உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
நீதிபதிகளா? மதகுருக்களா?
வாஸந்தி

கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியக்  குடும்ப வாழ்வில்  ஏற்பட்டுவரும் சமூகவியல் மாற்றங்களை நமது  நீதி மன்றங்கள் அதிகம் கண்டுகொள்ளவே இல்லை என்பது எனக்கு எப்பொழுதும் வியப்பை அளிப்பது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு விவாகரத்துக் கோரிக்கையை நிராகரித்த  வழக்கு அதற்குச் சரியான உதாரணம். பதினாறு ஆண்டுகளாக நரேந்திர குமார் வர்மா என்ற நபர் தன் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருபவர். மணவாழ்வு முறிந்து ஒரு தம்பதி பத்தாண்டுகளுக்கு மேல் பிரிந்து வாழ்ந்திருந்தால் விவாகரத்துப் பெறுவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும் என்றுதானே நாம் நினைப்போம்? அதுதான் இங்கு இல்லை. இந்திய விவாகரத்துச் சட்டத்தின்படி, தம்பதிகளின் பரஸ்பர ஒப்புதல் இல்லாமல் போனால் விவாகரத்து கிடைப்பது, எத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், மிகச் சிக்கலான விஷயம். வர்மாவின் மனைவி விவாகரத்துக்கு ஒப்பாததால் நிலுவையில் இருக்கும் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிற்று என்றாலும்  கால இடைவெளியைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் முடிவுக்கு வராதது  பகுத்தறிவுக்கு விரோதமானதாக எனக்குப்படுகிறது. அதைவிட கேள்விக்குறியதாகப்படுவது தீர்ப்புடன் மாண்புமிகு நீதிபதிகள் வழங்கிய நீதி உபதேசங்கள். 'வர்மா [காலாவதியான] அவரது  திருமணபந்தந்தைத் தொடர்வதுதான்  கடவுளின் விருப்பமாக இருக்கும்' என்றார்கள். தாம்பத்திய தர்மத்தைப் பற்றியும் பாரத நாட்டின் கலாச்சாரப்            பாரம்பரியத்தையும் சுட்டிக்காட்டினார்கள். இத்தனை நாள் செய்த தவறு போதும், சேர்ந்து வாழும் வழியை இனி [16 ஆண்டுகளுக்குப் பிறகு!] பாருங்கள் என்றார்கள்.

விவாகரத்து வழக்கு வரும்போதெல்லாம் நீதிபதிகள் அறிவுரை வழங்குவது இது முதல் முறையல்ல.  கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு வரும்போது அதைப் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து சேர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும் என்றிருக்கிறார்கள். திருமணம் என்ற ஸ்தாபனத்தின் புனிதத்தை விளக்கி இந்தியச் சமூகத்தில் தார்மீக மரபுகள் நசிந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். நீதிபதிகளுக்கு அப்படிப்பட்ட சொந்த அபிப்பிராயங்கள் இருப்பது அவர்களது கருத்துரிமை. ஆனால் தீர்ப்பு வழங்கும் போது அவற்றைச் சற்று அடக்கி வாசிப்பது நல்லது.

சமகால இந்தியச் சமூகத்தில் முன்னெப்போதையும்விட அதிக அளவில் மண முறிவுகளும் விவாகரத்துகளும் நிகழ்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது தன்னிச்சையானதோ எதேச்சையானதோ அல்ல. உலகமயமாக்கலில், உலகம் சுருங்கிப் போனதில் நமது சமூகம் மட்டுமல்ல, தந்தை வழி நில ஆதிக்கச் சமூக மரபில் வந்த கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் ஒரு மாபெரும் கலாச்சாரக் கடைசல் ஏற்பட்டு வருகிறது. உலகளாவிய நிகழ்வுகளும் எண்ணங்களும் கருத்துப் பரிமாற்றமும் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து யாரும் விலகி இருக்கமுடியாது. கல்வி அறிவும் பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களுக்குக் கிட்டும்போது சமுதாயத்தில் மிகச் சிக்கலான மாற்றங்கள் நிகழும். இந்தக் கடைசலில் சில நல்லதும் சில தீயதும் நிகழும் என்பதில் சந்தேகமில்லை. முன்பு இந்தியாவில் மிக மோசமான திருமண பந்தத்திலும் விலகி வரமுடியாத கட்டாயத்தில் படிப்பும் பொருளாதாரச் சுதந்திரமும் அற்ற பெண்களுக்கு வேறு வழி இல்லாமல் இருந்தது. தவிர ஒரு கலாச்சார மூளைச்சலவையில் சிறைப்பட்டிருந்தார்கள். இன்றும் அத்தனை சுலபமாக விவாகரத்திற்குப் பெண்கள் முடிவெடுத்துவிடுவதில்லை. அதிலும் குழந்தைகள் இருந்தால் மிகவும் யோசித்துத்தான், வேறு வழியே இல்லை என்று    ஆகும்போதுதான் அத்தகைய முடிவுக்கு வருகிறார்கள். விவாகரத்தான பெண்களுக்கு வாழ்க்கை சுலபமானது அல்ல. எத்தனையோ ஏச்சுக்கும் ஆண்களின் சீண்டலுக்கும் ஆளாக நேர்கிறது. முதிர்ச்சியற்ற முடிவுகளை எடுக்கும் சிறுபான்மை பெண்களும் ஆண்களும் இருப்பார்கள்தான். ஆனால் பெரும்பான்மை விவாகரத்துகள் பிரிவதுதான் சிறந்தது என்ற நிலையில்தான் எடுக்கப்படுகின்றன. மேற்கு நாடுகளில் நடப்பது போல பிரிவது என்பது இங்கு அத்தனை சுலபமான விஷயம் அல்ல.           

