைப் புற்றுநோய் அவரைப் பலிகொண் டது. அமெரிக்காவின் அழியாப் புகழ்கொண்ட காதலிசை இணை இல்லாமலாயிற்று. அந்தப் பிரிவு மார்வின் கயேயைக் கொடும் மன வதைக்கு ஆளாக்கியது. அப்போது வந்த மி பிமீணீக்ஷீபீ மிt tலீக்ஷீஷீuரீலீ tலீமீ நிக்ஷீணீஜீமீஸ்வீஸீமீ ஒரு மகத்தான வெற்றி வெளியீடு, ஆனால் மார்வின் கயே ஆழமான மனச்சோர்விலேயே இருந்தார். போதைப் பொருட்களில் மூழ்கி னார்.
மார்வின் கயே ஏராளமான தனிப்பட்ட சிக்கல்களிலும் மாட் டிக்கொண்டிருந்தார். அவரது துயரமான மணவாழ்க்கை அதில் ஒன்று. மோ-டவுன் நிறுவனத்தின் வணிக நோக்கங்களுக்கு ஏற்ப அவர் அமைத்துக் கொண்டிருந்த காதல்பாடல்கள் அன்று அமெரிக் காவில் எழுச்சி பெற்றுக் கொண் டிருந்த கறுப்பின அரசியலுடன் தொடர்பே இல்லாத பொருளில்லா முயற்சிகள் என அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. 1970 முழுக்க அவர் தனிமையி லேயே கழித்தார். இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது? (கீலீணீt's நிஷீவீஸீரீ ளிஸீ?) என்ற பாடலின் மூலம் அடுத்த வருடம் மேலே வந்தார். இப்புகழ்பெற்ற பாடல் அவரது பாடும் முறை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் தெளிவான வழிப் பிரிதலை அடையாளம் காட்டு கிறது. அந்தப் பாடலில் இருந்த வெளிப்படையான அரசியல் குரல் மோ-டவுன் நிறுவனத்தைக் குழப்பியது. அவர்கள் அதை வெளியிட முதலில் மறுத்தார்கள். அதையும் மீறி அது வெளிவந்தது.
அந்தப் பாடல் அமெரிக்கக் கறுப்பிசையின் முகத்தையே மாற்றி யமைத்தது. அந்தத் தொகையில் ஜாஸ் மற்றும் செவ்வியலிசையின் அம்சங்களைக் கலந்து சோல் இசையின் உணர்ச்சிகரமான தனித் துவத்தை நிலைநாட்டியிருந்தார் மார்வின் கயே. நிறவெறி, வறுமை, சூழியல் அழிவு மற்றும் அரசியல் போராட்டங்கள் ஆகியவற்றுடன் நேரடியாக எதிர்வினையாற்றும் பாடல்களை மார்வின் கயே தொடர்ந்து அமைக்க ஆரம்பித் தார். இந்த இசைத்தொகையின் மாபெரும் வெற்றி தன் கறுப்பினக் கலைஞர்கள் மேல் மோ-டவுன் நிறுவனத்துக்கு இருந்த இறுக்க மான கட்டுப்பாடு தளர வழி வகுத்தது. ஸ்டீவி வண்டர் முதலிய Nice Pictureபாடகர்கள் அதனால் தங்கள் சொந்த இசையைக் கண்டு கொண்டு முன்னேறும் வாய்ப் பைப் பெற்றார்கள். விழியிழந்தவ ரான ஸ்டீவி வண்டரின் பல ஆரம்பகாலப் பாடல்களுக்கு மார் வின் கயே முழவு வாசித்திருக் கிறார்.
பின்னர் மார்வின் கயே தன் பாதையை மேலும் மாற்றிக் கொண்டு ஜாஸ் இசையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். காமச்சுவைகொண்ட பாடல்களை அமைத்த மார்வின் கயே 1973ல் அமைத்த லிமீt's நிமீt மிt ளிஸீ அதன் உச்சம். அமெரிக்க இசை வரலாற் றில் மிக அதிகமாகக் காமச்சுவை கொண்ட பாடலாக அது இன்றும் கருதப்படுகிறது. உள்ளார்ந்த காம ஏக்கமும் தவிப்பும் வெளிப்படும் அந்தப் பாடல் அவரது ஆகச் சிறந்த வணிக வெற்றியாகும். அத் துடன் அதற்கொரு தனித்தன்மை யும் உண்டு. அரசியல் பாடல்களி லிருந்து மார்வின் கயே மீண்டும் அந்தரங்க உலகுக்குத் திரும்பியது இதன் வழியாகவேதான்.
