உயிர்மை - January
 
யுத்தத்தை விரும்புகிறவர்கள் யார்?
- மனுஷ்ய புத்திரன்
மிருகம் - மனிதன் - எந்திரன் மேலும் சிக்கலாகும் அறம்
- ஆர்.அபிலாஷ்
'பூ' திரையில் ஒரு கரிசல் காட்டுக் கவிதை
- லக்ஷ்மி சரவணக்குமார்
மும்பைத் தாக்குதல்களும் ஊடகக் கதறல்களும்
- அ.முத்துக்கிருஷ்ணன்
போரும் வாழ்வும் : மும்பைத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியா
- மாயா
குழந்தைப் போராளிகள் : பேரவலத்தின் ரத்த சாட்சியம்
- யமுனா ராஜேந்திரன்
பொது வாழ்வில் ஒரு நாளின் சில குறிப்புகள்
- அழகிய பெரியவன்
மறக்கப்பட்ட வலிகளின் வரலாறு
- ஹர்ஸ் மந்தர்
உங்கள் பெயர் என்ன?
- அ.முத்துலிங்கம்
போர் முனையிலிருந்து பின்வாங்குகிறதா இலங்கை ராணுவம்?
- இளைய அப்துல்லாஹ்
ஏ.கே.ராமானுஜன் : நாட்டார் கதைகளின் நாயகன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
இரண்டு பிரஞ்சுப் பெண்கள்
- பிரபஞ்சன்
ராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை
- ஷாஜி
ஊடலில்....
- றஞ்சனி
உலராத் துளிகள், மழை துவங்கிய அரட்டை
- ஆர். கார்த்திகா
இரவு
- யாழன் ஆதி
மழைப்பறவை பறந்த திசையில்
- த.செல்வசங்கரன்
ஒரு இடம் காலியாயிருக்கிறது
- ரவிஉதயன்
என் இருத்தலின் நஞ்சு
- கான் ஸ்யூ
பச்சை மரகதக் கல்கிளி
- சமயவேல்
கடிதங்கள்
- கடிதங்கள்
click here
இரவு
யாழன் ஆதி

1
தெளிந்த இரவின்மீது
கல்லெறிகின்றன நாய்கள்
அலைகள் மிதந்தெழும்புகின்றன
கூடுகளில் உறங்கும் பறவைகளின் செட்டைகள்
துடித்து குஞ்சுகளை அமர்த்துகின்றன
மல்லிகை மலர்கள் உதிர்ந்து பரவுகின்றது
வாசனை
கொஞ்சமும் சலனமில்லாமல்
அமைதியாக ஒரு கல்லைப்போல்
கிடக்கிறது
இருள்.

2
வாசிப்பின் தவமறிந்து திரும்புகின்றன
எழுத்துகள்
வரிகளின் ஓசை எழுச்சி
மெல்லிய நரம்புகளாகிப் படர்கின்றன
உயிர் ஓடும் நாளங்களில் அசையும்
சப்தமற்ற மௌனத்தின்மீது
வேகமாகச் சுழற்றுகிறது தன் இறக்கைகளை
மின்விசிறி.

3
வலியின்மீது மருந்தாய்
பூமியில் வழிகிறது இருள்
முட்கள் தெரியாத பாதையெங்கும்
நடக்கிறது நிலவு
தென்னங்கீற்றின் ஓரிழையின் நுனியில்
ஒட்டிக்கொண்டே ஆடும் நினைவு.

4
ஒளியற்றுப் பேசுகின்றன இரவின் சொற்கள்
செல்லரித்துப் போன
பழைய புத்தகங்களின் வரிகள்
தேம்புகின்ற சப்தம் விழ
விழித்துக் கொள்கிறேன்.
அவற்றை என்ன செய்ய
அந்த வரிகளின் அகண்ட வெளியினை
என்ன செய்ய
அர்த்தங்களை உருவாக்கிய எழுத்துகளை
என்ன செய்ய
எழுத்துகளின் மூலஒலியை அமைதியாக்க
இரவைத்தவிர வேறொன்றுமில்லை நம்மிடம்.

5
கருமை வழியும்
வேய்குழல்களின் விரல்களைப்
பிடித்துக் கொண்டு விளையாடி
முடிகிறது இரவு. 

click here

click here
click here