உயிரோசை - இதழ் 2
 
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
- சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
- மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
- சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
- மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
- வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
- ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
- கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
- அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
- ஜெயந்தி சங்கர்
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
- கே.பாலமுருகன்
மெளனத்தின் மொழி
- றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
- ஆலன் ஸ்பென்ஸ்
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
- கோகுலன்
பசித்தலையும் சுயம்
- எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
- த.அரவிந்தன்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
- -
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
- இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
- -
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
- -
பழமொழிகளும் சொலவடைகளும்
- கழனியூரான்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
- -
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
- கந்தர்வன்
புத்தகம் பேசுது
- -
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
- தாஜ்
உங்கள் கருத்துக்கள்
- எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
click here
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
சி.வி. பாலகிருஷ்ணன்

சி.வி. பாலகிருஷ்ணன்

கேரளத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தில் அன்னூரில் பிறந்தார். மாணவராக இருக்கும்போது எழுதத் துவங்கினார். நாவல், சிறுகதைகள் மட்டுமல்லாது காட்சி ஊடகங்களிலும் ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேரள சாகித்திய அகாதெமி விருது பெற்ற இவருடைய 'ஆத்மாவுக்கு சரியென்று படுகிற காரியங்கள்' நாவலின் 25-வது வருட விழா சமீபத்தில் நடைபெற்றது. எழுத்தை மட்டுமே பணியாகக் கொண்ட இவர் கேரளத்தின் வடகோடியிலுள்ள காசர்கோட்டில் வசித்து வருகிறார். இவரது 'திசை' நாவல் தமிழில் உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.


சினிமாவின் இடங்கள்


சாப்ளின், டி சீக்கா, புனுவல், ஃபெல்லினி, ஹிச்காக், குரோசவா, பெர்க்மன், கோதார்த்...

ரே, கட்டக், சென், நிஹலானி, தாஸ்குப்தா, அடூர், அரவிந்தன், கார்யாட், மேனோன், எம்.டி., ஜார்ஜ், பத்மராஜன்...

திரைக்கலையின் மகத்தான அனுபவங்களைத் தருகின்ற கிளாசிக் திரைப்படங்களினூடாகவும் உலக சினிமாவில் பெருமளவு கவனம் பெற்ற சமகாலப் படைப்புகளினூடாகவும் இந்திய சினிமாவின் தலைசிறந்த ஜாம்பவான்களினூடாகவும் கடந்து செல்கிற இந்தப் படைப்பு திரைக்கலையின் மீதான ஆழமான காதலையும் திரைஊடகத்துக்கு இருக்கின்ற, பார்வையாளனைக் கவர்ந்து வசியப்படுத்துகின்ற அற்புதமான சக்தியையும் பிரதிபலிக்கிறது.


கேரள அரசின் சிறந்த திரைப்படநூலுக்கான பரிசைப் பெற்றது. சமீபத்தில் 4வது பதிப்பு வெளிவந்திருக்கிறது.
என் 'சினிமா பாரடைஸோ'வுக்கு...


அரங்கத்தின் விளக்குகளெல்லாம் அணையவும் நம் முன்னால் இருக்கும் வெள்ளித் திரையில் நம்முடைய முழு எதிர்பார்ப்புகளும் குவியவும் செய்கிற அந்த நிமிடத்துக்கு இணையாக வேறொன்றும் கிடையாது என்று சொல்கிறார் பிரபல திரைப்பட விமரிசகியான பவுலின் கீல். நிஜம்தான். அதுபோல வேறொரு நிமிஷம் இல்லைதான். சினிமா போல வேறொரு அனுபவமும் இல்லை.

பல மரத்தூண்களில் உயர்ந்து நிற்கும் ஒரு பெரும் குடிசைதான் என் முதல் டாக்கீஸ். நாற்காலி, பெஞ்ச், தரை என்ற வரிசைப்படி இருப்பிட ஏற்பாடு. ஒவ்வொன்றுக்குமிடையில் வேலிக்கட்டுகள். மணல் வாரி எறிவதைத் தொடர்ந்து தரை டிக்கெட்டுகளில் எழுகிற சண்டைகள் திரைப்பட காட்சிகளின் பிரிக்க முடியாத ஒரு அம்சமாகும். முடி முழுக்க மணலைம் மனம் முழுக்க சினிமாவையும் சுமந்து டாக்கீசிலிருந்து வெளிவருகிற ஒரு சிறுவன் இப்போதும் என் நினைவிலிருக்கிறான்.

அந்த டாக்கீஸ் இன்று இல்லை. அதன் இடத்தில் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்தான் இருக்கிறது. ஆனால் அந்தப் பக்கம் பார்க்கும்போது என் கண்களுக்கு இப்போதும் தெரிவது மூங்கிலாலான வேலியும் ஓலைச் சுவர்களும் கருத்த நெடிய தூண்களும் புரொஜக்டரிலிருந்து வரும் வெளிச்சத்தின் பரவலும் வெள்ளித்திரையில் சலனிக்கும் நிழல்களும்தான். யார்யாரோ மணல் வாரி வீசுகிறார்கள். ஆரவாரம் எழுகிறது.

