உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
மனோஜ்

இந்தியா 'மகத்தான' வெற்றி பெற்றிருக்கிறது. அணு எரிபொருள் வாங்க 34 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கிவிட்டது. 45 நாடுகள் கூட்டமைப்பு பெரிய மனது வைத்து அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. இனி அணு உலைகளில் எரிபொருளைப் போட்டு மின்சார உற்பத்தியை பெருக்கி நாட்டை ஜொலிக்கச் செய்யலாம். அப்புறம் மெதுவாக வல்லரசாகி விடலாம்.

சமீபத்தில் இத்தனை திடுக்கிடும் திருப்பங்களுடன் எந்த உலக நிகழ்வும் நடந்ததில்லை. இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அத்தனை வர்ணங்கள். துரோகம், சதி, சாகசம் என்று இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்துக்கு ஒரு இதிகாச சாயலே வந்துவிட்டது. 1974-ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நடத்தி சின்னதாக தன் புஜ பராக்கிரமத்தை காட்டியது இந்தியா. இதனால் இந்தியாவுக்கு அணு எரிபொருள், அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் மூலப் பொருட்களை விற்க அணுசக்தி நாடுகள் அமைப்பு தடைபோட்டது.

தளர்ந்துவிடவில்லை இந்தியா. 1998-ல் இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதனால் ரஷ்யா தவிர எந்த நாடும் அணுசக்தி உதவிகளை இந்தியாவுக்கு அளிக்கவில்லை. விளைவு அணு மின் உற்பத்தியில் பின்னடைவு.

இதிலிருந்து மீள்வதற்காகத்தான் இடதுசாரிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே, அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. மின்சார உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு எரிபொருளை பெறும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தம் அவ்வளவு சுலபத்தில் அமலுக்கு வந்துவிடாது. சர்வதேச அணுசக்தி கழகத்தின் ஒப்புதலையும், அணு எரிபொருள் சப்ளை செய்யும் 45 நாடுகள் அமைப்பின் (என்எஸ்ஜி) ஒப்புதலையும் பெற வேண்டும். இதன் பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். பிறகுதான் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.

முதல்கட்ட ஒப்புதல்  சிக்கலின்றி கிடைத்துவிட்டது. என்எஸ்ஜி நாடுகள் ஒப்புதலுக்குத்தான் இத்தனை இழுபறி. ஏற்கனவே அணுகுண்டு சோதனை நடத்தியதாலும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திடாததாலும் இந்தியாவுக்கு அனுமதி தருவதில் என்எஸ்ஜி நாடுகளில் சில எதிர்ப்பு தெரிவித்தன.

என்எஸ்ஜி நாடுகளின் கூட்டம் வியன்னா நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக 'வாஷிங்டன் போஸ்ட்' வழியாக ஒரு புதிய குண்டு விழுந்தது. இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால், அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு அந் நாட்டு நாடாளுமன்றத்திடம் உறுதி அளித்திருக்கும் தகவல் வெளியானது.

அதாவது அணுசக்தி ஒப்பந்தத்தில் மறைந்துகிடப்பது என்னவென்றால், அணுகுண்டு பரிசோதனை எதையும் இந்தியா இனி மேற்கொள்ளவே முடியாது. அப்படி மேற்கொண்டால் அணுசக்தி ஒப்பந்தமே ரத்தாகி விடும் என்பதுதான்.

இந்த அதிமுக்கியமான செய்தி அடங்கிய அமெரிக்க வெளியுறவுத் துறையின் 26 பக்க கடிதம் கடந்த 9 மாதங்களாக மறைக்கப்பட்டிருந்தது என்பதுதான் இன்னொரு அதிர்ச்சி. இது இந்திய அரசுக்கும் தெரியும் என்று வாஷிங்டன் போஸ்ட் சொல்லியிருக்கிறது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்திய இறையாண்மைக்கு இந்த ஒப்பந்தம் அச்சுறுத்தலாக இருக்கும் என ஆரம்பம் முதலே சொல்லிவந்தன.

ஆனால் நம் நாட்டின் அணு ஆயுத திட்டங்கள் எதையும் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்றும் நம் நாட்டின் இறையாண்மையை பாதிக்காது என்றும் ஒப்பந்தம் காரணமாக எதிர்காலத்தில் அணுஆயுத பரிசோதனை நடத்தும் உரிமையை இந்தியா இழக்க வேண்டியது இல்லை என்றும் பிரதமர் மன்மோகன்சிங் திரும்ப திரும்ப கூறிவந்தார். கட்டுக்கட்டாக நோட்டுகள் பறந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்திலும் இதே கருத்தை பிரதமர் வலியுறுத்தி பேசினார்.

ஆனால் அமெரிக்காவின் இக்கடித விவகாரம் அம்பலமானது குறித்து எந்த நேரடியான விளக்கமும் இல்லை. அமெரிக்க அதிபரின் நிர்வாகத்திடம் இருந்து அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பப்பட்ட அக்கடிதம் அவர்களின் உள்நாட்டு விவகாரம் என்ற அளவில் சொல்லி இந்திய அரசு தப்பிக்க நினைத்தது.

இந்த பரபரப்பு பின்னணியோடுதான் வியன்னாவில் சில நாடுகளின் மூர்க்கமான எதிர்ப்பையும் மீறி, 76 மணி நேர பரபரப்புக்கு பின் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கிடைத்திருக்கிறது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம், அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திடாத நிலையிலும் என்எஸ்ஜி ஒப்புதல் பெற்ற ஒரே அணுசக¢தி நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த மாபெரும் வெற்றிக்கு முன் பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசிய பொய் எல்லாம் மறைந்துவிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லட்சம் லட்சமாக மக்களவையில் லஞ்சப் பணம் பறக்கடிக்கப்பட்ட போதும் பெரும் பரபரப்பு இருந்தது. ஆனால் வாக்கெடுப்பில் அரசு வென்றவுடன் வாழ்த்து முழக்கங்களும் பட்டாசுக் கொளுத்தல்களுமாக அது மறைக்கப்பட்டது. அதே நிலைதான் இப்போதும். இலக்கு வெற்றிதான். அதற்காக என்ன கீழ்த்தரமான வேலைகளும் செய்யலாம் என்பதுதான் நிரூபணமாகியிருக்கிறது.  வாக்கு வென்றிருக்கிறது. ஆனால் நம்பிக்கை தோற்றுவிட்டது.
 
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற துடிப்பது ஏன்? இறையாண்மையை அடகு வைத்து, ஒப்பந்தத்தை தூக்கிக் கொண்டாடுவது ஏன்? மின் உற்பத்தி, வல்லரசுக் கனவுக்கு மட்டுமா?


 லஞ்ச ஊழலால் நாடு நாறிக் கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் மதக் கலவர பலி உயருகிறது. ஒரு நதி உடைப்பெடுத்தால் அல்லலுறும் மக¢களைக¢ காக¢க அடிப்படை வசதி கூட இல்லை, விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இலவச முகாமில் கண்ணுக்கு மருந்து போட்டால் பார்வை பறிபோகிறது. தடுப்பூசி போட்டால் குழந்தை சாகிறது. இதையெல்லாம் சரிசெய்துவிட்டு பிறகு வல்லரசாகி தொலைக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டியிருக¢கிறது.

 

click here

click here
click here