இசையுலகின் உச்ச நட்சத்திர மாக விளங்கிய பாடகி டயானா ரோஸ்-ஸ§டன் இணைந்து 1973ல் வெளியிடப்பட்ட மார்வினும் டயானாவும் என்ற இசைத் தொகைக்குப் பின் அவரது தனிக் குரல் தொகையான மி கீணீஸீt சீஷீu வெளிவந்தது. ஸி&ஙி / சோல் இசை முறைமையின் ஆகச்சிறந்த படைப்பு அதுவே என நான் கருது கிறேன். எல்லாமே அதில் சரியாக அமைந்து வந்திருக்கின்றன. மார்வி னின் குரல் அதிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் ஆத்மார்த்தமாக உரைப்பதுபோல ஒலிக்கிறது. கவித் துவமாகப் பார்த்தாலும் நான் இதுவரைக் கேட்டவற்றில் மிகச் சிறந்த உண்மையான, உணர்ச்சிகர மான காதல்கீதத் தொகை அதுவே.
அன்னா கார்டியுடனான விவா கரத்து வழக்குக்காக எழுபதுகளின் பெரும்பகுதியை மார்வின் கயே நீதிமன்றங்களில் செலவழித்தார். அவர் அதிகமாக இசைப்பதிவு களுக்கு வர முடியாத நிலையில் மோ-டவுன் அவரது பழைய மேடைப்பாடல்களின் தொகை ஒன்றை நிஷீt tஷீ நிவீஸ்மீ மிt ஹிஜீ என்ற பேரில் வெளியிட, அதுவும் பெரு வெற்றி பெற்றது.
1978ல் அவர் தன் விவாகரத் துக்குப் பின்னர் வெளியிட்ட பிமீக்ஷீமீ, விஹ் ஞிமீணீக்ஷீ என்ற இசைத்தொகை ஆழ்ந்த மனக்கசப்புடன் அவரது மணவாழ்க்கையைப்பற்றிப் பேசி யது. பல அந்தரங்கத்தகவல்கள் அதில் இருந்தமையால் அன்னா மானநஷ்ட வழக்கு தொடுத்துப் பெருந்தொகையை நஷ்ட ஈடாகக் கேட்டிருந்தார். தன்னைவிட 18 வயது இளைய ஜானிஸ் ஹண் டரை மார்வின் கயே மணம் புரிந்துகொண்டார். அவர் அடுத்த இசைத்தொகைக்கான பணிகளில் ஈடுபட்டாரென்றாலும் அதை முடிக்க முடியவில்லை. அவரது போதைப்பழக்கம் உச்சத்தை அடைந்துவிட்டிருந்தது. இரண்டா வது மணமும் துயரம் மிக்கதாக ஆகிவிட்டிருந்தது.
1981இல் அமெரிக்காவில் அவ ரைத் துரத்திய பல வருமானவரி வழக்குகளில் இருந்து தப்ப மார் வின் கயே ஐரோப்பாவுக்கு ஓடிப் போனார். அங்கே இருந்து கொண்டு அவர் மிஸீ ளிuக்ஷீ லிவீயீமீtவீனீமீ என்ற இசைத்தொகையை வெளி யிட்டார். அது அவரது பிற பாடல் களிலிருந்து மாறாக ஆழமான தத்துவ நோக்கு கொண்டிருந்தது. அப்பாடலில் எழுந்த பிரதியுரி மைச் சிக்கல்களின் காரணமாக மோ-டவுன் நிறுவனத்துக்கும் அவருக்குமான உறவு முடிவுக்கு வந்தது.
1982ல் கொலம்பியா நிறுவனத் துக்காகப் பாடிய பிறகு அவரைப் பற்றித் தவறான செய்திகள் தொடர்ந்து வெளிவரத்தொடங் கின. அவரது போதைப்பழக்கம் முற்றியது. பொது இடங்களில் முறைமீறி நடந்துகொண்டார். ஆனால் அடுத்த வருடம் வெளி வந்த விவீபீஸீவீரீலீt லிஷீஸ்மீ ஒரு திரும்பி வருதலாக அமைந்தது. அதைத் தொடர்ந்து வெளிவந்த ஷிமீஜ்uணீறீ பிமீணீறீவீஸீரீ பெருவெற்றி பெற்று அவ் வருகையை உறுதிசெய்தது. 1983ல் அவர் மோ-டவுன் நிறுவனத் துடன் சமாதானமானார். அவர் கள் தங்கள் வெள்ளிவிழாவைக் கொண்டாடும் பொருட்டு நடத் திய மேடைநிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். ஆனால் மார்வின் கயேயின் போதைப் பழக்கமும் தற்கொலைவிருப்ப மனநிலையும் தொடர்ந்தன.