என்றென்றைக்குமாக காலத்தில் மறைந்துபோய்விட்டாலும் ஒரு எதிர்பிம்பமாக மனதில் பதிந்து கிடக்கும் அந்த பழைய டாக்கீசுக்கு, என்னுடைய அந்த 'சினிமா பாரடைஸோ'வுக்கு, இந்தப் படைப்பை சமர்ப்பிக்கிறேன்.


சி.வி. பாலகிருஷ்ணன்பகுதி 1


பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்


'மேக்கிங் எ லிவிங்' (Making a Living, 1914) என்ற ஹாலிவுட் திரைப்படம் அதிகம் கவனிக்கப்படவில்லை என்றாலும் உலக சினிமாவின் சரித்திரத்தில் அதற்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. உலகமெங்கும் கொண்டாடப்பட்ட ஒரு நிகரில்லா கதாபாத்திரத்தின் பயணம் துவங்குவது இந்தத் திரைப்படத்திலிருந்துதான். சென்ற நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் ஃப்ரெஞ்ச் சினிமாவில் உருவான திரை நகைச்சுவையின் இயல்பையே மாற்றியமைத்த திரைப்படம் என்ற பெருமையும் இந்தப் படத்துக்கு உரியதுதான்.

தேவையான அளவைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் கால்சராய், பாதங்கள் மாற்றி அணிந்த பெரிய ஷூக்கள், டேபி தொப்பி, ஒட்டப்பட்ட மீசை: சரித்திர முக்கியத்துவம் அடைந்த 'மேக்கிங் எ லிவிங்'கில் பார்வையாளர்கள் கண்ட புதிய பாத்திரம் இப்படித்தான் இருந்தது. ஒப்பனை அறையில் உடை மாற்றும்போது அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி எந்தவொரு திட்டமும் தன் மனதில் தோன்றியிருக்கவில்லை என்று தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார் சார்லி சாப்ளின். முழுமையாக வேடம் மாறிய பிறகு செட்டை நோக்கி நடக்கும்போதுதான் அந்த கதாபாத்திரம் உண்மையில் பிறந்தது. பிறகு ஒன்றன் பின் மற்றொன்றாக காமெடி யோசனைகளின் பிரவாகம்தான். அவற்றில் ஒன்று கூட ஹாலிவுட்டில் நகைச்சுவையின் தொழிற்சாலையையே நடத்திக்கொண்டிருந்த மாக் சென்னெட்டின் வழக்கமான ஃபார்முலாவைப் பின்பற்றியதாயிருக்கவில்லை. எல்லாம் ஒன்றுக்கொன்று வித்தியாசம், தைரியம், நூதனம்.

ஒரு களங்கமில்லாத சிறுவனின் கண்களால் உலகத்தைப் பார்க்கிற ஒரு வளர்ந்த மனிதனைத்தான் சாப்ளின் காட்சிப்படுத்திய புதிய கதாபாத்திரத்தின் மூலமாக பார்வையாளர்கள் கண்டார்கள். அவன் காட்டிய குறும்புகளை எல்லாம் ஒரு சிறுவனின் இயல்பான குறும்புகளாக அவர்கள் உள்வாங்கிக் கொண்டார்கள். பெரியவர்களையும் குழந்தைகளையும் அவை ஒரே மாதிரி கவர்ந்தது. பார்த்துக்கொண்டேயிருக்க, அகில உலகப் பிரசித்தி அடைந்தான் அந்த நாயகன்.

மாக் சென்னெட்டின் நிறுவனமான கீஸ்ட்டன் ஸ்டுடியோதான் 'மேக்கிங் எ லிவிங்' திரைப்படத்தைத் தயாரித்தது. சாப்ளின் நடித்த அந்தப் புதிய கதாபாத்திரம் சென்னெட்டுக்கு பெரிய ஆச்சரியத்தையெல்லாம் ஏற்படுத்தவில்லை. சினிமாவில் சாப்ளினுக்கு பெரிய எதிர்காலமில்லை என்பதுதான் அவருடைய கணிப்பு.

ஆனால் தன் விசித்திர வேடத்தை அணிந்து வித்தியாசமான ஒரு நடை நடந்து சாப்ளின் உலகத்தின் உச்சியை அடைந்தார். இப்போதும் அங்கிருந்தே ஒரு கள்ளச் சிரிப்புடன் தன் டேபி தொப்பியை உயர்த்தி நமக்கு வந்தனம் சொல்கிறார்.