அதற்கு கலாச்சார மனத்தடையும் காரணமாக இருக்கக் கூடும்.     

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் 'தமிழ்ச் சமூகத்தில் அதிகரித்துவரும் விவாகரத்துகள்' என்ற தலைப்பில் எழுத வேண்டிய கட்டுரைக்காக சென்னையில் நான் களப்பணியில் ஈடுபட்டபோது விவாகரத்து கிடைத்தாலே தங்களுக்கு விடியல் என்ற  பரிதவிப்பில் இருந்த சில பெண்களைச் சந்திக்க நேர்ந்தது. விவாகரத்து வழக்குகளைக் கையாண்ட குடும்ப கோர்ட்டுகள் தங்களது விருப்பத்திற்கு அதிகபட்ச முட்டுக்கட்டை போடுவதாகச் சொன்னார்கள். மிக அந்தரங்கமான கேள்விகளைக்கேட்டு சிறுமைபடுத்துவதாகக் கண்ணீர் விட்டார்கள். குடும்ப கோர்ட்டில் இருந்த நீதிபதிகளோ குடும்பங்களைச் சேர்த்து வைக்கும் முயற்சிதான் தங்களுக்கு முன்னால் இருக்கும் முதல் கடமை என்றார்கள். அற்ப காரணத்துக்கெல்லாம் இப்போது பெண்கள் விவாகரத்து கோருவதாகச் சொன்னார்கள். அதை அனுமதித்தால் மேற்கு நாடுகள் போல இங்கும் குடும்பங்கள் சிதறும். குழந்தைகளின் கதி என்னவாகும் என்றார்கள்.

முணுக்கென்றால் கட்டிய மனைவியை 'தள்ளிவைத்து'  வேறு மணம் செய்துகொள்ள முன்பு ஆணுக்கு முடிந்தது. முன்பு வரதட்சிணைக் கொடுமையிலிருந்தும், வேறு வெளி உறவு வைத்துக்கொண்டிருக்கும் கணவனிடமிருந்தும் , மாமியார் கொடுமையிலிருந்தும் தப்பிக்கும் மார்க்கம் கிடைக்காமல் பொறுத்துக்கொண்டிருந்த கட்டாயத்தில் இன்றைய பெண் இல்லை.  அப்படியிருக்க பொறுமையாயிரு, இந்தியப் பண்பாட்டைக் காப்பாற்று  என்று  ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் நீதிபதிகள் உபதேசித்தால் என்னுடைய அந்தரங்க வலிகளை நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்றுதான் கேட்கத்தோன்றும்.     

இத்தகைய சமூக  மாற்றங்கள் ஏற்படுவதற்குக் கலாச்சாரச் சீரழிவு காரணமில்லை. சமூகத்தின் பரிணாம வளர்ச்சி அது. 

விவாகரத்தைப் பொறுத்தவரை  சட்டங்கள் மதத்திற்கு மதம் நமது  நாட்டில் வேறுபடுகின்றன. எல்லா சட்டங்களும் அரதப் பழசு. காலத்திற்கு ஏற்ப அவற்றை மாற்றியாக வேண்டும். சட்டங்கள் எளிமைப்படுத்தப்படவேண்டும். சேர்ந்து வாழ்வதா பிரிவதா என்னும் முடிவை கணவன் மனைவி மட்டுமே எடுக்கமுடியும். நீதி மன்றங்கள் உதவும் கரங்களாக இருக்கவேண்டுமே தவிர குருபீடங்களாகச் செயல்படமுடியாது. அந்தரங்க விஷயங்களில் , தனி மனிதரின் தனிப்பட்ட தேர்வுகளில் குருபீடங்கள் கூட தலையிட முடியாது.  

click here

click here
click here