மார்வின் கயேயின் வாழ்க்கை மேலும் மேலும் தனிமை கொண்ட தாக ஆகியது. அவர் மேலும் மேலும் கொக்கெயினுக்கு அடிமை யானார். எங்கும் போக முடியா மல் எதிலும் நிலைகொள்ளாமல் New oneபலவருடங்களுக்கு முன் அவர் விட்டுவிட்டு வந்த தன் பெற்றோ ரிடமே திரும்பிப்போக முடிவுசெய் தார். அது உண்மையில் இசைவழி யாகத் தன்னைத்தேடி இறங்கிய ஒரு பெரும்கலைஞனின் தீவிர மான பயணத்தின் துயரம் மிகுந்த முடிவு. தன் நிலைகெட்ட வாழ்க் கையில் ஒரு பிடிமானத்தை மீண் டும் உருவாக்கிக் கொள்வதற்கான கடைசி முயற்சி அது. ஆனால் அதுவும் மேலும் கசப்புக்கும் மனச் சோர்வுக்குமே அவரைக் கொண்டு சென்றது. கருப்பையின் வெம்மைக் கும் பாதுகாப்புக்கும் எவரும் திரும் பிப் போக முடியாது.
மார்வின் கயேயின் தந்தை அவரது மதம் சாராத இசையைப் பற்றி ஆழமான கசப்பு கொண்டி ருந்தார். மார்வின் கயேயின் சுதந் திரமான வாழ்க்கைமுறை, பிரப லம் ஆகியவற்றை அவர் வெறுத் தார். மார்வினை அவர் நிராகரித்து தொடர்ச்சியாக அவமதித்தார். அவர்கள் நடுவே நிகழ்ந்த விவாதங் கள் கடுமையான மோதல்களில் முடிந்தன. அவரின் தந்தை மார்வி னின் மனச்சிக்கலையும் சோர்வை யும் பொருட்படுத்தாமல் அவரை மூர்க்கமாக வசைபாடினார். சர்வதேச இசை நட்சத்திரமான, தேசிய அடையாளமான மார்வின் கயே அந்த விவாதங்களால் மனம் புண்பட்டு கண்ணீர்விட்டு அழு தார். பலமுறை தற்கொலைக்கு முயன்றார்.
1984 ஏப்ரல் ஒன்றாம் தேதி மார்வினின் நாற்பத்தி ஐந்தாவது பிறந்தநாளுக்கு ஒரு தினம் முன்ன தாக மார்வின் கயேக்கும் அவரின் தந்தைக்கும் மோதல் வெடித்தது. அவரின் தந்தை அவரின் தாயை ஏதோ வணிகப்பத்திரங்களைக் கைத்தவறுதலாக வைத்துவிட்டா ரென்று சொல்லிக் கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். மார்வின் கயே அதில் தலையிட்டபோது தந்தையின் சினம் அவர் மீது திரும் பியது. மோதல் வெடித்துக் கடும் பூசலாக மாறியது. கடும் சினத்தில் நிலைமறந்த பாதிரியார் மார்வின் பெண்ட்ஸ் கே தன் துப்பாக்கியை எடுத்து மகனை நோக்கிச் சுட்டார். தோளிலும் மார்பிலும் குண்டடி பட்டுச் சுருண்டு விழுந்த மார்வின் கயே பின்னர் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று பாடுவதற்கு மீண்டெழவேயில்லை.
ரெஜி தன் தந்தையின் வீட்டுக் குத் திரும்பிச் செல்லவோ அங்கே தங்கவோ இல்லை. அவன் இப் போது அமெரிக்காவுக்குச் சென்று விட்டான். கடந்த 2007, ஏப்ரல் ஒன்றாம் தேதி அவன் என்னை வாஷிங்டன் டிசியில் உள்ள மார் வின் கயே பூங்காவில் இருந்து அழைத்தான். அங்கு மார்வின் கயே உள்ளரங்கில் ஒருவாரம் நீண்டு நின்ற கீலீணீt's நிஷீவீஸீரீ ளிஸீ? என்ற மார்வின் கயே நினைவு இசை நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண் டிருந்தான். மார்வின் கயே பாடல் களின் பழைய ஹைதராபாத் ஞாப கங்களில் மூழ்கிக் கண்ணீர் நிறைந்து தொண்டை அடைத் தமையால் எங்களால் பேச முடிய வில்லை.

தமிழில்: ஜெ

click here

click here
click here