தன் திரைப்படங்களில் மற்ற கதாபாத்திரங்களை ஏற்கிற நடிகர்கள் உடலளவில் தன்னைவிட பெரியவர்களாக இருக்கவேண்டும் என்பதில் சாப்ளின் கண்டிப்புடன் இருந்தார். பலத்தைக் காட்டி குழந்தைகளை வெறுமனே பயமுறுத்தும் பெரியவர்களும் களங்கமில்லாத ஒரு பாலனும் என்ற முரண்தான் சாப்ளின் திரைப்படங்களின் அடிநாதம் என்பது இதிலிருந்து தெரிகிறது. லண்டனில் கழிந்த குழந்தைப்பருவம் துயர் மிகுந்ததாயிருந்தாலும் அதன் மீதான நெருக்கமான உணர்வை சாப்ளின் எப்போதும் விட்டுவிடவில்லை. குழந்தையாயிருக்கும் போது தான் கண்ட லண்டன் தெருக்களின் மாதிரிகளாக பிரம்மாண்டமான ஒரு செட்டை ýஈசி ஸ்ட்ரீட்ý என்ற திரைப்படத்துக்காக ஹாலிவுட்டில் அமைத்தார் சாப்ளின்.

சாப்ளின் திரைப்படங்கள் உருவாக்கும் உள்ளுணர்வு கதாபாத்திரமும் நடிகனும் ஒருவரே என்பதுதான். உலகம் சாப்ளினைக் கண்டது அந்தக் கதாபாத்திரமாகத்தான். மனந்திறந்து நேசிக்கவும் கண்ணீரை மறைத்துவைத்துக்கொண்டு சிரிக்கவும் முடிகிற ஒரு முதிய சிறுவன்.

சாப்ளின் திரைப்படங்களுடனான என் பரிச்சயம் துவங்குவது 'தி கோல்ட் ரஷ்'ஷிலிருந்துதான். குறும்படங்ளைப் பெரும்பாலும் பார்க்க முடிந்தது பிற்காலங்களில்தான். ஆனாலும் 'தி கிட்', 'தி கிரேட் டிக்டேட்டர்' முதலானவற்றை உடனேயே பார்க்க முடிந்தது. சிரிப்பதோடு கூடவே பார்வையாளன் தன்னையறியாமல் கண்களில் ஈரம் புரளவும் சிரிப்புகளுக்கிடையில் நெஞ்சில் கட்டுப்படுத்தமுடியாத விசும்பல்களை எழுப்பவும் செய்கிற ஏராளமான சந்தர்ப்பங்களை சாப்ளின் படைத்திருக்கிறார். அவற்றில், எப்போதும் நினைவை விட்டு அகலாதது 'தி கோல்ட் ரஷ்'ஷின் நாயகன் தன் கடுமையான பசியை ஆற்றிக்கொள்ளும் காட்சிதான். பசி, எப்போதும் சாப்ளினின் முக்கிய கருக்களில் ஒன்றாக இருந்தது. வேறு எந்த வழியும் இல்லாமல் பச்சைப் புல்லைப் பறித்துத் தின்கிற ஒரு காட்சி அவருடைய ஒரு குறும்படத்தில் இருக்கிறது. அப்போதும் முழுமையான மானஸ்தனாக புல்லுக்கு மேல் இரண்டு சிறிய பாத்திரங்களிலிருந்து குருமிளகும் உப்பும் தூவுகிறான் சாப்ளினின் நாயகன். அதே அமைப்புதான் üதி கோல்ட் ரஷ்ü திரைப்படக் காட்சியிலும். வேகவைத்த ஷøவை சாப்ளின் புசிப்பது மிக நாகரிகமாக கத்தியும் முள்ளும் உபயோகித்துத்தான். øவின் ஆணிகளை மீன் முட்களைப் போல ருசித்தும் நாடாக்களை ஸ்பகெட்டி அல்லது நூடுல்ஸ் போல மென்றும் சாப்ளின் உணவருந்தும்போது ஃப்ரேமில் இன்னொரு கதாபாத்திரம் திகைத்துப் போய் பார்த்துக்கொண்டிருக்கிறது. சிறிது நேரம் கழிந்தபிறகு அவருக்கே ஒரு எண்ணம் ஏற்பட்டு விடுகிறது, சாப்ளின் சாப்பிடுவது உண்மையிலேயே ருசியான ஒரு உணவுதான் என்றுஷூ சாப்பிடும் சாப்ளினின் பரிதாப நிலை நம்மை துயரப்படுத்தும்போது இந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சி மாற்றங்களும் சலனமும் நம்மை அறியாமல் சிரிக்கவைத்து விடுகிறது. சோக உணர்வையும் நகைச்சுவையையும் ஒன்று சேர்த்து அளிக்க முடிகிற சாப்ளினின் அசாதாரணத் திறமைக்கு சாட்சியாகிறது இந்த காட்சி.


அடுத்த வாரம் : போதகரிடம் திருடனின் கேள்வி

click here

click here
click here